Sunday 18 August 2019

பூ வேலி


அட்டையில் கூடை பின்னி வாழ்த்திதழ் செய்திருக்கிறேன். ஒரு மாற்றத்திற்கு இம்முறை வேலி. 'ட்ரெலிஸ்' எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் கொடிகள் பற்றி, பூக்கும் போது அழகாக இருக்கும் அதுவும் 'ஸ்வீட் பீஸ்' பூத்திருந்தால் கொள்ளை அழகு.  

இம்முறை ஓர் மூலையில் பூக்கள் ஒட்டியிருக்கிறேன். எப்பொழுதாவது கொடி படர்ந்திருப்பது போல் ஒன்று செய்யவேண்டும்.

  • அட்டையை தேவையான அளவுக்கு இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும்.
  • அட்டையின் நடுவே ஒரு செவ்வகம் வெட்டி நீக்க வேண்டும்.
  • அதை மெல்லிய தீரையாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • முன் அட்டையின் உட்புறம் அளவாக இடைவெளி விட்டு தீரைகளை ஒரே விதமாகச் சரித்து ஒட்ட வேண்டும். ஒட்டொய பின் மேலதிகமானதை வெட்டி விடலாம். முன்பே அளந்து வெட்டுவது சிரமம்; கால விரயமும் கூட.
  • ஒட்டியவற்றுக் குறுக்காக அதே அளவு இடைவெளியில், இம்முறை குறுக்குத் தீரைகளிலும் புள்ளிகளாக 'க்ளூ' வைத்து ஒட்டிவிட வேண்டும்.
  • வாழ்த்திதழின் அளவிலான ஓர் அட்டையை (நிறம் உங்கள் இஷ்டம்.) மேலே ஒட்டிவிட்டால் வெட்டியவை ஒட்டியவை அனைத்தும் மறைந்து போகும்.
  • பின் பக்க அட்டையில் வாழ்த்து அச்சடித்த கடதாசியை ஒட்டிக்கொள்ளலாம்.
  • இப்போது மூடிப் பிடித்து ஓரங்களை ஒன்றாக வெட்டி சீர் செய்ய வேண்டும்.
  • பூக்களை உங்களுக்குப் பிடித்தபடி ஒட்டிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்த்திதழை எந்த நிகழ்வுக்காகவும் பயன்படுத்தலாம். பூக்கள் - வேறு வாழ்த்திதழ்களில் காணும் பூக்களை வெட்டிக் கூட ஒட்டிக் கொள்ளலாம். செய்வதற்கு வெகு சுலபம்; அழகுக்கும் அழகு.

இந்து யாருக்கு! என் மூத்த சம்பந்திக்கு. இன்னும் காலம் இருக்கிறது. அவர் தமிழரல்ல என்பதால் இங்கு வந்து பார்க்கமாட்டார் எனும் தைரியத்தில் இப்போதே பதிவிடுகிறேன். :-)

3 comments:

  1. சூப்பரா இருக்கு இமா. எனக்கும் இதுமாதிரி வேலி,கொடி பூ செய்ய ஆசை. ஒரு முறை செய்துபார்த்து பிழைத்துவிட்டது. திரும்பமுயற்சிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. பின்னுறதுக்கு ட்ரை பண்ணினீங்களா? உண்மையில் ட்ரெலிஸ் - பலகைத் தீரைகளைச் சேர்த்து ஆணியால் அடித்து இணைப்பது. பின்னாமல் ஒட்டி ட்ரை பண்ணுங்க.

      Delete
  2. அழகான வாழ்த்து. உங்கள் பக்கங்களைப் பார்க்கும்போது செய்யத் தோன்றுகிறது என்றாலும் எனக்கு உங்கள் அளவு பொறுமை இல்லை என்று தோன்றும்.

    மேலும் உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா