Saturday, 13 April 2013

230 = 100

இன்று முதல்... என் நாணயச் சேகரிப்புகளிற் சில உங்கள் பார்வைக்கு.

எப்போ, எப்படி இந்தப் பொழுதுபோக்கினை ஆரம்பித்தேன் என்பதை ஏற்கனவே அறுசுவையில் சொல்லியாயிற்று. அதே வரிகள் மீண்டும் இணையத்தில் வேண்டாம். இழைக்கான தொடர்பினை இணைத்திருக்கிறேன். ஆர்வமிருந்தால் பார்வையிடலாம்.

நாற்பது வருடங்கள்... ஒரு ஆர்வம்... தீவிர ஆர்வமிருந்தாலும் ஓரளவுக்குமேல் பணத்தை இதில் முதலீடு செய்ய விருப்பமில்லை. என் நேரத்தை மட்டும் செலவளிக்கிறேன். சேகரிப்பில் பெரும்பான்மை தோழமைகளிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் கிடைத்தவை.

சாதாரணமாக நாணயங்கள் சேகரிப்பதை Coin Collection என்கிறோம்.  Numismatics என்றும் ஒரு வார்த்தை இருக்கிறது - அது தீவிரமாக நாணயங்களை ஆராய்பவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. இமாவுக்கு இது பொழுதுபோக்கு மட்டுமே.
~~~~~~~

திருகோணமலையில் ஒரு ஆசிரியத்தோழியின் கணவர்... வங்கியில் வேலை பார்ப்பவர், இந்த நாணயம் அங்கு உத்தியோகத்தருக்காக பிரத்தியேகமாக அனுப்பப்பட்டதாகவும் தனக்குரியதைத் திருப்பி அனுப்பிவிட இருப்பதாகவும் தேவையானால் என்னை வாங்கிக் கொள்ளுமாறும் சொன்னார்.
230 இலங்கை ரூபாய்களுக்கு வாங்கியதாக நினைவு. அன்றைய காலத்திற்கு எனக்கு கொஞ்சம் பெரிய தொகைதான். இருந்தாலும் முதல் முதல் இப்படி அபூர்வமாகக் கிடைத்த பொருளை விட்டுவிட மனது ஒப்பவில்லை. வாங்கி வைத்துக் கொண்டேன். இன்றும் அதன் முதலாவது சொந்தக்காரர் பெயர் அவரது கையெழுத்தில் வெளியேயுள்ள அட்டைப் பெட்டியில் இருக்கிறது.
நாணயத்தின் ஒரு புறம்...
 மறுபுறம்....
நாணயம் பற்றிய விபரங்கள்
தொடரும்...

2 comments:

  1. நாணய சேகரிப்பில் எனக்கும் ஆர்வம் உண்டு இமா. பெரிய அளவில் இல்லையென்றாலும் கிடைப்பதை சேகரிப்பேன். இங்கே அபூர்வ நாணயத்தைக் கண்டதில் மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் சேகரிப்பின் விவரங்களை...

    ReplyDelete
  2. பொக்கிஷம்...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா