Wednesday 17 April 2013

ரோஜாக்கூட்டம்!

 
என் தோட்டத்து ஒற்றைச் செடியில் பூத்த ஒரு கூடை வெள்ளை ரோஜாக்கள்
காம்பின் அளவைப் பொறுத்து அலங்கரித்தேன். ;)
இரண்டாவது - ஒரு 'சுவனியர் க்ளாஸ்'
நான்காவது - எப்போதோ Arpico Showroom இல் வாங்கிய மூன்றங்குல உயரமான சாடிகளிரண்டில் ஒன்று.
ஐந்தாவது - salt pot (மூடி துரு ஏறிப் போனதான் வீசிவிட்டேன்.)




மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

16 comments:

  1. ரோஜாக்கூட்டம்! அழகு ..
    மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகான வெள்ளை ரோஜா கூட்டம் :))
    அந்த முதல் படம் கூடையில்மலர்கள் இருக்கும் படம் ..ரொம்ப அழகா படம் பிடிச்சிருக்கீங்க
    அந்த ப்ளையர்ஸ் மட்டும் இல்லாட்டி வின்டாஜ் கிளிப் ஆர்ட் போல இருக்கும் .

    ஆமைகுட்டியும் ட்ரிக்சியும் மலர்களை ரசிக்கிறாங்க:))..மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. //ப்ளையர்ஸ் மட்டும் இல்லாட்டி// noted Angel. thanks ;)

      Delete
  3. அழகு... எல்லாமே அள்ளிக்கோன்னு சொல்றா மாதிரி இருக்கு இமா...

    ReplyDelete
  4. ஆகா.... அழகான வெள்ளை ரோஜாக் கூட்டம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. மிக மிக அழகாக இருக்கு இமா.

    ReplyDelete
  6. செடியில் பூ இருந்தால் அப்படியே பார்த்து ரசிக்கத்தான் தெரியும் இமா! உங்க அளவுக்கு பொறுமையா கட் பண்ணி, சைஸுக்கேற்ப பூ ஜாடிகளில் வைக்கும் அளவுக்கு அழகுணர்ச்சி எல்லாம் எனக்கு ரெம்ப்ப்ப்ப்ப்ப தூரம்! ;) அதுவுமில்லாம எங்க செடிகளில் பூக்கள் ஒண்ணு ரெண்டுதானே வரும்?! ;)

    நர்ஸரி-ல சொன்னாங்க, இந்த வெள்ளை ரோசாப்பூ செடி விரைவாக வரும், பூவும் நிறையத் தரும் என்று! இங்கே அபார்ட்மெண்ட் வாசலில் இந்த ரோஜாக்கள்தான் அதிகம். அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //எங்க செடிகளில் பூக்கள் ஒண்ணு ரெண்டுதானே வரும்?!// கர்ர்.. வரும். நறுக்கிய வாழைப்பழத்தோல், தேயிலை, வெங்காயத்தோல், பூண்டுத்தோல் செடி அடியில போட்டு கிளறிவிடுங்க. பூ உதிர ஆரம்பித்தால் அதிலிருந்து கீழே எங்கே முதல் 5 இலை நெட்டு இருக்கிறதோ அதற்கு மேல் வெட்டிவிடுங்க. இந்த வகை சாதாரணமாகவே நிறையப் பூக்கும்.

      Delete
  7. இங்கே எங்கள் வீட்டுப்பக்கத்தில் இப்படித்தான் எக்கச்சக்கமாய் வெள்ளை ரோஜாக்கள் மலர்ந்து பார்க்கவே அழகாக இருக்கும். ஒவ்வொரு செடியும் பார்ப்பதற்கு ஒரு பெரிய பூங்கொத்தை தரையில் நட்டுவைத்திருப்பதைப் போலிருக்கும். அந்தச் செடியில் அடித்தண்டில் ஐஸ்பெர்க் ரோஸஸ் என்ற பெயர் அட்டை தொங்கும். அந்த வகைப் பூக்கள்தானா இவையும்?

    அழகாக பூச்சாடியில் அலங்கரித்திருக்கிறீர்கள் இமா. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் உங்கள் கலைக்கரங்களுக்கு உப்புசாடியும் பூச்சாடியாய் அழகாய் மிளிர்கிறது.

    ReplyDelete
  8. இராஜராஜேஸ்வரி அக்கா, ஏஞ்சல், ராதா, தனபாலன், ப்ரியா, மகி, கீதமஞ்சரி அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். @}->-- ;)

    ReplyDelete
  9. அழகு அழகு..பூக்களை செடியுடன் காட்டி இருக்கக்கூடாதா?

    ReplyDelete
  10. அழகோ அழகு இமா அக்காவின் கைகள் பட்டு ரோஜாவுக்கு அழகு, ரோஜாக்களினால் கைகளுக்கு அழகு, அதை பார்த்த எங்களுக்கு எல்லாமே அழகு.

    என்வீட்டில் வெள்ளை ரோஜா இல்லை .... கவலையுடன்......

    மிகவும் அழகாக அழங்கரித்துள்ளீர்கள் அக்கா... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  11. ம்.. அழகோஅழகு... இமா அலங்கரிச்சா அத்தனையும் அழகுதான்...:)
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அழகோ அழகு கொள்ளை அழகு இமா!!

    ReplyDelete
  13. அடேங்கப்பா... ஒரு செடியில் இவ்வளவு பூக்களா.... ரொம்ப அழகா இருக்கு இமா... ஜாடிக்கேற்ற பூக்களா... பூக்களுக்கேற்ற ஜாடிகளா... அருமையான அலங்காரங்கள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா