நேரடியாகவே கேள்விகளுக்குப் போகிறேன்.
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. கைவினை
1. கைவினை
2. ஹார்மோனிகா
3. வண்ணத்துப்பூச்சி & வண்ணத்துப்பூச்சி மனதுள்ளவர்கள்
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. உணவுத் தட்டில்... பறவைகள், விலங்குகள்.
1. உணவுத் தட்டில்... பறவைகள், விலங்குகள்.
2. ஒருவர் பற்றி இன்னொருவரிடம் பேசுவது
3. என் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்வது
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1. புகை & செயற்கை வாசனைகள்
1. புகை & செயற்கை வாசனைகள்
2. என் கட்டுப்பாட்டில் நான் இல்லாத தருணங்கள்
3. இணையப் பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய எதிர்பாராத ஆபத்துக்கள்
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. எம் எண்ணங்களை நாம் ஏன் மற்றவர்களில் திணிக்க விரும்புகிறோம் என்பது
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. எம் எண்ணங்களை நாம் ஏன் மற்றவர்களில் திணிக்க விரும்புகிறோம் என்பது
2. எப்படி எம்மால் மற்றவர்களைச் சுலபமாக விமர்சிக்க முடிகிறது என்பது
3. நான் தட்டும் இந்த வரி... ஒரு கடதாசி இல்லாது, மையில்லாது வான்வழி வந்து உங்களிடம் உடனே சேர்வது... அதை நான் அழிக்கக் கூடியதாகவோ மாற்றக் கூடியதாகவோ இருப்பது. ம்.. இந்த இணையம் தொடர்பான அனைத்துமே என்னைப் பிரமிக்க வைக்கின்றன.
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
எனக்கென்று ஒன்று கிடையாது. பொது அறை மேசையில் இந்த நிமிடம் உள்ளவை..
1. இஸ்திரிப் பெட்டியும் அதற்கான கம்பளியும் எனக்கென்று ஒன்று கிடையாது. பொது அறை மேசையில் இந்த நிமிடம் உள்ளவை..
2. ப்ளேஸ் மாட்கள் (place mats)
3. ஆப்பிள், வாழைப்பழம், கீவி, மான்டரின் கொண்ட இரண்டடுக்குப் பழத்தட்டு
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
1. தமிழில் எழுத்துப் பிழைகள் - எனக்குச் சிறு வயது முதலே 'ழ ள' பிரச்சினை இருந்திருக்கிறது. சமயத்தில் 'னு நு' கூட யோசித்துப் பார்த்து எழுதுவேன். எழுத்தென்றல்ல, எதிலும் ஒரே மாதிரி இரண்டு இருந்தால் சந்தேகம் வரும்; இதுவா அதுவா என்று. ஆனால்... இவை மட்டும் தான். வேறு எழுத்துப் பிழைகள் வருவது குறைவு. தட்டச்சில் சில சமயம் வருகிறது. ;(( தூக்கக் கலக்கத்தில் அல்லது சுவாரசியம் எல்லை மீறிப் போகையில் இப்படி ஆகிறது. பொறுமையாக் தட்ட வேண்டும் என்று நினைப்பேன். ‘என் பக்கம்’ போனால் அது முடிவதில்லை. ;) எப்போவாவது பிழையாகத் தட்டி இருந்தால் நானே திரும்பக் கண்டுபிடித்துவிடுவேன். படிக்கும் போதே சிரிப்பு வரும். முடிந்தால் மாற்றுவேன். அல்லது கீழே ஒரு குறிப்பாகச் சொல்லி விட்டுப் போவேன்.ஆனால் சோயாமீட் கிழங்குப் பிரட்டலுக்கு "கரித்தூள்தான் போட வேணுமா?" என்பது போல் எழுதி இருந்தால் எப்படி சிரிக்காமல் இருப்பது? ;))
சமையற் குறிப்பு எழுதுகிற போது உளுந்தை, கடலையை ஊரவைக்கும்படி சொல்வார்கள் சிலர். ஒரு நொடி கண்ணை மூடி ஊர வைத்துப் பார்ப்பேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன், சிரிப்பாக வரும். ;)
2. அதிரா
3. மொழி (திரைப்படம்)
7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1. கேக் ட்ரே (கைவினை) – செய்து முடித்து அறுசுவையில் வெளியானதும் வழக்கம்போல் இமாவின் உலகில் செய்முறைக்கான தொடர்பு கொடுக்கப் படும்.
2. ஜன்னல்களுக்கு திரைச்சீலை - லேஸ் துணி வாங்கி வைத்திருந்தேன். இப்போ பாடசாலை விடுமுறை; பயன்படுத்திக் கொள்கிறேன். முன்பு இருந்தது கெட்டுப் போக ஆரம்பித்து விட்டது.
3. கிடைக்கிற நேரத்தில் சமையலறையில் ஒவ்வொரு அலமாரியாகச் சுத்தம் செய்கிறேன்.
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1. சேர்த்து வைத்திருக்கும் குப்பைகள் அனைத்தையும் கைவினையாக்கி ரசித்து முடித்து வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
என் மாமியார் மரணத்தின் பின் அவர் மகள் மிகவும் சிரமப்பட்டார். ஒவ்வொரு பொருளும் ஒரு நினைவைக் கொண்டுவர... வைக்கவும் முடியாமல் வீசவும் முடியாமல்... ;( நேரம் வேறு நிறைய எடுத்தது. யாரும் என்னை மனதிற்குள் திட்டாமல் இருக்கவேண்டும் அல்லவா? அதனால், போகும் முன் என் இடத்தைச் சுத்தமாக விட்டுச் செல்ல விரும்புகிறேன்.
2. வீட்டின் மேல் உள்ள மோட்கேஜைக் கட்டி முடித்தால் நல்லது. இல்லாவிட்டாலும் என்ன! வங்கி விற்று எடுத்துக் கொள்ளும். ஆனால் பிள்ளைகளுக்கு எந்தக் கவலையும் விட்டுப் போக விருப்பமில்லை.
3. என் மேல் பிரியமான, நான் என் பிள்ளைகளாக நினைக்கும் இணைய உறவுகள் சிலர் இருக்கிறார்கள். பேசி இருக்கிறேன்; புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்களை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும்.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
கேள்வி இன்னும் தெளிவாக இருந்திருக்கலாமோ! இன்றா? ஒரு மணி நேரத்திலா? இறப்பின் முன்பா!!! இல்லை... எது இயலும் என்பதா?? எது கேள்வி! இப்படி யோசித்ததே இல்லை.
1. எந்தக் குப்பையையும் அழகான பொருளாக மாற்றுவது
2. இந்தத் தொடரை எழுதி முடிப்பது
3. கடைசி வரை செபாவுக்கு நல்ல மகளாக இருப்பது
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
(காதினாலா வாயினாலா?)
1. கடன் இது அடியோடு பிடிக்காது. ஆனால் இங்கு உள்ள அனைவரையும் போல் என் வீடும் மோட்கேஜில் தான் இருக்கிறது. ;( எதுவும் இரவல் கேட்கப் பிடிக்காது.
2. என்னை யாரும் திட்டுவது (கேட்டதில்லை இதுவரை)
3. சில சொற்கள் காதில் விழுந்தாலே பிடிப்பதில்லை. ;(( எப்படித்தான் சங்கடமில்லாமல் உச்சரிக்கிறார்களோ என்று தோன்றும்.
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. சங்கீதம் (பாடசாலையில் கற்றதன் பின் கிடைக்கவில்லை சந்தர்ப்பம்)
2. நடனம்
3. நீச்சல்
1. சங்கீதம் (பாடசாலையில் கற்றதன் பின் கிடைக்கவில்லை சந்தர்ப்பம்)
2. நடனம்
3. நீச்சல்
12) பிடித்த மூன்று உணவு வகை?
(மூன்று போதுமா! ;) )
1. ஆஸ்மி
2. புல்டோ - இன்னும் ‘அங்கே' குறிப்புக் கிடைக்கவில்லை. ;( யாராவது கண்டுபிடித்துத் தந்தால் நல்லது.
3. தொதோல் - எங்கள் மரத்துத் தேங்காயில் பாலெடுத்து... பெரிய அடுப்பு வைத்து க்றிஸ்ஸும் என் மாமியும் சேர்ந்து ஒரு திருவிழாப்போல் தொதோல் கிண்டுவார்கள். அதன் சுவை... சுவைத்ததில்லை வேறு எங்கும்.
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அடிக்கடி மாறும் இது. சமீபத்தில் மனதில் இசைப்பவை தெய்வத்திருமகள் திரைப்படப் பாடல்களான
1. கதை சொல்லப் போறேன்
2. பபபா பாபா பாபா
3. -------------
14) பிடித்த மூன்று படங்கள்?
1. தெய்வத்திருமகள்
2. மொழி
3. அபியும் நானும்
1. தெய்வத்திருமகள்
2. மொழி
3. அபியும் நானும்
15) இது இல்லாமல் வாழ முடியாது என்று சொல்லும்படியான மூன்று விஷயம்?
1. க்றிஸ் - க்றிஸ்ஸின் இடத்தில் செபா வேறு யாரை எனக்காகத் தெரிந்திருந்தாலும் இன்று இந்தப் பதில் சொல்ல இமா உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்பேன். எனக்குக் கிடத்த வரம் அவர்.
1. க்றிஸ் - க்றிஸ்ஸின் இடத்தில் செபா வேறு யாரை எனக்காகத் தெரிந்திருந்தாலும் இன்று இந்தப் பதில் சொல்ல இமா உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்பேன். எனக்குக் கிடத்த வரம் அவர்.
2. புன்னகை – இதுவும் இறைவன் கொடுத்த வரம்தான். ;)
3. வென்டலின் – இது கையில் இல்லாமல் எங்கும் போக மாட்டேன். எனக்காக கண்டுபிடிக்கப்பட்ட வரப்பிரசாதம். ;)
no no no mee the firstu....
ReplyDelete1. சங்கீதம் (பாடசாலையில் கற்றதன் பின் கிடைக்கவில்லை சந்தர்ப்பம்)//
ReplyDeleteஉங்களுக்கு அடுத்த திரைபடத்தில் வாய்ப்பு காத்து இருக்கிறது...
உங்களை சிரிக்க வைக்கும் மூன்றுவிஷயம் or மனிதர்கள்?
ReplyDelete1. தமிழில் எழுத்துப் பிழைகள் -//அப்போ கண்டிப்பா எண்ட பெயர் இருக்கும்
கேள்வி இன்னும் தெளிவாக இருந்திருக்கலாமோ! இன்றா? ஒரு மணி நேரத்திலா? இறப்பின் முன்பா!!! இல்லை... எது இயலும் என்பதா?? எது கேள்வி! இப்படி யோசித்ததே இல்லை.//
ReplyDeleteநீங்க ரூல்ஸ் ஒன்னு போடு எக்ஸ்ட்ரா ஒரு கேள்வி நீங்களே உட்புகுத்தி இருக்கீங்கள் ...
1. கதை சொல்லப் போறேன்
ReplyDelete2. பபபா பாபா பாபா
3. -------------??????
மூணாவது என்ன பதில் சொல்லுங்க
கை வேலைத்திறனில் எத்தனி ஆர்வமும் ஈடுபாடும் உங்களுக்கு உள்ளது என்று உங்களது இந்தப் பதிவின் மூலம் அறிந்து பிரமிப்பாக உள்ளது இமா
ReplyDeleteதோதோல் ஒகே ஆஸ்மி புல்டோ???????????????
ReplyDelete//பபபா பாபா பாபா // இன்னும் ரெண்டு வரியை சேர்த்து எழுதி இருந்தால் குறைந்தா போய் விடும் இமா?:-)
ReplyDelete;))
ReplyDeleteஅது... ரெண்டாவது வரி... வருதே எனக்கு பாப்பா.. ;))))))))
முன்னாலயே தட்டினேன்... பிறகு இந்த பூஸ் வந்து ஏதாச்சும் கமண்ட்டும் என்று விட்டுட்டேன். ;)
ReplyDeleteசிவா.. எதுக்கு //no no// நீங்கதான் ஃபர்ஸ்ட்டு. எஸ் சொல்லுங்க. ;) சிவா படம்லாம் எடுக்கிறீங்களா!! சொல்லவே இல்ல. ;)
ReplyDelete//மூணாவது என்ன பதில்// பாபா ப்ளாக் ஷீப்... ;))
//தமிழில் எழுத்துப் பிழைகள் - அப்போ கண்டிப்பா எண்ட பெயர் இருக்கும்// இருந்துது, இப்ப இல்ல. தப்புத் தப்பா சிவா தட்டினதை தப்பாப் படிச்சு சண்டை போட்டது நினைப்பு இருக்கு இன்னும். சாரி சிவா. ;(
ReplyDeleteஸாதிகா.. //ஆஸ்மி// லிங்க் க்ளிக் பண்ணுங்க.
ReplyDelete//புல்டோ// இன்னும் தான் தேடுறேன். அது... உங்க வீட்ல சாப்பிட்டேனே ஒரு கமர்கட்... (நீங்க கொடுக்கல) ;) கருப்பா பளபளான்னு.. கொஞ்சம் அது போலதான் சுவை இருக்கும். தேங்காய்த்துருவல் மட்டும் அப்பிடி பெரிதாய் இராது. டாஃபி 2.5, 3 செ.மீ அளவுக்கு நீளமாக விரல் மொத்தம் இருக்கும். வெள்ளைக் கடதாசில சுற்றி இருக்கும். வாய்ல போட்டா லேசுல கரையாது. சுவை, வாசனை எல்லாம் சூப்பரா இருக்கும். லிங்க் தட்டிப் பாருங்க.
ஆஆ இமா.... குட் மோனிங்:).
ReplyDeleteஎழும்பினதும் நேரா இங்க வந்திட்டேன்.. தலைப்பு மேலே வரேல்லையே:((. லிங் இணைத்தது நல்லதாப்போச்ச்ச்ச்ச்:)).
ஆஆஆஆஆ எங்கின விட்டேன்ன்ன் பொறுங்க ஒண்ணொண்ணா வாறேன்ன்:).
ம். _()_ ;)
ReplyDelete//வண்ணத்துப்பூச்சி மனதுள்ளவர்கள்// புரியல்ல:((.
ReplyDelete//எனக்குச் சிறு வயது முதலே 'ழ ள' பிரச்சினை இருந்திருக்கிறது.//
ஹா....ஹா..ஹா.. இப்பத்தானே தெரியும் இதெனக்கு:))). எனக்கு மட்டுமாக்கும் என நினைச்சிருந்தேன்... நு னு வுமோ? கிக்..கிக்....கீஈஈஈஈஈ. நு ஆரம்பம்...
”னு” - இது முதலெழுத்தாக வராது இடையில் மட்டுமே.. இம்மட்டும்தேன் தெரியும் இதுபற்றி:)).
//ஒரு நொடி கண்ணை மூடி ஊர வைத்துப் பார்ப்பேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன், சிரிப்பாக வரும். ;)//
அடக் கடவுளே... இதுக்குக் கீழ மண்புழு “ஊறுது”:), அதுக்குக் கீழ அதிராவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
ஐ இமா.. ஆ யூ ?..:)).
ReplyDelete//அதனால், போகும் முன் என் இடத்தைச் சுத்தமாக விட்டுச் செல்ல விரும்புகிறேன். //
2012க்குள் சுத்தமாக்கிடுங்க. புளொக்கை என்ன செய்வதாக உத்தேசம்:).
இனிப்புத்தான் பிடிக்குமோ?:(((. நல்ல தொதல் கனடாவில் கிடைக்குது, ஆனா புளூட்டோ ம்ஹூம்.. அம்மம்மாவை நினைக்க வைக்குது.
3.----- மியா மியாப் பூனாஆஆஆஆஅ:))).
//3. வென்டலின் – இது கையில் இல்லாமல் எங்கும் போக மாட்டேன். எனக்காக கண்டுபிடிக்கப்பட்ட வரப்பிரசாதம். ;)// :(.
சுடச்சுட சூப்பர் பதிவு அண்ட் பதில்கள். ச்சொட் அண்ட் சுவீட் சுப்பேர்ப்.
ReplyDeleteநிறைய இடத்தில இருந்து புகை வரப்போகுது...கிக்..கிக்...கீஈஈஈஈஈ.. கொஞ்சம் பொறுங்கோ.. நித்திரையால எழும்புவினைக்கும்:)).
//siva said...
no no no mee the firstu....
//
கடவுளே!!!! இங்கேயும் அதே குரல்.... சாமீஈஈஈஈஈஈஈ மீ த எஸ்கேப்பூஊஊஊஊஊஊ:)).
மிக்க நன்றி இமா... தொடர்ந்தைக்கு.
ஊசிக்குறிப்பு::
நீங்க இப்பூடி டக்கு டக்கெனத் தொடர்றதாலதான், எனக்கும் தொடர்ந்து தொடருக்கு அழைக்கோணும் எண்டு ஆசை ஆசையா வருது..:)). அதுக்காகத் தொடராம விட்டிடாதீங்க:)))).
//இமா said...
ReplyDeleteஅது... ரெண்டாவது வரி... வருதே எனக்கு பாப்பா../// கிக்..கிக்...கீஈஈஈஈஈஈ
முன்னாலயே தட்டினேன்... பிறகு இந்த பூஸ் வந்து ஏதாச்சும் கமண்ட்டும் என்று விட்டுட்டேன். ;)
//
பா...பா வாஆஆஆஆஆ? அடக் கடவுளே... நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்... ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்து:))
//புளொக்கை என்ன செய்வதாக உத்தேசம்// அது என் நினைவாக காற்றில இருந்து... எப்பவாவது யாராவது விஷயம் தெரியாம கமண்ட் போடுவினம்; அப்ப அதிரா மாதிரி யாராவது வந்து விளக்குவினம். ;)
ReplyDelete//நல்ல தொதல்// இல்ல. எங்கட கையால செய்யுறது போல வராது. எங்கடது மட்டக்களப்பு ஸ்பெஷல் ரெசிபி.
//தொடர்ந்து தொடருக்கு// இனி 2 நாள்ல ஸ்கூல்.
அச்சோ!! அதை டிலீட் பண்ண மறந்து போச்ச்.. ;))
//ஐ இமா.. ஆ யூ ?..:)).// krrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ;) nopeeee
ReplyDeleteஎனக்கும் மேலை வரலையே ஏன்ன்ன்ன்ன்? இருங்கோ படிச்சுட்டு வாறன்.
ReplyDelete//இணையப் பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய எதிர்பாராத ஆபத்துக்கள்//
ReplyDeleteஇது பத்தி எனக்கும் ரொம்ப குழப்பம் பிளஸ் பயம் எப்போதும் உண்டு. டெக்னாலஜி யால் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு. என் பையன்னுக்கு இத சொல்லிக்கிட்டே வரேன்.
//உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?//
அதிரா
நானும் வழி மொழிகிறேன் ( ஸ்பெல்லிங் மிஸ்டேக் செக் பண்ணிக்கோங்க ?? ::)
//சங்கீதம் (பாடசாலையில் கற்றதன் பின் கிடைக்கவில்லை சந்தர்ப்பம்)//
அதிரா கிட்ட ஆன்லைன் மியூசிக் கத்துகொங்களேன் :)
//வென்டலின்// இது என்னங்க? புரியலையே ?
////siva said...
no no no mee the firstu....
//
கடவுளே!!!! இங்கேயும் அதே குரல்.... சாமீஈஈஈஈஈஈஈ மீ த எஸ்கேப்பூஊஊஊஊஊஊ:)).//
ஐயோ யோ மீ டூ எஸ்கெப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஉ
//இமா said...
ReplyDelete//புளொக்கை என்ன செய்வதாக உத்தேசம்// அது என் நினைவாக காற்றில இருந்து... எப்பவாவது யாராவது விஷயம் தெரியாம கமண்ட் போடுவினம்; அப்ப அதிரா மாதிரி யாராவது வந்து விளக்குவினம். ;)///
கடவுளே!!! அப்போ நானும் இருக்க மாட்டேன் எண்டுதான் நினைக்கிறன்...(2012), எதுக்கும் இப்பவே என்னுடையதையும் சேர்த்து “ஜீனோ”விடம் பொறுப்பை ஒப்படைச்சால் என்ன இமா?:). கையெழுத்துப் போட்டு கடிதம் வாங்கிடோணும்...
நாங்க அங்கின போனதுக்கப்புறம்தான் எங்கட புளொக்கில கை வைக்கோணும் எண்டு, இல்லாட்டில் இப்பவே ஜீனோ ஏதாவது பண்ணிடுவார்:)).
En Samaiyal said...
ReplyDeleteசமீபத்தில நியூசில் படித்தேன், பேஸ்புக்கில் படங்கள் போடுவதால் ஆபத்து என இருந்தது..... ஜாக்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்தை:)).
//உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?//
அதிரா
நானும் வழி மொழிகிறேன் ( ஸ்பெல்லிங் மிஸ்டேக் செக் பண்ணிக்கோங்க ?? ::).
நான் எப்ப கிச்சு கிச்சு மூட்டினனான்?:)). சிவனே எண்டு கட்டிலுக்குக் கீழதானே இருக்கிறேன்:))).
கிக்..கிக்..கீஈஈஈ இனிமேல் ஆரும் வாழ்க்கையில மொழி க்கு ஸ்பெலிங் மறக்கவே மாட்டினம்ம்ம்ம்:))
///அதிரா கிட்ட ஆன்லைன் மியூசிக் கத்துகொங்களேன் :)///
ஒருக்கால் பிடிச்சுத் தாங்கோ கிரிஜாவை:))..... கிரிஜாவின் பதிவு படிச்சதுமே குபீரெனச் சிரிச்சு, எல்லோரையும்(வீட்டில) என் பக்கம் பார்க்க வச்சுட்டேன்:))).
மீ த firstu .... mee escapuuuuuuuuuu:).
இப்பத்தான் நான் அதிராவுக்கு கர்ர்ர்ர் சொன்னேன். அதை நான் வாபஸ் வாங்கிறேன். ஏனென்றால் உங்களை தொடருக்கு அழைக்காமல் விட்டதுக்கு.சாரி
ReplyDeleteவாசித்துப்போட்டு வாறன்.wait.
இமா 200 வது பதிவில் உங்களைப்பற்றி சொல்லிவிட்டீர்கள். Glückwunsch & danke.
ReplyDelete6 வது விடயம்(உழுந்து ஊ(ர)ற) சிரித்து வயிற்றுவலியே வந்துவிட்டது.(ஸ்ரீkkum)
அதிராவின்(மொழி(படம் சூப்பர்))பிழை ட்ரேட் மார்க்.
நான் அதிராவின் பிழையை ரசிக்கிறேன். அந்த சோயாமீட்க(ரி)றி மறக்கமுடியாது. எனக்கும் திருத்தவேணும் போல இருக்கும். ஆனால் திருத்துவதில்லை.ஏன் என்றால் ரசி(கை)க்கிறேன்.
நிறைய அலுமாரிகள் வைத்திருக்கிறீர்களா இமா???
ஆகா... எங்கிட்டயும் müll இருக்கு அனுப்பிவிடவா?
//இணைய உறவுகள் சிலர் நேரில் சந்திக்க வேண்டும்.// பூஸாரையா.
சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்(பேன்)பா.
செபாம்மா(சுகமா)வுக்கு இப்பவும் நல்ல மகள்தானே.
அபியும் நானும் பிடிக்கு(இ)மா. :) :)
15 வது. புன்னகை.இதுதான் உங்க ட்ரேட் மார்க் ஏஏஏஏஏஏ. இறைவன் நிறையவே கொடுத்திருக்கிறான். தொடர்ந்தும் இப்படியே நீங்க சிரித்துக்கொண்டு,கவலைகள்(நோய்) இல்லாமல் வாழ வேண்டும் இமா.
உங்க பதிவு மொத்ததில்(குண்டு) மிக அருமை.
ஊசி சந்தேகம்: நோய் சரி.அதுவென்ன நொடி?(நோய்,நொடியில்லாமல்) தெரியுமா உங்களுக்கு இமா??????
இருநூநூநூறு இரண்டாயிரமாக வாழ்த்துக்கள்.
ReplyDelete//எனக்கும் மேலை வரலையே ஏன்ன்ன்ன்ன்?// அது கனகாலமா அப்பிடித்தான் வான்ஸ். ;( எல்லாரும் லேட்டா லேட்டாத்தான் வாறீங்கள். இட்ஸ் ஓகே. வடை வேணுமெண்டால் மெய்ல்ல அனுப்புறன். ;) ஆனால்... ஏதும் முக்கியமான பதிவெண்டால் பரவாயில்ல. சும்மா இதெல்லாம் அனுப்பி ஏன் உங்களைத் தொந்தரவு படுத்துவான்.
ReplyDeleteகிரிஜா... //http://www.ventolin.com// ;)
அதீஸ்.. //“ஜீனோ”// எங்கயோ சிங்கத்துக்குப் பின்னால ஒழிஞ்சு இருந்து பாக்குறார். ;)
//பேஸ்புக்கில் படங்கள் போடுவதால் ஆபத்து என// நெட்ல எல்லாமே ஆபத்து தான். படம் போடாமல் விட்டால் மட்டும் சேஃப் இல்ல. ஆனால்... எல்லாத்துக்கும் பயந்து கொண்டு ஒழிஞ்சு இருக்கவும் ஏலாது.
அதிரா என்னைத்தான் லிஸ்டில முதலாவதா கூப்பீட்டு இருந்தவ அம்முலு. ஹைலைட் பண்ணிப் பார்க்கேல்லயோ நீங்கள்! லீவும்தானே, போட்டாச்சுது.
ReplyDelete//சோயாமீட்க(ரி)றி// சொன்னது அதிரா இல்ல. கமண்ட்ல வந்து இருந்துது. ;)
//நிறைய அலுமாரிகள்// தமிழ்ப்படுத்த சோம்பல்ல போட்டது அது. வரேக்க பார்ப்பீங்கள் தானே. ;)
//இணைய உறவுகள் சிலர் நேரில் சந்திக்க வேண்டும்.// பூஸாரையா.// க்ர்ர்.. பிள்ளைகள் மாதிரி எண்டுறன். என்னைக் கிழவியாக்கிப் பாக்கிறீங்கள். ;)
//செபாம்மா//அங்க போஸ்ட்டிங் போட்டு இருக்கிறா.
//அபியும் நானும் பிடிக்கு(இ)மா.// மழலை பேசக் கூடாது. ;) நானும் இல்லை, என்னையும். ;)
//நொடி// = நொடித்துப் போதல்.... வாழ்க்கையில், தொழிலில் நஷ்டமடைந்து நிலைகுலைந்து... உடைந்து போவது. பணக்கஷ்டம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
;) நன்றி அம்முலு.
ReplyDelete//ammulu said...
ReplyDeleteஇப்பத்தான் நான் அதிராவுக்கு கர்ர்ர்ர் சொன்னேன். அதை நான் வாபஸ் வாங்கிறேன்.//
உப்பூடிச் சொன்னா சொன்னதெல்லாம் அழிஞ்சிடுமோ?:)))) நான் விட்டிடுவனோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).
/////சோயாமீட்க(ரி)றி// சொன்னது அதிரா இல்ல. கமண்ட்ல வந்து இருந்துது. ;)//
ReplyDeleteஇப்படிப் பிழை நான் விடமாட்டேனே.... சொன்னது நாந்தானா என திடுக்கிட்டு விட்டேன்:)... உஸ் அப்பா... என்னைத் திடுக்கிட வைத்த அம்முலுவுக்கு இன்னொரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
இன்பொக்ஸ் பாருங்கோ. 2 நாள் முன்னால ஒரு மெய்ல் அனுப்பினன்.
ReplyDelete//செபாம்மா//அங்க போஸ்ட்டிங் போட்டு இருக்கிறா.///
ReplyDeleteநீங்களும் ......ல வரப்போறீங்களோ அம்முலு?:) நாங்க சீட் புக் பண்ணிட்டோம்.
//நொடி// = நொடித்துப் போதல்.... வாழ்க்கையில், தொழிலில் நஷ்டமடைந்து நிலைகுலைந்து... உடைந்து போவது. பணக்கஷ்டம் என்றும் வைத்துக் கொள்ளலாம். //
முன்பு படித்ததாக நினைவு.... பின் மறந்தே விட்டேன்.... நல்ல விளக்கம் ரீச்சர்.
ஆஆஆஆஆஆஅ.. இமா சொறி... நினைச்சேன் நீங்க மெயில் அனுப்பியிருப்பீங்களோ என ஆனா பார்க்க மறந்திட்டேன் பார்க்கிறேன்:((((.
ReplyDeleteஅதில இருக்கு சோயாமீட் கரி ;)
ReplyDelete/////இணைய உறவுகள் சிலர் நேரில் சந்திக்க வேண்டும்.// பூஸாரையா.// க்ர்ர்.. பிள்ளைகள் மாதிரி எண்டுறன். என்னைக் கிழவியாக்கிப் பாக்கிறீங்கள். ;)
ReplyDelete///
நுணலும் தன் வாயால் கெடுமாமே... ஆஆஆஆஆஆ இதுக்கு மேலா ஆருக்கு எப்பூடி வேணுமே கற்பனை பண்ணிக்கொள்ளுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... நான் என் கற்பனையைச் சொன்னால் துவக்கில மருந்து போட்டுச் சுடுவினம்ம்ம்ம் என்னைத்தேஏஏஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்:)))
குழப்படி பூஸ். ;)
ReplyDeleteஅதீஸ்.. //“ஜீனோ”// எங்கயோ சிங்கத்துக்குப் பின்னால ஒழிஞ்சு இருந்து பாக்குறார். ;)//
ReplyDeleteதம்பி ஜீனோ “சிங்கம்ல”:)) அவரே சிங்கத்துக்குப் பின்னால ஒளிகிறார் எனக் கேட்கும்போது ரத்தக் கண்ணீரா வருதூஊஊஉ... ஷேம் ஷேம்..(விவேக்ட) பப்பி ஷேம்ம்:)) டிஷ்யூ பிளீஸ்ஸ்:))
இமா said...
ReplyDeleteகுழப்படி பூஸ். ;)
//
என்ன இமா? நித்திரைத்தூக்கத்தில “சிவா” எனப் போடவேண்டிய இடத்தில “பூஸை..ப்” போட்டிட்டீங்க:))).
நல்லிரவு அதிரா. காலையில் சந்திப்போம்.
ReplyDeleteநான் கவனிக்கவில்லை, 200 ஆவது பதிவாமே.. அம்முலு சொன்னா கரெக்ட்டாத்தான் இருக்கும்.
ReplyDeleteஏன் இமா, பூச்சி புழுக்களுக்கெல்லாம் கேக் வெட்டி, கூடுகட்டி படமெடுத்து கொண்டாடுவீங்க... இதை விட்டிட்டீங்களே..:(((. பிந்தினாலும் பறவாயில்லை சுவீட்டோட வாங்க.... கொண்டாடுவோம்... 200 என்றால் சும்மாவோ.
மிக்க மிக்க வாழ்த்துக்கள் இமா... இன்னும் பல நூறுகாண வாழ்த்துகிறேன். நானும் நேரமாச்சு... எலாம் இப்பத்தான் அடிக்குது(8 மணியாம்):)) போயிட்டு வாறேன்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண்டிப்பா எங்களுக்கு 200 வது பதிவுக்கு ஸ்வீட் வேணும் வேணும் வேணும். ஏமாத்தக்கூடாது
ReplyDeleteபூஸாரின் எழுத்துப் பிழைகள் ஹிஹி...ஹாஹா....
ReplyDeleteபூஸாருக்கு வி"ழை " யாட பிடிக்கும்- இதை ஆசியா அக்கா திருத்தி, திருத்தி க"ழை"ச்சு, இப்போ எனக்கென்ன போச்சு என்று விட்டுட்டார்.
என்ன இமா இது? கை வேலைகளை முடிச்சு, சுத்தம் செய்து.... எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை மனது. என் அம்மாச்சியின் பொருள் ஒன்று கூட என்னிடம் இல்லை என்று நான் கவலைப்படுவதுண்டு.
//இணைய உறவுகள் சிலர் இருக்கிறார்கள். பேசி இருக்கிறேன்; புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்களை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும்.//
எனக்கும் அந்த ஆசை உண்டு.
அடிக்கடி முணு முணுக்கும் பாடல் - பாபா ப்ளாக் ஷீப் ஆஆஆஆ...
மூன்றாவது என்ன பாடல்??
ஆஸ்மி - இது வரை சாப்பிட்டதில்லை. மற்றது 2ம் சாப்பிட்டிருக்கிறேன். இப்பெல்லாம் டயட் என்ற பெயரில் எதையும் மனம் விட்டு சாப்பிட முடிவதில்லை. கனடாக்கு வந்த புதிதில் 42 கிலோ தான் என் வெயிட். இப்ப எக்கச்சக்க வெயிட். என் அம்மா என் பழைய வெயிட்டை சொல்லி சொல்லி எப்ப பார்த்தாலும் ஒரே கடுப்பு தான் எனக்கு.
//இமா said...
ReplyDeleteஇல்ல அதிரா. முதல் 41 முழு வருஷத்துக்கும் சேர்த்து. ஆகவே 200 - 41. ;)
ஆனால் எனக்கு மட்டும்தான் சரியான கணக்குத் தெரியும். நான் நீங்கள் பார்த்ததுக்குப் பிறகு சிலது ஒழிச்சுப் போட்டனெல்லோ. ;))
//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
அதுசரி எங்க இமா, உங்கட மூத்த மருமகனையும் காணேல்லை:)), இளைய மருமகனையும் காணேல்லை:))), இப்பூடி அடிக்கடி காணாமல்போனால்... உங்கட மகள்மாரின் கதி என்ன ஆவுறது??:).
இதில பெயர்ப்பொருத்தம் வேறு, ஜீஈஈஈஈஈஈ:)), ஜெ..ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:))).
பூஸ் வளமைபோல எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
//vanathy said...
ReplyDeleteபூஸாரின் எழுத்துப் பிழைகள் ஹிஹி...ஹாஹா....
பூஸாருக்கு வி"ழை " யாட பிடிக்கும்- இதை ஆசியா அக்கா திருத்தி, திருத்தி க"ழை"ச்சு, இப்போ எனக்கென்ன போச்சு என்று விட்டுட்டார்.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). அது நான் சும்மா.. சும்மா:)))) விழை:))யாடினனானெல்லோ:))))).
அழகான மூன்று விடைகள்
ReplyDelete//கனடாக்கு வந்த புதிதில் 42 கிலோ தான் என் வெயிட். இப்ப எக்கச்சக்க வெயிட். என் அம்மா என் பழைய வெயிட்டை சொல்லி சொல்லி எப்ப பார்த்தாலும் ஒரே கடுப்பு தான் எனக்கு. //
ReplyDeleteஎங்கட அம்மா, என் மாமியிடம்(கணவரின் அம்மா) சொல்லுவா.. “அன்ரி.. நான் நல்ல மெல்லிய பொம்பிளையெல்லோ உங்களிடம் தந்தனான்..:), இப்ப நீங்க குண்டாக்கி வச்சிருக்கிறீங்க” என. அதுக்கு மாமி சொல்லுவா... “இல்ல, அதிரா இப்பத்தான் நல்ல அளவா(அழகா) இருக்கிறா” என்று... கிக்...கிக்....கீஈஈஈஈஈஈஈஈஈஈஈ..
நான் 200 மைல் வேகத்தில ஓடுறேன்.... கட்டிலுக்குக் கீழ ஒளிக்கத்தான்.. கிக்..கிக்...கீஈஈஈ.
இந்த ஒளிக்கிறதை ... நான் முன்பு ஒ”ழி” க்கிறது என்றுதான் எழுதுவேன்:).... பின்பு ஒரு மயில் எங்கட ”மேல பறக்கிற” ஆட்களிடமிருந்து வந்துது... இப்பூடித்தான் வரும் என... அதிலிருந்து மறப்பதில்லை நான். இப்ப நான் ரொம்பவே முன்னேறிட்டனே இந்த ழி, ளி.. இல எல்லாம்:)))).
நல்வரவு மாலதி. _()_ உங்கள் சிந்தனைகள் நன்றாக இருக்கின்றன. ;) வாழ்த்துக்கு நன்றி.
ReplyDelete~~~~~~~~~~~~~~~~~~~~
இது கிரிஜாவுக்கு >O< ;)
~~~~~~~~~~~~~~~~~~~~
வானதி.. //என் அம்மாச்சியின் பொருள் ஒன்று கூட என்னிடம் இல்லை என்று நான் கவலைப்படுவதுண்டு.// ஆனால்... இந்த நிமிஷம் கூட அம்மாச்சியை நினைக்கத்தானே செய்யிறீங்கள். அம்மாச்சிட ஒரு விலை மதிக்க முடியாத, பொருள் இல்லாத பொருள் இருக்குது உங்கள்ட்ட; அது நீங்கள்.
நானும் விட்டுட்டுத்தான் போகப் போறன் சிலதை.
பூஸ்... ஷுஷ்! பெயர்ப் பொருத்தமெல்லாம் சொல்லப்படாது. ;)
ReplyDeleteமருமக்கள்... ஒரு ஆள் 'நாளைக்கு வருவன்.' எண்ட மாதிரி இருந்துது. 'நாளை' முடிஞ்சு ஒரு நாள் ஆகுது.
மற்றவர்... மகள் ஏதும் எச்சரிச்சு அனுப்பிப் போட்டாவோ தெரியேல்ல, கொஞ்சம் அமைதியா இருக்கிறார். இல்லாட்டால்... யாரும் "வாங்கோ விருந்துக்கு," என்று அவர்ட்ட சமையல் முறைலயே சமைச்சுக் குடுத்துட்டினமோ தெரியேல்ல. ;)
நல்வரவு கவியழகன். _()_ கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஇல்ல, அதிரா இப்பத்தான் நல்ல அளவா(அழகா) இருக்கிறா”// haiyo! அதீஸ், அந்த அடைப்பு குறிக்குள் இருப்பது நீங்க எக்ஸ்ராவா சேர்த்தது தானே!!!!?????
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
ReplyDelete//1. க்றிஸ் - க்றிஸ்ஸின் இடத்தில் செபா வேறு யாரை எனக்காகத் தெரிந்திருந்தாலும் இன்று இந்தப் பதில் சொல்ல இமா உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்பேன். எனக்குக் கிடத்த வரம் அவர். // - மனதை தொட்ட வரிகள். அன்பான ஜோடி. எல்லாத்தையும் படிச்சுட்டு கடைசியில் இந்த வரியை படிச்சதும் மேலே படிச்ச எல்லாம் மறந்து போச்சு இமா.... மகிழ்ச்சியில் எனக்கு கண்ணீர் தான் மிச்சம். - வனிதா
ReplyDeleteஊருக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறோம் இமா .ரொம்ப பிசியா இருந்ததால் இந்த பதிவை லேட்டாக பார்த்தேன் .உங்க ஊருக்கும் தான் போறோம்
ReplyDelete.ஆஸ்மி சாபிட்டு வந்து சொல்றேன் .
/1. க்றிஸ் - க்றிஸ்ஸின் இடத்தில் செபா வேறு யாரை எனக்காகத் தெரிந்திருந்தாலும் இன்று இந்தப் பதில் சொல்ல இமா உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்பேன். எனக்குக் கிடத்த வரம் அவர். //
ReplyDeleteமொத்த பதிவிலும் என்னை கவர்ந்த மனதை கொள்ளை கொண்ட இடம் இதுதான்
. //சேர்த்து வைத்திருக்கும் குப்பைகள் அனைத்தையும் கைவினையாக்கி ரசித்து முடித்து வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.//
ReplyDeletesame pinch .(அதிரா பறந்து போய் கிள்ளிட்டு வாங்க )
1//. புகை & செயற்கை வாசனைகள்//
ReplyDeleteஎனக்கும் இவை அலர்ஜி இமா .ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை என்று நினைக்கிறேன் .