இன்னொரு வாழ்த்திதழ்.
இது சென்ற வாரம் என் மூத்த மருமகளுக்காகச் செய்தது.
பயன்படுத்தியவை
leather grain board
ஓரம் வெட்டுவதற்கு அலங்காரக் கத்தரிக்கோல்
கூடை - பாய் + ரிபன்
பூக்கள் - கோல்கேட் பற்பசைப் பெட்டி + பூ பஞ்ச் + நக அலங்காரத்தில் பயன்படும் கற்கள்.
இலைகள் - ஃபோம் ஷீட்
கரை & happy birthday - ஸ்டிக்கர்கள்
பல வருடங்கள் முன்பு வாசலில் வைத்திருந்த சப்பாத்து ராக்கையை மூடி வைக்க ஒரு தட்டி செய்வதற்காக பாய் ஒன்றைப் பயன்படுத்தினேன். மீதியாக இருந்த பாய்த்துண்டு என் சேமிப்பில் இருந்தது. இப்போது அதற்கு ஒரு பயன்பாடு வந்திருக்கிறது. அதன்
பின் பக்கம் கடதாசியை ஒட்டி, காய விட்டு கூடை வடிவில் வெட்டினேன். ஓரத்தில் இருந்த சின்னத் தீரைகள் விலகிப் போயின. அது தெரியாத வகையில் அலங்கரித்திருக்கிறேன். கூடையையும் சில பூக்களையும் பின்புறம் 3D ஸ்டிக்கர்கள் வைத்து ஒட்டியிருக்கிறேன்.
அழகா இருக்கு கார்ட். மிச்சம்,மீதி பொருட்கள் எல்லாமே விடுவதில்லை போல. உங்க க்ரியேட்டிவிட்டி செம....
ReplyDelete:-) சேர்த்து வைத்துவிடுவேன், இப்போது பயன்படுத்தும் நேரம்.
Deleteஆஆஆஆஆஆ இமா நலம்தானெ?.. பிரேக் எடுக்காமல் உழைக்கிறீங்க இமா:) உங்கட உலகத்தில. சூப்பர் தொடருங்கோ.. நம் சேமிப்பு நமக்குப் பிற்காலத்துக்கு உதவும்.. நானும் அப்படி நினைச்சேன் படங்களை சேமிக்கும் இடமாக புளொக்கை வச்சிருக்கிறேன்.
ReplyDeleteமுதல் கேள்விக்கு, 'நலம்' என்று பதில் சொல்லுறதுதானே வழக்கம்! ;) நீங்களும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பக்கம் கொஞ்ச காலம் கண்ணில் படவில்லை. விசாரிக்க நினைத்திருந்தேன்.
Deleteகார்ட் செய்யுறது இப்ப ப்ரேக் எடுக்கத்தான் அதீஸ். அடிக்கடி செய்யுறன். என் உலகம் - அதையெல்லாம் சேமிக்கும் இடம். எழுதி வைக்காட்டில் செய்முறை, படம் இருக்கிற இடம் எல்லாம் மறந்து போகுது.
இதுவும் மிகவும் அழகாக இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDelete