கைவினைப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும் சமயம் வாங்கிச் சேர்த்து வைப்பேன். எது எப்போது தேவைப்படும் என்பதைச் சொல்ல முடியாது. ஒரு பாக்கெட்டில் வந்த பூக்களைக் கொண்டு, நேற்றைய இடுகையிலுள்ள வாழ்த்திதழ் உட்பட மூன்று வாழ்த்திதழ்களாவது செய்திருப்பேன்.
செய்முறை என்று எழுதுவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.
தேவையாக இருந்தவை...
தடிமனான, மினுக்கமான வண்ணக் கயிறுகள்
பொருத்தமான நிறத்தில் பூக்கள்
மகரந்தம்
செயற்கை இலைகள்
மாலைகள் செய்வதற்கான வளையங்களும் கொக்கிகளும் (Lobster clasps)
இவற்றோடு....
கத்தரிக்கோல்
குறடு
மெழுகுவர்த்தி
க்ளிப்புகள்
ஊசி & பொருத்தமான நிறங்களில் நூல்
- கழுத்து அளவிற்கு ஏற்றபடி நாடாவை வெட்ட வேண்டும்.
- நுனிகளை மெழுகுவர்த்தியில் காட்டி உருக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு முனையில் வளையத்தையும் மறுமுனையில் கொக்கியையும் மாட்டி இறுக்கிக்கொள்ள வேண்டும்.
- பாதியாக மடித்து நடுவில் அடையாளம் செய்து எடுத்து, பூக்கைளையும் இலைகளையும் மகரந்தங்களையும் சரிவர வைத்துத் தைக்க வேண்டும்.
- க்ளிப்பிலும் விருப்பம் போல் பூக்களை வைத்துத் தைத்துவிடவேண்டும்.
- நூல் பிரிந்துவிடாமல் இருக்க தையலை முடித்த இடத்தில் நிறமற்ற நெய்ல் பொலிஷ் வைத்துவிட்டால் நல்லது.
எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இவ்வளவோடு நிறுத்திவிட்டேன். பேத்தி வளரும் போது தேவை மாறலாம். :-)
2 மே மிகவும் அழகா இருக்கு இமா. பேத்திக்கு பிறந்தநாள் வந்திட்டுதா? அவருக்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteம்... 2 மே இல்லை, 21 டிசெம்பர். :-) இப்ப 16 மாசம் ஆச்சுது ப்ரியா. அப்ப போஸ்ட் எழுத நேரம் கிடைக்கேல்ல. இப்பவும் நேரம் கொஞ்சம் குறைவுதான். எங்கயாவது ஏதாவது பிழை கண்ணில் பட்டால் சொல்லுங்க, திருத்தி விடுறன்.
Deleteஅணிகலன்கள் அழகாக இருக்கின்றன.
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ். வேறு சில நிறக் கயிறுகள் வைத்திருக்கிறேன். தேவை வரும் போது குட்டிப் பெண்ணுக்குச் செய்து அணிந்து பார்க்க வேண்டும்.
Deleteஅழகாக இருக்கிறது வாழ்த்துகள்.
ReplyDelete- கில்லர்ஜி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பு நன்றிகள் சகோதரரே!
Deleteஅழகாக செய்து உள்ளீர்கள்... அருமை...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு என் அன்பான நன்றிகள் தனபாலன்.
ReplyDelete