Friday, 17 September 2010

!!!

இது என் கைவண்ணம், கருப்பு வண்ணம். ;) தலைப்பிட்டு உதவுங்களேன்.
~~~~~
இன்று முதல் இமாவின் உலகில் கைவினைப் பகுதி 'craft' என்று ஆங்கிலத் தலைப்பின் கீழ் தென்படும். தமிழ் தெரியாத என் மாணவி ஒருவர் கைவினைக்காகப் பின்தொடர்கிறார்.

47 comments:

 1. இமாவின் முறுக்கு!

  ReplyDelete
 2. இமா இது உங்கள் வீட்டு குருவி கூடுதானே..?

  ReplyDelete
 3. தீபாவளி டைம்ல கொளுத்தின பாம்பு வெடியோட மிச்சம் மீதிதானே ஆன்ரீ இது?? இத்த போயி உங்க கைவண்ணம்னு சொன்னா எப்பூடி? ஹிஹிஹி! கிக், கிக்,கிக்!

  ஜீனோ இஸ் லிட்டில் பிஸி இன் மேக்கிங் ஒன் வெல்கம் கார்ட் பார் ஆன்ரீ. ஏஞ்சல்-க்கு ஜென்டர்லாம் commonதானே ஆன்ரீ? எக்ஸ்பெக்ட் ஒன் கார்ட் ப்ரம் ஏஞ்சல்ஜீனோ சூன்.ஓக்காய்?

  ReplyDelete
 4. சின்ன வயசிலே எரித்த பாம்பு பட்டாசு எரிந்து முடிந்த பிறகு பார்க்க இப்படித்தான் காட்சி தரும்/ஆம் ஐ கரெக்ட் இமா?

  ReplyDelete
 5. இது ஏதோ காலணியின் லேஸை அல்லது காலணியை வெட்டி போட்ட மாதிரி இருக்கும், காயகறிகளை வெட்டுவதற்கு (செதுக்குவதற்கு) பதில் ...எதையாவது வெட்டனும் :))))

  ReplyDelete
 6. இது இமாவின் கைவண்ணம், கருப்பு வண்ணம். ;)

  தலைப்பு எப்பூடி? :))

  ReplyDelete
 7. imaa தலைப்பு 1.சிக்கலோ சிக்கல்
  2.கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
  3.எடக்கு மடக்கு

  ReplyDelete
 8. நறுக்கிய நாவல் நிறப் பயற்றங்காய்.
  இது சரியா?

  ReplyDelete
 9. //இமாவின் முறுக்கு!// நோப்.

  //Crazy hands// ம்.. பர்சன்னு சொல்லாத வரைக்கும் ஓகே. ;)

  //குருவி கூடுதானே..?// ;) நோப்.

  //தீபாவளி// கய் ஃபார்க்ஸா! //கைவண்ணம்னு// தான் சொல்வேன். //வெல்கம் கார்ட் பார் ஆன்ரீ// ஓ! பப்பி ஊருக்கு வராங்களா ஆன்ரீ!! //ஏஞ்சல்-க்கு ஜென்டர்லாம் commonதானே ஆன்ரீ?// ம்... !!!! ;)

  ReplyDelete
 10. //எரித்த பாம்பு பட்டாசு எரிந்து முடிந்த பிறகு// அதுவும் இல்லை. ;)

  //காய்கறிகளை வெட்டுவதற்கு பதில் ...எதையாவது வெட்டனும்// :))))

  நன்றி எல்ஸ். நீங்களாச்சும் என்னைப் புரிஞ்சுக்கறீங்களே!

  //1.சிக்கலோ சிக்கல் 3.எடக்கு மடக்கு// ஆஹா ஆசியா. ;)

  //நறுக்கிய நாவல் நிறப் பயற்றங்காய்// கூலிங் க்ளாஸைக் கழற்றி விட்டுப் பாருங்க. உங்கள் அருமை மகளை நீங்கள் புரிந்து வைத்துள்ளது.... இவ்வளவுதானா!! ;)

  சிவா மாதிரியே இதைப் படமெடுக்கச் சொன்னவரும் சிரிக்கிறார், இந்தக் கருத்துக்களைப் படித்து. ;))

  ReplyDelete
 11. ஐயோ...சீக்கிரம் என்ன வென்று சொல்லுங்க இமா.

  ReplyDelete
 12. கொஞ்சம் பொறுங்க ஸாதிகா. ;) இன்னும் 2 நாள் விட்டுப் பார்ப்போம் யாராவது சரியான பதில் சொல்கிறார்களா என்று. ;)))

  இப்ப சப்ஸ்க்ரைப் பண்ணி இருக்கீங்க இல்ல! பதில் தன்னால உங்களுக்கு வந்துரும். ;)

  ReplyDelete
 13. என்னது இது? பெரிய ஏஞ்சல் செய்த நூடுல்ஸோ :)

  ReplyDelete
 14. இமாவின் கறுப்பு சித்திரம்

  ReplyDelete
 15. பொரிக்கையில் கரியாகிப் போன pastry துண்டுகள்.

  ReplyDelete
 16. செபா ஆன்டி, அதை தான் நான் கொஞ்சம் ஸ்டைலா முறுக்கு என்று சொன்னேன்.

  ReplyDelete
 17. கை முறுக்கு !

  கிக்..கிக்.கிக்... இதை எழுதும் போதே சிரிப்பு வருதே !

  ReplyDelete
 18. is this a dish you made with poi ( taro flour )?

  ReplyDelete
 19. ;) சிலபேர் கொஞ்..சம் கிட்ட வந்து இருக்கிறாங்க. ;))

  ReplyDelete
 20. அப்ப ஏதோ ஒரு ஆப்ஜெக்டை டோட்டலா டேமேஜ் பண்ணிட்டேன் என ஒத்துகொள்றீங்க :)))

  ReplyDelete
 21. எனக்கும் இதை பார்த்தா தீபாவளிக்கு கொளுத்தி விட்ட பாம்பு போலத்தான் இருக்கு:(( இது சாப்டர item மா என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் to Mr.imma:)))))

  ReplyDelete
 22. பார்பெக்யூ செய்ய பயன்படுத்திய கரித்துண்டுகளா?

  ReplyDelete
 23. இமா இப்பொது நான் மார்க்கெட்டில் sea cucumber பார்த்தேன் அது இதை போலத்தான் இருக்கு. அது தானோ இது????

  ReplyDelete
 24. அழகா இருக்கு இல்லையா! அதுதான் முக்கியம். ;)
  எல்லோரும் பாட்டுக்கு கெஸ் பண்ணிக் கொண்டே இருங்க. நாளை வந்து சொல்கிறேன். ;)
  (பெருசா பில்டப் விடுறேனோ!!)

  ReplyDelete
 25. இருங்க இப்ப சொல்ரேன்

  ReplyDelete
 26. மாமீ இது பீட்ருட் துருவல் ஹல்வா செய்ய வச்சது சரியா

  ReplyDelete
 27. கைல இருக்கிற பூரிக்கட்டை இத்யாதி எல்லாம் தூக்கித் தூரப் போட்டுட்டு வாங்கோ எல்லாரும். பதில் சொல்லப் போறேன்ன்ன்ன். ;)

  ReplyDelete
 28. எல்லாருக்கும் நல்ல கற்பனைவளம். ;)

  ReplyDelete
 29. இவ்வளவு காலமும் என்னைப் பின்தொடருறவங்களுக்குத் தெரியாதது, புதுசா வந்த பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி அவர்களுக்குத் தெரிஞ்சு இருக்குது. ;)) "என் கலைந்த கனவுகள்..." என்கிறதுதான் மிகப் பொருத்தமான தலைப்பு. ;)) நல்வரவு & நன்றி சகோதரரே.

  எப்பவும் சான்விச் செய்ய அரிஞ்சு வைக்கிற கரை எல்லாம் ரஸ்க் ஆக்கி வைப்பன், பிறகு ப்ரெட்க்ரம்ஸ் போடலாம் என்று. அண்டைக்கு என்னவோ ஒரு சோம்பல்க் குணத்தில கெதியா வேலை நடக்கும் என்று கொஞ்சம் 'அவன்' (oven) சூட்டைக் கூட்டி வைக்க... எதிர்பாராமல் சட்டென்று கரிஞ்சுபோச்சுது முழுக்க. ;( எறிவம் எண்டு தூக்கினால் அப்பிடியே வலை மாதிரி ஒரு துண்டா வந்துது. வடிவா இருக்கவும் இங்க இருக்கிற ஆக்கள் எடுத்துக் குடுத்தாங்க ஐடியா, போட்டோ எடுக்கலாமே எண்டு. ;) நக்கல் எண்டு தெரியும். ஆனால் வடிவா இருக்கிறதை எறிய மனம் வர இல்ல.

  சும்மா இருக்கிற உங்களுக்கும் ஒரு வேலை தரத்தானே வேணும். ;)

  வந்து, பார்த்து, சிந்தித்துப் பதில் சொன்ன அனைவருக்கும் என் அன்புகலந்த நன்றிகள். ;))) (இனிமேலும் தொடர்ந்து வருவீங்கதானே!!) ;)

  ReplyDelete
 30. :(.
  இப்படி கரிக்கொட்டையா ஆகறவரைக்கும் கனவு கண்டுக்கிட்டு இருந்தீங்களோ! அதனாலதான் கனவு கலைஞ்சுப் போச்சோ!

  ReplyDelete
 31. சும்மா அடிச்சு விட்டேன்.. ஆனா இப்படி சொல்லுவீங்கன்னு நெனைக்கல.. இனிமேலும் தொடர்ந்து வருவதற்கு கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.. ஆனா........ பாலோயர் ஆகிட்டேன்... உங்கள் தமிழ் நடை எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது சகோதரி... அழிந்த பொருளை ஆக்கத்திற்கு உபயோகிக்கும் நீங்கள் ஒரு பீனிக்ஸ் பறவை...

  ReplyDelete
 32. நானும் சரியாகத் தான இமா சொல்லியிருக்கிறன்? இமாவின் கை "வண்ணம்" எண்டு? ஹாஹ்ஹா..

  ReplyDelete
 33. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?

  ReplyDelete
 34. ha ha ..immaa ! Nice one.. but you cut the bread like a thin thread :)

  ReplyDelete
 35. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

  ReplyDelete
 36. //உங்கள் தமிழ் நடை எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது சகோதரி...// + பின்தொடர்வதற்கும் நன்றி பிரகாஷ். ;)
  //அழிந்த பொருளை ஆக்கத்திற்கு உபயோகிக்கும் நீங்கள் ஒரு பீனிக்ஸ் பறவை...// டொய்ங்... ;) ஜெய்லானி வேற என்னைக் கமல் ரேஞ்ச்ல ஏத்தி விட்டிருக்கிறார். இருங்க எல்லாருக்கும் இருக்கு ஒரு நாளைக்கு. ;)

  சந்தூஸ், //நானும் சரியாகத் தான இமா சொல்லியிருக்கிறன்? இமாவின் கை "வண்ணம்" எண்டு? // என்ன ஹாஹ்ஹா..!! இதுக்குப் பதில் சொன்னால் நான் ஏன் மருதாணி போடுறன் என்கிறது வெட்ட வெளிச்சமாகிரும். ஹும்! வேணாம். க.கா.போவம். ;)))

  செபாம்மா, 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு,' எண்டுவாங்கள். நீங்கள் பூனைய ஆனை எண்டுறீங்கள். இண்டைக்கு ஒரே.. பெருமூச்சாக வருது எனக்கு. ;)

  இலா, //you cut the bread like a thin thread// யெஸ். திஸ் இஸ் கரப்ரெட் ஒன்லி. (சான்விச் செய்றதுக்கு முதல் நாளே கரை வெட்டி வச்சு விட்டால் அந்த நேரம் அசெம்பிள் பண்ணுற வேலை மட்டும் தான்.) பிறகு அப்பிடியே கட்டி ப்ரிஜ்ல போட்டுட்டு... எதையாவது பேக் பண்ணுற நேரம் தூக்கி 'அவன்'ல போடுறது. அண்டைக்கு என்னவோ ஒரு குணம் வந்து கெடுத்துப் போட்டுது. ;(

  ReplyDelete
 37. இது கைவன்னமா கை கலப்பா இமா?
  எதோ பிரச்ச்னை நடந்த பகுதியை
  போட்டோ எடுத்து போட்டுட்டீங்களா? :))
  என்றாலும் சுவராஸ்யம்தான்.
  அன்புடன்
  ஆஷிக்

  ReplyDelete
 38. வாங்கோ ஆஷிக். நான் தூக்கத்துல இருக்கிற டைம் தெரிஞ்சு வந்து கமண்ட் சொல்லக் கூடிய ஒரே... ஆள். நல்வரவு. ;)
  //எதோ பிரச்ச்னை நடந்த பகுதி// சுப்பர் கண்டுபிடிப்பு ஆஷிக். ;))) 'கைகல(ர்)ப்பு' தான். ;))

  ReplyDelete
 39. ஆஹா.. ரசித்தேன். கருகிப்போன ரொட்டித்துண்டுகளோடு கலக்கலானப் பின்னூட்ட யூகங்களையும்.

  ReplyDelete