ஒத்த வயதினராயினும் தகைமைகள் திறமைகள் வேறு தானே. ஆளாளுக்கு ஒரு நோக்கம் வைத்துக் கொண்டு வேலை தேடினர்.
ஜெனியின் புதல்வருக்கு இரண்டாவது முயற்சியில் ஓர் வேலை கிடைத்தாலும் பிடிக்கவில்லை என்று தொலைத்து விட்டு வந்து நின்றார். மூன்றாவது நேர்முகத் தேர்வில் பிடித்த வேலை கிடைத்தது. பெறாமகனுக்கு ஐந்தாவது முயற்சியில் வேலை கிடைத்தது.
மீதி இருவரும் தேடினர் தொடர்ந்து. ஜெனி என்னிடம் விசாரிப்பார். எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார், "நிறம் பார்க்கிறார்கள்." என்பார். நான் மறுப்பேன். அவர் அதையே பிடித்துக் கொண்டு இருந்தார். மிஷேலை விடத் தன் பிள்ளைகள் எந்த விதத்திலும் உயர்வு இல்லை, என்றார். கிட்டத்தட்ட முப்பது நேர்முகத் தேர்வுகளின் பின்னர் ஜெனிக்கு ஓர் வேலை கிடைத்தது, நல்ல சம்பளத்தில்.
அதுவரை இலவசத் தங்குமிடம், சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் ஜெனி தயவில். இப்பொது கூட சொற்பமாக அதுவும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் மிஷேலிடம் வாங்கிக் கொள்கிறார். இல்லாவிட்டால் வேறு அறை பார்த்துப் போய் விடுவாரே.
சிறிது காலம் கழித்து பிரிந்தவர் இருவரும் வேறு இணைகள் தேடிக் கொண்டார்கள்.
ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. புதிய மருமகளைப் பற்றிப் பெரிதாய்ப் பேசுவது இல்லை, இவர் ஐரோப்பியரே ஆயினும். எங்களுக்கு அவர் பெயர் கூடத் தெரியாது.
மிஷேலின் காதலர் தன் முன்னாள் காதலியிடமிருந்து பிரிந்து தான் இருக்கிறாராம். அதில் ஏதோ சட்டச் சிக்கல்கள். அவற்றில் சின்னப் பெண் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று இப்போ பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறார் ஜெனி. முன்பு மிஷேலுக்கு ஓர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வாராவாரம் பிரார்த்தித்தார். இப்போ இப்படி. மிஷேல் நேரம் கெட்ட நேரத்தில் வேலை முடித்தால் உறக்கம் விழித்திருந்து போய் அழைத்து வருகிறார். துணி வாங்கிக் கொடுக்கிறார். விதம் விதமாகக் காதணிகள் வாங்கிப் பரிசளிக்கிறார்.
மிஷேல் எங்கள் பாடசாலைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து உதவுகிறார். ஒரு நாள் மிஷேலும் ஜெனியும் 2:30க்கே பாடசாலையை விட்டு வெளியேறத் தயாரானார்கள். அன்று ஜெனியின் பையனுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக நட்புகள் சிலருக்கு இராவுணவாம். ஜெனி எதுவும் செய்யவில்லை. ஏற்பாடு எல்லாம் மிஷேல்தான். அதனால்தான் நேரத்துக்குக் கிளம்பி இருந்தார்கள்.
ஒரே வீட்டில் இப்படி ஓர் கூட்டுக் குடும்பம். இராவுணவுக்கு வந்த முக்கிய பிரமுகர் யார் தெரியுமா! ஜெனியின் மகனால் புது மருமகளாகத் தெரிவாகி உள்ளவர்தான். மிஷேல் சமோசா, சப்பாத்தி, குர்மா என்று பெரிதாக லிஸ்ட் போட்டார். இவர் சாக்லட் மட் கேக் பிரசித்தம். அதுவும் பேக் செய்தார். எல்லாம் சிரித்துக் கொண்டே செய்வார்.
சென்ற திங்கள் காலை பொது அறை மேசையில் ஒரு சொக் மட் கேக் எங்களுக்காகக் காத்திருந்தது. மிஷேல் தயாரிப்பு. ஐசிங் மட்டும் ஜெனி செய்திருந்தார்.
நாங்கள் இப்போதும் கண்டால் கேட்போம், ஏனிப்படி என்று. எங்களுக்கு ஜெனியையும் புரியவில்லை, மிஷேலையும் புரியவில்லை.
எல்லாவற்றுக்கும் ஒரு பளீர் சிரிப்புத் தான் பதில். சுலபமாகச் சொல்லுவார் மிஷேல் "இனி எங்களுக்குள் ஒட்டாது," என்று. அதை ஜெனி முன்பாகவே இயல்பாகச் சொல்லுவார். ஜெனியும் ஏற்றுக் கொள்கிறார்.
மிஷேல் திருமணம் என்று வரும்வரை எல்லாம் சரியாக இருக்கும். பிறகு ஜெனி பிரிவை எப்படி ஏற்றுக்கொள்வார்!!
வரும் டிசெம்பர் மாதம் இரண்டு காதல் ஜோடிகளும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒன்றாய்ச் சுற்றுப் பயணம் கிளம்பிப் போகிறார்கள். நால்வரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஜெனி அடிமனதில் இன்னமும் துளி நம்பிக்கை இருக்கிறது. எப்போவாவது இவர் நிரந்தரமாகத் தன் மருமகள் ஆவார் என்று.
ஜெனிக்கு எப்படி மிஷேலை விட ஓர் நல்ல மருமகள் கிடைக்க முடியாதோ அப்படியே மிஷேலுக்கும் ஜெனியை விட நல்ல மாமியார் கிடைக்க முடியாது.
இன்னும் காலமிருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம். அதனால் முற்றும் போட இயலவில்லை. ;)
எப்போதாவது...
ம்ம்.. இதுவே இந்தியாவா இருந்தா, ஏகப்பட்ட செண்டிமெண்ட் ஸீன்ஸ் சேத்து “மாமியாருக்குப் பின் மணவாளன்” என்று ஒரு “தமிழ்ப்படம்” எடுத்திருப்பாங்க!!
ReplyDelete;))
ReplyDeleteமாமீ முற்றும் போட்டுடாதீங்க ...நம்பிக்கைதானே வாழ்க்கை... :)))
ReplyDeleteஒரு மெகா தொடரை பார்க்குற ஃபீலிங் வருது...!! :-))
ReplyDelete// எல்லாவற்றுக்கும் ஒரு பளீர் சிரிப்புத் தான் பதில் //
ReplyDeleteஅதுதாங்க சரின்னு படுது எனக்கு.
வாயை திறந்துப் பேசிக்குட்டு, அதுக்கு கண்ணுவேறே,மூக்கு வேறேன்னு,
பதில் சொல்லிக்கிட்டு நமது நேரத்தை வீணாக்கிக்கிட்டு இருக்கிறதை விட,
யாரு என்னக் கேட்டாலும் இனிமேல் பளீர்னு சிரிச்சிட வேண்டியதுதான்......பெஸ்ட்.
இமா ! அருமையா இருந்தது...மிஷேல் திருமணம் செய்து கொண்டாலும் ஜெனி அவருக்கு பெறாமகள் தான்... என்னால் இவங்க வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியுது... Little ones running around Jeny calling her nana :))
ReplyDeleteஆமாம், நம்பிக்கைதானே வாழ்க்கை ஜெய்லானி. வடை கிடைக்கும் என்று நம்புவோம், சட்னி கூட கிடைக்காது. பூரிக்கட்டைக்கு விழவே தெரியாது என்று நம்புவோம், அது தவறி விழுந்துரும். அதுக்காக எல்லாம் சோர்ந்து போறமா என்ன! ;)
ReplyDeleteஒரு பளீர் :D @ மொகமட் அயூப். ;)
அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது இலா.
//ஆமாம், நம்பிக்கைதானே வாழ்க்கை ஜெய்லானி. வடை கிடைக்கும் என்று நம்புவோம், சட்னி கூட கிடைக்காது. பூரிக்கட்டைக்கு விழவே தெரியாது என்று நம்புவோம், அது தவறி விழுந்துரும். அதுக்காக எல்லாம் சோர்ந்து போறமா என்ன! ;)//
ReplyDeleteஹா..ஹா......சிரிச்சி..சிரிச்சி...கண்ணிலே தண்ணீரே வந்துடுச்சி..ஹா..ஹா...டிஸ்யூ பிளிஸ்
ஹாஹ்ஹா.. எனக்கு A Mid Summer Night's Dream பாதி வரைக்கும் படிச்ச மாதிரி இருக்கு இமா..
ReplyDeleteமிஷேல் ஜெனியோட மருமகளாகாட்டியும் பெறா மகள் தான்..
உடைந்ததை ஒட்டவைப்பதில் நம்மூர் மக்களுக்கு திறமை அதிகம் இமா.. அடிதடி சண்டைக்கு பின்னரும் கூட முன்பிருந்ததை விட சந்தோசமாக வாழ முடியும்.. இவர்களுக்கு அந்தத் திறமை கொஞ்சம் கம்மி தான்.. அப்படி ஏன் ஒட்ட வைக்கணும்னு நினைக்கறாங்க..
//இவர்களுக்கு அந்தத் திறமை கொஞ்சம் கம்மி தான்.//நான் அப்படி நினைக்கவில்லை. ;)
ReplyDelete//அப்படி ஏன் ஒட்ட வைக்கணும்னு நினைக்கறாங்க..// ம். அதை அவங்க தனி மனித சுதந்திரம் என்று நினைக்கிறாங்க. அதனால தாயானாலும் ஒரு வட்டத்துக்கு வெளியே நின்று... அதே நேரம் எது ஆனாலும் போதுமான சப்போர்ட்டும் கொடுக்கிறாங்க.
மிஷேலும் ஜெனியும் எப்படியோ கடைசி வரைக்கும் நல்ல மாமியார் மருமகளா இருந்தாச்சரிதான் !
ReplyDeleteதலைப்பு மாறியப்பவே புரிஞ்சுச்சு நட்பு அன்பா மாறினதைச்சொன்னேன்!
அதெல்லாம் இருப்பாங்க. ;)
ReplyDeleteஅன்பு, நட்பு, ப்ரியம் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே வசந்த்!! ;)
அன்பு, நட்பு, ப்ரியம் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே ---ஆம்
ReplyDeleteவாழ்க வளமுடன்
;) நலம்தானே ஹைஷ்!
ReplyDelete:)
ReplyDeleteஅதிராட வேண்டுதல் சிவா மூலமா நிறைவேற்றப் படுதோ!!!!! ;)
ReplyDeleteநல்வரவு சிவா.
பூஸ் இல்லாம ஏரியாவே டல்லா இருக்கு இந்த வாரம் :(
ReplyDeleteம். அதுதான் அன்பெனப்படுவது.
ReplyDeleteஅவங்களுக்கு எதுவோ முக்கிய காரியம் இருக்கு. இல்லாவிட்டால் வந்து இருப்பாங்க. வேலையை முடிச்சுட்டு மெதுவே வரட்டும்.
தொடரலாமே..
ReplyDeleteதொடர இன்னும் காலம் இருக்கிறது இர்ஷாத். ;)
ReplyDelete