Thursday 29 November 2012

தொலை... பேசுகிறேன்

ஆமாம், தொலைந்து போன பழங்கதை இது. ;)

எங்கள் வீட்டுக்கு முதல்முதலில் தொலைபேசி இணைப்பு வந்தது 1996 மே மாதம். இணைப்புக்காக பணம் கட்டி விட்டுக் காத்திருந்தோம். (ஒரு கொரியன் நிறுவனம் இணைப்புக் கொடுக்கும் முயற்சியில் டெலிகொம் சேவையில் இணைந்திருந்தது அப்போது. )

மூத்தவர் பிறந்தநாளுக்கு செய்தது இந்த கேக்.
தொலைபேசி எண்ணின் இறுதி = வயது
இலக்கங்கள் - kandos slab ஒன்றை சூடான கத்தியால் நறுக்கி வைத்தேன்.

ஊ.கு
அப்போதைய படங்கள்; மங்கலாக இருக்கின்றன. ஸ்கான் செய்து, எடிட் செய்தது இது. தரம் குறைவாக இருக்கும், பொறுத்தருள்க.

15 comments:

  1. முதல்ல டாஸ் போர்ட்ல படத்தை பாக்கிறப்ப நிஜ தொலைபேசி என்று நினைத்தேன்.. உள்ள வந்து பதிவை படிச்சா நம்பவே முடியல்லை,இமா... கேக் அலங்காரம் இந்த மாதிரி செய்யுறது ரொம்ப ரொம்ப பொறுமை வேணும். பார்க்க அழகா இருக்கு..:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராதா. இது... 96ல் செய்தது. பாடசாலை முடிந்து வந்த பின் கிடைத்த நேரத்தில் சின்னவர் மனம் நோகாமலிருக்கவென்று ஒரு அவசரப் பூச்சு. சீராக வரவில்லை.

      Delete
  2. அடடே, "மை" கலர் ஃபோன்! :))) இந்த ஒரு காரணத்துக்காகவே, போன் கேக் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-னு கண்ணை மூடிட்டு(!) சொல்லிடலாமே! ;) ;)

    அழகாய் இருக்கு இமா!

    ReplyDelete
  3. பொறுத்திட்ட்டோம்ம் ஆனா எதையும் அருள மாட்டோம்:)) = பொறுத்தருள்க:)

    கேக் அழகாக இருக்கு இமா.

    ReplyDelete
  4. சூப்பர்...அழகா இருக்கு..:)

    இத்தனை சிறப்பான வேலைப்பாடுகளோடு கடைகளில்தான் பார்த்திருக்கிறேன்.
    கற்பனை, செயல்,வடிவம் அத்தனையின் மொத்த (இது வேற மொத்தம்...;) )உருவம்தான் இமா...:)
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. உங்களோட கேக் சூப்பர் ரா இருக்கு இமா...

    ReplyDelete
  6. அருமையாகத்தான் இருக்கு தொலைபேசி வடிவக்கேக் இமா!

    ReplyDelete
  7. கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தனபாலன். இளமதி, நேசன் & ப்ரியா.

    ReplyDelete
  8. மிக்க நன்றி ஐயா. விரைவில் சென்று பார்வையிடுகிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா