Thursday, 2 September 2010

இப்படித்தான் இருக்கும் சந்தனா

செபா ப்ளாட்டில் உள்ள பன்னிரு இருப்புகளுக்கும் பொதுவாக ஓர் கூடம் இல்லாததால் வேலியைப் பிரித்து அங்கு அருகே இருக்கும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அனைவரும் கூ..டு/வு கின்றனர்.

ஜெய்லானி:- ஆ..வடை எனக்குதான்..!!
இமா:- இன்னும் சுட ஆரம்பிக்க இல்லை மருமகனே. எல்லாம் ரெடியா இருக்கு. பொறுங்க. தண்ணி கொதிக்கட்டும் பொரிச்சுத் தாறன்.
ஜெய்லானி:- ஆ ,,பீட்சாவும் எனக்குதான்...!!
இமா:- அதுக்கென்ன, நல்லா வயிறாரச் சாப்பிடுங்கோ. ஆனால்ல்... ஆ காட்டிற வேலை எல்லாம் இங்க சரி வராது. அவரவர் தான் எடுத்து வாயில போட்டுக் கொள்ள வேணும். எனக்குக் கனக்க வேலை இருக்கு. 
ம். ஏன், என்ன நடந்தது ஜெய்லானி? மகள் பூரிக்கட்டையைத் தவறிக் கையில போட்டுட்டாவோ! பரவாயில்ல. இந்தாங்க முள்ளுக் கரண்டியும் கத்தியும். எடுத்து வாயில போடுங்க.

(ஜெய்லானி முள்ளுக் கரண்டியையும் கத்தியையும் வாயில் போடப் போகிறார்.)

இமா:- (தலையில் அடித்துக் கொண்டு.. தனக்குள் "ஐயோ! ஐயோ! எதுல தான் சந்தேகம் வாறது எண்டு இல்லையோ! சரியான மக்குப் பூசணிக்காய்.")
(சத்தமாக) டைகர்! டை..கர்! டை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
 மீதி அனைவரும்:- ....கர்ர்ர்ர்ர்ர்

ஜெய்லானி:- ஆஆஅ....
இமா:- சொன்னேனே, ஆ காட்டக் கூடாது என்று.
(ஒரு வேளை... அங்கயும் ஒரு உலகம் இருக்கோ!! எட்டிப் பாப்பமோ!! ச்ச! இருக்காது. வேணாம். அது க்ருஷ்ணா ஆ காட்டினால் தான் தெரியும். இங்க வடையும் பீட்ஸாவும் தான் இருக்கும்.)

ஜெய்லானி:- மாமீ சட்னியும் எனக்குதான்.
இமா:- என்னது! பீட்சாவுக்கு சட்னி தொட்டுக் கொள்ளுறதுக்கோ! எந்த உலக வழக்கம் இது!!
(சந்தேகம் எதுக்கெல்லாம் வரப் படாதோ... அதுக்கெல்லாம் வரும். எதுக்கெல்லாம் வர வேணுமோ... அதுக்கெல்லாம் வராது.' மீண்டும் தலையில் அடித்துக் கொள்கிறார். ஒரு செக்கன் வலியில் முகம் சுருங்குகிறது. ஏற்கனவே அடித்ததில் அந்த இடம் வீங்கிப் போய் இருக்கிறது புரிகிறது.) 

இமா:- டைகர்.. இங்க கொஞ்சம் வாங்கோ.. இதில.. இங்க... இந்தப் பக்கத்துக் கதிரையில இருங்கோ குட்டி.

ஜெய்லானி:- சமையலுக்கு வான்ஸ் கூப்பிட்டதால
இமா:- நான் சாப்பிடத் தான் கூப்பிட்டனான். நீங்கள் சமைச்சால் எனக்குப் பச்சத் தண்ணியும் கிடைக்காது.
ஜெய்லானி:- என்னது!! தலையும் புரியலா வால்ல்ல்ல்ல்ல்லும்...
இமா:- சொல்லுறன், சொல்லுறன். அவசரப்படாதைங்கோ. ஒண்டில் பச்சை...ரோஸ் தருவீங்கள். இல்லாட்டில்... சுடு தண்ணி தருவீங்கள் எண்டு சொல்ல வந்தன்.
ஜெய்லானி:- ஆஆ....இப்ப புரியுது.
இமா:- நல்ல்..லா ஆ காட்டுறார். (ஒரு வேளை.... வீட்டில தீத்தி விட்டுப் பழக்கமோ!!)

ஜெய்லானி:-இமா மாமி... பூஸு உங்களை பார்க்கும் பார்வை சரியில்ல
இமா:- அது பூஸு இல்ல. டை கர். பப்பி.

ஜெய்லானி:- ஐயோ!!!
இமா:- இப்ப என்ன?
ஜெய்லானி:- போட்ட 5 க்மெண்டையும் கானோமே..!!
இமா:- டைப் பண்ணேக்க தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக். பரவாயில்ல, கதைக்கேக்கயாவது ஒழுங்காக் கதையுங்கோவன்.
ஜெய்லானி:- அவ்வ்வ்வ்வ்வ்வ்
*
*
*
ஜெ:- ஆங் ..இப்ப இருக்கு..இருக்கு..
இ:- என்ன இருக்கு?
ஜெ:-விருதுக்கு வாழ்த்துக்கள்..
இ:- ;)
ஜெ:- இன்னும் நிறைய கிடைக்க... (இப்ப வாயில சட்னியைத் தனியே அடைகிறார்.)
இ:- (பொறுமை இல்லாமல்) கமண்ட்ஸ் தானே!!
ஜெ:- @ வாண்ஸ் வாழ்த்துக்கள்...
இ:- !!! (இங்க வந்து எதுக்கு வான்ஸுக்கு வாழ்த்து சொல்லுறார்!!! அது மூன்று சுழியா! ஓகே. )

(இந்த ஸ்டேஜில... [மேடையைச் சொல்லவில்லை] வடை, பீட்சா, சட்னி எல்லாம் காலியாகித் தட்டுப் பளபளா என்று இருக்கிறது.)

இமா:- என் உலகில் ஒரு இடுகைக்கே வடை பீட்ஸாவோடு ஒரு டசின் பின்னூட்டம் கொடுத்த மாவீரர் ஜெய்லானி!
(என்ன சும்மா இருக்கிறீங்கள். கை உயர்த்திக் கத்துங்கோ.) 
மீதி அனைவரும்:-வாழ்க!

'கவி'சிவா அந்த'ப் பக்கம்' வருகிறார்.
(வெறும் தட்டைப் பார்த்து.. வியந்து...) என்ன இது??? ஜெய்லானி வந்து வடை பிஸ்ஸா சட்னி எல்லாத்தையும் ஆட்டைய போட்டாச்சா?! இதுல மட்டும்... அவருக்கு சந்தேகமே வராதே.
(இமா பக்கம் திரும்பிப் பார்த்து வாயை ஆமை மாதிரிப் பிடிக்கிறார், '(' இப்படி ) 
இமா... எனக்கு கொஞ்சம் புரியுது நிறைய புரியல

இ:- ? பப்பிக்கும் அப்பிடித் தானாம். நிறைய புரியேல்லயாம். இதுக்கெல்லாம் ம.பொ.ர தெரியவேணும்.

(சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... திடீரென்று ஒரு பிரகாசம். கம்போடு ஒளி வெள்ளமாக ஒருவர் ஆகாயத்தில் இருந்து வந்து இறங்குகிறார்.

ஹைஷ்:- வாழ்த்துகள் :) வாழ்க வளமுடன் 

(இமாவுக்கு விளங்கீட்டுது.. சகோதரர் வடை, சட்னி கிடைக்காத வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் வாழ்த்துறார் எண்டு.)  
இ:- இந்தாங்கோ. உங்களுக்காவே எடுத்து ஒளிச்சு வச்சனான். சாப்பிடுங்கோ. ஆனால்... எனக்கு ஆவாரம் பூவில எல்லாம் வடை சுடத் தெரியாது. இது சும்மா.. ஆமை வடைதான். எடுங்கோ. 

(அதுக்குள்ள கட்டிலுக்குக் கீழ இருந்த பூஸுக்கு வாசம் பிடிச்சு வந்துட்டிது. ஆனாலும்...) 
பூ:- அவசரமாக எனக்கொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்..... நான் இன்னும் அழுது முடியேல்லை. காரணம்.... ஜெய்லானி said... ஆ..வடை எனக்குதான்..!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். 
இ:- நீங்கள் பூனை தானே!! எதுக்குப் பப்பி பாஷையில அழுறீங்க? 
பூ:- இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ். 
சிலருக்கு, தன்னை ஆரும் அழைக்கமாட்டாங்களோ அன்பாக என்றிருக்கும்... (சிரிச்சுக் கொண்டே இமா நீட்டின பெட்டியில இருந்து ஒண்டை உருவுகிறார்.) 
ச். ச்.. இது அன்பாக அழைத்து இனிமேல் என்னிடம் டிஷ்யூக் கேட்டிடாதையுங்கோ என்று சொல்லிப்போட்டினம் :((((

(அவாட வாயைப் பாருங்கோ! 4 ஆமை மாதிரி இருக்கெல்லோ!) 

பூ:- ஓ.. இதுதான் ஒன்று சிங்கத்தம்பி, இன்னொன்று சிங்கமில்லாத தம்பியோ?? இரு பப்பீஸ் :) 
இ:- இருங்கோ என்று மரியாதையாகச் சொல்லவேணும் பூஸ். அதில ஒன்று ஜீனோ.. மற்றது டைகர். 

(அதுக்குள்ள யாரோ ஒரு கொப்பியைக் கொண்டு வந்து குடுக்கினம். பூஸ் வாலில மையைத் தொட்டு என்னவோ எழுதுறார்.) 

இ:- என்ன செய்றீங்கள் அவசரமா? 
பூ:- இது கின்னஸ் பூஸ்தகம். கவியின்ர பேரை எழுதுறன். 

(இப்ப வான்ஸ் வாறா.)

வா:- இம்ஸ், எனக்கும் கவிசிவா போல ஒன்றுமே விளங்கவில்லை. டிஸ்ஷூ பெட்டி நல்லா இருக்கு. பூஸார் எங்கிருந்தாலும் அழகு தான். அதீஸூக்கு 2 தம்பிகளா? அல்லது ஒன்று அண்ணாவா? குழப்பமா இருக்கே. 

(இ:- போச்சுடா! இவாவுக்கும் சந்தேகம் வந்தாச்சுதோ!) 

(திரும்பிப் பார்த்து.... கண்டு விட்டா, நல்லாச் சாப்பிட்டு அசைய முடியாமல் வயிறு வீங்கி இருக்கிற ஆளை.) 

வா:- ஜெய், என்ன ஆச்சு? (ஒரு பதிலும் வரேல்ல. டீவீயோட இருக்கிறார்.) நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள். 

(இவாவும் பாவம். தானே கேள்வி கேட்டுத் தானே பதில் சொல்லுறா எண்டு இமாவுக்கு நினைக்க வருது.) 

(இப்பதான் பூசும் கவனிச்சுது.) 
பூ:- ஜெய், என்ன ஆச்சு?
(கஷ்டப்பட்டு பதில் வருது.) 
ஜெய்:- அது... ஒன்னுமில்ல வரிசையா கமெண்ட் போட்டுட்டு பார்த்தா ஒன்னுமே கானோம் 0 கமெண்டுன்னு கமிக்குது அதான் அழுதுகிட்டே இன்னொன்னு போட்டேன் .கடைசில எல்லாமே இருக்கு ஹி..ஹி.. 
வா:- பரவாயில்ல. எப்பிடியோ ப்ளேட்டோட கடத்தீட்டீங்கள். 
ஜெ:- இங்க பாருங்க வான்ஸ் நீங்க குடுத்த அதிர்ச்சியில இமா மாமி வெரும் படத்த போட்டுட்டு போயிட்டாங்க.   இ:- !!!!!! 
(அவசரமாக எல் போர்ட்டைக் கழற்றி சீட்டுக்குக் கீழ ஒழிச்சு வச்சிட்டு சந்தனா கார்ல இருந்து இறங்கி வாறா இப்ப.) L:- இமா... புரியுது.. விருதுக்காக கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர்.. பிரிக்கச் செய்த சதியால் வந்த சோகக் கண்ணீர் கொஞ்சம்.. மிளகாய்ப்பொடியால் எரிச்சல் ஏற்பட்டு வந்த கண்ணீர் கொஞ்சம்.. பூஸ் பப்பி படத்தப் பாத்து வந்த கண்ணீர் கொஞ்சம்.. அதுக்காக ஒரு டிஷ்யூ பாக்ஸ் முழுசா வேஸ்ட் பண்ணக்கூடாது.. ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்து துடைச்சிட்டு தூக்கிப் போட்டறனும் :))) வேனும்னா மூக்குக்கு ஒன்னு எடுத்துக்கோங்கோ.. மீதியெல்லாம் எனக்கு கொடுத்துறனும்.. :)))))
(திடீரென்று டீவீயைப் பார்த்து L's கத்துறா.) இமா.. காட் இட்.. வாவ்!! அங்கங்க மட்டும் கலர்ல கொடுத்துட்டு மீதி எல்லா எழுத்துக்களையும் பேக் க்ரவுண்ட் கலரோட merge பண்ணியிருக்கீங்க.. வழக்கம் போல, இமாஸ் டச் ரசிக்க வைக்குது..   இமா:- :) L:- ஆனாலும், இதை முதல்ல கண்டுபிடித்தது பூஸ் கிட்னி தான் எண்டு மறக்கமாட்டேன் :) இ:- ;(   (கண்டு பிடிச்ச சந்தோஷத்தில இன்னும் சத்தமாக் கத்துறா.) மக்கள்ஸ்.. முழு போஸ்டையும் காப்பி பேஸ்ட் பண்ணுவதற்காக செலக்ட் செய்வது போல் செய்து படிச்சுப் பாருங்க..(யுரேக்கா சொல்லலயா சந்தூஸ்!!)
ஆ.க, சோ.க, ர.க.. இந்தக் குறும்பையும் ரசிச்சேன் இமா.. (ஆக... மொத்தமும் புரிஞ்சது இப்பிடி ஒன்று ரெண்டு பேருக்குத் தானா! எ.கொ.இ?)
கவி:- சந்தூ.... சொன்னப்புறம் புரிஞ்சுடுச்சு :-) நாங்கள்லாம் ட்யூப்லைட் இமா. சூப்பர் இமா. இனிமே யாரையாச்சும் திட்டணும்னா கூட இப்படி பதிவு போட்டுடலாம். ஐடியாக்கு நன்றி :-) (இப்பதான் இவங்க உண்மையா ட்யூப்லைட்டோ என்று இமாவுக்குச் சந்தேகம் வருது. இதுகுள்ள டைகர் போரடிச்சு எஸ்ஸ்ஸ்ஸ்.)
இப்ப ப்ரியமாக ஒருத்தர் வருகிறார். BBQ மேசையில இருந்த க்ளாஸை எடுத்துக் கரண்டியால் 'டிங் டிங்' என்று தட்டி அனைவர் கவனத்தையும் கவருகிறார்.) வ:- டோட்டல் டேமேஜ்... நான் குதிரைய விக்கப்போறேன்...! கூட்டத்தில் யாரோ:- டேமேஜான குதிரையை யார் வாங்குவாங்க? மற்றொருவர்:- நான் அந்தப் பூனையை வாங்கினா குதிரையை இலவசமாத் தரீங்களா? (பூஸ் கட்டிலுக்குக் கீழ நைசா எஸ்ஸ்ஸ்.) (குழம்பிப் போய் தனக்குத் தெரிந்த ஒரே நபரான சந்தனாவிடம் திரும்பி...) சந்தனா இவங்க என்னா பேசிக்கிறாங்கன்னே புரியல! சத்தியமா இது ஏதோ பெரிய ரவுடி குரூப்புன்னு மட்டும் தெரியுது ஆழம் தெரியாம கால விட்டுட்டேனோ?     (சந்தனா காதில் விழவில்லை. மனதில் அடுத்த கவிதைக்கான வித்து விழுந்து கிளை விட்டு... மொட்...)
கா.சி:- விருதுக்கு வாழ்த்துகள். இ:- நம்பவே.... முடியேல்ல மக்கள்ஸ்!!! ஓவர் நைட்ல 21 கொமண்ட்டாஆஆ..!!!!! இது 'உலக' சாதனை. டிஷ்ஷ்..யூஊ... ப்ளீஸ்.. (கண்ணைத் துடைத்துக் கொண்டு அவசரமாக ஏதோ சொல்லிக் கொண்டு பாக்கைத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.)     காட்சி 2   இ:- (இன்னும் புது மோடம் குரியர்ல வரேல்ல. காத்திருக்கப் பொறுமை இல்லாமல் எப்பிடியோ வந்து இருக்கிறன். ரெண்டு பின்னேரம் ஆச்சுது. ஹூம்.)
ப:- ஆன்ரீ..அயகான டிஷூ பொக்ஸ். ஜீனோ, ஜீனொவின் பிம்பம், அக்கா இருவரும் என்னே அயகா போஸ் கொடுக்கினம்!! இதைப் பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வருமோஓஓ? இ:-சந்தோஷத்தில வராதோ பப்பி!! ப:-ஹேப்பி ஸ்கூலிங். இ:- :) (டெய்லி இப்பிடியே சொல்லுங்கோ.)
இலா:- (முழுசாப் பேர் போட வேண்டி வந்துட்டுது. ;)  ) இமா! என்னைப்போல கொஞ்சம் லேட்டா வர்ரவங்க...வடை/பிட்சாக்கு அடிதடிபோடாம... பின்னூட்டமும் படிச்சு.. அப்புறம் தான் பதிவே வெளங்குது.. நல்ல வேளைநான் பிழைத்துக்கொண்டேன்... (என்னவோ பழங்காலத்துப் பாட்டெல்லாம் எடுத்து விடுறாங்க. ;)  )
(கவிதை எண்ணத்தில் இருந்து வெளி வந்த எல்ஸ் இமாவை அணுகி) - இமா.. உங்க ஆதாரம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. முன்னாடி சொன்னத வாபஸ் வாங்கிட்டு, உங்க உலகத்துக்கே அந்தச் சாதனைய உரித்தாக்கி, கொப்பி ரைட் வழங்குறம் :) இ:- கொப்பி... பூஸ் வச்சு இருந்துது. கட்டிலுக்குக் கீழ இருக்கும். அதுக்குத் தான் எழுதவும் ஏலும். வாலில பெய்ன்ட் இருக்கு. ச:- அப்போஓஓஓ.. படிக்கயிலே, நான் நினைச்சனான் - இமாக்கு இடுகை பதிப்பதிலே ஏதோ பிரச்சனை போலன்னு :))) இதயும் முதல்ல பாத்தப்போ அப்பிடித் தான் நினைச்சன் :) கவி... குறும்பு பண்றதுல இமாவும் சளைச்சவங்க இல்ல :) ஆமா.. நல்ல ஐடியா.. திட்றதுக்கு யூஸ் பண்ணிக்கலாம் :)   (பிறகு என்னவோ சொல்லீட்டு.... வாபஸ் வாங்கிட்டாங்க. ஆதாரம் இதோ. - 


எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This post has been removed by the author.)
(இப்ப கேட்காமலே வசந்த் உதவிக்குப் போறாங்க.) வசந்த்.... நீங்க, ப்ளஸ் இன்னும் கொஞ்சம் பேர் புதுசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சதுக்கு, இமா நன்றி சொல்லியிருக்காங்க.. அப்புறம், வானதி ஒரு கற்பனை பதிவு போட்டாங்க (சமையல் போட்டி)... அதுக்காகவும் எழுதியிருக்காங்க.. இந்த போஸ்ட செலெக்ட் பண்ணி படிச்சுப் பாருங்க.. எழுத்துகள் தெரிய வரும்.. (ஜெய்லானியிடம் இருந்து டீவீயைப் பிடுங்கிக் காட்டுகிறார்.) இங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாரும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் அறிஞ்சவங்க.. நிக் நேம்ஸ் வச்சிருக்காங்க.. தொடர்ந்து படிச்சா புரியும்.. கண்டிப்பா ரவுடி கும்பல்லாம் இல்ல.. ஆனா சரியான கேலி-கிண்டல்-வம்பு-விளையாட்டு கும்பல் :)))))) இ:- விளக்கத்துக்கு நன்றி சந்தனா. இப்ப சொல்றேன். நீங்க என் சமையலறையில் 'உப்பு' தான். ;)
வ:- ஓஹ்...! இந்த ஐடியா கூட நல்லாருக்கே வ:- நட்சத்திரம் :))) ம்ஹ்ஹும் ச:- இமாவோட உலகத்தச் சுத்த புதியதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள் - புது ஃபாலோயர்கள்.. நீங்களெல்லாம் தான்.. (கிரகம் என்று சொன்னா நல்லாவா இருக்கும்!! அதான் நட்சத்திரம்.) இன்னொருத்தர் முகிலன்.. மத்தவங்களெல்லாம் தெரியல.. வ:- ஆ.க.,சோ.க,ர.க, புடிபடல ச:- ஆ.க.,சோ.க,ர.க, புடிபடல!!! ஆனந்தக் கண்ணீர், சோகக் கண்ணீர், ரத்தக் கண்ணீர் :) வ:- இயலாமை-நேரமின்மை??? ச:- அப்படின்னு தான் நானும் நினைக்கறேன்.. நீங்களெல்லாம் குதிரை மேல ஏறிப் பயணிக்கற மாதிரி வேகமா இருக்கறவங்க. உங்க படத்தைப் பார்த்து சொல்லியிருக்காங்க. அவங்க மெதுவாத் தான் பதிவு போடுவாங்களாம்.. வ:- அப்ப... சாகோதரி - டைமிங் சென்ஸ் :))))) ச:- அது தவறுதலா டைப் பண்ணினதுன்னு நினைக்கறேன்.. (என்னவொரு கற்பூரத்தனம். ட்யூப்லைட்டுக்கு எதிர்ப் பதம் இதானோ!!) வ:- சீக்கிரம் என்னை கத்தார் அஹமத் ஹாஸ்பிட்டல்ல மெண்டல் செக்சன்ல சேர்த்துடுவாங்க போல.. முடியல தாயி முடியல.. (நீங்கள் மட்டும் இல்ல, முழுக் கூட்டமும் அங்கங்க சேர்ந்துருவீங்க. இமா மட்டும், அனைவருக்கும் கிணறு எடுக்க அட்டைகள் தயாரித்துக் கொண்டு இருப்பா. சந்தூஸ் பூக்கட்டுவா. யாராவது ஜூஸுக்கு லெமன் தேடுவினம்.)   இ:- என்னாலயும் முடியல... அதீஸ்... அந்தப் பெட்டியை இங்கால நகர்த்துங்கோ. இண்டைக்கு ஒரு பெட்டி போதாது போல இருக்கே! ;)   ச:- சரி, நான் உங்களுக்கு ஒரு கெட் வெல் கார்டும், பூச்செண்டும் அனுப்பி வைக்கறேன் :)))))))))))     ஜெ:- சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி..  
ஜெ:- வசந்த் சார்! இது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு? வண்டி எந்த மாடல்? சேசிஸ் நெம்பர், ஆர் சி புக் இருக்கா? இன்ஸுரன்ஸ் இருக்கா? லாஸ்ட் பிரஸ் !! எவ்வளவு..   வ:- !!! டைகர்.....
ஜெ:- (வேற யாரையாவது பிடிக்கலாம்.) உங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க இலா மேடம்.. (டைகர் முணுமுணுக்கிறது: - மயில் முட்டை தான் போடும். இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியல. கர்ர்ர்) 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது முன்னொரு காலந்தன்னில் ஒரு குறிப்பிட்ட இடுகைக்கான கருத்துகளுக்குப் பதில் கூற இயலாது போகவும் சேர்த்து வைத்துத் தட்டிய பதில். பின்னும் கூட எதுவோ தொழினுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டுத் தடங்கலாகி விட... அப்படியே பாதியில் நிறுத்தி விட்டேன். இதன் பின்னர் அமைச்சர் முதலானோர் கூட வந்து யாருக்கோ (எனக்கல்ல) கருத்துக் கூறி இருந்தனர். அனைவருக்கும் என் நன்றிகள். இப்போ மேற்கொண்டு எதுவும் எழுதாமல் இருந்ததை இருந்தபடியே வெளியிடுகிறேன். ;)
- இமா
என்ன! ஒன்றும் விளங்கவில்லையா!! ஹும்! இப்படித்தான் அல்லோலகல்லோலமாக இருக்கும் சந்தனா, செபா ப்ளாட். ;)))) ஒருவருக்கும் ஒன்றும் விளங்காது. அவங்க மட்டும் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருப்பாங்க.

33 comments:

  1. கூகிளார் ஸ்பேஸ் ஒழுங்காக விட மாட்டாராம். ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிப் படியுங்கோ.

    ReplyDelete
  2. இமா, இது என்னது? ஒண்ணுமே புரியலை உலகத்திலே...

    ReplyDelete
  3. Grrrrrrrrrrrrr...aunty,we are not coming ONLY for get-to-gether.We are moving to Nz with our kiths n kins to settle down there.

    Summa oru koottam pottu anuppidalaamnu kanavu kaanavaanaam.okkai?

    ReplyDelete
  4. சில பஸ்ஸே படிக்க விளங்கும்போல. இது ஒண்ணும் விளங்கல..

    ReplyDelete
  5. வசந்த் ;) கொ.வெ எல்லாம் இல்லை. அது எப்பிடி அப்பிடி வந்தது என்று தெரியவில்லை. பிறகு சரி செய்ய முடியவில்லை. அங்கு தெரியாமல் இங்கு மட்டும் தெரிந்து கொண்டு இருந்தது. ;(
    மறைக்க முடியாமல் இப்போ முழுவதாகவே நீக்கி விட்டேன். இப்போ சரிதானே!! ;)

    ~~~~~~~~~~

    ஓ! டோரா புஜ்ஜியும் பப்பி கூட வருகிறாரா? ;) ம். 3 இன் 1 பக்லவா.. வேறு என்ன வேண்டும்? சொன்னால் ஏற்பாடு செய்து விடலாம். பப்பீ.. க்றிஸ்மஸ் நேரம் வந்தால் பாட்டி பெரிய பாட்டி தந்தாலும் தருவா. ;))

    ~~~~~~~~~~

    முகிலன், ;) நான் என் செய்வேன்!! இந்த உலகத்தாருக்கே விளங்காதாம். ;( ட்ராஸ்லேட்டர் கேட்கினம். ;)

    ReplyDelete
  6. இமா, நட்பின் தொடர் முடியட்டும் என பார்த்தேன், அதைவிட்டுவிட்டு, இங்கு வந்திட்டீங்கள்.

    இதில் ////செபா ப்ளாட்டில் உள்ள பன்னிரு இருப்புகளுக்கும் பொதுவாக ஓர் கூடம் இல்லாததால் வேலியைப் பிரித்து அங்கு அருகே இருக்கும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அனைவரும் கூ..டு/வு கின்றனர்/// இதைத்தவிர எல்லாமே வெறும் பிங்க் கலர் பெட்டிகளாகவே இருக்கு பிளாங்க்காக, கவனியுங்கோ... ஒன்று கூட தெரியவில்லை, பல தடவை முயன்றிட்டேன், நேரம் போகுது பின்பு வருகிறேன்.

    ReplyDelete
  7. வர வர சந்தனா மாதிரியே மாறுறீங்க:), வடய நீங்களே எடுக்கிறீங்க.... இது நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்:))))

    ReplyDelete
  8. //இதைத்தவிர எல்லாமே வெறும் பிங்க் கலர் பெட்டிகளாகவே இருக்கு// ம்ம்
    //பிளாங்க்காக,// !!!??? கிக் கிக் கிக் //கவனியுங்கோ...// ?
    //ஒன்று கூட தெரியவில்லை,//???? //பல தடவை முயன்றிட்டேன்,// இன்னும் முன்னேற இடமிண்டு. ;)))
    //நேரம் போகுது பின்பு வருகிறேன்.// ம்.
    வாணிக்குச் சொன்ன பதில் பார்க்க இல்லையோ!! ;)

    ReplyDelete
  9. ஆ.... பிளேன் ஹப்பில வந்துபோகும் எனக்கு இப்படிப் பண்ணிட்டீங்களே இமா, படங்களாக்கும் என நினைத்ததில, கிட்னி வேர்க் பண்ணவில்லை,மபொர சூப்பர்:). மத்தியானம் வந்து அலப்பறை தொடரும்ம்ம்ம்ம்ம்:))).

    ReplyDelete
  10. //... திடீரென்று ஒரு பிரகாசம். கம்போடு ஒளி வெள்ளமாக ஒருவர் ஆகாயத்தில் இருந்து வந்து இறங்குகிறார்.


    ஹைஷ்:- வாழ்த்துகள் :) வாழ்க வளமுடன் //

    ReplyDelete
  11. மந்திரி..:- ராஜா அவர்களே..!! என் கண்ணுக்கு தெரிகிறது.. என்ன அழகான சட்டை போட்டிருக்கிறீகள்.... அறிவாளியாகிய எனக்கு தெரிவது மற்றவர்க்கு தெரிவதில்லையே...

    ராஜா..:- ஆஹா ..இந்த சட்டை புத்திசாலி கண்ணுக்கு மட்டுமே தெரியுமூன்னு அந்த நெசவாளி சொன்னது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா..மந்திரியாரே..

    நெசவாளியே ...கண்ணூக்கு தெரியாத சட்டையை தைத்த உனக்கு பிடி 10,000 பொற்காசுகள் மற்றும் 100 ஏக்கர் குறுநிலம்..

    நெசவாளி..:-- நன்றி மண்ணா.நீ நீடூழி வாழ்க. உன்னை மாதிரியே உன் மக்களும்....!!

    ReplyDelete
  12. @@@vanathy --
    இமா, இது என்னது? ஒண்ணுமே புரியலை உலகத்திலே... //

    @@@இமா

    kik kik //

    பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா..?
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது..இதில் அர்த்தம் உள்ளது...


    ஹா.....ஹா....:-))))))))))))))))))))))))))

    ReplyDelete
  13. மாமீ அதுக்காக இப்பிடி போட்டு மக்களை குழப்பக்கூடாது.. பழசை மனதில் வைத்துக்கொண்டு .எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் ..க்கி...க்கி.....!!

    :-))))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கு நன்றி ஹைஷ். ;) அது அப்ப பாதியில நின்று போச்சுது. இப்ப தூசு தட்டி அப்பிடியே... ;))

    பிறகு, பெட்டி படுக்கை எல்லாம் கட்டியாச்சுதோ! அண்ணி தூதனுப்பின பிறகும் உலாவுறீங்கள். ;))

    ~~~~~~~~~~

    //எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம்// ம். ;)
    கதையெல்லாம் நல்லாச் சொல்லுறீங்கள். ;))மருமகன் என்றபடியால்... சிலது க.கா.போகிறேன். ;)))

    ReplyDelete
  15. இமா! என்னத்த சொல்ல... நல்ல வேளை இந்த விளையாட்டை முதல்லே விளயாண்டதால ( நானும் கொஞ்சம் டு.. ..ட் தான் ஆனா கரி அடுப்பு மாதிரி பத்த வைக்கவே 2 நாளாகல :)) கொஞ்சமா காப்பி குடிச்சு எங்கயோ சுட்ட வடைய சாப்பிட்டு கை வலிக்க கீழ இழுத்து படிச்சிட்டேன்... ரொம்ப காமெடியா இருக்கு....

    ReplyDelete
  16. ஜெய் //நெசவாளி..:-- நன்றி மண்ணா.நீ நீடூழி வாழ்க. உன்னை மாதிரியே உன் மக்களும்....!!// இமா ரீச்சர் இடமே மூணு சுழி அதுவும் இரண்டுதடவை போட்டு காட்டுறீங்களா??? சாக்கிரதை சங்கிலி அனுப்பிடுவாங்கோ:)))))

    ReplyDelete
  17. marupadiyum kulambip poyitten :) i thot there was some problem with blogger.. :) thanks imaa for the get to gether.. i have to take time to read this with joy :) will do that in the evening..

    ReplyDelete
  18. for those who did not/do not understand - highlight the text in the pink color boxes by selecting the text.. imaa is playful :)) she has selected the same color for the background and text..

    ReplyDelete
  19. ஹையா ..மாமீ வடை சுட்டு குடுத்ததுல வடைக்கு பதில் முள் கரண்டி வாயில மாட்டி இப்பதான் பேச்சே வருது எனக்கு..ஆனாலும் பழசுகளை கலந்து கட்டி பிரியாணி சூப்பரோ சூப்பர்..ஹா..ஹா..

    இனி யாரையாவது திட்டி போட அருமையான ஐடியா ஹி...ஹி...

    ReplyDelete
  20. நியூசி செய்தி! இமா பத்திரமா இருக்கீங்களா??
    கிரைஸ்ட்சர்ச் அருகில் 7.4 ரெக்டர் அளவு பூகம்பம் . செபா அம்மாவும் நீங்களும் நலமா??? யாராவது போன் நம்பர் வைத்திருந்தால் பேசி சொல்லுங்க...
    http://news.yahoo.com/s/nm/20100903/ts_nm/us_quake_newzealand_1

    ReplyDelete
  21. இமா! பத்திரமா இருக்கீங்கன்னு வானதி சொன்னாங்க.. இப்ப தான் மூச்சே வருது

    ReplyDelete
  22. ஐயோ 7.4 ஆ இறைவா காப்பாற்று...!!!

    ReplyDelete
  23. இமா,'எல்லாமே' தெளிவாஆஆஆஆஆத் தெரியுது!;) படிச்சவங்க எல்லாருக்கும் புரியறமாதிரி(ஹிஹிஹி) இப்படி தெளிவா ஒரு போஸ்டிங் போட உங்களால மட்டும்தான் முடியும். மேல வைங்கோ.:))))

    ReplyDelete
  24. ஜெய்லானி, பழசுகளை அல்ல. அவங்க அவங்களே சொன்ன வசனம். ;)
    //யாரையாவது திட்டி போட// இதுலயே இருங்க எல்லாரும். ;))

    ReplyDelete
  25. இலா,

    //கை வலிக்க கீழ இழுத்து// சாரி ;( நேரம் கிடைக்க மாட்டேன் என்குது சரி செய்ய. வேற டெம்ப்ளேட் தேடணும் - விசாலமா அதே நேரம் சிம்பிளா எனக்குப் புடிச்சதா.

    இதுக்காகத் தான் 'நட்பு' தொடரை குட்டிகுட்டியா போடுறேன். அதுவும் படிக்கக் கஷ்டமா இருக்கும்ல. ;( இன்னும் ஒரு 3 வாரம் கடத்தினா சரி செய்து விடுவேன்.

    //ரொம்ப காமெடியா இருக்கு// முழுக்க முடிச்சு இருந்தா இன்னும் காமடியா இருந்து இருக்கும். லேட்டானதான சிலது பொருந்தாம போச்சு என்று எடுத்துட்டேன். சிலது ஆட் பண்ணல. அந்த நேரம் போட்டு இருந்தா இன்னும் நல்லா ரசிச்சு இருப்பீங்க. இப்ப லேட். பட், 'பெட்டர் லேட் தான் நெவர்,' என்று போட்டாச்சு. ;)

    ~~~~~~~~~~

    அது வேற ஒண்ணும் இல்ல ஹைஷ். அவர் பரிசாகப் பெற்றது 'மண்' இல்லையா! அதான். மேலேயே சொன்னேனே, நானும் மருமகன் பாவமே என்று க.கா.போ. ;)

    ~~~~~~~~~~

    எல்ஸ், இப்பதான் பார்க்கிறேன், எல்லோர் டாஷ் போர்ட்லயும் உங்க பேரும் முகமும்தான் சீரியசாத் தெரியுது போல. கிக் கிக். ;)

    நீங்கதான் எடுத்துக் கொடுத்தீங்க. நிறைய தூசு தட்ட வைக்கிறீங்க. நன்றி. ;) எல்லாம் அந்த 'டிஷ்யூ ப்ளீஸுக்கு' வந்த பின்னூட்டங்கள் தான். வடை ஷேர் பண்ணிக்கிற மாதிரி பிச்சுப் பிச்சுப் போட்டு இருக்கிறேன். ;)

    தங்களுக்குக் கொடுத்த கடமையை நன்றே நிறைவேற்றியுள்ளீர்கள். (நான் மொழிபெயர்ப்பைச் சொல்கிறேன்.) ;) ஊதிய உயர்வு பற்றி யோசிக்கிறேன். ;)

    ReplyDelete
  26. மகி,
    //இப்படி தெளிவா ஒரு போஸ்டிங் போட உங்களால மட்டும்தான் முடியும். மேல வைங்கோ.:))))// பின்ன, இமாவா கொக்கா!! கிக் கிக்

    ReplyDelete
  27. தங்கள் அன்புக்கு நன்றி இலா & ஜெய்லானி.

    ReplyDelete
  28. இமா, நல்ல தெளிவா விளங்கிட்டுது. சாப்பாட்டு விஷயத்தில் சந்தேகமே வராதா எங்கட தலைக்கு!! ஹிஹி...

    ஜெய் பயப்படும் ஒரே ஆள் டைகர் தான்!!!!

    அதெப்படி கம்போடு பாயும் தாத்தாக்கு மட்டும் வடை. ஏன்ன்ன்ன் எங்களையெல்லாம் கண்ணிலை படவில்லையா???


    //வா:- இம்ஸ், எனக்கும் கவிசிவா போல ஒன்றுமே விளங்கவில்லை. டிஸ்ஷூ பெட்டி நல்லா இருக்கு. பூஸார் எங்கிருந்தாலும் அழகு தான். அதீஸூக்கு 2 தம்பிகளா? அல்லது ஒன்று அண்ணாவா? குழப்பமா இருக்கே. //
    அவ்வ்வ்வ்.. ( உபயம் : திரு. ஜெய் )
    இனிமேல் இப்படி பூடகமா/மறைமுகமா பதிவுகள் போட்டால் நானும் ஒளிச்சிருந்து பார்த்திட்டு, பிறகு எல்லோரும் கமன்ட் போட்ட பிறகு தான் போடுவேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா