Thursday, 2 September 2010

நட்பெனப்படுவது!!!

"மீண்டும் 'வெறும்' நண்பர்களாகி விட்டார்கள்," 

சொன்னவர் முகத்திலிருந்த சோகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. ;(

ஜெனிக்குப் பொறுக்கவில்லை. மருமகளாகவே நினைத்துச் சந்தோஷமாகப் பலதும் மனதில் தயார் செய்து விட்டார். இழப்பை நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவரது இழப்பு எங்களையும் சிறிதளவாவது பாதித்தது.

எங்கள் கூட்டம் ஒரு கூட்டுக் குடும்பம் போல. இங்கு நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக இல்லையா? ஒருவர் சோர்ந்தால் மற்றவர் ஆறுதற்படுத்தி, மகிழ்ந்தால் சேர்ந்து மகிழ்ந்து, அப்படி.

அவர் சேர்த்து வைக்கப் போராடினார். பக்கபலமாக நாங்கள் அவ்வப்போது கருத்துகள் எடுத்துக் கொடுப்போம்.

எவ்வளவோ முயன்றும் பலனில்லை. அவர்கள் தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள், தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று. 

ஜெனி நொந்து போனார். அவர் கணவர் இதனால் பாதிக்கப் படவில்லை. அப்படிப் பாதிக்கப் பட்டிருந்தாலும் அது ஜெனி சோர்ந்து எரிந்து விழுந்ததால் மட்டுமே இருக்கும்.

அவரது மனதை மாற்ற முடியாது என்று புரிந்து நாம் அமைதி காத்தோம். எப்போதாவது தானாகவே இந்தத் தலைப்பு வருகையில் முகம் கோணிப் போகும். பரிதாபமாக இருக்கும். "திரும்ப முயற்சித்துப் பார்க்கலாமே!" என்போம். "பேசுவது எல்லாம் பேசியாயிற்று. இனி ஆகப் போவது ஒன்றும் இல்லை," என்பார்.

ஆனால் அடிக்கடி முணுமுணுப்பார், "இவன் ஒரு காலம் உணர்வான். அருமையானதொரு பெண்ணை இழந்து விட்டோம் என்று வருந்துவான். அப்போ காலம் தாழ்ந்து போய் இருக்கும், ;("

உடனே கையைத் தட்டிக் கொண்டு "வெல், அவன் பிரச்சினை. அனுபவிக்கட்டும்," என்று தன் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார். 

ஒரு நாளாவது மிஷேலைத் தப்பாகச் சொன்னதில்லை. "இந்த முட்டாளோடு வாழ யாரால் முடியும். பிரிவது தான் மிஷேலுக்கு நன்மை," என்பார். 

ஆனால் மகனிடமும் பாசம் இல்லாமல் இல்லை. கண்டது ஓடிப் போய் அணைத்து முத்தமிடுவதைக் காண்கையில் எங்களுக்குக் கண் பனித்து விடும். அவரது ஒரே செல்லப் பையன் அல்லவா!

மிஷேலுக்கும் ஜெனிக்கும் இடையே இப்போதுள்ள உறவு பற்றி....
....நாளை பி.ப

10 comments:

  1. super

    இமா இந்த லிங்கில் போய் பாருங்க நிங்க கேட்ட டவுட் + நிறய்ய டிசைன்ஸ் இருக்கு.

    http://www.indusladies.com/forums/craft-and-crochet-works/43517-craft-works-plastic-canvas-work.html

    ReplyDelete
  2. இது தொடர் கதையா ?

    ReplyDelete
  3. இமா,ரொம்ப ஷார்ட்டா முடிச்சுடுறீங்க.?

    ReplyDelete
  4. அங்கு உள்ளவை பார்த்தேன். உதவிக்கு நன்றி விஜி. ;)

    ~~~~~~~~~~

    யாரு!! நாட்டாமையா! _()_ நல்வரவு.

    ஆமாம் ஆனால் இல்லை. கதையல்ல நிஜம்.

    சிந்தனைத் துளிகள் எல்லாம் பார்த்தேன். ம்ம். அது சரி, இப்படி நண்பர்கள் முகத்தில் எல்லாம் கரியைப் பூசுறீங்களே, சண்டை போடறது இல்லையா யாரும்!!

    ~~~~~~~~~~

    விரைவில் அதற்கொரு முடிவு கட்டி விடுகிறேன் ஸாதிகா, பொறுங்க.

    ~~~~~~~~~~

    Imma said @ Vanathy & Menaga "mmmm....." ;)))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா