Tuesday, 20 November 2012

இது கீவி நேரம்

நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது. ;(

எல்லோருக்கும் இருக்கிற அதே 24 மணி நேரம் இமாவுக்கும் கிடைத்தாலும்... கொஞ்சம் இடிபாடான மாதம் இது.
காரணம்....
1. பாடசாலையில் வருட இறுதி - பரீட்சை, முன்னேற்ற அறிக்கை, புதிய ஆண்டுக்கான ஆயத்தங்கள்
2. பாடசாலையில் வீட்டிலும் பிறந்தநாட்கள். முன்னதில் 4 + வீட்டில் ஒன்று
3. இங்கு முன்கோடை - தோட்டம் செப்பனிடல் + செய்து முடிக்க வேண்டிய வெளி வேலைகள். காற்றுள்ள போதே தூற்ற வேண்டும். வெயில் உள்ள போதே முடிக்க வேண்டும்.

நேரம் கிடைத்தால் ஒரு வலைப்பூ; மறுமுறை இன்னொன்று என்று உடனே இல்லாவிட்டாலும் எப்படியாவது அனைவரையும் தரிசிக்க வருவேன். அதுவரை தயை கூர்ந்து பொறுத்தருள்க நட்புக்களே.

ஒரு குட்டிக் கதை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். ;)

பரீட்சைக்கு முன்பாக மீட்டல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. காலை இடைவேளையில் ஒரு ஆசிரியை - கொஞ்சம் சின்னவர், முகம் சிவந்து சிரிப்பாக வந்து அமர்ந்தார்.

எல்லோரையும் ஆளுக்கு இரண்டு மணிக்கூட்டு முகங்கள் வரையச் சொல்லி இருக்கிறார். பின்பு இவர் குறிப்பிடும் நேரத்தை (முட்களை) அவர்கள் வரைந்து காட்ட வேண்டும்.

ஒரு மாணவி ஒரே ஒரு வட்டம் மட்டும் வரைந்து விட்டு வானம் பார்த்து (சுற்றிலும் ஏராளமாள கண்ணாடி ஜன்னல்கள்) இருக்க, அருகே போய் எண்களைக் குறிக்க உதவி விட்டு, அதை முடித்த பின் இரண்டாவது வட்டம் வரைந்து குறித்து வைக்கச் சொன்னாராம் ஆசிரியை.

வரைந்து முடித்து மாணவி கொண்டுவந்து காட்டிய மணிக்கூட்டில்.... 13 முதல் 24 வரை எண்கள் இருந்தனவாம்.  ;D

8 comments:

  1. இதுவும் நல்ல ஐடியா தான்...:)!இமா என்னை அடிக்கவரும் முன்பு எஸ்கேப்>>....விரைவில் பணிகளை முடித்து திரும்பி வாங்க...

    ReplyDelete
  2. :) Good one imma! Take your time..no problem.

    ReplyDelete
  3. குட்டிக்கதை அருமையாக உள்ளது.

    //ஒரு குட்டிக் கதை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். ;)//

    பாதுகாப்பாக ஜாக்கிரதையாகப்போய்விட்டு சீக்கரமாக வந்துடுங்க இமா. ;)

    அன்புடன்
    VGK அண்ணா

    ReplyDelete
  4. கொஞ்சம் எனக்கும் நேரமில்லாம போச்சு. இங்கை வந்தா நீங்க டாட்டா காட்டுறீங்க...கர்ர்..:)

    சரி சரி புரியுது இமா. அலுவல்களைப் பாருங்கோ. இடைக்கிடை அங்கினேக்கை கண்டா சந்தோஷம்...;)

    இங்கையும் மத்தியானம் 1 மணிக்குமேல எண்டால் 13 மணி 10 நிமிடம், 15.30, 18.45 நிமிடம் அப்பிடி எண்டுதான் சொல்லுவினம் எழுதுவினமும்கூட...:)
    உண்மையில் சுலபமான முறையும்..:)

    சரி. சுகத்தையும் கவனியுங்கோ..:) மீண்டும் சந்திப்போம்....:)

    ReplyDelete
  5. ஓ... பாடசாலையின் இறுதிப் பரீட்சை இந்த மாதமா? அட!

    ReplyDelete
  6. //2. பாடசாலையில் வீட்டிலும் பிறந்தநாட்கள். //
    Plus Imma's wedding anni:)).

    ReplyDelete
  7. அனைத்து நட்புக்களுக்கும் என் அன்பு நன்றி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா