Friday, 16 November 2012

இரண்டாவது பொன்குஞ்சு

 முன்கதைச் சுருக்கம்.... http://imaasworld.blogspot.co.nz/2012/11/blog-post_9.html

முன்கதையில் சொல்லியிருந்த பொன்குஞ்சுக்குத் தனிமை போக்கவென்று, மேலும் நான்கு குஞ்சுகள் வாங்கி வந்து, பையோடு குளத்து நீரில் வைத்து, நீர் வெப்பநிலையை மெது மெதுவே சமப்படுத்தி... வெளியே விட்டிருந்தேன்.

நேற்று பின்னேரம் சும்மா எட்டிப் பார்த்தால், சொந்தக் குழந்தை & இரவல் குழந்தைகளோடு பெரியவர்கள் இருவரும் ஒன்றாக மேலே வந்து பாசியை மேய்ந்து கொண்டிருந்தார்கள்.

பார்த்துக் கொண்டே இருக்க... ஒரு ஆச்சரியம்... கருப்பு நிறம் கலந்த இருவர் மேலே வந்தார்கள்.  :) உள்ளே இன்னும் எத்தனை பேர் ஒழிந்து இருக்கிறார்களோ தெரியாது. அப்போது படம் எடுக்க இயலவில்லை. இன்று ஒருவரை மெதுவே என் கையில் சிறைப் பிடித்தேன்.

அழகாக இருக்கிறாரல்லவா!

10 comments:

  1. //அழகாக இருக்கிறாரல்லவா!//

    ஆம். எல்லாமே அழகு தான். அவரை அன்புடன் அரவணைக்கும் அந்த [நம் இமாவின்?] கைகள் உள்பட.

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. முழுக் கையையும் காட்டினால் ஆளாளுக்கு ரேகை பார்த்துப் பலன் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் விரல் மட்டும். :)

      Delete
  2. சிவப்பும் கருப்பும் சேர்ந்த குஞ்சு அழகு..வாங்கி விட்ட நேரம் வதவதன்னு குஞ்சு பெருகிடுச்சோ..நிறைய குஞ்சுகளோடு பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராதா. வெகு அழகாக இருக்கிறார்கள்.

      Delete
  3. ஆஅ!!! அழகோ அழகு !!!
    எங்க மெலனி இப்படித்தான் கைக்கிட்ட வருவா ...அவ ரொம்ப ஃ பிரன்ட்லி :))

    ReplyDelete
    Replies
    1. மெலனி! ம். வடிவான பெயர்.
      நான் 'லேடி காகா' என்று வைக்க நினைச்சுக் கொண்டு இருக்கிறன் அஞ்சூஸ். ;))) ஒருவர்ட்டயும் சொல்லீராதைங்கோ. ;)

      Delete
  4. அழகாக இருக்கிறார்கள்

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஜலீ, தனபால் & இராஜராஜேஸ்வரி அம்மா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா