Friday, 8 July 2011

பறவைகள் செய்யுதே!!

"ஹச்சும்!..."

"லொக் லொக்.. கொக் கொக் கொக்"

";)"

";-)"

";-("

"கர்ர்ர்"

"கிக் கிக்"

இதெல்லாம் எப்பிடி தன்னால வருதோ... அப்பிடித்தான் எல்லாம்.


தடிமல் இருமல் வராம இருக்க வேணும் என்றால் மழையில நனையாமல் இருக்க வேணும். நல்ல ஆரோக்கியமான சாப்பாடாகச் சாப்பிட வேணும்; விட்டமின் 'சீ' நிறைய இருக்கிற சாப்பாடாச் சாப்பிட வேணும். வருத்தக்காரருக்குப் பக்கத்தில போக கூடாது. இன்னும் இருக்கு நிறைய...
ஆனால் என்ன செய்தாலும் சில நேரம் எல்லாத்தையும் தாண்டி தடிமலும் காய்ச்சலும் வந்துருது. ;( வந்தால் என்ன செய்யிறது!! சந்தோஷமாக அனுபவிக்க வேண்டியதுதான்.

அம்மா, அப்பா, வீட்டில இருக்கிற பெரிய ஆக்கள் வருமுன் காக்க நினைச்சு சொல்லுவினம்... "மழைக்க போகாதைங்கோ, குளிருக்க திரியாதைங்கோ, நேரங்கெட்ட நேரத்தில முழுகாதைங்கோ... அது இது" எண்டுவினம்.

பிள்ளைகள் "நாங்கள் இன்னும் சின்னப் பிள்ளைகளா! எங்களுக்குத் தெரியாதா எப்பிடித் தடிமல் வராம இருக்கிறதெண்டு. அதெல்லாம் வராமல் பார்ப்போம்." எண்டு தான் முதல்ல நினைப்பினம். பிறகு... வந்துரும் எல்லாம்.

அப்பிடி வந்து விட்டால் வீட்டார் மனசு பொறுக்காமல் கை மருந்து செய்வினம்; ஆவி பிடிக்க வைப்பினம்; தூதுவளைக்கீரையில சம்பல் அரைச்சுச் சாப்பிட்டாலும் சுகம் வரும். வர வேணும்... சில நேரம் வராது... ;( தொற்று கொஞ்சம் வலுவாகப் பிடிச்சு இருந்தால் இல்லாட்டி ஆள் பெலகீனமாக இருந்தால் ஒரு பிடி பிடிச்சு உலுப்பி வைக்கும். மூக்காலும் கண்ணாலும் ஓடும்; பெட்டி பெட்டியாக டிஷ்யூ தேவைப்பட்டாலும் படும். ;((((((( பசிக்காது.. தலை இடி இடி எண்டு இடிக்கும். அப்பிடியே நியூமோனியாவில போய் முடிஞ்சாலும் முடியும். ;(

இல்லாமல்... செய்த மருந்துக்குக் கேட்டு சுகம் வந்தாலும் வரும். இது அவரவர் தாங்குதிறனைப் பொறுத்தது. ஆறு வயசில நிமோனியா வந்தது முதல் தான்  எனக்கு அஸ்மா என்பதாக செபா அபிப்பிராயம். இன்னமும் அனுபவிக்கிறன், வாழ்க்கை முழுக்க அனுபவிப்பன். ஆனால் இப்ப பழகிப் போச்சு. அது ஒரு தொந்தரவாக நினைக்கிறதே இல்லை.

நான் என்ன நினைக்கிறன் எண்டால்...  
பறவைகள் செய்யுதே! பட்டாம்பூச்சி செய்யுதே!! இவ்வளவு ஏன், பூனை கூட ;)) ஆனால் மனிதன் மட்டும் இடம் பொருள் ஏவல் தெரிந்து நேசிக்க வேண்டும். 
ஏனெனில்.. நாங்கள் நாகரீகமான ஜீவராசிகள்.

உண்மையில் எனக்கு இந்தத் தலைப்பில் கதைக்க விருப்பமே இல்லை.

எந்த ஜீவராசிக்கும் தன்னால் வரக்கூடிய ஒரு மென்மையான உணர்வு அன்பு. அதெப்படி வரக் கூடாது எண்டு சொல்லுறது. ;(

அது வரவேண்டிய நேரம் வரும். நாங்கள் வேணுமெண்டால் நாகரிகமாக ஒரு சட்டையைப் போட்டு மூடி மறைச்சிரலாம்.  அது பிழை எண்டு சொல்லேல்ல; ஏன் எண்டால் சமுதாயத்தோட வாழ வேண்டி இருக்குது.

ஆனால் காதல் தவறானது இல்லை; இயல்பானது; தன்னால் வருவது.

சின்ன வயசில வருறது பிழை எண்டு எப்பிடிச் சொல்லலாம்!!  இது கோட்டுக்குள்ள (court) இருக்கேக்க தும்மல் வந்தால் குற்றம் என்கிற மாதிரி இருக்கு எனக்கு.

தன் பிள்ளை காதலுக்கு எப்போ பெற்றோர் எதிர்ப்புச் சொல்கிறார்கள் என்றால்... படிக்கும் வயதில் அந்தச் சிந்தனை படிப்பைக் கெடுக்கிறது எனும் போது / தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்பப் புது வரவு இல்லாத போது. நியாயமான மனநிலை. பொருத்தமான தீர்வை சம்பந்தப் பட்டவர்களும் குடும்பத்தாரும் எடுத்துக் கொள்ளட்டும். நான் சொல்வதற்கு எதுவும் இல்ல. தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும். ;)

சின்னவங்கள் பெரியவங்களை எதிர்க்க வேணும் என்கிற நோக்கத்தில லவ் பண்றேல்ல. அது பிறகு வாற பிரச்சினை. 

திரும்ப மேல போறன்... பறவைக்கும் பட்டாம்பூச்சிக்கும்... ஹும்... அவங்களுக்கு என்ன, வீட்டார் எதிர்க்க மாட்டினம். அம்மாவும் அப்பாவும் ஒண்டும் சொல்லாகினம். பக்கத்து வீட்டு ஆட்கள் கதை பரப்பாகினம். அப்பாட ஒஃபிஸ்ல யாரும் நோகக் கதைச்சு கோபத்தைக் கிளறி வைக்காகினம். பிரச்சினையே இல்லை. ஜாதி இல்லை; மதம் இல்லை. 'அண்ணன் மகள் டொக்டரைக் கட்டி USA போய்ட்டா. என்ட பிள்ளை... ஹும்!! ;(" என்கிற ஒப்பீடு கிடையாது. பிள்ளைகள் சாதி மாறிக் கட்டினால் சமுதாயம் தங்களையும் முக்கியமான சந்தர்ப்பங்களில ஒதுக்கி வைக்கும் என்கிற  ஆதங்கம் இல்லை. ------- இல்லை. ------ இல்லை. ------ இல்லை. வயசுக் கணக்கும் பார்க்கிறது இல்லை. "சமயம் மாறினால்... எங்கட முறையில கலியாணம் நடந்தால் ஓகே," என்பது போன்ற வியாபாரம் இல்லை.

இருக்கிறது வெகு சிலதே. சுதந்திரம்... இயற்கையானபடி, இயல்பாக இருக்கும் சுதந்திரம். விவகாரமில்லாத சுதந்திரம்.

அது எங்களுக்கு இல்லை. ;(

எப்பவும் நினைக்கிற ஒரே விஷயம்... மற்றவங்களைப் போல இருக்க வேணும்; மற்றவங்கள் குறை சொல்லாத மாதிரி இருக்க வேணும்; மற்றவங்கள் என்ன நினைப்பாங்கள்!; மற்றவங்கட பிள்ளைகளை விட எங்கட பிள்ளைகள் நல்லா (மனசுக்குள்ள அழுது கொண்டு இருந்தாலும் பரவாயில்ல) இருக்க வேணும்; ; ; ; ; ;

நாங்கள்.... இயல்பு நிலை தொலைந்து போன நாகரீகமான ஜீவராசிகள்.

ஈர்ப்பு - பணம், வயதுப் பொருத்தம், ஜாதி, மதம், உறவு, தொழில் சார்ந்து அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிற நிர்ப்பந்தத்தில மாட்டி இருக்கிறோமா!! சின்னவர்களுக்கும் மனசு ஒன்று இருக்கிறது என்கிறதை மறந்து விடுகிறோமா!!

எதிர்காலத்துக்குச் சரிவராது என்று தெரிந்தால் திருத்த முயற்சிப்பதில் தவறு இல்லை. சொல்லிப் புரியவைப்பது தான் முறை; பெற்றோர் கடமையும் கூட. முடியாத பட்சத்தில் சந்தோஷமாக அவர்கள் வழியே எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள பொருத்தமான பாதைக்கு  வழி காட்டலாம் இல்லையா! அதை விட்டு சின்ன மனசுகளைக் கொடுமைப் படுத்த வேண்டாம்.
கர் புர் என்று முகம் காட்டி விட்டு பிறகு சில வருடம் கழித்து சேர்த்துக் கொள்வார் சில பெற்றோர். அதனால் நடுவே தொலைந்து போன மகிழ்ச்சி திரும்ப வருமா? அதை விட முதல்லயே சமாளிச்சுப் போகலாம். 

சில வீட்டில எதிர்ப்புக் காட்ட எந்தக் காரணமும் இருக்காது. ஆனால் காதல் என்றாலே குற்றம்தான்.

பக்கத்தில இருக்கிறவங்கள், டெய்லி காணுறவங்களில விருப்பம் வராமல் அம்மா அப்பா காட்டுற ஆளில வர வேணும் எண்டு எதிர்பார்க்கிறது எந்த விதத்தில நியாயம். வந்தால் பெற்றோர் சந்தோஷப் படலாம். வராட்டால்!!

பல சந்தர்ப்பங்களில் காதலுக்குப் பெற்றோர் சம்மதம் கிடைத்து விட்டால் சமுதாயம் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறது. மீதிப் பிரச்சினைகள், வேறுபாடுகள் எல்லாம் சரியாகி விடுகிறது. பெற்றோரே எதிர்க்கிற போதுதான் எல்லாம் கோணலாகி விடுகிறது.

சில நேரம் பேசாமல் விட்டால் சின்னவங்கள் சும்மா ஃப்ரெண்டாவே இருந்து போட்டுப் போயிருவினம். சுத்தி இருக்கிற ஆக்கள் தான் ஊதி ஊதிப் பெருசாக்கிறது. ;(((

சில வீட்டில முதல் 'கர்' சொல்லிப் போட்டு பிறகு சம்மதிப்பினம். பிறகு ஏதாவது சின்னப் பிரச்சினை வந்தாலும் சின்னவங்கள் பாவம், 'பெரியவங்களுக்கு விருப்பமில்லாமல் நடந்ததால் தான் இப்பிடி நடக்குது,' எண்டு மனசுக்குள்ள புலம்பிக் கொண்டு இருப்பினம். 
எனக்குப் பாவமா இருக்கும் இந்தக் குட்டிக் காதலர்களைப் பார்க்க. எது சரி, எது பிழை எண்டு விளங்காமல்... யாரைச் சார்ந்து போக.. யாரை விட எண்டு குழம்பிப் போய் நிம்மதியைத் துலைச்சு... ;(

யாருக்கும் காதல் வரக் கூடாது.

31 comments:

  1. ஆகா ஒரு அழகிய பதிவு
    உங்கட பாசையில
    நன்னா விளங்கிட வகையில சொல்லி இருக்கீங்க..
    இவங்களை போல உலகத்தில எல்லாரும் இருந்துட்ட
    எவ்ளோ நல்ல இருக்கும் :)

    ReplyDelete
  2. கர் புர் என்று முகம் காட்டி விட்டு பிறகு சில வருடம் கழித்து சேர்த்துக் கொள்வார் சில பெற்றோர். அதனால் நடுவே தொலைந்து போன மகிழ்ச்சி திரும்ப வருமா?
    ///good question...:)

    நீண்ட நாளைக்கு பிறகு
    நல்ல பதிவு
    வாழ்க நலமுடன் ....:)

    ReplyDelete
  3. சின்னப் பசங்கல்லாம் இங்க வரப்படாது. போங்க.... ;)

    ReplyDelete
  4. இமா, ஆனாலும் இப்படிக் குழப்பக்கூடாது!! :-((
    நானும், ஆனந்தமா மழையில நனையிறதப் பத்தியும், தடுமல் வர்றதப் பத்தியும்தான் சொல்றீங்கன்னு நினைச்சுப் படிச்சுட்டே வந்தா, காதல்!!

    //சுத்தி இருக்கிற ஆக்கள் தான் ஊதி ஊதிப் பெருசாக்கிறது//
    இது 100% உண்மை!! காதலை வரவைப்பதிலும் (நண்பர்கள்)சரி, வந்தபின் பிரச்னையாக்குவதிலும் (உறவுகள்) சரி!!!

    //சின்னப் பசங்கல்லாம் இங்க வரப்படாது//
    உங்க உத்தரவை மீறிட்டேன், சாரி!! ;-)))))))

    ReplyDelete
  5. ;)) சொல்ல மறந்த கதை... http://gokisha.blogspot.com/2011/07/blog-post_06.html ஹுஸைனம்மா. இப்போ இடுகையிலும் இணைத்து இருக்கிறேன்.

    //சின்னப் பசங்கல்லாம்..// ம்.. ;))

    //ஆனந்தமா மழையில நனையிறதப் பத்தியும், தடுமல் வர்றதப் பத்தியும்தான்// இதுவும் ஒரு வகையில் ஆனந்த மழை.. தடிமல்தானே. ;))

    ReplyDelete
  6. கடைசி வரியை முதல்லேயே படிச்சதாலே ஏதோ புரிகிற மாதிரி தெரியுது ...:-))))))))))))))))))

    ReplyDelete
  7. ஓஓஓஓஒ இது தொடர் பதிவாஆஆஆ :-)(

    ReplyDelete
  8. ஓ!!! வந்தாச்சா மருமகனே!! சரியான வேலைதான் செய்றீங்க. லீவு முடிச்சு வந்து... தொடரா எல்லா ப்ளாக்கும் போய்... கடைசி வரி மட்டும் படிச்சு... பின்னூட்டம் போடாட்டா... தூக்கத்துல கண்ணு தெரியாதுல்ல! ;) நடத்துங்க. ;))

    ReplyDelete
  9. அழகா எழுதி இருக்கீங்க .
    கொஞ்சம் வேலை இருக்கு இதை பற்றி விரிவா ஒரு கமென்ட் போடுறேன் அப்புறமா .

    ReplyDelete
  10. //சில நேரம் பேசாமல் விட்டால் சின்னவங்கள் சும்மா ஃப்ரெண்டாவே இருந்து போட்டுப் போயிருவினம். சுத்தி இருக்கிற ஆக்கள் தான் ஊதி ஊதிப் பெருசாக்கிறது.//

    அதே அதே !!
    ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளுடன் நண்பர்கள் மாதிரி பழகினா இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் .
    //சின்னவர்களுக்கும் மனசு ஒன்று இருக்கிறது என்கிறதை மறந்து விடுகிறோமா!!//
    உண்மைதான் இமா . நண்பர் ஒருவரின் மகள் இருபது வயது குழந்தை புரிதல் இல்லாததால் வாழ்வை முடித்து கொண்டது .சில விஷயங்கள் இயற்கையா நடக்கும் அதுமாதிரி தான் காதலும் .

    ReplyDelete
  11. அடடா இவ்வளவு விரைவா “காதல்” வெளிவரும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை:), ஐ மீன்:) தலைப்பு வெளிவரும் என.

    உங்கட வியூ விலிருந்து அழகாகச் சொல்லிட்டீங்க இமா... ஒவ்வொருவர் எண்ணமும் ஒவ்வொரு விதம் அதுக்கு எதிர்க்கருத்துச் சொல்ல முடியாது.

    //நீண்ட நாளைக்கு பிறகு
    நல்ல பதிவு
    வாழ்க நலமுடன் ....:) //

    இதுக்குத்தான் சொல்றது கேள்வியிலதான் பதிலின் அழகே தங்கியிருக்கென... குப்பூறக்கிடந்து என்ன ஒரு அழகான பதிவு வெளிவந்திருக்கு இல்லையா சிவா? இபூடியெல்லாம் யோசிச்ச உங்களைப்போய்... கொயந்தையாமே கர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ:)))).

    ReplyDelete
  12. //யாருக்கும் காதல் வரக் கூடாது.//

    என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க... தி.பி நிட்சயமா வரோணும்:)))), ஆ..... வழிவிடுங்க வழிவிடுங்க....நான் விண்கலத்தில ஏறோணும்:)).

    ஊசிக்குறிப்பு:
    பிளேன் நேரா தண்ணிக்குள்ள லாண்ட் பண்ணி, தலைகீழ் ஆசனத்துக்கு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா போயிட்டினமாக்கும் என நினைச்சேன்.... :)).. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .... ஆஆஅ... கடவுளே... தள்ளி நில்லுங்கோ... விண்கலம் ரெடியாகிட்டுதெனக்கு:))..

    ReplyDelete
  13. //"ஹச்சும்!...""லொக் லொக்.. கொக் கொக் கொக்""கர்ர்ர்""கிக் கிக்" இதெல்லாம் எப்பிடி தன்னால வருதோ... அப்பிடித்தான் எல்லாம்// என்று சொல்லிவிட்டு....
    // யாருக்கும் காதல் வரக் கூடாது.// எண்டு சொன்னால் எப்படி? அது வரத்தான் செய்யும். ஆனா நாம தான் அது காஃப் லவ் என்று சொல்லி கண்டுக் காம இருந்துடக் கூடாது.

    ReplyDelete
  14. //சின்னப் பசங்கல்லாம் இங்க வரப்படாது// ஒருவேளை நான் தான் தெரியாமல் உள்ளே நுழைந்து குழம்பிட்டேனோ? அங்கன எண்டால் ஒரு ஆள் தலைகீழ் ஆசனத்துக்கு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரெயிட்டா போயிட்டினமாக்கும், இன்னொரு ஆள் வழிவிடுங்க வழிவிடுங்க....நான் விண்கலத்தில ஏறோணும் எண்டு அங்க பிரதட்சணம் செய்யினமாக்கும். அப்படியெண்டால் நானும் பீச்சாங் கை பக்கமா லெப்ட்ல போய் ரைட்ல திரும்பிடினமாக்கும்.

    ReplyDelete
  15. // கடவுளே... தள்ளி நில்லுங்கோ... விண்கலம் ரெடியாகிட்டு தெனக்கு//

    ஊஹூம்... நானும் கடலில் தான் போய் விழுவேன் என்றால் ஹி ஹி ஏதும் சொல்றதுக்கில்ல!! அவ்வ்வ்வ்...!! திரும்பவும் கதையின் தலைப்பில் இருந்து "ஹச்சும்!...""லொக் லொக்.. கொக் கொக் கொக்""கர்ர்ர்""கிக் கிக்" இதெல்லாம் வந்துடப் போவுது. ஓ மை காட் எல்லோரையும் காப்பாத்து. (மருமானையும் சேர்த்து தான்):-))))))))

    ReplyDelete
  16. //எம் அப்துல் காதர் said...

    // கடவுளே... தள்ளி நில்லுங்கோ... விண்கலம் ரெடியாகிட்டு தெனக்கு//

    ஊஹூம்... நானும் கடலில் தான் போய் விழுவேன் என்றால் ஹி ஹி ஏதும் சொல்றதுக்கில்ல!!//

    கல் எறிஞ்சாவது கடலுக்குள்ள விழுத்திடுவினம்போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நாசாஆஆஆஆ.... வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊஊஊ?:)))

    ReplyDelete
  17. //angelin said...

    அழகா எழுதி இருக்கீங்க .
    கொஞ்சம் வேலை இருக்கு இதை பற்றி விரிவா ஒரு கமென்ட் போடுறேன் அப்புறமா .
    // கமெண்ட் மட்டுமில்ல, ஒரு தொடரா பதிவு போடலாமே.... போட்டால் எனக்கும் அறியத்தாங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  18. ஏஞ்சல்..//நண்பர் ஒருவரின் மகள்// முன்பே நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள், கவனித்திருக்கிறேன். இப்போ குடும்பத்தாருக்குப் பெரிய இழப்பாகப் போய் விட்டது இல்லையா. ;((

    ReplyDelete
  19. //விண்கலம் ரெடியாகிட்டுதெனக்கு:)).. // மேல போறீங்களோ! சரி. லப்டொப்பையும் கமராவையும் கொண்டு போங்கோ. அங்க எப்பிடி இருக்குது எண்டு வந்து 2012 க்கு பதிவு போடுங்கோ. உபயோகமா இருக்கும்.

    ReplyDelete
  20. ;) அப்துல் காதர்..
    கமண்ட் நம்பர் 1 - ஓகே
    கமண்ட் நம்பர் 2 - ;)))) உங்கட தமிழ்... ;)
    கமண்ட் நம்பர் 3 - ;)))

    ReplyDelete
  21. இமா இதைப்பார்த்துவிட்டுத்தான் நான் அதிராவில் பதிவு பாடலாக போட்டேன்.
    ""இரண்டு மனம் வேண்டும்.....
    அதிராவுக்கு ஒன்று,ஆன்ரிக்காக ஒன்று என. இப்ப தெரியும் என் நிலை.
    நீங்க சொன்னதிலும் சிலது சரியானதே.அதில் ஒன்றுதான் கீழே உள்ள வரிகள்.
    //கர் புர் என்று முகம் காட்டி விட்டு பிறகு சில வருடம் கழித்து சேர்த்துக் கொள்வார் சில பெற்றோர். அதனால் நடுவே தொலைந்து போன மகிழ்ச்சி திரும்ப வருமா? அதை விட முதல்லயே சமாளிச்சுப் போகலாம்.//
    இதில் நன்மை பாதி,தீமை பாதி.
    அவரவர்களூக்கு ஏற்படும் அனுபவங்களே பாடங்கள். எனக்கு என்ன அனுபவமோ? காலம்தான் பதில் சொல்லும்.

    ReplyDelete
  22. ;)) //இரண்டு மனம் வேண்டும்// பார்த்ததுமே புரிந்து கொண்டேன். ;)

    ReplyDelete
  23. என்ன ஒரே குழப்பமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. என்ன குழப்பம் ஜலீ!! இது இமா. நீங்கள் குழம்பாமல் நீங்களாவே இருங்கோ. ;)

      Delete
  24. உமது பதிவில் பல விசயங்களை உள்ளடக்கி இருகிறீர் ...information, ஜோக்ஸ், ஆதங்கம்,சமுதய கண்ணோட்டங்கள்,ஆன்மிகம் ........இந்த பதிவில் தொடாத விசயங்களே இல்லை என்று சொல்லலாம். பாராட்டுகள்.

    சமுதயம் ஒரு பலமான கட்டமைப்பு. எழுதபடாத சட்டங்களால் நாம் கட்டு பட்டிருகிறோம்.இதில் இருந்து விடுபடும் தையிரியம் எங்களுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை.இதில் எங்கள் பெற்றோரும் அடக்கம் . அவர்கள் எங்களை உணர்ந்தாலும் சமுதயத்துக்கு பயந்து காதலுக்கு எதிராக செயற்படுகிறார்கள் .பயம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பார்த்ததற்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சகோதரரே.

      நினைத்ததும் உடனே எழுதிவிடவேண்டும் என்று பதிவிட்ட இடுகை இது, அப்போது நேரம் அதிகம் கிடைக்கவில்லை. சுருக்கமாக மேலோட்டமாக எழுதிவிட்டேன். மனதில் இருக்கிறது இன்னும். எப்போதாவது வெளியே வரும். :)

      //பயம்// ம்... அதுவேதான், எதிர்காலம் பற்றிய பயம்... பிள்ளைகள் நல்வாழ்க்கை பற்றிய பயம்... அது அனுபவம் கொடுக்கும் பயம். மனிதர் நாம்; பறவைகள் அல்லவே!! ;))

      Delete
    2. Thanks 4 sharing dis post on ur FB page Chanthuru.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா