பயன்படுத்தியவை & செய்முறை சுருக்கமாக:-
- வெள்ளை அட்டையை அளவாக வெட்டி...
- அதன் முன் பகுதியில் மட்டும் சாட்டின் கடதாசி ஒட்டினேன்.
- சாட்டின் பூக்களை 3D sticky dots கொண்டு உயர்த்தி ஒட்டினேன்.
- அணிய இயலாதிருந்த காதணிகள் இரண்டின் ஒற்றைகள் (குறட்டினால் தண்டுப் பகுதியை வெட்டி நீக்கினேன்.) இவற்றையும் உயர்த்தி ஒட்டியிருக்கிறேன்.
- சிறிய வெள்ளை மணிகள். அட்டையில் பசையினால் பொட்டுகள் வைத்து, மணிகளை இடுக்கியின் உதவியால் எடுத்து அதன் மேல் வைத்துவிட்டால் ஒட்டிக் கொள்ளும்.
- இறுதியாக மூலைகள் இரண்டையும் அலங்காரமாக வெட்டி விட்டேன்.
தோழி தமிழர் அல்ல, இதைப் பார்க்க மாட்டார். இருந்தாலும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.
அழகா இருக்கு இமா. அவங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்து அட்டை அழகாக இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteஅவர்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteமூவருக்கும் என் அன்பு நன்றிகள்... என்று சொன்னால் போதாது என்று மனம் சொல்கிறது. :-)
ReplyDeleteவாழ்த்து அட்டை அழகாக இருக்கிறது.
ReplyDeleteதங்களது தோழிக்கு எமது வாழ்த்துகளும்...
- கில்லர்ஜி
மிக்க நன்றி கில்லர்ஜி.
Delete