Sunday 17 July 2011

நட்பு

நட்பு...
மென்மையானது.
அழகானது,
அற்புதமானது.
பிரிவை, ஏமாற்றங்களைத் தாங்க இயலாதது.

நட்புக்குப் பொறுப்பு ஒன்றுண்டு.
நம்பிக்கைக்குப் பாத்திரமானது அது.
உண்மை நட்பு,
பிரிந்தாலும்...
ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.
ஏமாற்றப் பட்டாலும்
ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.

‘உன் நண்பன் யாரெனச் சொல்,
உன்னைச் சொல்கிறேன்,’
என்பர் சிலர்.

எப்படி!
எப்படி இயலும்!!!
நீயும் நானும் தான்
எதிரெதிர்த் துருவங்களாய்
இணந்தவர்களாயிற்றே.

பெயரில் கூட...
எத்தனை பொருத்தம் என்பர் அறிந்தவர்.
அறியாதோர் கூட அறிந்திருந்தனர்
நம் நட்பை.
நீ மட்டும் புரிந்து கொள்ளவில்லையா!!
அல்லது...
நான்தான் 
எதையும் புரிந்து கொள்ளவில்லையா!

வலிக்கிறது ;(
பயங்கரமாக வலிக்கிறது தோழி. ;((

உன்னை
என் தோழியாக மட்டுமா
நான் நினைத்தேன்!
எனக்கென்று..
ஒரு சகோதரி பிறந்திருக்கவில்லை.
உன்னை வைத்தேன் அவ்விடத்தில்.
நான் மட்டுமா!
என் குடும்பமும் தானே.

எல்லாவற்றையும் உடைத்தாய் நீ
வலிக்கிறது நினைவு
கனக்கிறது மனது. ;(

மறக்க நினைக்கிறேன்,
முடியவில்லை.
கண்ணுள் நிற்கிறது
அத் தருணம்;
நீ சிரம் மேல் கை குவித்து
விடை பெற்ற தருணம்.
விளையாடுகிறாய் என்று நினைத்தேன்.
வினையாக்கினாயே நீ.

தவித்துப் போனேன் நான்.
நான் மட்டுமா!
உன் குடும்பம்...
என் குடும்பம்...
தோழமைகள்...
அனைவரும். ;(

எல்லோரும் நினைத்து ஒன்று..
எனக்குத் தெரிந்திருக்கும் என்பது அது.
வினவியவர்களுக்குப் பதிலாய்
விழித்து வைத்தேன் நான்.
உறக்கம் தொலைந்து போயிற்று;
விழித்துக் கொண்டேன் தாமதமாய்.
நீ என்னைப் பிரிந்ததை விட..
என்னை நம்பவில்லை என்பது...
அதிகம் வலித்தது. ;((

உடுக்கை இழந்த உன் கையாக
இருக்க நான் தகுதி இல்லை
என்று நிராகரித்தாயே!
அந்த நிராகரிப்பு... ;(((
வலித்தது...
வலிக்கிறது...
வலிக்கும் என்றும். ;(((

ஆனால்...
இப்போதும் நினைக்கிறேன்...
நீ நன்றாக இருக்க வேண்டும்.

அதை எண்ணித்தான்
மௌனித்து விட்டேன்.

இப்போ...
எனக்குத் தெரியும் என்பதை
உன்னிடம் வெளிப்படுத்தவும் மனதில்லை.

நீயாக வெளிப்படுத்தும் தருணம்,
வரக்கூடும் என்றிருந்தேன்.
வரவில்லை இன்னும்.
வராது இனிமேல்.

நீயும் நானும் தான்
சந்திப்பதில்லையே இப்போது.

வேண்டாம்.

இப்படியே இருப்போம்.
இதுதான் நல்லது,
நம்மிருவருக்கும்.
அனைவருக்கும்.

உன் குடும்பம்
உன்னைச் சேர்த்துக் கொண்டது.
நான்!!!!
அந்நியமாகிப் போனேன் இன்று.

இப்படியே இருப்போம்.
இதுதான் நல்லது,
நம்மிருவருக்கும்.
அனைவருக்கும். 

நீ கொடுத்த வலியை விடப் பெரிதாய்
யாரும் எனை வலிக்க வைக்க இனி இயலாது.

நீ நன்றாக இருக்க வேண்டும்.
அதை எண்ணி...
இனிப் பேச மாட்டேன் எதுவும்.
இதுநாள் வரை இருந்தது போல்
மௌனிப்பேன் மீண்டும்.
மௌனிப்பேன்...

மௌனம்
மௌனம்
மௌனம்
மௌனம்  
மௌனம் 
மௌனம் 
மௌனம் 
மௌனம்
````````````````
மு.க.சு:- http://gokisha.blogspot.com/2011/07/blog-post_15.html

28 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. அவ்வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. மாமீஈஈஈ நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா சொல்லவே இல்லை ..அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. படிச்சதும் மனசு கனத்து விட்டது :(

    ReplyDelete
  6. இமா உங்களுக்குள் இதனை சோகமா !!.
    உங்கள் ஆழ் மனதின் வலி புரிகின்றது இமா .(your enemies can’t hurt you, but your friends will kill you.)
    -
    Trust can take years to build
    but only a second to break.

    ReplyDelete
  7. அடடா இமா... பூமாலையாக இருந்த இதயம்(நட்பு) வாடிவிட்டதோ... அழகாக வெளிப்படுத்திட்டீங்க நட்பை...

    உடனேயே தொடர்ந்தமைக்கு நன்றி இமா...

    ஜெய் க்குப் பல்லுக் கொழுவிட்டுதோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:)))..

    ReplyDelete
  8. //உன் குடும்பம்
    உன்னைச் சேர்த்துக் கொண்டது.
    நான்!!!!
    அந்நியமாகிப் போனேன் இன்று.//

    இதுக்குத்தான் சொல்வார்கள், அடுத்தவர்கள் பாவமே குடும்பப்பிரச்சனையைக் கொஞ்சம் பேசித் தீர்க்கலாமே என வெளியாட்கள் போனால், நாளைக்கு எமக்குத்தான் கெட்ட பெயர், ஆனா அடிபட்ட குடும்பம் ஒன்றாகிடும் என...

    ReplyDelete
  9. என்ன இமா சோக மயம்..? அந்த தோழி யாருன்னு தெரியலயே..! இது கவிதைக்கா, இல்ல உண்மையாலுமா இமா? உண்மை மாதிரிதான் எழுதியிருக்கீங்க. அப்படிதான் என்றால் கவலைப்படாதீங்க இமா.

    ReplyDelete
  10. //
    ஜெய் க்குப் பல்லுக் கொழுவிட்டுதோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:))). //


    நல்ல வேளை நா இது கவிதை மாதிரி இருக்குன்னு சொன்னதை கவனிக்கல பாவம் பூஸ் இருட்டில கண்ணு தெரியல அவ்வ்வ் :-)X 13478

    ReplyDelete
  11. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *12156

    ஆரது இருட்டில கண் தெரியாதெனச் சொன்னது?:)))... அதுவும் பூஸுக்கு ஆங்ங்ங்ங்ங்:))))... அது இப்ப கோடையெல்லோ..... முருங்கையில இலை எல்லாம் வந்திடுதூஊஊஊஊஊஊ அதனால மறைக்குது:))... இல்சும் அயகா மறைஞ்சிருந்து “கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” பண்றா:))).

    ReplyDelete
  12. //உண்மை நட்பு,
    பிரிந்தாலும்...
    ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.
    ஏமாற்றப் பட்டாலும்
    ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.//

    கரெக்ட்... அதுதான் என் தாரக மந்திரமும்... என் ரகசியத்தை நண்பன் வெளியில சொன்னால்கூட, அவங்க ரகசியத்தை நான் சொல்லமாட்டேன்.

    ReplyDelete
  13. //ஜெய்லானி said...

    படிச்சதும் மனசு கனத்து விட்டது :(
    //
    இல்லவே இல்லை, நான் நம்ப மாட்டேன்.... உது கடல்தண்ணி கிட்னிக்குள் போனதாலதான்:))).

    கடவுளே!!! நாங்க புறப்பட்டுவிட்டோம் அட்டாட்டிகாவுக்கூஊஊஊஊஊஊஊ:)))).

    ReplyDelete
  14. அதுதான் என் தாரக மந்திரமும்... என் ரகசியத்தை நண்பன் வெளியில சொன்னால்கூட, அவங்க ரகசியத்தை நான் சொல்லமாட்டேன்.
    --mm very good.

    ReplyDelete
  15. இனிப் பேச மாட்டேன் எதுவும்.
    இதுநாள் வரை இருந்தது போல்
    மௌனிப்பேன் மீண்டும்.
    மௌனிப்பேன்...

    மௌனம்
    மௌனம்
    மௌனம்
    மௌனம்
    மௌனம்
    மௌனம்
    மௌனம்
    மௌனம்
    ````````````````//

    wow


    உங்ககிட்ட ஒரு மணிரத்தனம் ஒளிந்து இருக்கார்
    அருமையின கவிதை
    நட்பில்
    கைதியாய்
    ஆகி போன
    ஒரு
    ஜீவனின்
    இதயம்
    உருகி பேசின
    கவிதை மொழிகள்

    ReplyDelete
  16. .(your enemies can’t hurt you, but your friends will kill you.)
    -
    Trust can take years to build
    but only a second to break.//

    correct repeatuuuu

    ReplyDelete
  17. இல்லவே இல்லை, நான் நம்ப மாட்டேன்.... உது கடல்தண்ணி கிட்னிக்குள் போனதாலதான்:))).
    //

    kidini engada erukku?????

    ReplyDelete
  18. ஏன் இமா?இத்தனை சோகம்?

    ReplyDelete
  19. நட்பு பற்றிய என் நிஜங்கள் சோகமாயிருந்தால் நான் போலியாகச் சிரிக்க எப்படி இயலும்! நிரூபன் தலைப்பு ஆரம்பிக்கவே... வேண்டிக் கொண்டேன் "கடவுளே! யாரும் என்னைத் தொடர அழைக்கக் கூடாது," என்று. வலையுலகில் வலையில் மாட்டாமல் இருக்க முடியுமா? மாட்டியாயிற்று.

    எனக்கும் நட்பு என்று சொல்லிக் கொள்ள நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள். இருப்பினும்... எப்போதும் முதலில் மனதில் வருவது இந்த அனுபமாகத்தான் இருக்கிறது.

    இது கவிதை ஆகாது ஜெய். மனதிலிருந்ததைக் கை தட்டியது. முதல் முறை தட்டியது என் தப்பான ஒரு தட்டினால் காற்றோடு கலந்துவிட்டது. இது கொஞ்சம் 'கனம்' குறைவாக வந்திருக்கிறது. அதுகூட நன்மைக்கே.

    என்னை மறந்து சிரிக்க உதவிய ஜெய்லானி, அதிரா & சிவாவுக்கு நன்றி. ;)

    ReplyDelete
  20. மனதை கனக்க வைத்ட்துவிட்டது கவி வரிகள்

    ReplyDelete
  21. இமா, கவிதை சூப்பரோ சூப்பர். எனக்கும் இப்படி ஒரு நட்பு இருந்தது. ஆனால், இப்ப எங்கே என்று தெரியாது. கவிதை எல்லாம் எனக்க்கு பாட வராது.
    ஜெய்லானி அழுவுறதை பார்த்தா பாவமா இருக்கு. அவருக்கும் ஏதோ உள் மனதில் ஒரு காயம் இருக்கும் போல கிக்க்.......

    ReplyDelete
  22. ஹாய் இமா நலமா? கவிதை அருமையாக இருக்கு.உங்களுக்கும் கூடவா இப்படி ஒரு நட்பு!!!! நன்றாக எழுதியிருக்கிறீங்க.ப‌டமும் பொருத்தமாக போட்டிருக்கீங்க.

    ReplyDelete
  23. பிரிவின் வலியை, நம்பிக்கையின் தகர்ப்பை, உணர்வுகளின் சோகத்தை, நட்பின் ஆழத்தை, உணர்ச்சியுடன் விளக்கியுள்ளீர்கள். எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் நீ நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து மெளனம் காக்க நினைக்கும் உங்கள் செயல் மகத்தான நட்புக்கு இலக்கணம் அல்லவா!

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. கருத்துக்கு நன்றி ஆமினா.

    வாங்கோ வான்ஸ். //ஜெய்லானி அழுவுறதை பார்த்தா// இப்பிடி சிரிக்க வைக்கிற மாதிரி ஏதாவது சொன்னீங்கள் எண்டால் எனக்கும் மனசு கொஞ்சம் லைட் ஆகுது. ;) ஆனால் பாவம் மருமகனைத் தான் எல்லாரும் கொமடி பீஸ் ஆக்கி வைக்கிறீங்கள். ஆளைக் காணேல்ல; எங்கயோ கட்டிலுக்கடியிலயோ கடலுக்கடியிலயோ இருக்கிறார் போல. ;))

    ReplyDelete
  25. நல்ல பிசி போல ப்ரியா. ஃப்ரீயா இருந்தால் ஒரு மெசேஜ் அனுப்புங்கோ. இப்ப எனக்கு லீவு.

    //கவிதை// சும்மா எழுதி இருக்கிறன்... கவிதை எல்லாம் இல்ல. //ப‌டமும்// அது... SP வீட்டு டைனிங் டேபிள். ;)

    ReplyDelete
  26. மதிப்புக்குரிய கோபாலகிருஷ்ணன் ஐயாவுக்கு,
    தங்கள் வருகையும் சிரத்தையான கருத்தும் மகிழ்வைத் தருகிறது.

    அவரை என் சகோதரி போல நினைத்தேன். சகோதரி போல நான் நடத்தவும் வேண்டும்.

    இதைக் கூட இங்கு பகிர்ந்திருக்க மாட்டேன். அதிராவின் வேண்டுகோள் வெளிக்கொணர்ந்து விட்டது.

    கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  27. அன்பின் அதிராவுக்கும் இங்கு கருத்துச் சொல்லிப் போன அனைவரது கவனத்துக்கும்,

    இந்த இடுகை அடிக்கடி என் பார்வையில் பட்டு மனதைச் சங்கடப்படுத்துவதால் சில நாட்களுக்கு மறைத்து விட உத்தேசித்திருக்கிறேன். தேட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா