Wednesday 1 September 2010

நட்பெனப்படுவது!

இங்கே என்னோடு வேலை பார்க்கும் ஆசிரியை இவர். பெயர்... ஜெனிஃப்ர். ;)

ஜெனிக்கு வயது 55. கணவருக்கு வயது 76. இருவரும் அன்னியோன்னியமாக இருப்பார்கள். ஆனால் பேச்சு வந்தால் சொல்வார்.. 'இன்னொரு முறை மணம் செய்யக் கிடைத்தால் இப்படி ஓர் வயது வித்தியாசத்தில் பண்ணிக் கொள்ள மாட்டேன்,' என்று. ;)

காரணம், வயதான ஓர் குழந்தையைப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறதாம். ஜெனிதான் வீட்டில் எல்லாம்; பில் கட்டுவது, மளிகைப் பொருட்கள் வாங்குவது எதுவானாலும். 


ஜெனிக்கு இது முதல் திருமணம். கணவருக்கு இரண்டாவது. இவர்கள் இருவருக்கும் ஓர் பையன் மட்டுமே. அவருக்கு வயது 24. என் மூத்தவர் வயது என்பதால் பலதும் பகிர்ந்து கொள்வோம். தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லை என்று வருத்தப்படுவார். இவரைப் பற்றிய சுவாரசியமான விடயம்... கருப்புத்தான் இவருக்குப் பிடிச்ச கலர். ;)


இப்படி இருக்கையில் மகனுக்கோர் பெண்தோழி அமைந்தார். ஒத்த வயதினர். ஆரம்பத்தில் 'ஹும்,' 'வட் எவர்', 'ஓகே' என்பதாக இருந்த கருத்து மாறி ஜெனிக்குப் மிஷேலை மிகவும் பிடித்துப் போயிற்று.

இதை வைத்து நாங்கள் இவரைக் கண்டபடி கலாட்டா செய்வோம். 'இந்தியருக்கு மாமியாரானால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும்' என்று. நாங்கள் சொல்லும் பொய்கள் எல்லாம் அப்பாவியாக உடனே நம்பிவைப்பார். பிறகு யாராவது விளக்கம் கொடுப்பார்கள். (நாங்கள் = இமா + விநயன் (ஒரு சௌத் ஆபிரிக்க இந்தியர்) + ஒரு பாம்பே பெண். )


ஜெனி குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம் விபரமாகச் சொல்ல விரும்புகிறேன். இவர்கள் அவுஸ்திரேலியர்கள். ஜெனி அவுஸ்த்ரேலியாவில் பிறந்த ஜெர்மானியர் (இப்போ தெரிந்ததா, இமா ஜெர்மன் கற்றுக் கொண்டது எப்படி என்று.) -  உயரமாக இருப்பார். குட்டை பழுப்பு முடி. கணவர் பொலிஷ். புது உறவோ ஃபிஜி இந்தியர்  - ஸ்டைலான அழகுப் பெண். எல்லோரோடும் இனிமையாகப் பழகுவார்.


மெதுவே எதிர்கால மருமகளைப் பிடித்துப் போயிற்று ஜெனிக்கு. இருவருக்கும் நன்றாக ஒத்துப் போயிற்று.
தொடர்ச்சி நாளை இம்மலர் மலரும் வேளை

17 comments:

  1. தொ.பதிவா சுவராஸ்யம்...

    ReplyDelete
  2. இமா என்ன இமா இது.. தொடங்கும் முன்னே தொடரும் போட்டு இருக்கற மிச்ச மீதி நகம் ( பாதி அங்க சந்தூஸ் கதை படிச்சு போச்சு :)) எல்லாம் போயிடும் போல.... எனக்கு ஜெனிப்ஃர் ஆன்டியை பிடிச்சிருக்கு :))

    ReplyDelete
  3. மெகா சீரியலா? வெறும் சீரியலா? வாழ்த்துகள்.

    இலா இது அனேகமா திகில் தொடர் இல்லை என நினைக்கிறேன்:) உங்க பாதி நகம் பத்திரமாதான் இருக்கும்:))))

    ReplyDelete
  4. globalisation போல இருக்கு.தொடருங்கள் இமா.

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான பதிவு.அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்கள் இமா.

    ReplyDelete
  6. ஜெர்மன் மாமியாருக்கு இந்திய மருமகளா? கடவுள் காப்பாற்றுவாராக ,,, ஒரே மொழி பேசி திருமணம் செய்ற வீட்டுகளிலயே மாமியார் மருமகள் சண்டை பயங்கரமா இருக்கு(இந்த ஒரே காரணத்துக்காகத்தான் கல்யாணம் செய்றதுக்கே பயமாவும் கெடக்கு)இதுல வேறு வேறு நாட்டுக்க்காரவுங்களா ம்ஹ்ஹும் பார்க்கலாம்...

    ReplyDelete
  7. இம்ஸ், நீங்களும் தொடரும் போடலாமா?
    என் நெருங்கிய உறவினர்கள் சிலர் வெளிநாட்டவரை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருவர் ஜெர்மன் நாட்டவர், இன்னொருவர் அமெரிக்கர். எல்லாமே அவரவர் மனதைப் பொறுத்த விடயங்கள்.

    ReplyDelete
  8. படிக்க சுவாரசியமாக இருக்கிறது இமா.. அடுத்த பகுதியை பார்க்க ஆவல்லாக இருக்கு

    ReplyDelete
  9. அது வேறு ஓன்றும் இல்லை இர்ஷாத். என் வலைப்பூவில் பக்கம் ஒடுக்கமாக நீ.....ளமாக இருக்கிறதா, அது படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இராது என்று தோன்றியது. அதனால் இப்படி..

    கூகிளார் என்னமோ கோபத்தில் இருக்கிறார் போல பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  10. மாமீ என்னது இது கதை ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள தொடருமா.....அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. ஓ லேபிள் தொடர் பதிவாஆஆஆ அப்ப ஓக்கே..ஓக்கே... :-)))

    ReplyDelete
  12. என்னது இது!! நாம ஆரம்பிக்கிறதுக்கு முன்னலயே வந்து நகத்தைக் கடிக்கிறாங்க!!! சுவாரஸ்யம் என்கிறாங்க! கருத்து சொல்றாங்க!! ;)))

    ம். அடுத்தவங்க கதை சுவாரஸ்யமாத் தான் இருக்கும். ;) இதுல கன விஷயம் நறுக்கி இருக்கிறேன். என்னதான் ஃப்ரெண்ட் ஆனாலும் அவங்க ப்ரைவசி என்றும் ஒன்று இருக்கு இல்ல! பெயர்கள் எல்லாம் கற்பனையே.

    இலா.. பொம்மை சைக்கிளுக்கே பாதி நகம் போச்சா? ;) உங்க இண்டோர் ப்ளாண்ட்ஸ்லாம் எப்பிடி இருக்கு? ;)

    ஹைஷ், //திகில் தொடர் இல்லை என நினைக்கிறேன்.// அது எல்லாம் எனக்கு வருமா!! நான் பயமுறுத்தினாலும் நீங்க சிரிப்பீங்க. ;)))

    ReplyDelete
  13. ஆசியா, //globalisation// இது இமாவின் 'உலகம்'. ;)))

    ஸாதிகா, வருது, வருது. (பிறகு சுவாரஸ்யம் இல்லை என்று திட்டப்படாது.)

    வசந்த், அப்ப... கட்டாயம் தொடர்ந்து படிக்கப் போறீங்க.

    வான்ஸ், முற்றுமுன் முற்றும் போட இயலாதென்பதால் தொடரும். மீதிக்கு இப்போது பதில் இல்லை. ;)

    விரைவில் வரும் ஃபாயிஸா. ;)

    ReplyDelete
  14. இது அழைப்பு மட்டுமே மருமகனே.

    //லேபிள் தொடர் பதிவாஆஆஆ// பயப்பிடாதைங்கோ. யாரையும் தொடர அழைக்க மாட்டன். பிறகு சட்டியை அடுப்பில வச்ச மாதிரி, அப்பிடியே தண்ணி வற்ற விட்டிட்டு வேற எங்கயும் போயிருவீங்கள். நாட்டாமைகளும் தட்டிக் கேட்க மாட்டன் எண்டுறாங்கள். ;))

    ReplyDelete
  15. இமா.. பொதுவா வெளிநாட்டுல வளர்ற இந்தியர்கள் அந்த நாட்டு அடிப்படைல தான் வளர்ந்திருப்பாங்க.. பாவம், இனி ஜெனிய பயமுறுத்தாம விட்டுடுங்க :)

    ReplyDelete
  16. ம். ;) அதெல்லாம் அவருக்கும் தெரியும் எங்கள் கூத்து. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா