Wednesday 1 September 2010

நட்பெனப்படுவது!!

உபகதை 1

ஜெனி குழந்தை மாதிரி. சாக்லேட் பிடிக்கும்.

முக்கியமாக சிக்கோ பேபீஸ் (குழந்தையை எதிர்பார்த்திருந்த போது இது மட்டும் தான் சாப்பிட்டாராம். குழந்தைகள் போல இருக்கும் இந்த இனிப்புகள்), ட்விஸ்டீஸ் (ஆஸ்திரேலியத் தயாரிப்பு மட்டும்) & 'செர்ரி ரைப்ஸ்'. நான் எங்கு 'செர்ரி ரைப்ஸ்' கண்டாலும் வாங்கி வைத்து விடுவேன், இவருக்காக. அதை ஒழித்துக் கொடுத்து எதிர்பாராமல் அந்தக் கண்களில் மலரும் சந்தோஷத்தைப் பார்க்கப் பிடிக்கும்.

எங்கள் இருவருக்கும் கோடை விடுமுறையின் போதுதான் பிறந்தநாள் வரும். அதனால் பாடசாலையில் எதிர்பாராத விழா எடுக்க முடிவதில்லை.

10/01/2008
விடுமுறை நடுவே மற்றொரு தோழியின் 50 வது பிறந்த நாள். அங்கே சந்தித்தோம். என் ஆஸ்துமா மருந்துப் பெட்டிகளை ஒரு மருந்தகக் கடதாசிப் பையில் வைத்து இவரிடம் கொடுத்தேன்.
 "எதற்கு?" என்றார். 
"நான் இப்படியே வேறு ஒரு இடம் போகிறேன். இதைக் கொண்டு அலைய முடியாது தொலைத்து விடுவேன்,"
"சரி, நான் நாளை வீட்டில் கொண்டு வந்து தருகிறேன்." என்றார். குட்டியாக ஒரு பை, அதைக் கொண்டு அலைய முடியாது என்கிறேன். ;)
"வேண்டாம். விடுமுறைக்குப் போதுமான மருந்து வீட்டில் இருக்கிறது. இது உங்களிடம் இருக்கட்டும்,"
"என்ன!! இதை வைத்து விடுமுறையில் நான் என்ன செய்யப் போகிறேன்?" நொடி சந்தேகம் பூத்து மறைந்தது கண்ணில்.
"ஓகே! வட் எவர், நீங்கள் சொன்னால் செய்கிறேன்," வாங்கிப் பத்திரமாகப் பையில் வைத்தார்.
நான் பாடசாலை ஆரம்பித்ததும் பெற்றுக் கொள்வதாகச் சொன்னேன்.
"ஹும்" என்று தலையை நொடித்து விட்டு குளிர் பானம் பரிமாறப் போனார்.

22/01/2008
தொலைபேசியில் அழைத்தேன். பத்திரமாகப் பேச வேண்டும். போன வருடம் இது போல் வாழ்த்த அழைத்த போது...
"ஜெனியோடு பேச முடியுமா?"
"நோப், ஜெனி வீட்டில் இல்லை," சந்தேகம் இல்லாமல் இது அவர் குரலே தான். ;) இருந்தாலும் மன்னிப்புக் கோரி, தொடர்பைத் துண்டித்து இலக்கத்தைச் சரி பார்த்து விட்டு மீண்டும் முயன்றேன்.

"ஜென்னியோடு பேச முடியுமா?"
"அவர் வீட்டில் இல்லை."
"                    "
"ஹலோ!! இருக்கிறீர்களா?"
"யப்"
"தகவல் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?"
குழப்பமாகி "ம்.. நான் பிற்பாடு பேசிக் கொள்கிறேன். நன்றி," என்று துண்டித்து விட்டேன்.
மீண்டும் அழைத்தேன்.

அதே பதில். ;) நானும் விடவில்லை. "ஜெனி, அது நீங்கள் தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் இமா."
'கிக்' என்று சிரித்தார். என்ன ஆகி இருக்கிறது என்றால், முதல் நாள் எதோ 'சர்வே' என்று யாரோ விடாமல் அழைத்திருக்கிறார்கள். இவர் யோசிக்காமல் 'நாளை' என்று பிறந்த நாளை மறந்து சொல்லி இருக்கிறார். அதைத் தவிர்க்க இப்படி. அழைத்த பெண் குரலில் இந்திய வாசனை வீசியதாம். ;)

இம்முறை எச்சரிக்கையாக "நான் இமா," என்று ஆரம்பிக்கலாம்.

"வட்'ஸ் அப்?" என்றார்.
"நான் ஒரு மருந்துப் பொட்டலம் தந்தேனே.."
"அது இருக்கிறது கைப்பையில் பத்திரமாக. கொண்டு வந்து தரட்டுமா?"
"வேண்டாம் அது உங்களுக்குத் தான்,"
"எனக்கு!! எதற்கு!!"
"பரவாயில்ல சாப்பிடுங்கள்,"
"இது சரியாகத் தெரியவில்லையே!!" என்றார்.
"சரியோ தவறோ, நீங்கள் தான் அந்த மருந்தைச் சாப்பிட வேண்டும். அதுவும் இன்றே, இப்போதே," வைத்து விட்டேன். ;)

திரும்ப எடுத்தார். அப்போது என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அந்தப் பெட்டியில் செர்ரி ரைப்ஸ் வைத்திருந்தேன். ;) அவர் சந்தோஷத்திற்கு அளவில்லை.

!!!!!!!!!!!! ;)
தொடருகிறேன்...


இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. நாங்களும் அடிக்கடி விசாரிப்போம். விசாரிக்காமலும் தகவல் பெறுவோம். அவருக்கும் இந்த நாட்டில் இருந்த நெருங்கிய உறவுகள் நாங்கள் தானே, சொல்வார்.

பின் ஒரு நாள் சோகமானதோர் செய்தி கொண்டுவந்தார்.
மகனும் மருமகளும் மனமொத்துப் பிரிந்து விட்டார்களாம். ;( மீண்டும் 'வெறும்' நண்பர்களாகி விட்டார்கள்.
மீண்டும் நாளை இம் மலர் மலரும் வேளை 
தொடரும்..

21 comments:

  1. கர்ர்ர்ர்ர்ர்..திருப்பியும் அதே படமா ஆன்ரீ? செகண்ட் பூ பூத்தத படமெடுத்து போட்டிருந்தா நல்லாருக்கும்ல?

    ம்ம்..இன்ட்ரஸ்டிங்கா இருக்கு,உங்கட டைரிக்குறிப்பை படிக்கறதுக்கு.பேசாமா ஜீனோவும் பொட்டியக்கட்டீட்டு நியூஸி.ல உங்க வீட்டுப்பக்கமா வந்துடலாம்னு இர்க்கு.:)

    பி.கு.ஜீனோக்கு பக்லவா புடிக்கும்.
    (இப்பவே அட்வான்ஸா சொல்லி வச்சா தான சர்ப்ரைஸ் தருவீங்க,அதுக்குதான்!;)ஹிஹிஹீ!

    ReplyDelete
  2. //அப்போது என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அந்தப் பெட்டியில் செர்ரி ரைப்ஸ் வைத்திருந்தேன். ;) அவர் சந்தோஷத்திற்கு அளவில்லை// எனக்கும் அந்த அளவு சந்தோஷம் இருக்கு இமா இதை படித்தவுடன் ஏன் என்று தெரியவில்லை ??:))
    எனக்கும் ஜீனோ சொன்ன மாதிரி உங்க வீட்டு பக்கத்ல வந்து குடியேற வேண்டும் என்ற என் ஆசையை என் hus கிட்ட சொல்லிட்டேன்:)))))

    ReplyDelete
  3. இதே மலர் மீண்டும் மீண்டும் தினமும் மலருமோ?
    அல்லது?
    இது போல் வேறு நாவல் நிற மலரோ?

    ReplyDelete
  4. டொய்ங்...
    பாட்டியும் பேரனும் ஓரே மாதிரி யோசிக்கிறீங்களோ, இல்லாட்டி செட் பண்ணி வச்சு நடத்துறீங்களோ!! ;))

    ~~~~~~~~~~~~

    செக்கண்ட் பூ, பூஸ் பாய்ஞ்சதில அப்பிடியே விழுந்து போச்சுது. ;(
    வாங்கோ. பக்கத்தில பிப்ஸ்க்விக் இருக்கு, பரவாயில்லையா? ;)
    பக்லவா... 1/3 தான் கிடைக்கும். ;)

    ~~~~~~~~~~~

    வாங்கோ ஸ்வர்ணா. ;;;;))))

    ReplyDelete
  5. டைரி குறிப்பு சூப்பர்... இதுதான் பிடிக்குமுன்னு சொல்லி உங்களை கஷ்டப்படுத்தல நீங்க எது ஸ்வீட் செஞ்சாலும் எனக்கு குடுங்க போதும் ..(( பக்கத்துல ஃபிளாட் எதுவும் காலி இருக்கா ..சொல்லுங்க இப்பவே நானும் குடி வந்துடறேன் ))

    ReplyDelete
  6. மாமீ இந்த தடவை லேபிளை மறந்துட்டீங்களே ஹி..ஹி.. !!!

    ReplyDelete
  7. பூவை மாத்துங்கறீங்க, லேபிள் காணோம்கிறீங்க. ;)) ஆளாளுக்கு என்னைப் பந்தாடுறீங்களே உலகத்தாரே! நியாயமா!!

    ஜெய்லானி, நான் பண்ற கொடுமை தாங்க முடியாம என் மருமகள் கத்துறது நினைவு வருது. ;))

    ReplyDelete
  8. தம்ப்பீஈஈஈ சரியான தீனி பண்டாரமோ.. அங்க வடை சாம்பார் புரியாணி எல்லாம் வெணுமாம்.. இங்க டெசர்ர்டுக்கு அடிபோடுறார்...

    இமா! கதை சூப்பரா போயிட்டு இருக்கு..
    எனக்கும் உங்க பக்கத்து தெருவில செபா ஆன்டி அபார்ட்மென்ட் பக்கத்தில ஒரு வீடு பாக்க முடியுமா ?? சீரியசா தான் கேக்கிறேன்...

    எனக்கும் இப்படியான ஆச்சரியமான அதிர்ச்சிகள் பிடிக்கும்.. கொடுக்கவும் வாங்கவும்.. ஒருவழியா எதிர்கால மருமகளை மாமியாருக்கு பிடிக்கும் போது மகனுக்கு பிடிக்கவில்லையா.... வாழ்க்கை சுழல் :((

    ReplyDelete
  9. imaa... naan eluthina kathai polave irukke.. :)) veettukku veedu vaasappadi, vera color la :)

    i like surprises for birthdays.. but no one gives me :(

    okkai.. i like bakalavaas too.. jeeno and me can hope to receive surprises next year..

    ReplyDelete
  10. இலா, அவர் செல்ல மருமகன் இல்லையா, அதுதான் உரிமையோடு கேட்கிறார். உங்களுக்கும் தந்துரலாம். என்ன வேணும் இலாவுக்கு? சொல்லுங்கோ. ;)
    //சீரியசா தான் கேக்கிறேன்.// செபாதான் பெஸ்ட். அங்கதான் அடிக்கடி வீடு வாடகைக்கு விடப்படும். புடிங்க ஆளை. ;)

    கதை பற்றி இமாவிடமிருந்து நோ கமண்ட்ஸ். நீங்க சொல்றதைச் சொல்லுங்கோ. நானும் சொல்லுறதைச் சொல்லிக் கொண்டு போறன். ;)

    ~~~~~~

    சந்தூஸ், தொடர் பதிவு என்று போட்டுரலாமா? ;) இது போன மார்கழியில் ஆரம்பித்து மெதுவே அங்குல அங்குலமாக வளர்ந்து வந்தது. "சைக்கிள்" தூசு தட்ட வச்சுட்டார் என்கிறதை நான் மறுக்கேல்ல. நன்றி. ;)

    ஒரு நல்ல யோசனை சொல்லட்டா. செபா ப்ளாட்டுக்கே எல்லாரும் வந்திருங்க. எப்படியும் ஒரு... 8 மீதம் இருக்கும். ஹை!! நினைக்கவே இனிக்கிறதே!! ;) நடக்குமா!! ;(

    //jeeno and me can hope to receive surprises next year..// கிக் கிக். எடுத்துக் கொடுக்கிறீங்க. ;)))))

    ReplyDelete
  11. ஓக்கை.. எங்களுக்கும் இனிக்கிறது இமா.. நினைக்கவே.. உண்மையாலுமே ஒரு கெட்டுகெதர் நடந்தால் நல்லாயிருக்கும் :)

    என்ன எடுத்துக் கொடுக்கிறேன் இமா? புரியல.. எனக்கு எடுக்கறத அப்பிடியே வாயில போட்டுத் தான் பழக்கம் :) யாருக்கும் கொடுக்கறதா இல்ல :)

    ReplyDelete
  12. எப்புடீ!! ஹும் ;(

    அதுவா!! ;) ஒரு ப்ளான் இருக்கு. சொல்ல மாட்டேனே. கிக் கிக் ;)

    ReplyDelete
  13. //என்ன எடுத்துக் கொடுக்கிறேன் இமா? புரியல.. எனக்கு எடுக்கறத அப்பிடியே வாயில போட்டுத் தான் பழக்கம் :) யாருக்கும் கொடுக்கறதா இல்ல :) //

    கரப்பான் பூச்சி

    ReplyDelete
  14. செபா ப்ளாட்டுக்கே எல்லாரும் வந்துருங்க."
    ஆஹா! அருமையான யோசனை இமா .
    எனக்கும் பொழுது இனிதே போகும்.
    ஆனால் இதெல்லாம் ஆகிற காரியமா?

    ReplyDelete
  15. ஆகும். ;))) வந்துட்டாங்க மம்மி. ;)

    http://imaasworld.blogspot.com/2010/09/blog-post_4095.html

    ReplyDelete
  16. இம்ஸ், இன்னும் கதை முடியவில்லையா?
    செபா ஆன்டியால் இமாவையே சமாளிக்க முடியவில்லை.

    ReplyDelete
  17. மகனும் மருமகளும் மனமொத்துப் பிரிந்து விட்டார்களாம். //

    :(

    ReplyDelete
  18. A ;) @ Vany.

    வசந்துக்கு... ஒரு டிஷ்யூ. ;) இன்னும் காலம் இருக்கு கதை முடிய. இப்ப 24 வயதுதான் ஆகுது ரெண்டு பேருக்கும்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா