Friday 2 November 2012

தொலை பேசுகிறேன்

சின்ன வயதில்... (அறுபதுகளில்) (கர்ர்ர் என் 60  இல்லைய்ய்ய்... ) ஒரு அங்கிள் வீட்டில் போன் இருக்கும். அவர்கள் அதற்கு பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அப்போ ஒன்றும் புரியாது. 'பூட்டாமல் விட்டால் திருட்டுப் போகுமோ!' என்று நினைத்திருக்கிறேன்.

பிறகு 1996ல் சற்று அதிகமாக தொலைபேசி இணைப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். பல்வேறு காரணங்களால், தொலைபேசி வைத்திருந்தோர்க்கு இந்தப் பூட்டுப் போடும் தேவை கொஞ்சம் அத்தியாவசியம் என்றாகிற்று. அப்போது எண் சுழற்றும் தொலைபேசி காணாமற் போய் தட்டும் தட்டைத் தொலைபேசி வந்திருந்தது. இவற்றைப் பூட்டி வைப்பது சிரமம்.

திரு செபாவை யாரோ ஒரு நண்பர் இது தொடர்பாக அணுகினார். அப்போது சிந்தனையில் உதித்தது இந்தப் பூட்டி வைக்கக் கூடிய பெட்டி. வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்வதில் சிரமமிராது.

ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்க்கு மட்டும் செய்து கொடுக்க ஆரம்பித்தது தவிர்க்க இயலாது போக பின்னர் ஒரு வியாபாரமாகவே ஆகிற்று.

ஆசிரியத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னால் இதுவே அப்பாவின் முழு நேரத் தொழிலாகிற்று. யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து கூட வந்து மொத்தமாக வாங்கிப் போனார்கள். ஒரு தடவை  முப்பது பெட்டிகள் ஒன்றாகச் செய்து கொடுத்தார்.

பெட்டிக்கான பகுதிகள் எல்லாம் பலகையில் வரைந்து வெட்டி வைத்திருப்பார் 'சட்டைக் கட்டிங்' போல. ஃபோமிகா வாங்கி பலகையில் ஒட்டி, காய விட்டு, வெட்டி.... ஓரங்களுக்கு தங்க நிற ப்ளாஸ்டிக் ரிபன் ஒட்டி... பூட்டு பொருத்தி.... இப்படி நிறைய வேலை இருக்கும். ரிபன்கள் இன்னமும் என்னிடம் மீதி இருக்கின்றன.

இந்த வேலையில் தூசுதான் கொஞ்சம் அதிகம். ;(

ம்... பிறகு... 2010ல் எங்கள் மாமியைப் பார்க்கப் போயிருந்தேன்.

அங்கு வயதாகிப் போனாலும் பயன்கொடுத்துக் கொண்டிருந்தார் இந்தப் பெட்டியார். ஒரு ஞாபகத்திற்கு இருக்கட்டும் என்று அவர்கள் அனுமதியோடு படம் எடுத்துக் கொண்டேன். இப்போது படம் கண்ணில் பட்டதும்... பகிர்ந்து கொள்ள நினைத்தேன். (in other words... மாட்டினீங்க.)

வெளியே...

உள்ளே...

38 comments:

  1. என்ன ஒரு பாதுகாப்புப் பெட்டகம்...!

    ReplyDelete
    Replies
    1. என்னால சிரிச்சு முடியேல்ல தனபாலன். ;)))))))

      Delete
  2. இப்போதும் சில இல்லங்களில் பார்க்கக் கிடைக்கும் இந்த பாதுகாப்புப் பெட்டகம்

    ReplyDelete
    Replies
    1. ஓ!! நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா! ;)))) இப்பிடிச் சிரிக்க வைக்கிறீங்கள். ;))

      இதைக் கட்டாயம் அப்பாவுக்குக் காட்ட வேணும். ;)))))))

      இருக்கக் கூடும் ஜீவன். நிறைய அலுவலகங்களுக்கும் செய்து கொடுத்திருக்கிறார். கருத்துக்கும்... சிரிக்க வைத்தமைக்கும் நன்றி. ;))

      Delete
  3. //அப்போ ஒன்றும் புரியாது. 'பூட்டாமல் விட்டால் திருட்டுப் போகுமோ!' என்று நினைத்திருக்கிறேன்// இதுதான் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் குழந்தை மனது.. அப்பா ரொம்ப கலை நயம் உள்ளவர்னு பெட்டிய பார்த்தாலே தெரிகிறது இமா. அதையும் ஓய்வு காலத்தில் தொழிலாக பார்த்திருக்காரே.. ஓய்வு காலத்தை பயனுள்ளதாக கழிக்க ஒரு சிலராலேதான் முடியும். அவருக்கு பிறந்த நீங்களும் சளைத்தவர் இல்லை. கிறிஸ் சாரும் , உங்கள் பெரியவர்,சின்னவர் , இருவரும் ஆக மொத்தம் குடும்பமே நல்ல கலைநயம் மிக்க குடும்பம்தான்.. எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க இமா..

    ReplyDelete
    Replies
    1. :) தாங்க்ஸ் ராதா.
      //திருஷ்டி சுத்தி போடுங்க// ம்... அதுல்லாம் தெரியாது. இமாவின் உலகத்தை மட்..டும்தான் சுற்றுவேனாம்.

      Delete
  4. தொலை பேசுகிறேன்னு தொலந்து போன விஷயங்களை மீட்டி இருக்கிங்றீங்க:)

    இமா.... அப்ப தொபேசிலையே ஒரு துறப்பினால் பூட்டுற மாதிரி ஒரு செயல்பாட்டுடன் தொலைபேசிகள் இருந்ததாக ஒரு நினைவு எனக்கிருக்கு. சரியா தெரியலை.

    டார்க் மார்க்கினுள் எழுதியிருக்கிறதையும் நம்புறோம்;))

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இளமதி, அப்படி ஒரு பூட்டு தனியாக விற்பனைக்கு வந்தது. அது எல்லா வகை தொலைபேசிகளுக்கும் பொருந்தவில்லை. குட்டீஸ் முயன்றால் பூட்டி இருக்கும் போதே அழைப்பை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. ;)

      நம்புக! ;)))

      Delete
  5. இது போன்ற வசதி இப்போதுதான் பார்க்கிறேன். அழகாக இருக்கிறது. இங்கு சென்னையிலும் மற்ற இடங்களிலும் டயல் செய்யும் இடத்தை மட்டும் பிளாஸ்டிக்கினால் ஆன ஒரு சிறு சதுரச் சட்டத்தில் சிறு கதவு போன்ற அமைப்பில் பூட்டி விடும் அமைப்பு பார்த்திருக்கிறேன். அவ்வப்போது உடைந்து விடும். வேறு புதிதாக வாங்கி ஒட்ட வேண்டும்! பொதுவாக இவ்வகை லேன்ட் லைன் தொலைபேசிகளில் நம்பர் லாக் வைத்து ரகசிய எண் மூலம் லாக் செய்து விடுவதும் உண்டு. வெளியூர் தொலைபேசி மட்டும், உள்ளூரும் சேர்ந்து என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண் கொண்டு பூட்டுவார்கள்! அதே போல இது மாதிரி டெலிஃபோன்களில் என்ன பூட்டினாலும் டயல் கட் செய்யும் பட்டனைத் தட்டித் தட்டியே திருட்டு டயல் செய்யும் திறமைசாலிகள் உண்டு!!

    ReplyDelete
    Replies
    1. //டயல் கட் செய்யும் பட்டனைத் தட்டித் தட்டியே// ;) உண்மைதான் ஸ்ரீராம்.

      வெகுகாலம் முன்பு பில் தப்புத் தப்பாக வந்திருக்க, தொலைபேசி ஆட்களை விசாரித்ததில் அப்போது என் சின்னவர்கள் வீட்டுப் பாடத்திற்காகப் பார்வையிட்ட இணையத்தளம் எதுவோ ஒன்றுக்கான கட்டணம் அது என்றார்கள். அது முதல் இங்கும் //நம்பர் லாக்// போட்டு இருக்கிறோம்.

      Delete
  6. அருமையான கைத்திறனில் உண்டான தொலைபேசிப் பெட்டியை காணச் செய்தமைக்கு மகிழ்ச்சி.இமா.

    ReplyDelete
  7. அந்த காலத்தில் எந்த ஒரு பொருளையும் பத்திரமாக வைப்பார். அதே போல் டெலிபோனையும் அதற்கென ஒரு இடம் பொருத்தி தனியாக் இருக்கும்

    இப்ப டெலிபோன் பிள்ளைகள் கையில் எட்ட்டும் தூரம் வைத்து விளையாட கொடுக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இங்கு குட்டீஸுக்கு சொந்தமாகவே கைபேசி இருக்கிறதே. என்ன செய்வது! தேவையாகத்தான் இருக்கிறது. சில குழந்தைகள் தவிர அனேகமானவர்கள் தவறாகப் பயன்படுத்துவதில்லை. பாடசாலைக்கு வந்ததும் தாங்களாகவே அணைத்து வைத்துவிடுகிறார்கள்.

      Delete
  8. ரொம்ப அழகா இருக்கு இமா .... பெட்டி ..
    இப்ப புரியுது மகன்களுக்கு wood work இல் ஆர்வம் எப்படி வந்ததென்று .

    ReplyDelete
    Replies
    1. ;) அது எங்கள் பாட்டா காலத்திருந்து தொடருகிறது. அவர் பாஸ்குக்கு கிறீஸ்துநாதர் முகம் கூட தத்ரூபமாகக் கடைந்து வைத்திருந்தார். எல்லாம் ஊரோடு போய்விட்டது ஏஞ்சல். ;((( இப்படியான முகங்கள் ஒரு 15 எண்ணிக்கை பெரியப்பா வீட்டில் இருந்தது. படங்களாவது எடுத்து வைக்கலாமென்று அவர் பேரனிடம் (இங்கு பின்தொடர்கிறார்) விசாரித்தேன். சுனாமியோடு எல்லாம் போய்விட்டதாம். ;(

      Delete
  9. இமா டாஷ்போர்டில் பார்க்கும் போது எனக்கு ப்யானோ மாதிரி தெரிந்தது...இங்க வந்து பார்த்தால் போங்க,அழகா இருக்கு இந்த பொட்டி....

    ReplyDelete
    Replies
    1. ம்.. ப்யானோ கூட செய்திருக்காங்க. இப்ப யார் வீட்ல இருக்கோ! :)
      நன்றி மேனகா.

      Delete
  10. சுவாரசியம். எப்படியெல்லாம் ஐடியா உதிக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அப்பாதுரை. எல்லோர் மனதும் தேவைகள் வரும்போது அதற்கேற்ப சிந்திக்கும் இல்லையா! :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. டெலிஃபோனில் பூட்டு! :) பழைய சினிமாக்களில் பார்த்திருக்கிறேன் இமா!
    இந்தப் பெட்டிகள் அழகா இருக்கு.

    அப்பாவின் கை வண்ணம் அருமை, அதை ஃபோட்டோ எடுத்து வந்து பகிர்ந்த மகளுக்கும் பாராட்டுக்கள்! ;) :)

    ReplyDelete
    Replies
    1. //பழைய சினிமாக்களில்// ஆஹா!! சின்னக் காலத்தில் என்னவோ ஒரு சினிமாப் பாட்டு அடிக்கடி பாடுவோம். அப்போதுதான் முதல்முதல் தொலைபேசி பற்றி அறிந்தேன். பாட்டு நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது மகி. ;)

      Delete
  12. பூட்டி வைக்க பெட்டியா? இப்பதான் கேள்விப்படுகிறேன். முதன் முதலாக பெட்டியும் இப்பதான் பார்க்கிறேன். இதெல்லாம் எங்கட பூஸார் காலத்தில் நடந்திருக்க வாய்ப்புண்டு. நான் அப்ப பிறக்கவேயில்லையாம்.
    Really awesome work.

    ReplyDelete
    Replies
    1. //பூஸார் காலத்தில்// ;)))))

      Delete
  13. அவ்வ்வ்வ் 60 என்பது சின்ன வயசுதான்..:) இந்தக் காலத்தில:))... மறைச்சுப் போட்டதெல்லாம் மீ படிக்கல்ல:)

    ReplyDelete
  14. உண்மையில் நல்ல ஒரு அறிமுகப் பெட்டி இமா. நான் பார்த்ததே இல்லை. வியப்பாக இருக்கு, கேள்விப்பட்டதுகூட இல்லை.

    அழகாகச் செய்திருக்கிறார் உங்கள் அப்பா.. வாழ்த்துக்கள்... அப்பவே, எனக்குப் பிடிச்ச பிங் கலரில:) சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. //கேள்விப்பட்டதுகூட இல்லை.// இது என்ன? வான்ஸுக்குப் பதிலா! ;D

      Delete
  15. தொலைபேசி வந்த புதிதில் இப்படி பூட்டி வைத்திருப்பார்கள்! எங்கள் பக்கத்தில் டயல் செய்யும் பகுதி மட்டும் பூட்டப்பட்டிருக்கும்! உங்கள் தந்தையின் கைவண்ணம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சுரேஷ்.

      Delete
  16. 1960 முதல் 1980 வரை இதெல்லாம் இங்கு தமிழ்நாட்டில் வெகு சகஜம். வீடுகளிலும் அலுவலகங்களிலும் நானே இதுபோன்ற பாதுகாப்புப்பெட்டகங்களைப் பயன் படுத்தியுள்ளேன்.

    அந்தக்காலத்தில் ஃபோனை பத்திரப்படுத்தித் தான் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு Call க்கும் கணக்கும் வைத்திருப்பார்கள். Local STD ISD என பலவிதமானவை உண்டு.

    இன்று கைபேசி எல்லோர் கைகளிலும் வந்து விட்டதால், இதைப்பற்றியெல்லாம் சரித்திரம் கேட்கவோ, தெரிந்து கொள்ளவோ யாருக்கும் ஓர் விருப்பமோ நேரமோ கூட இருக்காது தான்.

    Ms. ராதா ராணி Madam அவர்களின் பின்னூட்டம் சிறப்பாக உள்ளது. நான் சொல்லவந்தவைகளில் பலவற்றை அவர்களே சொல்லி விட்டார்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள், இமா. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. //கைபேசி எல்லோர் கைகளிலும் வந்து விட்டதால், // உண்மைதான் அண்ணா.

      Delete
  17. நேர்த்தியான படைப்பாற்றல் -பூட்டி வைக்கக் கூடிய பெட்டி. வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்வதில் சிரமமிராது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் அம்மா.

      Delete
  18. மிக அழகாக, நேர்த்தியாக செய்யப் பட்டுள்ளது. நான் இப்போது தான் முதன் முறையாகப் இப்படியொரு பெட்டியைப் பற்றி கேள்விப் படுகிறேன் :))

    ReplyDelete
    Replies
    1. :-) இது அப்பாவின் சிந்தனையில் உதித்தது. வேறு எங்கும் கிடைக்காத பொருள் என்பதால், அப்போ பயங்கர டிமாண்ட் இதற்கு. ஆரம்பத்தில் சைக்கிள் காரியரில் அடுக்கிக் கட்டி எடுத்து கடைக்குக் கொண்ண்டு போனார். பிறகு இதற்கென்று ஆட்டோ வர ஆரம்பித்தது.

      பழசையெல்லாம் திரும்ப நினைவுக்குக் கொண்டுவர வைத்த வாணிக்கு என் அன்பு நன்றிகள். :-)

      Delete
  19. எனக்கு தெரிந்த ஒரு அம்மா வீட்டில் தொலை பேசி இணைப்பு வந்த புதிதில் மௌத் பீஸை காதில் வச்சுகிட்டு சத்தமே வைரலயே என்றார்களாம் வலைச்சர அறிமுகம் பார்த்து உங்க பக்கம் வந்தேன் வாழ்த்துகள்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா