//நியுஸிலாந்தைப்பற்றி விளக்கமாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இமா// வை ஸாதிகா தொடர்பதிவிட அழைத்திருந்தார்கள். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த இடுகை.
ஏற்கனவே ஆங்காங்கே என் பதிவுகளில் நியூசிலாந்து பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் பிடித்தவர்கள் படிக்கட்டும், பிடிக்காதவர்கள் மேற்கொண்டு படிக்கட்டும் என்னும் நோக்கோடு தரவுகள் கொடுப்பதைக் கூடுமானவரை தவிர்த்து தொடர்புகளை மட்டும் இணைத்திருப்பேன்.
முதலிலேயே சொல்லி விடுகிறேன்... சுருக்கமாகச் சொன்னால் சுவாரசியமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் இப்போதைக்குச் சுருக்கமாகத்தான் சொல்லப் போகிறேன். நியூசிலாந்தைப் பற்றி கூகுள் பண்ணினால் எவ்வளவோ தெரிந்து விடும். இது இமாவின் உலகம் அல்லவா! ஆகவே இங்கு இமா பார்வையில் நியூசிலாந்து. ;)
City of sails - Auckland
நாங்கள் இங்கு வந்தது 1999 மார்கழி மாதம் 18ம் தேதி. வந்து இறங்கியதும் குளிர் நடுக்கி எடுத்துவிட்டது. வந்த களை, உண்ட களை (மிலேனியம் ஸ்பெஷல் என்று விமானத்தில் ஏக உபசரிப்பு) எல்லாவற்றோடும் சகோதரர் வீடு நோக்கிப் பயணிக்கையில் வியப்பாய்த் தெரிந்த விடயங்கள் அனைத்தும்... குளிர் உட்பட இப்போது சாதாரணமாகிப் போய் விட்டிருக்கிறது. அப்போதே இந்தத் தொடர்பதிவினை எழுத நேர்ந்திருந்தால் சொல்வதற்கு இன்னும் அனேகம் இருந்திருக்கும்.
'கலாச்சார அதிர்ச்சி' என்பார்களே, அது எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இங்கு சிறுவர்கள் பெரிதாக இருந்தார்கள். ஆமாம், முதல்நாள் பாடசாலைக்குச் சென்றிருந்த சமயம் காலை இடைவேளையாக இருந்து மாணவ மாணவிகள் மைதானமெங்கும் சிதறிக் கிடந்த காட்சி மெதுவே என் இதயத்தைத் தொண்டைக்குக் கொண்டு வந்து விட்டது. பிரதான அலுவலகத்திலிருந்து ஆரம்பப்பிரிவுக்கு (எங்கள் பாடசாலையில் இது ஆண்டு 7 & 8) என்னை அழைத்துப் போக வந்திருந்த ஆன்ரனட் நான் அண்ணாந்து பார்க்கிற உயரத்தில் இருந்தார். பக்கவாட்டில் என் போல் x 2. 'ஜூனியர் ஸ்கூல்' என்கிற எங்கள் ஆரம்பப் பிரிவில் அப்போது நான்தான் ஜூனியராகத் தெரிந்தேன். இப்போ 'அதிர்ச்சி' பழகிவிட்டது.
ஆங்கிலம்தான் பயன்பாட்டு மொழி. ஆனால் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பு பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. வாசகசாலையில் உறுப்பினரான பொழுது விண்ணப்பத்தில் வெறு எந்த மொழியில் நூல்கள் வேண்டும் என்று ஒரு வரி கேட்டிருந்தனர். முன்பு குறிப்பிட்ட ஒரு வாசிகசாலையில் மட்டும் தமிழ் நூல்கள் இருந்தனவாம். இப்போ சில வருடங்களாக எங்கள் பாடசாலைக்குச் சமீபமாக உள்ள வாசிகசாலையிலும் கிடைக்கின்றன.
moa - அழிந்து போன பறவை
பறக்கத் தெரியாத பாரிய பறவைகளும் அரிதான பிராணிகளும் இருந்த பூமியில் முதலில் வந்து இறங்கியவர்கள் Māori மக்கள். அவர்களைப் பொறுத்தவரை இது Aotearoa (உச்சரிப்பு — aʊtɪəˈroʊ.ə ) தங்கள் பூமி, மொழி Māori – தங்கள் மொழி
Māori - ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே எழுதுகிறார்கள். படிப்பதற்கு வேறு முறை இருக்கிறது. Whangarei.. எங்கே படியுங்கள் பார்க்கலாம். ;) நோகாமல் சொல்ல வேண்டும் - 'ஃபஙரெய்' ;)
Onehunga - க்றிஸ் முதல் முதல் நேர்முகத் தெரிவுக்காகச் சென்ற இடம் இது. தெரிந்த அங்கிள் ஒருவர் "எங்கே போகவேண்டும்?" என்று கேட்க க்றிஸ் சிரமப்பட்டு "one ஹங்கா" என்றார். இப்போதும் பலர் "ஒனெஹங்கா" என்று சொல்லித்தான் கேட்கிறேன். என் Māori ஆசிரியத் தோழி சொல்வார் அது "ஒனெஹுங்+ஆ" (க்ர்ர்ர்ர்ர்ர்ர் யாராவது ஹெல்ப் பண்ணுங்கோ பார்ப்போம். கடைசி எழுத்து எழுத வரேல்ல, தேடப் பொறுமை இல்லாமல் கிடக்கு.) என்று.
சில சொற்களில் ஒரே சப்தம் இருமுறை வரும்.
kea
வாழ்க்கை முறை... பெரும்பாலும் மற்ற ஐரோப்பிய நாடுகள் போல் இருப்பினும் 'Samoan', 'Tongan' மற்றும் ஏனைய பசிபிக் தீவினருக்குப் பொதுவான விடயங்கள் சில இருக்கின்றன.
!!!
இங்கு உலவும் 'Maui' கதைகள்... ஆரம்பத்தில் Māori மக்களது புராணக்கதைகள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இவை பசிபிக் தீவுகளின் பல இடங்களிலும் சிறு மாற்றங்களோடு உலவுகின்றன. Maui தான் பிரதான காரியம் எல்லாம் செய்த மாவீரன். ;) சூரியனைக் கூட தன் சகோதரர்களோடு கூடி ஃப்ளாக்ஸ் நாரினால் கட்டி இழுத்துப் பிடித்ததால் தான் எங்களுக்குப் பகல் இரவெல்லாம் ஒழுங்காக இருக்கிறதாம்.
New Zealand flax
நியூசிலாந்து இரு பெரும் தீவுகளாலானது. நான் வசிப்பது வடபகுதியில் உள்ள Auckland. தென் பகுதியில் இருக்கும் தீவுப் பிரதேசம்தான் சமீபத்தில் அடிக்கடி பூகம்பத்தால் தாக்கப் பட்டு வரும் அழகு Christchurch இருக்கும் இடம்.
Cathedral Square - Christchuch (இப்படத்தில் உள்ள St Patrick's தேவாலயம் தொடர்ந்து நிகழ்ந்த பூமியதிர்ச்சிகளின் விளைவாக நொருங்கி விட்டது.)
பகல் இரவு என்கையில் நினைப்பு வரும் விடயம்... கோடையில் பகல் அதிகமாக இருப்பது. தோட்டத்தில் சுவாரசியமாக வேலையாக இருந்துவிட்டு வயிறு கடிக்கிறதே என்று உள்ளே போனால் இரவு எட்டு மணி தாண்டி இருக்கும்.
வெயிலில் நிற்பதைத் கூடுமானவரை தவிர்க்கச் சொல்வார்கள் இங்கு. சூரியனுக்குச் சமீபமாக இருப்பதால் UV கதிர்களின் செறிவு அதிகம். இதனால் மெலனோமா வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாம். வாகனத்தில் இருந்தாலும் முடிந்தவரை வெயில் படாமல் போர்த்துக் கொள்வது நலம். சூரியக் கதிர்த்தாக்கம் பொறுக்க இயலாமல் தான் நவீன நாகம்மா துணி உலரவைக்கும் இயந்திரம் வாங்கி வைத்துக் கொண்டதே. ;)
ஆரம்பத்தில் இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியர்கள் (early settlers) நிறையச் சிரமப்பட்டிருக்கிறார்கள். இங்கிருந்தவர்களது மொழி புரியாமல், போதிய உணவு உடை கிடைக்காமல்...
நிலம் கிடைக்கும், செழிப்பான பூமி என்றெல்லாம் கனவுகளோடு குடும்பத்தை விட்டு வந்தவர்களும் குடும்பத்தோடு வந்தவர்களும் மாதக் கணக்கில் கடற்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து சேர்ந்த பிறகு... இங்கு உணவு கூட அவர்களுக்கு ஏற்றபடி கிடைக்காமல்... பாவம். ;( நிறையவே சிரமம் அனுபவித்து இருக்கிறார்கள்.
அழகான டேலியாச் செடிகளைப் பார்த்து இருப்பீர்கள். அவை கூட கிழங்கு உணவுக்காகும் என்கிற எண்ணத்தில் இங்கு கொண்டுவரப்பட்டவையாம். பிறகு கிழங்குகள் நார்த்தன்மை அதிகமாக இருக்கவும், பூக்களின் அழகுக்காக வளர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
Cabbage plant என்றொண்டுண்டு. அதன் வட்டினை உண்டிருக்கிறார்கள்; பன்னத்தாவரங்களின் வேர்களை மாவாக்கி ‘pie' சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். மனுகா செடிகளின் துளிர்களை கொதிநீரில் போட்டு தேனீர் தயாரித்து அருந்தி இருக்கிறார்கள்.
மனுகா செடியும் பன்னமும்
Māori மக்கள் சமையல் முறை வித்தியாசமாக இருக்கும். ஆரம்பத்தில் தரையில் ஆளமாகப் பள்ளம் தோண்டி வெப்பமாக்கிய கற்களைப் போட்டு அதன் மேல் இலைகளில் பொதிந்த உணவுப் பொருட்கள் சமைக்கப் பட்டன. இப்போ விசேடங்களின் போது மட்டும் இம்முறையில் சமைப்பதைக் காணலாம். அது கூட வெகுவாக அருகி விட்டது. ;(
இதைவிட.. சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்தவர்கள் சமைப்பதற்காக உணவைக் கயிற்றில் கட்டி ‘mud pools’ உள்ளே இறக்குவார்களாம்.
a mud pool in Rotorua
விரைவாக முடித்து விடுகிறேன். ;)
ஆடை... 'பாக்கிஹா' (ஐரோப்பியர்) வரும்வரை இவர்கள் ஹாயாக ‘இயல்பான’ மானிடராக இருந்து இருக்கிறார்கள். அல்லது குளிருக்கு இதமாக மோவா, கீவிப்பறவைகளின் இறகுகள் சொருகிய தோல் அல்லது ஃப்ளாக்ஸ் ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்.
சில சடங்குகள்... பரிச்சயமாக இருக்கிறது. 'டாபு' (புனிதம் தொடர்பான முறை – தீட்டு என்பார்களல்லவா, அது போல.)
‘மு(க்)கு’ – பச்சை குத்துதல் – அவரவர் தகுதிக்கேற்ப இவை இருக்கும். எல்லோரும் எல்லா வடிவங்களையும் குத்திக் கொள்ள முடியாது.
இன்னும் சுவாரசியமாக எவ்வளவோ இருக்கிறது சொல்ல. இப்படிச் சுருக்கிச் சுவை கெடுப்பதை விட... அப்பப்போ தனித் தலைப்புகளின் கீழ் எழுதலாமோ!! எண்ணம் இருக்கிறது; ‘நிச்சயம் செய்வேன்’ என்று சொல்ல மாட்டேன்.
இப்போதைக்கு....http://imaasworld.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 பாருங்கள். நாட்டைப் பற்றி இராது. பிடித்ததைப் படியுங்கள். இன்னும் சில இடங்களிலும் சிறிதளவில் விபரங்கள் கொடுத்திருக்கிறேன். முடிந்தவரை தொடர்புகளை இங்கு இணைக்கப் பார்க்கிறேன்.
முடிந்தால் இதே தலைப்பில் மீண்டும் சந்திப்போம். அது வரை
// இங்கு இமா பார்வையில் நியூசிலாந்து.
ReplyDelete'கலாச்சார அதிர்ச்சி' என்பார்களே, அது எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
மைதானமெங்கும் சிதறிக் கிடந்த காட்சி மெதுவே என் இதயத்தைத் தொண்டைக்குக் கொண்டு வந்து விட்டது.//
விசயங்களை விட இது போன்ற வரிகள் பதிவை படிக்க தூண்டியது.... மக்கள் சமைக்கும் விதம் புதுமையாக பட்டது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஆஹா.... நல்ல வர்ணனை.. அதுவும் உங்கள் மொழியில் :-)
ReplyDeletekia ora....???
kuch nahi ora
:-)))))))))))))))))
நியூசிலாந்துக்கு வரலாம் என இருக்கும் போது நியூ பற்றி பதிவு.அப்போ இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.இங்கு ஒரு தொலைக்காட்சியில் முழுக்க ஒவ்வொரு நாட்டைப்பற்றியும், அங்கு எங்கு சென்று பார்க்கலாம்,தங்குமிடம் போன்ற் விபரங்களைத்தருகிறார்கள். அதில் neuzeland பற்றி காட்டினார்கள்.அதில் நீங்கள் குறிப்பிட்ட சாப்பாடு பற்றியும், a mud pool
ReplyDeleteபார்த்தோம். நன்றாக இருந்தது. மேலும் விபரங்கள் நேரம் கிடைக்கும்போது தாருங்கள்.
உங்க உலகம் சில வேளை பிரச்சனையாக இருக்கு.நான் உங்க இணையத்தைச்சொன்னேன்.
நான் kia ora பக்கத்துல கேள்விக்குறி போடல ஜெய். ;)இங்லிஷ்ல தட்டினா ஹிந்தி புரியும் எனக்கு. ;)
ReplyDelete~~~~~~~~~~
//நியூசிலாந்துக்கு வரலாம் என இருக்கும் போது // வாங்கோ ப்ரியா. எப்ப வாறீங்கள்? ;)
'என் உலகம்'... தெரியேல்ல என்ன பிரச்சினை எண்டு. பாக்கிறன்.
///ஸாதிகா... வாங்க இங்கே ;)// வந்துட்டேன்.
ReplyDeleteஆஹா..ஆக்லாண்டின் சாலையின் படமும் சூப்பர்.அப்படியே டிரை கிச்சன்,வெட் கிச்சன் அமைப்பையும் பற்றி சொல்லி இருக்கலாமே?
ReplyDeletehangi பற்றித்தானே! விரைவில் சொல்கிறேன்.
ReplyDeleteulagam...craft kalaigalin ulagam...immavin ulagam..
ReplyDeletestart music. ;)))
ReplyDeleteஎங்க தூங்கிட்டு இருந்தீங்க சிவா? இம்முறை "மீ தி லாஸ்ட்டா"!! ;(((
இமா
ReplyDeleteவர்ணனைகளும், புகைப்படங்களும் ரொம்ப அழகு!!
புகைப்படங்கள் அருமை
ReplyDeleteஉங்கள் எழுத்து நடை அருமை
ReplyDeleteஎன்னது..நவீன நாகம்மாவா???
ReplyDeleteஏன் உம்கீயா செத்து கிடக்கிறது?
அழகான அலசல்.
இனிமையான வர்ணை.
பழமையான பறவை.
புதுமையான புகைப் படம்.
கவி நடையில் உரை.
பளிச்சென்று..பதில்.
ஓ..இதுதான் இமாவின் உலகமோ?
நன்றி ஆமினா.
ReplyDeleteநல்வரவு ராஜா. பின்தொடர்றீங்க, சந்தோஷம். கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாங்க.
அயுப்... ;) //நவீன நாகம்மா// அங்கேயே க்ளிக் பண்ணிப் பாருங்கள்.
//ஏன் கீயா செத்து கிடக்கிறது?// இல்லையே. அது பாறையை உடைக்க முயற்சிக்கிறது.
படங்கள் அருமை
ReplyDeleteபுகைப்படங்களும்,எழுத்துநடையும் அருமை!!
ReplyDeleteபுகைப்படங்கள் அழகா இருக்கு. விளக்கமும் அருமை.
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நியூ....ஸ்ஸ்ஸ் லாந்தூஊஊஊ..
ReplyDeleteமெளறீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,
மூக்கு & மூக்கு:).
நாங்களும் சிலநேரம் மெளறீசை நினைச்சு மூக்கை உரசுவதுண்டு:))).
என்னாது?:)) ”உம் கீயாவா”:)? செத்துக்கிடக்கோ? எங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙேஙே?:))))).
கருத்துக்கு நன்றி ரமேஷ், மேனகா & வானதி.
ReplyDelete~~~~~~~~~~~~~~~~~
@ அதீஸ்... //மூக்கு// சொல்லாமல் விட்டுப் போட்டன் அதைப் பற்றி.
நீங்கள் இலங்கைல English Text book ல படிச்சு இருப்பீங்களோ!! ;)) அதெல்லாம் அவங்கட முறை வரவேற்பில தான் இருக்கும். ஸ்கூல்ல முதல் நாள் புது ஆசிரியர்களை அறிமுகப்படுத்தும் போது இருக்கும். மற்றப்படி செய்யுறது இல்லை. இப்ப எல்லாம் கன்னத்திலயே கொஞ்சிப் போட்டு விட்டுருவாங்கள். ;)
இல்ல இமா... என் கணவர் அங்கு படித்தபோது, பார்த்தவற்றைத்தான் சொல்றவர்:)).
ReplyDeleteஇப்போ காலம் மாறிக்கொண்டே வருகிறதுதானே.
அங்கின.... பாப்பினிக்கினி என ஒரு இன மக்கள் இருக்கிறார்கள்... அவர்களிடமும் ஒரு முறை இருக்காம் கேள்விப்பட்டிருப்பீங்கள்... உஸ்ஸ்ஸ்ஸ் ஆனா சொல்ல மாட்டன்:))).
//அங்கின.... பாப்பினிக்கினி என ஒரு இன மக்கள் இருக்கிறார்கள்.//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்
ஹா...ஹா...ஹா......:))).
ReplyDeleteஎன்னவோ சிரிக்கிறீங்கள் ரெண்டு பேரும். எங்கயோ இருந்து வினோதமாக ஒரு 'நியூஸ்' பிடிச்சுக் கொண்டு வந்து இருக்கிறீங்கள் போல. ;)
ReplyDelete//பாப்பினிக்கினி இனம்// தெரியேல்ல. ;(
இங்க மெய்ன் Maori தான். அதற்கு அடுத்தபடி Samoans, Tongans, Cook Island Maori, Rarotongans... இன்னும் கன நாட்டு ஆட்கள் இருக்கினம்; உலகத்தில இருக்கிற எல்லா நாட்டு மக்களும் இருக்கினம்.
//இனம்//எனக்குத் தெரியேல்ல. iwi பற்றிச் சொல்லுறீங்களோ! அதுபற்றி மேலோட்டமாகத் தான் தெரியும் எனக்கு.
ஆனால்... இது நிச்சயம் Maori அல்லது Samoan, Tongan வார்த்தையோ இல்லை. நானும் தேடிப் பாக்குறன். ஸ்பெல்லிங் ஆங்கிலத்தில எழுதினீங்கள் எண்டால் உதவியாக இருக்கும்.
ஒரு வேளை.... பாப்புவா நியூ கினி!!
ஏதாவது தெரிஞ்சதை எங்களோட ஷெயார் பண்ணுவோம் எண்டு இல்லாமல் என்ன சிரிப்பு ரெண்டு பேரும்!! லிங்க் தாங்கோ எல்லாரும் பார்ப்பினம். ;)
Hongi தொடர்பு...
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Hongi
இதைத்தான் அதிரா //மூக்கு & மூக்கு// என்று சொன்னவர். ;))
அருமை! புகைப்படங்கள் செம்ம! :-)
ReplyDelete