எனக்கு இந்த மிட்டாய் மேல் அப்படி ஒரு விருப்பம். சின்ன வயதில் சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதை விட... வேறு விடயங்கள் ஈடுபாடு... கடமைகள் என்று மூழ்கிப் போனதில் தேடிச் சாப்பிடத் தோன்றவில்லை.
அறுசுவைக்குப் போக ஆரம்பித்து... 'மறந்து போன உணவுகள்' என்று இழையொன்று கண்ணில் பட்டு மீண்டும் ஆசையைத் தூண்டி விட்டது. அங்கு கேள்வியை வைக்க... இலங்கையர் சிலர் இணைந்தார்கள். இலங்கை வானொலி இந்தியர்களுக்கும் புல்டோவை அறிமுகப்படுத்தி இருந்தது. எல்லோருமாக கல்கோனா, கமர்கட், கட்டாமிட்டாய் முதல் புளூட்டோக் கிரகம் வரை அலசி ஆரய்ந்துவிட்டு களைத்துப் போய் பனைவெல்லம், கருப்பட்டி ஆராய்ச்சியோடு முடித்துக் கொண்டோம்.
நான் விடுவதாக இல்லை. இலங்கைக்குப் போனால் இதே எண்ணம். இங்கு எங்கே சிங்களவரைக் கண்டாலும், 'புல்டோ செய்யத் தெரியுமா?' என்று பிடித்துக் கொள்வேன். ஒரு கட்டதில் நான் சிங்களம் பேசும் யாரிடமாவது புதிதாக அறிமுகம் ஆகும் சமயம் க்றிஸ் அருகே நின்றால் தானாகவே, 'புல்டோ தலைப்பு வரப் போகிறது,' என்று சிரிக்க ஆரம்பித்தார்.
பதினொரு வருடங்கள் இவ்வாறே இனிது கழிந்தன.
சென்ற வருடம் சில மாத இடைவெளிகளில் சுரேஜினியும் உமாவும் நினைவாக யூட்யூப் குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அத்தனை ஆசை இருந்தும் வேறு வேலைகளில் இன்று நாளை என்று கடத்திக் கொண்டே போய்விட்டேன்.
சில வாரங்கள் முன்பாக மீண்டும் நினைவுக்கு வந்தது புல்டோ. பேக்கிங் கடதாசியை ஒரு கணக்கிற்கு வெட்டி வைத்தேன். பிறகு அப்படியே விட்டுவிட்டேன். தேங்காய் துருவிப் பிழிந்தால் கணக்கு சரியாக வரும்; கோரானா காலம் - தகரத்தில் அடைத்த தேங்காய்ப்பால்தான் இருக்கிறது. அது 400 ம்.லீ தகரம். அளவைக் குறைப்பதா கூட்டுவதா? பரிசோதனை முயற்சிதானே! குறிப்பில் சொன்னபடி 350 மி.லீ தேங்காய்ப்பாலும் 200 கிராம் சீனியும் பயன்படுத்தி... முன்பே க்றிஸ்ஸை எடுபிடி வேலைக்கு வரத் தயாராக இருக்கச் சொல்லி புக் செய்துவைத்துவிட்டு ஆரம்பித்தேன் வேலையை.
முதல் உதவி - பாலைப் பதமான சீனிப் பாகில் கொட்டுவது, இரண்டாவது உதவி - உருட்டிப் போடுபவற்றைப் பொதிந்து வைப்பது.
காணொளியில் சொன்னதை நம்பாமல் வாழையிலையின் உதவியை நாடியிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டேன். பேக்கிங் பேப்பரில் கொட்டினேன். ஆரம்பத்தில் சரியாக இருந்தது மெதுவே இறுகியதும் பேப்பரோடு ஒட்டிக் கொண்டது. 'மைக்ரோவேவ் செய்தால் இளகாதா?' க்றிஸ்ஸின் யோசனை நன்றாகத் தான் தெரிந்தது. சிறிய துண்டுகளாக உடைத்து இளக வைத்தால் மீண்டும் உருட்டும் பதம் கிடைத்தது. ஆனாலும் என் பொறுமையின்மையால் கடதாசியை அங்கங்கே மடித்து பிரித்து எடுப்பதற்குச் சிரமமாக ஆக்கிக்கொண்டேன். அதற்கென்ன! போஸ்டர் சாப்பிடும் பசுவின் பாலைக் குடிக்கலாமென்றால் பேப்பரோடு புல்டோ சாப்பிடுதல் மட்டும் ஆகாததா! பாக்குவெட்டியால் நறுக்கி டப்பாவில் போட்டு வைத்தேன். வாயில் போட்டுச் சுவைத்து முடிய, கடதாசி வாயில் தங்கிற்று. அப்படியே சாப்பிட்டு முடிக்கலாம்.
இருபத்தைந்து மிட்டாய்களை ஒழுங்காகச் சுற்றி எடுத்தோம். மீதியைக் கெடுக்காமல் எடுத்திருந்தால் முப்பந்தைந்து மிட்டாய்கள் வரை தேறி இருக்கும்.
செய்முறை வேண்டுமானால், மேலே போய் சுட்டியில் அழுத்தி வீடியோவைப் பாருங்கள்.

புல்டோ டொபி விரும்பாத ஆட்கள்(இலங்கையில்) உண்டோ. நானும் தேடிய டொபியில் இதுவும் ஒன்று. என் பேவரிட் கறுவாவில் செய்யும் ஒரு குட்டி இனிப்பு. தேடாத இடமில்லை. டெல்டா டொபியில் மிண்ட் .
ReplyDeleteஇதுவரை கேள்விப்படாத மிட்டாயாக இருக்கிறது
ReplyDeleteகையில் உள்ளது ஃபர்பி போலவை இருக்கிறது.
இரண்டு பீஸ் தேவகோட்டை அனுப்பி வைத்தால் சுவைத்து சொல்லலாம்.
மக்குத்தனமாக பரவி விட்டேன். சட்டென்று இறுகி போயிற்று. பர்ஃபி... பதம் மெதுவாக, கடிக்க இலகுவாக இராதா! இது கல்லாக இருக்கும்.
Delete2 பீஸா! ;) சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் இல்லையா! :-)
வித்தியாசமாக இருக்கிறது...
ReplyDeleteஆமாம் தனபாலன். இப்போது இலங்கையில் கிடைப்பது வெகு வெகு அபூர்வம். சிலவற்றை நாமாகச் செய்து சாப்பிட்டால்தான் உண்டு.
Deleteவித்தியாசமான ரெசிப்பி. கில்லர்ஜி சொல்வது போல தான் தலைநகருக்கும் அனுப்பி வைத்தால் சுவைத்து சொல்வேன்!
ReplyDelete:-) ஹை! நான் ஒன்லைன் ஓடர் எடுக்கப் போறேன்ன்ன்ன். ;)
Deleteபுல்டோ சாப்பிட இன்னும் ஆசைதான்![[ ஆனாலும் இப்ப விருப்பம் இல்லை டீச்சர்![[[[
ReplyDeleteஅது சரி, சுவை வயசுக்கு ஏற்றபடி மாறத்தானே செய்யும். இப்ப சிநேகாவையும் மறந்து போயிருப்பீங்கள். :-)
Delete