Sunday, 25 November 2012

பச்சைப் பூக்கள்!

பொழுது போதாமலிருந்தும்... போகாமலிருந்த ஒரு பொழுதில்... இமா இனிமையாக, இனிமையான இலைகள் செய்துகொண்டிருந்தேன். இலைகள் போதும் எனும் கட்டம் வர... பச்சை நிறத்தில் வேறு என்னவாவது செய்யலாமென்று ஒரு ப.பூ. ;)

ஊரில் ஒரு செடி வளர்த்தேன். அதன் பூக்கள் மஞ்சள் என்றுதான் எல்லோரும் சொல்லுவோம். என் மைத்துனர் மட்டும், "அது பச்சைநிறம்தான்," என்பார்.

இங்கு வந்து உண்மையாகவே ப.பூ கண்டேன். ஊரிலும் இருந்திருக்கும். கவனித்தது இல்லை. ம்.. இங்கு நான் கண்டது வேங்கை போல சின்னது. (படம் எதுவும் கிடைக்கவில்லை.) அது பூவா காய்தானாவென்று சரியாகத் தெரியவில்லை. வேங்கை மரத்துப் பூ எப்படி இருக்கும்!! உலர்ந்த விதைகள் காற்றிற் பறப்பது பார்த்திருக்கிறேன். பூ!! யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்! மஹோகனி மரத்துப் பூக்கள் பச்சைநிறமாக இருக்குமா! அவசியமில்லாத ஆராய்ச்சிதான். ஆனாலும் பல காலங்களாக மனதில் புதைந்திருக்கும் தேடல் இது. ;) யாராவது பதில் தெரிந்தால் பதிவிடுங்கள். இப்போதே நன்றியாக....

இந்த, க்ரைஸ்ட்சேச் (2009) தாவரவியற் பூங்காவில் சுட்ட மலர்க்கொத்து.
இது... பச்சையா!! நீலமா!!

14 comments:

  1. ரொம்ப அழகாக இருக்கு இமா

    ReplyDelete
  2. ஹை.... பச்சைப்பூஊஊ...:).

    இனிமையான இலைகள், இனிமையான பூ.... ஐஸிங்கில் அல்லது almond paste (மாஸிபான் பேஸ்ட் ) அதில் பச்சை நிறம் சேர்த்து செய்தீங்களோ???
    அருமை , அழ.....கு...;) வாழ்த்துக்கள்!

    ’மஹோகனி’ என்பது வேம்..பு.தானேஏஏ....எனக்குத் தெரிந்தளவில் அதன் பூ பச்சை என்பதற்கில்லை. அப்போ.... இது வேறோ..:) தெரியவில்லை.

    இயற்கை என்னும் இளைய கன்னியின் பரிசு....
    தா பூ மலர்கொத்து வியக்க வைக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி இமா....:))

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி.
      ஆமாம், //ஐஸிங்கில்// பச்சை
      //’மஹோகனி’// - ம்.. மலைவேம்பு
      //தா பூ// !! :)

      Delete
  3. //பொழுது போதாமலிருந்தும்... போகாமலிருந்த ஒரு பொழுதில்//

    ம்ம்ம்ம்ம்ம்ம் இது எப்படி சாத்தியம்???


    //இமா இனிமையாக, இனிமையான இலைகள்//

    இ ....இ.... இ... இ.......இனிது உங்கள் தமிழ்

    ReplyDelete
  4. //பச்சை நிறத்தில் வேறு என்னவாவது செய்யலாமென்று ஒரு ப.பூ. ;)//

    இதை பார்த்ததும் நம்ம பப்பூ ஞாபகத்துக்கு வந்தார்.


    அழகான பூ டீச்சர். இன்னிக்கு லஞ்ச டைம் இல் உங்க பழைய பதிவுகள் சிலது படிச்சு உங்கள் கைவண்ணம் பார்த்து திரும்பவும் வியந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கிரி... கனகாலத்துக்குப் பிறகு கதைக்கிறன். பார்க்கக் கிடைத்தது சந்தோஷமா இருக்கு.

      Delete
  5. அது பச்சையும் அல்ல.. நீலமும் அல்ல.. அதுதேன்ன் பீக்கொக் கல்ர்:)) என்னிடம் ஒரு சாறி இருந்துதே:)) அக்கலரில்..

    ReplyDelete
  6. அழகான பச்சி றோஜாவுக்கு ஏன் இமா.. குடைப்பிடியைச் சாத்தியிருக்கிறீங்க:)) ஜெய் கண்டால் அழப்போறார்ர்:)

    ReplyDelete
  7. Green rose is looking very pretty! Will come later with tamil imma! ;)

    ReplyDelete
  8. பச்சையா நீலமா என்று கூட தெரியாத குழந்தை இமாவுக்கு கலர் பற்றி சொல்லிக் கொடுக்க கலர் பற்றி நன்கு தெரிந்த டீச்சர்கள் தேவை...
    மிக அவசரம்.

    ReplyDelete
    Replies
    1. ;) வர மாட்டீங்கள். வந்தால்.. ம். ;))

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா