Saturday 29 June 2019

ரீல் ஸ்டான்ட்

என் தந்தைக்கு மரவேலை என்றால் உயிர். இது அவருக்கு வெகு சிறிய வேலை. இங்கு பெரிதாக எதுவும் செய்யக் கிடைப்பதில்லை. வசித்தது தொடர்குடியிருப்பு ஒன்றில். சப்தமாக வேலை செய்ய முடியாதே! சின்னதாக ஏதாவது செய்வார். 

இப்படி நான்கைந்து செய்துவைத்திருந்தார். என்னிடம் இவ்விரண்டும் வந்து சேர்ந்தன. 

பொதி சுற்றும் போது அலங்கரிக்கும் நாடா ரீல்களை (ரீலுக்கு தமிழ்ச்சொல் என்ன! நூல் - கண்டு. இங்கு படத்தில் உள்ளவற்றை எப்படி அழைப்பது!)  மாட்டிவைக்கலாம்.
அல்லது....

தையல் வேலை செய்யும் போது பயஸ் பைண்டிங் ரீல்களை மாட்டிவைக்கலாம். உருளாமல், நாடாக்கள் சிக்காமல் வேலை செய்யலாம். 

6 comments:

  1. அப்பா செய்தது உங்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கு.
    வேற ஐடியாவும் வரும் இனி உங்களுக்கு. ''ரீல் விடாதே'' என்ற வசனம்தான் ஞாபகம் வருது.

    ReplyDelete
    Replies
    1. :-) ரீல் விட மாட்டேன் ப்ரியா. வேற ஒரு யோசனையும் வரேல்ல. பெரும்பாலும் கேளிங் ரிபன் தான் ரெண்டுலயும் இருக்கும். தைக்கேக்க மாற்றி எடுக்கிறன்.

      Delete
  2. சிறப்பாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  3. பொருள் சிறிது என்றாலும் உபயோகம் பெரிது. நல்ல திறமையாளர்களுக்கு திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பும் சூழலும் அமையாமல் போவது வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. அப்பா இலங்கையில் இருந்த வரை அவர் திறமைக்குத் தேவையான தீனி கிடைத்தது கீதா. இங்கு வந்தும் விட்டுவிடவில்லை. :-) அயலவர் முறைப்புகளைப் பொருட்படுத்தாமல் சின்னச் சின்ன வேலைகள் செய்துவந்தார். ஓய்வு இல்லத்திற்குப் போன பின் தான் முழுவதாக நின்றிருக்கிறது. இப்போஅப்பாவின் வேலைகளை என் கணவரும் என் மூத்தவரும் தொடர்கிறார்கள்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா