Friday, 16 November 2012

பீட்ஸா பண்

பீட்ஸா சாப்பிட ஆசையாக இருந்தது. மாவைப் பிசைந்து வைத்தேன்.

வீட்டில் சமைக்கும் போது சுவையோடு நிறையுணவாக அமைவது போலவும் சமைக்கலாம். (இருக்கிற எல்லாக் கீரை, காய்களும் போட்டு வைக்கலாம். ;)) sauce சரிவராத பொழுது அதற்குப் பதிலாக hammus அல்லது vegimite பூசலாம்.

தோட்டத்தில் உலாவி விட்டு வந்து வேலையை முடிக்கலாம் என்று பார்த்தால்... சீஸ் தீர்ந்துபோய் இருந்தது. ;(

இங்கு வந்தபின் கிழங்கை காய்கறியாகப் பயன்படுத்துவதை வெகுவாகவே குறைக்க வைத்து விட்டேன். அது விருந்துச் சாப்பாடாக மட்டும் இருக்கிறது இப்போது.

வெகு காலம் கழித்து கிழங்குக் கறி வைத்து குட்டி கறிபண்களாகப் பிடித்து cup cake mould களில் வைத்து சுட்டு எடுத்தேன். பார்வைக்கு ஒன்று...
மீதி கூடையினுள்ளே பாதுகாப்பாக இருக்கிறது. குறிப்பு கேட்காமல், ஆளுக்கொன்று எடுத்துச் சுவைக்கலாம். :)

19 comments:

  1. பன் நல்லா இருக்கு, படம் சரியில்லை! ;) கோவிச்சுக்காதீங்க றீச்சர், ஃப்ளாஷ் கொஞ்சம் ப்ப்ப்ப்ப்ப்பளீர்னு அடிச்சிருச்சோ? ரெம்ப கண்ணு கூசுது! :) :)

    நான் கூடைக்குள்ளாற இருக்கறதில 2 பன் எடுத்துக்கறேன். நன்றி! :)

    ReplyDelete
  2. ம்.. உடனே கவனிச்சிருந்தால் திரும்ப எடுத்திருப்பேன். எப்ப ரெடி சொல்லுவேன் என்று இங்க காத்துக் கொண்டு இருந்தினம் ஆட்கள்.
    எவ்வளவு மேக்கப் போட்டும்... பளீராகத்தான் இருக்கு.

    ReplyDelete
  3. Replies
    1. ம்... ஃப்ரிஜ்ல சட்னி இருக்கு, வேணுமா! :)))

      Delete
  4. ஒண்ணே ஒண்ணு மட்டும் கண்ணுல காமிச்சா செல்லாது :-)

    இருந்தாலும் நல்லாருக்கு.

    ReplyDelete
    Replies
    1. :) ம்... மீதி எல்லாம் கூடைல இருக்கே, எடுத்துக்கங்க.

      அமைதியா உங்க பேரண்ட்ஸ்க்ளப் பக்கம் வருவதுண்டு நான். என்னை அதிகம் ஈர்த்தது அந்த 'cursive writing' இடுகை. :)

      Delete
  5. கொஞ்சம் செய்முறையோடு போட்டிருந்தால் நல்ல இருந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹா!!! அப்போ... நல்லால்ல என்கிறீங்க!! ;))))))))
      அதான் கேட்கப்படாது என்று முன்னாலயே சொன்னேனே ஜலீ. ;D

      Delete
  6. //எவ்வளவு மேக்கப் போட்டும்... பளீராகத்தான் இருக்கு.// :) பன்னுக்கும் மேக்கப்பா?! ஸ்ஸ்ஸப்பா, தாங்க முடீல சாமி! ;D

    /உடனே கவனிச்சிருந்தால் திரும்ப எடுத்திருப்பேன்./ பரவால்ல விடுங்க றீச்சர், படமா நமக்கு முக்கியம்? பன் ருசியா இருந்துதில்ல, அதே போதும்! :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்.. மேக்கப் ஃபோட்டோவுக்கு. ;)))))
      //படமா நமக்கு முக்கியம்?// அப்போ எதுக்காம் அப்புடி கமண்டினீங்க!! ;))
      //பன் ருசியா இருந்துதில்ல// ஆமாம், ரொம்..ப.

      Delete
  7. ///// அப்போ எதுக்காம் அப்புடி கமண்டினீங்க!! ;))///// chummmaa! Imma-va kalaaikka thaan! Hahaha... :D :) ;)

    ReplyDelete
  8. புது முயற்சி.. புதுப்பெயர்.. கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  9. டீச்சர் pizza பண் பார்க்கவே சாப்பிட தூண்டுது. ஆனாலும் குறிப்பு போட்டு இருக்கலாம் (எதை பண்ணாதே ன்னு சொன்னாலும் அதைத்தான் செய்ய மனசு தூண்டுது ஹீ ஹீ:))

    ReplyDelete
    Replies
    1. ம்.. போடுகிறேன் விரைவில். ;)

      Delete
  10. புது ரெசிப்பி. கல்க்கிட்டிங்க.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா