Sunday, 3 May 2020

மைக்ரோவேவ் சாக்லெட் கேக்

நாக்கு இனிமைக்கு ஏங்கிற்று. சேமிப்பில் எதையும் காணோம். நேரம் அதிகம் செலவளிக்காமல், பாத்திரங்கள் கழுவுவதற்கும் இல்லாமல்.... என்ன செய்யலாம்!!!

ஏற்கனவே நான் அறுசுவையில் கொடுத்திருந்த மைக்ரோவேவ் ப்ரௌணி குறிப்பைத் தேடிப் பிடித்தேன். 

சீனி 250 ml!! சற்று அதிகம். ;( ஒவ்வொரு 1/8 பங்குத் துண்டிலும் 1/8 கோப்பை சீனியா! மாற்றலாம் அளவை - அரைக் கோப்பை பழுப்புச் சீனி + அரைக் கோப்பை ஈக்வல் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு 1/8 துண்டு மட்டும் சாப்பிடலாம். கொக்கோ பௌடர் வீட்டில் இல்லை, ஆனால் 'ட்ரிங்கிங் சாக்லேட்' இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.  

ஈரமான பொருட்களுடன் சீனி & ஈக்வல் சேத்து அடித்துக் கொண்டேன். மீதிப் பொருட்களை ஒன்றாகச் சலித்து எடுத்து, ஈரக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்முன் தெரிந்த கண்ணாடிப் பாத்திரத்திலிட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் செய்யப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கழித்துப் பார்க்க கேக் முழுவதாகப் பொங்கி கிட்டத்தட்ட வழியும் நிலைக்கு வந்திருந்தது. சட்டென்று திறந்து ஒரு பீங்கானை கண்ணாடிப் பாத்திரத்தின் கீழ் தள்ளிவிட்டேன். ஐந்து நிமிடங்கள் கழித்து....

கேக் தயார். அலங்காரத்துக்காக மேலே சாக்லெட் ட்ராப்ஸ் வைத்துவிட்டேன். இம்முறை வழக்கமாக வருவதைப் போல் அல்லாமல் மிகவும் மெத்த்த்... மறுநாள் கூட மென்மை அதிகம் குறையவில்லை.

விருந்தாளி வரும் போது முன்பே அடித்து, கிண்ணத்தில் ஊற்றிவைத்துவிட்டால், அவர்கள் இருக்கும் போதே மைக்ரோவே செய்து சூடாகப் பரிமாறலாம்.

எந்த எலி மாட்டுகிறது என்று பார்க்கலாம்! :-)

10 comments:

  1. அருமையாக செய்துள்ளீர்கள்...

    யாரேனும் மாட்டுவார்கள்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. :-) அனேகமாக... என் அருமை நாத்தனார்தான் முதலில் மாட்டும் எலி என்று நினைக்கிறேன்.

      Delete
  2. விருந்தாளிகள்தான் எலியா ?
    ஹா.. ஹா.. ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. :-) பொதுவாக நல்லவிதமாகத்தான் நடத்துவேன். ஆனாலும் என் வயதுக்கு மூத்த ஆட்களை இனிப்பைச் சாப்பிட வைக்கும் போது... பரிசோதனை எலிகளாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது. :-)

      Delete
  3. எப்படி இருக்கிறதைக்கொண்டு என்ன செய்யலாம் என்பதை உங்களிடம்தான் கற்கவேண்டும் இமா.

    ReplyDelete
    Replies
    1. :-) ப்ரியா... என்ன செய்ய! ஒன்லைன்ல வேலை செய்தாலும் வீட்டில இருக்க போரடிக்குதே!

      எழுத்துப்பிழை எல்லாம் தெரியுது. கவனிக்கேல்ல நீங்கள். :-) நல்ல வேளை பூஸ் இந்தப் பக்கம் வரேல்ல.

      Delete
  4. எந்த எலி மாட்டுகிறது என பார்க்கலாம்! ஹாஹா... பாதி வீடுகளில் கணவரும் பிள்ளைகளும் தானே சோதனை எலிகள்! ஹாஹா...

    பார்க்க நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
  5. இங்கேதான் பிள்ளைகள் இல்லையே! இருந்தால் அவர்களே உதவி செய்வார்கள், கொஞ்சம் அவர்களது நண்பர்களுக்குக் கடத்திவிடுவேன். கொரோனா இல்லாவிட்டால் நானே வேலைக்குக் கொண்டு போய் ஆளுக்கொன்று சுவைக்க வைத்து அபிப்பிராயம் கேட்டிருப்பேன்.

    ReplyDelete
  6. முன்னர் என் பதிவிலும் இக்கேக் தயாரிப்பு முறை பகிர்ந்து இருந்தேன் டீச்சர்! உங்களின் ரேசப்பியையும் செய்து பார்க்கின்றேன்![[

    ReplyDelete
    Replies
    1. செய்து சாப்பிட்டால் போதாது, ஃபோட்டோ காட்ட வேணும் எனக்கு.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா