100% என் வேலை என்று உரிமை கொண்டாட முடியாத வேலை இது. ஆனால் ரசித்துச் செய்த வாழ்த்திதழ்.
அப்பாவின் எண்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு விசேடமான நண்பரிடமிருந்து கிடைத்த வாழ்த்து மடல் (Hallmark card) ஒன்று இருந்தது. எப்போது பயன்படுத்தக் கிடைக்கும் என்று காத்திருந்தேன். காலம் வந்தது. அப்பாவின் சகோதரியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. இவரை விட இந்த வாழ்த்திதழைப் பெற்றுக் கொள்ள உரித்தானவர் வேறு யாரும் இருக்க முடியாது.
பிரதான பாகத்தை அலங்காரக் கத்தரிக்கோலினால் வெட்டி எடுத்து புதிய அட்டையில் 3D ஸ்டிக்கர்கள் கொண்டு உயர்த்தி ஒட்டிக்கொண்டேன். இலக்கத்தின் நடுவில் இருந்த பொன் நிறக் கடதாசி ஏற்கனவே இருந்தது தான். நான் மேலதிகமாகச் செய்த வேலை - இலக்கங்களின் நடுவே உள்ள பூக்கள், வெளியே உள்ள பூக்கள் & இலைகளுடன் இருபக்கமும் தெரியும் நெளிந்த கோடுகள்.
தொலையாமல் போய்ச் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
Simple & Beautiful Imma. 👍 👍
ReplyDeleteநன்றி பிரியா. :-)
ReplyDeleteஅழகாக செய்திருக்கிறீர்கள்!வேலைப்பாடையும்விட உங்களின் அக்கறையும் பாசமும் தான் இதில் கூடுதலாகத் தெரிகிறது.
ReplyDelete80-வது பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டை. மிகவும் அழகு.
ReplyDelete