இலங்கையில் தெருவில் மணி அடித்துக்கொண்டு ஒருவர், தோளில் ஒரு பக்கம் கண்ணாடியாலான உயர்ந்த தகரப் பெட்டியைத் தூக்கி வருவார். அதன் உள்ளே தும்பு மிட்டாயும் அதே நிறத்தில் நைஸும் இருக்கும்.
நைஸ்... நினைத்தாலே வாயூறும் எனக்கு. பெரிய வட்டமாக, இறுக்கிப் பிடித்தால் பொடியாகும் அளவு மென்மையாக ஆனால் மொரமொரப்பாக இருக்கும். ஈர உதட்டில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்ளும். சுவை... இனிமை இருந்தும் இல்லாமலும் இருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் அலுக்காது அத்தனை எடை குறைந்த தின்பண்டம். இலங்கைக்குப் போகும் சமயம் கூட மணிச்சத்தம் கேட்டதும் வெளியே போய்ப் பார்ப்பேன். வாங்கிச் சாப்பிடாமல் விடுவது இல்லை.
அத்தனை அருமையானதொன்றை நினைத்த போதெல்லாம் சாப்பிடக் கிடைத்தால்!
ப்ரின்சியின் சமையலறையில் கண்டேன் செய்முறையை. மிக்க நன்றி ப்ரின்ஸி. உங்கள் உதவியால் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் அருமையான நைஸ் சாப்பிடக் கிடைத்தது.
ரொட்டி மேக்கர் இருந்தால் மட்டும்தான் நைஸ் செய்யலாம். பெரிய நைஸை எப்படிச் செய்திருப்பார்கள்!! இரண்டு தோசைக்கற்களை பிணைச்சல் போட்டு இணைத்து வைத்திருப்பார்களோ!! :-)
இங்கே குறித்து வைத்தால் காணொளி காணாமற் போனாலும் பிறிதொரு சமயம் தேடி எடுக்கச் சுலபமாக இருக்கும்.
தேவையாக இருந்தவை
மா - 165 கி
சீனி -2 மே.க
நீர் - 360 மி.லீ
கலரிங்
சுவை சேர்க்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. விரும்பினால் சேர்க்கலாம்.
ப்ரின்ஸி சொல்லியிருந்த முக்கியமான விடயங்களை மட்டும் குறித்து வைக்கிறேன்.
கரைசலை வடிகட்டவேண்டும்.
சுருக்கமாகவே குறித்து வைத்திருக்கிறேன். இதைப் படித்தால் மீதி விபரங்கள் எனக்குத் தானாகவே நினைவுக்கு வந்துவிடும்.
இந்த இடுகை என்றாவது.... தொடரும்.

நிறம் கடுமையாக இருக்க வேண்டும்.
ரொட்டி கிங் நடுத்தர சூட்டில் இருக்க வேண்டும்.
2 - 2 1/2 மேசைக்கரண்டி கலவை போதும்.
மூடி, 30 செக்கன்களுக்கு அழுத்தியும் 45 செக்கன்கள் மெல்லிதாகவும் பிடித்தால் போதும்.
திறக்கும் போது சிரமப்படுத்தித் திறக்கக் கூடாது. தானாக வந்தால்தான் சரியாக வரும்.
திருப்பிப் போட்டு 10 செக்கன்கள் விட்டு எடுக்க வேண்டும்.
சுருக்கமாகவே குறித்து வைத்திருக்கிறேன். இதைப் படித்தால் மீதி விபரங்கள் எனக்குத் தானாகவே நினைவுக்கு வந்துவிடும்.
இந்த இடுகை என்றாவது.... தொடரும்.
ம்.... தொடரட்டும்...
ReplyDelete:-) அது இப்ப வராது. கொஞ்ச காலம் எடுக்கும். தேடும் வேலைகள் கொஞ்சம் இருக்கு.
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteதும்பு மிட்டாய் - நைஸ் இரண்டுமே கேள்விப்படாத பெயராக இருக்கிறது. தும்பு மிட்டாய் படம் இருந்தால் சேர்த்திருக்கலாம்!
ReplyDeleteபார்த்து ரசிக்கத்தான்! இங்கே கிடைக்குமா எனத் தெரியவில்லை. கடினம் என்றே தோன்றுகிறது.
அது... தும்பு மிட்டாய் கூட இல்லை; தும்பு முட்டாஸ். :-) வேறு ஒன்றும் இல்லை, பஞ்சு மிட்டாய்தான் ஆனால் பஞ்சு போல் இல்லாமல் தும்பு தடிமனுக்கு இருக்கும் என்று வையுங்கள். :-)
Deleteநைஸுக்கும் கூட அங்கு வேறு பெயர் இருக்கும்.
ஆ..சின்னபிள்ளையில் வாங்கி சாப்பிட அனுமதியில்லை. தெரியாமல் வாங்கி சாப்பிட்டிருக்கேன். தும்புமிட்டாஸ் ம் சூப்பரா இருக்கும். இங்கு இந்த நைஸ் சுப்பர்மார்க்கெட் ல கிடைக்குது. ஆனாலும் அந்த டேஸ்ட் இல்லை.
ReplyDeleteடேஸ்ட் இல்லாமல்தான் எங்கட ஊர் நைஸ் இருக்கும். உமிழ்நீர் மாப்பொருளை குளூக்கோஸ் ஆக மாற்றும் எண்டுறதுக்கு இதை விட நல்ல உதாரணம் சொல்ல ஏலாது. :-)
Deleteநான் இன்னும் ரெண்டு விஷயமும் தேடிக்கொண்டு இருந்தன் பல காலமாக. அதே ப்ரின்ஸிட குறிப்பு வழியாக ஒன்றைக் கண்டுபிடிச்சன். மற்றது... இந்தனை வருஷம் நிறைய ஆராய்ச்சி செய்தன். ஆனால் வேற புது விஷயங்கள் தெரிய வந்துதே தவிர நான் தேடினது கிடைக்கேல்ல. இப்ப, இப்பதான் கொஞ்சம் முதல் வெங்கட் நாகராஜுக்காக படம் தேடிப் போய் தன்வலிய கண்ணுக்கு முன்னால வந்து நிக்குது. :-) அது எல்லாம் சேர்த்துத்தான் அந்தத் தொடர் எழுத வேணும். நிறைய தட்டி வைச்சிருந்தன். அடுத்த ஸ்கூல் லீவில எழுத வேணும்.