Wednesday 19 June 2019

வாடிப்போன சீடீ


இங்கு வந்த ஆரம்ப நாட்களில்... கைவினைகள் செய்வதற்கான பொருட்கள் எதுவுமே கையில் இல்லை. குட்டிக் கத்தரிக்கோல் ஒன்று சிறு தையல் வேலைகளுக்காக வைத்திருந்தேன். அட்டைப் பெட்டிகளையும் ப்ளாத்திக்குப் பால்போத்தல்களையும் வைத்து விளையாடிக்கொண்டிருப்பேன். 

அவை என் கைவினைப் பசிக்குத் தீனி போடப் போதவில்லை. வீட்டில் முதல் முதலாக வீணாகிப் போன சீடீ இது. சின்னவர்களிடம் 'க்ளூ' இருந்தது. கரை நீக்கிய வெள்ளைப் பாண் துண்டு ஒன்றைப் க்ளூ சேர்த்துப் பிசைந்து ரோஜாக்களையும் சில மொட்டுகளையும் இலைகளையும் உருவாக்கினேன். பிரகு சின்னவர்களது நீர்வர்ணங்களை இரவல் வாங்கிப் பூசிவிட்டேன். ஒரு வாரம் கழித்து, நகப்பூச்சின் மேல் இறுதியாகப் பூசும் மேற்பூச்சைப் பூசிக் காயவிட்டேன்.

சீடீயில் ஒட்டியபின் எங்கே எப்படி வைப்பதென்றே தெரியவில்லை.  வாடகை வீட்டில் ஆணி அடிக்க முடியாது. அப்போது இந்த நிறுத்தி இருக்கவில்லை. அங்கும் இங்குமாக இடம் மாற்றி வைத்து அழகுபார்த்தேன்.

வருடங்கள் கடந்தன. நான்காவது வீடு இது.
இலைகளும் காம்புகளும் உதிர்ந்தன; மொட்டுகள் காணாமற்போயின. 

படிந்த தூசைத் துடைத்தால் மீதியும் தொலையும் நிலையில் - எவர் பார்வையிலும் படாத ஓர் இடத்தில் சேமிப்பில் போட்டுவைத்தேன்.

இன்று... மீண்டும் ரசித்து ருசித்துவிட்டு... வீசினேன் குப்பைத்தொட்டியில். 

இமாவின் உலகில் உள்ள 'குப்பைத்தொட்டி' என்றும் நிரம்பாது; வெறுமையும் ஆகாது. பதிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் நான் இரைமீட்டுப் பார்க்கலாம்.

3 comments:

  1. அழகா செய்திருக்கிறீங்க இமா. அழகா ,மெனக்கெட்டு செய்துவிட்டு பின் அவைகளை என்ன செய்வது என தெரியாமல் இப்படிதான் கு.தொ க்கு போகிறது எனக்கு. நீங்களுமா...??

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா இது 2000ல் செய்தது. தூசு துடைக்க முயன்றால் உடைந்து போகும். இன்னொன்று புதிதாகச் செய்யப் போகிறேன். அதை ஒரு ஃப்ரேமுக்குள் அடக்கி வைக்க முடிந்தால் சுத்தம் செய்வது சுலபம்.

      Delete
  2. பதிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் நான் இரைமீட்டுப் பார்க்கலாம்.. உண்மை இமா ..இனியவைகளை அசை போட்டு பார்ப்பதே இன்பம் தான்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா