Sunday 28 April 2013

பின்னூட்ட ஆலு மேத்தி

நேற்றுக்காலை இலங்கைக் கடைக்குப் போக... கடை திறக்கவில்லை. அப்படியே அருகே இருக்கும் ஃபீஜியன் கடைக்குப் போனோம். ஒரு பிடி மேத்தி வாங்கி வந்தேன்.

இன்று மதியம் மகியின் 'ஆலு மேத்தி' யமி யமி யம்... ;P
(ஆனால் கிழங்கு என்பதால் இதையே பிரதான மதிய உணவாக்கிவிட்டேன். கூட ஒரு சலட் & 2 சொசேஜ். )

சுவைத்துப் பார்த்த க்றிஸ் "நன்றாக இருக்கிறது," என்றார். "பெயர்... ஆலு மேத்தி" என்றேன். "கடைக்காரர் பெயரா?" என்கிறார். ;)))

~~~~~~~~~~~~~~
தட்டின் அருகே இருப்பது தக்காளி. கூட இருக்கும் இலை என்ன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

53 comments:

  1. இமா... ஆலுமேத்தி செய்தீங்களா? சூப்பர்...:)
    அங்கே இந்த வெந்தயக்கீரை கிடைக்குதோ.... கர்ர்ர் இங்கை கிடக்கேலை அதுதான் கர்ர்ர் எண்டன்...:)

    அங்கை பக்கத்தில வைச்சிருக்கிற பச்சை தும்ம்புப்புல்லு dillஎண்டு சொல்லீனம்...
    இங்கையும் அதே பெயரில இருக்கு.
    ஆனா இதுதான் வெந்தயக்கீரையோ....:O)..
    விக்கிபீடியாவில இருக்கு. பார்த்தேன். கூகில் மொழிபெயர்ப்பில இதை வெந்தயம் எண்டு போட்டிருக்கினமே... ஒரே குயப்பமா இருகெனக்கூஊ...:(

    நான் எங்களின் வெந்தயகீரை பார்த்ததே இல்லை இதுவரை...
    கெதியா விளக்கம் சொல்லுங்கோ... இதுதான் எண்டா பக்கதில கடையில கண்டனான் ஓடிபோய் வாங்கிவந்துடோணும்...:)

    ReplyDelete
    Replies
    1. //வெந்தயக்கீரை கிடைக்குதோ....// இரண்டுவகையாகக் கிடைக்குது. கீரையாக கட்டாகவும், முளை வரப்பண்ணி - வித்திலையோடு மட்டும் சின்னக் கட்டுகளாகவும் வாங்கலாம். கர்ர் வேணாம். ;) வெந்தயத்தை ஊறவைச்சு ஒரு தொட்டில போடுங்கோ, முளைக்கும். பூ குட்டியாக வடிவா இருக்கும்.

      ஆஹா! ;)
      //இதுதான் வெந்தயக்கீரையோ// இல்லை. மகியின் வலைப்பூவில் (லிங்க் போட்டிருக்கிறேன், க்ளிக் ப்ளீஸ்.) வெந்தய இலை தெரியும்.

      //கூகில் மொழிபெயர்ப்பில இதை வெந்தயம் எண்டு போட்டிருக்கினமே...// இல்லை. இதைப் போட இல்லை. அவங்கள். ;) வெந்தயத்துக்கு ஆங்கிலம் டில் அல்லது டில்லுக்கு தமிழ் வெந்தயம் என்றுதான் மொழிபெயர்ப்பு காட்டும்.

      எங்காவது மேலே என் படத்தில இருக்கிறது போல இலை போட்டு வெந்தயம் என்று போட்டிருந்தால் பிழை அது. குழம்பீராதைங்கோ.

      வெந்தயத்துக்கும் ஆங்கிலத்தில டில் எண்டுதான் சொல்லுறது. இலை கொஞ்சம் எலிச்செவி போல நீளமா இருக்கும். வடிவான குட்டி பூக்கள். வாசமா இருக்கும்.

      நீங்கள் சொல்லுற தும்பு போல இலை டில் வேற - கொத்துமல்லி, செலரி, பாஸ்லி, பெருங்காயம், சீரக வகைத் தாவரங்கள்ட சகோதரம் அவர்.

      படத்தில இருக்கிறது இது ரெண்டும் கூட இல்லை. ஒரு க்ளூ தாறன் முற்றிய... 'ஈட்டி' ;)

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்..... இப்ப இது உங்களுக்கு...:))
      ஏனெண்டேலை... இவ்வளவுஞ் சொன்னவாக்கு விடையை சொல்ல என்னவாம்....:(

      ஹா... டக்கெண்டு ஒண்டு தலையில `பல்ப´ எரியுது...
      சவுக்கூஊஊ... சவுக்குதான் தொட்டாக்குத்தும். ஈட்டிபோலை. இல்லாட்டீஈஈ... கிறிஸ்மஸ் ற்ரீ..
      அதுவாயியுமிருக்கும்...:)
      அட ச்சீ இதுவெல்லாமோ சாப்பிடுறியள் இமா...
      அட ஆண்டவா...:(

      Delete
    3. ;)))) ஏன் அம்பு வில்லு எல்லாம் விட்டுப்போட்டீங்கள்!! ;)) இப்ப பதில் சொன்னால் மிச்ச ஆட்கள் யோசிக்காகினம். காதைக் கொண்டுவாங்கோ சொல்லுறன். அது.... ;)))

      Delete
  2. ஆலு மேத்தி நல்லா இருக்கு.. அடிக்கிற வெயிலுக்கு மேத்தி சேர்க்கிறது ரொம்ப நல்லது இமா.. பக்கத்தில இருக்கிற இலை ரோஸ் மேரி இலை..சரிதானே இமா..

    ReplyDelete
    Replies
    1. ;) ரோஸ்மெரி இல்லை இது. ரோஸ்மெரி இதைவிட தடிப்பாக இருக்கும். இந்த த்ரெட்ல ரோஸ்மெரி இலை படம் இருக்கு ராதா.

      Delete
    2. ஆஹா! லிங்க் போட மறந்துபோனன் போல இருக்கே! ;) ம்.. இப்ப அடுத்த இடுகையில போட்டு இருக்கிறன், பார்க்கலாம் நீங்கள்.

      Delete
  3. Replies
    1. ;)) ம். சீக்கிரம் சொல்கிறேன்.

      Delete
    2. அடுத்த இடுகையில்... உங்களுக்காக ஒரு பட்டம் காத்திருக்கிறது தனபாலன். ;)))

      Delete
  4. இமா நலமா?

    சுவைத்துப் பார்த்த க்றிஸ் "நன்றாக இருக்கிறது," என்றார். "பெயர்... ஆலு மேத்தி" என்றேன். "கடைக்காரர் பெயரா?" என்கிறார். ;)))//

    நல்ல ஜோக்

    இமா அது சோம்பு இலை தானே. மாமி சரியா சொல்லி இருக்கேனா?

    ReplyDelete
    Replies
    1. சோம்பு மாதிரி இருந்தாலும் சோம்பு இல்லை மாமி.

      Delete
  5. இப்பதான் ஒரு கட்டு வெந்தய கீரை வாங்கி வந்தேன் இன்னிக்கு எங்க வீட்ல மேத்தி டே :))

    ReplyDelete
    Replies
    1. //இன்னிக்கு எங்க வீட்ல மேத்தி டே :))//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாருமே ஸ்பெல்லிங் மிசுரேக்கு விடுகினமே சாமீஈஈஈஈஈஈ:)).. இனியும் பொறுக்க மாட்டேன் நான்ன்.. அது “மே டே” ஆக்கும்:)) எங்கிட்டயேவா?:) விடமாட்டமில்ல.. தமிழில எனக்கு டி ஆக்கும்:).. சே..சே.. தமிழைத் திருத்தியே எனக்கு பொசுக்கெனப் போயிடும்போல இருகே சாமி மலைக் கடவுளே..:)

      Delete
    2. //தமிழைத் திருத்தி// ம். ம். ;)))

      Delete
  6. நல்ல பகிர்வு . பாக்கும் பொழுதே சாப்பிடனும் போல் தோன்றுகிறது....அருமை அக்கா... சீரக இலை மாதிரி இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. மாதிரித்தான் இருக்கு. ஆனா இல்லை. ;)

      Delete
  7. தங்கள் துணைவர் கேட்ட பெயர் சிரிப்பு வந்துவிட்டது..எனக்கு பிடித்த ஆலு மேத்தி சூப்பர்ர் இமா!! சீக்கிரம் அந்த இலை என்னன்னு சொல்லுங்க..

    ReplyDelete
    Replies
    1. ;)))

      படங்களைத் தேடுகிறேன். விரைவில் சொல்கிறேன் மேனகா.

      Delete
    2. உங்களுக்காகவும் அடுத்த இடுகையில் ஒரு பட்டம் காத்திருக்கிறது. ;)))

      Delete
  8. கூளிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன் உலகத்தில.. இப்படி ஒரு பேத்தியைக் கண்டதில்ல:) சொறி அது டங்கு ஸ்லிப்.. அது மேத்தியாம்ம்..

    சரி சரி அதிராவோ கொக்கோ.. பக்கத்திலே இருக்கும் இலையின் பெயர்.. “மயிர் மாணிக்கம்”.. ஊரில வடிவுக்கு வளர்ப்போம்ம்..

    ReplyDelete
    Replies
    1. இல்லை அதீஸ். வடிவாப் பாருங்கோ, அது கொஞ்சமாவது இலை அகலமெல்லோ!
      எனக்கும் பூ விருப்பம். இங்க எங்கயும் காணேல்ல.

      Delete
    2. அது இல்லையோ? அப்போ மை ஹெஸ்ஸிங் பிழைச்சிடுச்சோ?:)... அப்போ ஒரு ஐடியாச் சொல்லட்டே:).. அது வந்து.. நீங்களே சொல்லிடுங்க இமா:)..

      உங்கட அவணுக்குள் வச்ச, பிரெட் துண்களுக்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொன்னது, நினைவில மலருதே:)

      Delete
  9. சுவைத்துப் பார்த்த க்றிஸ் "நன்றாக இருக்கிறது," என்றார். "பெயர்... ஆலு மேத்தி" என்றேன். "கடைக்காரர் பெயரா?" என்கிறார். ;))) ///

    ஆஆஆஆஆ கிறிஸ் அங்கிள்.. இமா ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டா.. அது ஆலு எண்டால்.. அலமேலு ப் பாட்டியை ஸ்டைலா ஆலு.. ஆலு.. எண்டு கூப்பிடுறதாம்:).. மேத்தி என்பது ஸ்பெல்லிங் மிசுரேக்கு... அதாவது “பேத்தி” ஆலுவின் பேத்தி:) எப்பூடி?:) எங்கிட்டயேவா?:).. வெந்தயக் கீரை இல்லாத இடத்தில கடுப்பைக் கிளப்பீனம் யுவர் ஆனர்:))..

    வெந்தயக் கீரை நான் வறை மட்டும் செய்ததுண்டு.

    ReplyDelete
  10. இளமதி & இமா, FYI

    http://www.satvikshop.com/blog/herbs-knowledge-base/fenugreek

    dil-என்பது சோம்பு(பெருஞ்சீரகம், Fennel seeds/Saunf)க் கீரை. வெந்தயத்தின் ஆங்கிலப் பெயர் fenugreek seeds. இதுக்கு மேலயும் குள;)ம்பாதீங்க. ;))))

    பின்னூட்டப்பதிவுக்கு மிக்க நன்றி இமா! உங்களுக்கு பிடித்திருந்தது என்பதறிந்து மெத்த மகிழ்ச்சி.
    அப்புறம், ஆலூ =உருளைக் கிழங்கு, மேத்தி = வெந்தயக்கீரை ...இவை ஹிந்தியில் இருந்து வந்த பெயர்கள். சுத்தத் தமிழ்ப் பெயர் தருவதாக இருந்தால் உருளைக் கிழங்கு-வெ.கீரைப் பிரட்டல் என கூப்பிடுங்கோ. :)

    ReplyDelete
    Replies
    1. // உருளைக் கிழங்கு-வெ.கீரைப் பிரட்டல்// ம். அனைத்துக்கும் நன்றி. ;)

      //குள;)ம்பாதீங்க// நான் குள/ழம்பேல்ல! இனி. ;)))

      Delete
    2. ஆஆஆஆஆஆ அது.. அது..அது.. அப்பூடித் தமிழ்ப் பெயரா வையுங்கோ:) ஹிந்தி எல்லாம் வாணாம் நமக்கு:)..

      Delete
    3. அப்பூடித்தான் ஸ்ரெடியா இருங்கோ
      குல:)ம்பிடாதீங்கோ:)

      Delete
    4. நாங்களும் சிரிப்போம்(((((((((: )))))))))

      Delete
    5. இப்ப சிரிக்கலாம் அஞ்சூஸ். ;)

      Delete
    6. //உருளைக் கிழங்கு-வெ.கீரைப் பிரட்டல் என கூப்பிடுங்கோ.// கூப்பிட்டேன் மகி. அது வரேல்லயே! ;)

      Delete
  11. //வெந்தயத்துக்கு ஆங்கிலம் டில் அல்லது டில்லுக்கு தமிழ் வெந்தயம் என்றுதான் மொழிபெயர்ப்பு காட்டும்.// இது வேறயா?!! கஷ்ட்ட்ட்ட்ட்ட்டம்டா சாமீ! ;))))))) ஆராவதென்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓஒ!

    பக்கத்தில இருக்க இலை என்ன என்பதைக் குறுக்கு வழியில;) கண்டுபிடிச்சுட்டேன், ஆனா இங்கே சொல்லி, சஸ்பென்ஸை உடைக்க விரும்பலை. ஹஹா!

    ReplyDelete
    Replies
    1. //இது வேறயா?!! கஷ்ட்ட்ட்ட்ட்ட்டம்டா சாமீ!// ;))
      சிரிக்கப்படாது. சில நேரம் இப்படித்தான். சோம்பு, வெந்தயம் ரெண்டுக்குமே டில் என்றுதான் சொல்லுறது.

      இந்தச் சொல் முதல்ல எப்ப பிடிச்சனான் என்றால்... சின்னன்ல... நான் 'Lime & Dill' ஷாம்பூதான் வைக்கிறனான்.

      Delete
    2. //சஸ்பென்ஸை உடைக்க விரும்பலை. ஹஹா! // ;)))

      Delete
    3. நானும் சிரிக்கிறேனாக்கும்.. ஹா..ஹா..ஹா... ஹா..ஹா..ஹா...:)

      இப்ப பாருங்கோ பிரித்தானியாவில இருந்து ஒராள் தங்க:)ரதத்தில:) ஓடிவந்து கேட்கப் போறா ஏன் சிரிச்சனீங்க என.. அடிச்சுக் கேட்பாக சொல்லிடாதீங்க மகி:) அன்பாக் கேட்பாக சொல்லிடாதீங்க மகி:).. உஸ்ஸ் என் பின்னூட்டம் படிச்சு றீச்சருக்கும் தலை சுத்தப் போகுது:)..

      ஸ்கூலுக்கு நேரமாகுது நீங்க போயிட்டு வாங்க இமா:)..

      Delete
    4. high five Mahi :)))ஆமா நானும் கண்டு பிடிச்சிட்டேன்

      Delete
    5. Aniseed :))

      பொற் காசுகளை அனுப்பிவிடுங்கள் ...நானும் மகியும் பகிர்ந்து கொள்கிறோம்

      Delete
    6. ajwain >>இதுக்கு மேலே அழுதுடிவேன் நீங்களே சொல்லிடுங்க

      Delete
    7. //ஸ்கூலுக்கு நேரமாகுது நீங்க போயிட்டு வாங்க இமா// ஹ்ம்! இண்டைக்குத்தான் கடைசிநாள். இனி ஸ்கூல்தாம்.

      //பொற் காசுகளை அனுப்பிவிடுங்கள்// பிழைபிழையாச் சொன்ன ஆட்களுக்கு பொற்காசோ! நல்ல கதை இது. ;)

      Delete
  12. ஆலுமேத்தி செய்ய மேத்தி இல்லையே என்றால் இளமதிக்கு கொடுத்த பதில் எனக்கும் பிரயோசனப்படும். எனக்கு நோ ஐடியா.நீங்க பதில சொல்லுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காக ஒரு பட்டம் காத்திருக்கிறது. ;))

      Delete

  13. வணக்கம்!

    கலையைக் குறித்துக் கவிதருவேன்! அந்த
    மலையைக் குறித்தும் வடிப்பேன்! - நிலையா
    அலையைக் குறித்தும் அளிப்பேன்! அறியேன்
    இலையைக் குறித்த இயல்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! _()_ முதலில் வருகைக்கு நன்றி.

      இலையைக் குறித்த இயலல்லவிது - என் தோட்டக்
      கலையைக் குறித்த இயல். :-)

      இந்த இலை, அந்த இலை என்று
      வெற்று இலைப்பெயர் சொன்னால்,
      "இலை, இலை" என்று
      தலை அசைத்திருப்பேன்.

      கலையை, மலையை- நிலையா
      அலையை அறிந்த பாவேந்தை - அந்தோ
      'தெரியவிலை' என வைத்ததே யிலை! ;)))

      Delete
    2. டொய்ங்!!! //எழுத்துநடை அழகாக உள்ளது!// என்று சொல்ல, நானும் ஒரு நீரோட்டத்தில (flowவுக்கு அதுதானே தமிழ்!!) எழுதிப் போட்டன். உண்மையில... தேயிலை இல்லை அது.

      மக்கள்ஸ்... பூஸ் எனக்கும் டிக்கட் அனுப்பினவா. கவிஞர் ஐயா இமாவை அடிக்கத் தேடினால்... சொல்லுங்கோ, 'இமா நன்றி சொன்னவா. இப்ப அண்டாட்டிக்கா போயிருக்கிறா. வர ஆறேழு வருசமாகும்,' என்று. ;))))

      Delete

  14. இமா அவா்களுக்கு வணக்கம்!

    எழுத்துநடை அழகாக உள்ளது!
    கருத்துகளுக்கு எழுதுய பதில்கள் கூட இனிமை அளித்தன!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. Wonderful Imaa..I love your passion towards tamil...you have awesome blog...Keep rocking...
    Todays recipe:http://www.7aumsuvai.com/2013/04/varagarisi-sadham-varagu-sadham-kodo.html#.UYER6LWG0YE

    ReplyDelete
    Replies
    1. //I love your passion towards tamil..// ;))))) டொய்..ங்!! உங்களுக்காவது விளங்குதே! ;D இங்க இருக்கிற சனமெல்லாம் என்னைக் குழ/ள/லப்புறாங்கள். ;)

      மிக்க நன்றி சாந்தி.

      Delete
  16. ஆலுமேத்தி செய்தாலும் செய்தீங்க.. என்ன இப்படி ஆலுவும் மேத்தியும் அல்லோலகல்லோலப்படுது! :)

    பக்கத்திலிருக்கும் இலை சோம்பு இலை என்றுதான் நானும் நினைத்திருந்தேன். என்னவென்று நீங்களே சொல்லுங்க இமா. காத்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. //அல்லோலகல்லோலப்படுது// ம்.. ;) கனகாலத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தோஷமாகக் கதைக்கிற மாதிரி ஒழுங்கா ஒரு போஸ்ட் ;) போட்டு இருக்கிறன்.

      ம்.. நீங்கள் பதில் சொன்னீங்களா, இல்லையா? இப்ப நான் என்ன செய்யட்டும்! உங்களுக்கு பட்டம் தாறதா, வேணாமா? ;D

      Delete
  17. வந்தேன், வந்தேன்.
    மீண்டும் நானே வந்தே..ன்ன்ன். ;)

    பதில் இங்கே http://imaasworld.blogspot.co.nz/2013/05/blog-post_2.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா