Sunday, 24 May 2020

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

சிவப்பு நிற 'லெதர் க்ரெய்ன்' அட்டையினாலான வாழ்த்திதழ் இது.

முன்பக்கம் மட்டும் printed parchment பேப்பர் இணைத்திருக்கிறேன். பாச்மண்ட் பேப்பரை க்ளூ போட்டு ஒட்டினால், அது காய்ந்ததும் அசிங்கமாகத் தெரியும். வீசிவிடுவதைத் தவிர வேறு வழி இராது. பரிசோதனை செய்து நிறைய வீணாக்கி இருக்கிறேன்லிப்போது டபிள் சைடட் டேப், மேலே அலங்கார வேலைகள் வரும் இடமாகப் பார்த்து ஒட்டிவிடுகிறேன். ரிபனும் போவும் அப்படியாக இணைக்கப்பட்டவையே. அட்டையைத் திறந்து வைத்து, ஓகன்சா ரிபனை முன்பக்க அட்டையில் மத்தியில் ஒட்டி, அத்தையைச் சுற்றி... ஆஹா!! எழுத்துப் பிழை இப்படி ஒரு அர்த்தத்தில் வந்துருக்கிறதே!! ;) ம்... அட்டையைச் சுற்றி உட்பக்கமாகக் கொண்டு போய் மீண்டும் முன்னால் கொண்டுவந்து... - டபிள் சைடட் டேப் - பச்சக். என்னைப் பொறுத்தவரை, பாச்மண்ட் பேப்பருக்கு க்ளூவை விட இதுதான் பொருத்தம். போவை தனியாகச் செய்து மேலே ஒட்டிக் கொண்டேன்.

சிறிதும் பெரிதுமாக பரவலாக பூக்கள். ஒரேயொரு கம்பளிப் பூவை 3D sticky dot வைத்து உயர்த்தி ஒட்டினேன். சிறிய பூக்கள் மத்தியில் ஒற்றை மணிகள் - சிலது வெள்ளை நிறம்; சிலது கண்ணாடி மணிகள் - ஒட்டினேன். ஒட்டுவதற்குச் சுலபமான வழி, கூர் மூக்கு கொண்ட க்ளூ போத்தலின் உதவியால் தேவையான இடத்தில் சின்னதாக ஒரு பொட்டு வைத்துவிட்டு, இடுக்கியினால் மணியை எடுத்து அந்த இடத்தில் வைப்பது. சற்றுக் காயவிட்டு மேலே விரலை வைத்து அழுத்தி விட்டால் போதும். சற்றுப் பெரிய பூக்கள் மத்தியில் மூன்று மணிகள், ஒற்றைக் கம்பளிப் பூவின் மத்தியில் மட்டும் குவியலாக மணிகளை ஒட்டிக்கொண்டேன்.

உள்ளே... confetti, Happy Birthday ஒன்றை, மத்தியில் ஒட்டினேன். சமீபமாக பிறந்தநாள் வாழ்த்திதழ்களில் கலண்டர் வெட்டி ஒட்டும் எண்ணம் வந்திருக்கிறது. பொதுவாக எந்த மாதத்துக்கான பக்கத்திலும் அந்த மாதம் பெரிதாகவும் கடந்து போன மாதம் ஒரு பக்கமும் அடுத்து வரும் மாதம் மறு பக்கமும் இருக்குமல்லவா! அப்படி, ஏப்ரல் மாதத்துக்கான பக்கத்தில் இருந்து மேயை நறுக்கி, தேதியை வட்டமிட்டுக் காட்டி அதையும் ஒட்டிவைத்தேன். இம்முறை வருடமும் தெரிந்தது.

இதைப் பெறப் போகிறவர் என் வகுப்புத் தோழி & சகலை. அவர் பிறந்தது அவரது தந்தையாரின் பிறந்தநாள் அன்று. அவரது பெறாமகன் பிறததும் அதே தேதியில்தான். இருக்கும் இருவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்; இல்லாதவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.
<3 br="">பி.கு
வரவர எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கிறது. ;( காரணம் இல்லாமல் காரியங்கள் ஆவதில்லை அல்லவா!  கண்ணுக்கு வயதாகுகிறது, கொஞ்சம் பக்கிள். ;( இமாவின் உலகம் நான் என் மனதை இலகுவாக வைக்க நினைக்கும் சமயம் சுற்றுவது. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மாக்ஸிமம் பயன்பெற விரும்புவேன், வேறு விதத்தில் சொல்வதானால்... மல்டிடாஸ்க்கிங்  - மாமியார் தலையில கையும் வேலிக்குப் புறத்தால கண்ணும் மாதிரி, இமாவின் உலகில் கையும் டீவீ ஸ்க்ரீனில கண்ணுமாக இருப்பேன்.  இரவில் கடைசி வேலையாக நடப்பதுவும் ஒரு காரணம்.

மனம்கனிந்து... பிழைகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்திவிடுவேன். இந்தக் குறிப்பை கமண்ட் பாக்ஸின் மேலே வருவது மாதிரிப் போடலாம் என்றால், எப்படிச் செய்வது என்பது மறந்துவிட்டிருக்கிறது. ;( வலையுலகோர் முடிந்தால் உதவ வேண்டும்.

நன்றி
_()_

8 comments:

  1. வாழ்த்து அட்டை ரொம்பவே அழகாக வந்திருக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. கமெண்ட் பாக்ஸ் மேலே வருவது மாதிரி போட:

    In Blogger - select settings.

    Select Comments. Then select Comment Form Message. Type the words you want for showing above the comment box. Save! That's it! You are done!

    ReplyDelete
    Replies
    1. உதவிக்கு மிக்க நன்றி. கண்டதும் மாற்றம் செய்துவிட்டேன். :-)

      Delete
  3. அழகான வாழ்த்து அட்டை. பெறபோகும் நபருக்கு என் வாழ்த்துக்கள்.
    படத்தை இன்னும் கொஞ்சம் பெரிதா வும்,2, அல்லது 3 படமாகவும் போடலாமே இமா.

    ReplyDelete
  4. வாழ்த்து அட்டைகள் இப்படி அனுப்பி எவ்ளவோ காலம்
    ஆகிவிட்டது .கடைசியாக எப்போது அனுப்பினேன் என்பது நினவில் இல்லை .நீங்கள் செய்து வேறு அனுப்பி இருப்பது மகிழ்ச்சி .வாழ்த்துக்கள்

    கரிகாலன்
    www.karikaalan.blogspot.com

    ReplyDelete
  5. அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். பாடசாலை வேலை சற்று அதிகரித்திருப்பதால் தனித்தனியே பதில் சொல்ல ஓரிரண்டு நாட்கள் கழித்து வருவேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துப்பாடல் இன்னும் அதே தான் இலங்கை வானொலியில். இப்போது இணையத்தில் வர்த்தசேவை/தென்றல் ஒலிக்கின்றது!

    ReplyDelete
  7. வித்தியாசமான வாழ்த்து அட்டை!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா