Wednesday 24 April 2013

ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள்

இந்த 'என் பொருள்தான் எனக்கு மட்டும்தான்' தொடர்பதிவில் தாக்கமோ அல்லது வேறு ஏதாவது மனதைத் தூண்டியதோ தெரியவில்லை... தேடிப் பிடித்தேன் என் சில பழம்பெரும் பொக்கிஷங்களை.
வாழ்க்கை ஒரு புத்தகம். அதில் ஒரு பக்கத்தின் சில பக்கங்கள் இவை.
"ஹாய்!"
இருபத்தேழு வருடங்கள் என்னோடு இருந்திருக்கிறது இந்தப் புத்தகம். இனியும் இருக்கும். 
Scrapbooking / Baby Book என்பது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை அப்போது. கடதாசிகளை அடுக்கித் துளை செய்து கையால் ஊசி நூல் கொண்டு கட்டி இருக்கிறேன். என் கண்ணில் பட்ட குழந்தைப் படங்கள், குழந்தை வளர்ப்பு தொடர்பான விபரங்கள், என் சின்னவர்கள் பற்றிய விபரங்கள் இப்படி சில விடயங்களின் தொகுப்பு இதில் பதிவாகியுள்ளன.

இணையத்தளம் இல்லாத காலம் அது - மங்கை, ஃபெமினா இதழ்களில் கிடைத்த சில கட்டுரைகள்
பெண் குழந்தை கிடைக்கவேயில்லை. ;))
செப்டெம்பர் 86 - Woman of China இதழின் அட்டையிலிருந்த இந்தக் குழந்தை அச்சாக அப்போது ஐந்து மாதங்களாக இருந்த அலனைப் போலவே இருந்தது. அலன் சைனீஸ்குட்டி போலவே இருப்பார். க்றிஸ் அப்போது 7 Islads Hotel ல் முக்கியமான பதவியிலிருந்தார். பிரச்சினைக் காலம். ஒரு பகுதியில் Army இருந்ததால் பாதுகாப்புக் கருதி வெளிநாட்டவரை உள்ளே அனுமதிக்கத் தடை விதித்திருந்தார்கள். ஒரு முறை இராணுவ வீரர் ஒருவர் க்றிஸ்ஸிடம் போய் "சொன்னால் கேட்க மாட்டீர்களா? எதற்காக வெளிநாட்டாரை உள்ளே எடுக்கிறீர்கள்?" என்று மிரட்டி இருக்கிறார். அப்போ அங்கு யாரும் இருக்கவில்லை என்று இவர் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. "அப்போ வாசலில் சைனீஸ் குழந்தை எப்படி நிற்கும்?" என்றிருக்கிறார்கள்.  ;)

நான் தூக்கி வைத்திருக்கும் போது யாராவது சைனீஸ் என்றுவிட்டால் போதும், என் முடியைப் பிடித்துப் பிய்த்துவிடுவார். ;D
புத்தக அட்டையில் மேரிமாதா படம்

தடுப்பு மருந்து விபரம் கீழே...
இது... ;)
இது போல அலனது படம் கூட எங்கோ இருக்கிறது.
அவருக்குத் தைத்த சட்டைக்கு வெட்டிய கழுத்துப்பட்டி. இருந்த இடம் பழுப்பாகி இருக்கிறது. ;)
அலனுக்காகக் கிடைத்த அன்பளிப்புப் பொதியிலிருந்த துண்டொன்று
"ஹாவ்வ்! நித்திரை வருது"
(Woman's Weekly இலிருந்து)

படத்திற்கு எங்கே போவது. அப்போ எல்லாமே கிடைப்பது அருமையாகத்தான் இருந்திருக்கிறது. குமுதம்... வெளி அட்டைகள் & மாருதியின் ஓவியமொன்று
உள் அட்டை விளம்பரங்களிலிருந்து சில படங்கள்
ஒரு குட்டி கிருஷ்ணரும் இருக்கிறார்.
அலனது பால்புட்டி வந்த அட்டைப் பெட்டியிலிருந்து
மேலே இருக்கும் குட்டி Baby Book சின்னவரது குறிப்புகள் கொண்டது.

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. சின்னவர்களைப் பற்றி சின்னச் சின்னதாக எத்தனை விபரங்கள் குறித்து வைத்திருக்கிறேன்! எப்போ முதல் உதை, எப்போ முதல் எட்டு என்று பலதும் குறிப்பாகி இருக்கிறது. (எல்லாப் பக்கங்களையும் / விபரங்களையும் பார்வைக்கு விடவில்லை.) ;)
மூத்த குழந்தைக்காக வாங்கிவைத்த பொம்மையின் அட்டைப்பெட்டி.

மேலும் சில முக்கியமற்ற படங்கள் ;)
இன்னும் இரண்டு புத்தகங்கள் இருந்ததாக நினைவு. ஊரை விட்டு வரப் பிரியமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டது போல இருக்கிறது. ;)

18 comments:

  1. வித்தியாசமான பொக்கிசங்கள்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நேரத்துக்கு, அன்பான கருத்திற்கு என் நன்றிகள் தனபாலன்.

      Delete
  2. எவ்வளவு பத்திரமாக வைச்சிருக்கீங்க இமா !!!
    அத்தனையையும் ஸ்க்ராப் புக்காக செய்யுங்க இனி வரபோகும்(மரு)மகளுக்கு பரிசாக தரலாம் .
    நான் ஷாரனின் வாக்சிநேஷன் போட்ட ஸ்ட்ரிப் ,முதலில் காதில் அணிந்த கம்மல்/பால் பாட்டில் எல்லாம் வச்சிருக்கேன் அவள் 18 ஆகும்போது கொடுக்க:))

    ReplyDelete
    Replies
    1. //ஸ்க்ராப் புக்காக// மாற்ற விரும்பவில்லை ஏஞ்சல். புத்தகத்தின் வயது தொலைந்து விடும். அதன் சிறப்பே அதுதானே. பழுப்பாகிப் போன வெற்று வெள்ளைத் தாள்கள் கூட என்னோடு பல பழங்கதைகள் பேசுகின்றன ஏஞ்சல். நிறையப் பொருட்களை ஊரோடு விட்டு வந்தாயிற்று. இவை மீதம் மட்டும். இருக்கும்வரை இப்படியே இருக்கட்டும்.

      //வாக்சிநேஷன்// கார்ட் இருக்கு இங்கும். ;) மீசில்ஸ் வாக்ஸின் கொடுக்க குறித்த நாளுக்கு சரியாக ஒரு நாள் முன்னால மீசில்ஸ் போட்டுது பெரியவருக்கு. ;))
      மந்த்லி வெய்ட் சார்ட் கூட இருக்கு.

      Delete
  3. அட, அற்புதமான பொக்கிஷம். குழந்தைகளின் வளர்ச்சியைப் பதிவு செய்து அதை அவர்களுக்கே காட்டும்போது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும். நமக்கும் அவற்றையெல்லாம் திரும்பப் பார்ப்பதில் கொள்ளை ஆனந்தம். அருமை இமா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கீதா. முதல் முறை பார்த்தபோது பெரியவர் வெட்கப்பட்டார். ;) சின்னவர் ஆர்வமாக ஒவ்வொரு குறிப்பாகப் படித்தார். ;)

      Delete
  4. நினைக்கவே வியப்புத்தான் இமா. இவ்வளவு சேகரித்து வைத்திருக்கின்றீர்களே... அதுவும் உங்கள் கைகளிலே மீளக்கிடைத்திருக்கே... அதை என்ன சொல்ல...
    பாராட்டுக்கள் இமா!

    உங்களவுக்கு இல்லையென்றாலும் நானும் அவர்களுக்கு பிறந்தவுடன் போட்ட சட்டை, முக்கியமான விளையாட்டுப் பொருட்கள் இப்படி வைத்திருந்தேன் அங்கு திருமலையில்...
    கனக்க வேணாம் நம்ம திருமண அல்பம் எல்லாம் போச்சுதே...

    அடிவிழ அடிவிழ துண்டைக்காணோம் துணியைக்காணோம்ன்னு அப்பிடியே போட்டிட்டு உயிரை மட்டும் கொண்டுவந்தோம்....

    எல்லாவற்றிற்கும் கொடுப்பனவு என்று ஒன்றும் வேண்டும்..:(

    ReplyDelete
    Replies
    1. //திருமலையில்...// haa!!! Where about in Tco!! I 2 am from Tco - Orr's Hill.

      Delete
    2. ஆகா... u 2 Tco...:)
      அதுவும் ஓசில் ஹில்... சூப்பர் இடமாச்சே...

      நான் பூர்வீகம் வடக்கைதான். 5 வருஷம் வேலைக்காண்டி இங்கை. அதுவும் ஷண்முகானந்தா கொலேஜ் கிட்ட...:)
      நெருங்கீட்டோம் முருகா...:)))

      Delete
  5. அம்மாடீ...உங்க அளவுக்குப் பொறுமை யாருக்கும் வராது இமா! :) இவ்ளோ பொறுமையா வெட்டி, ஒட்டி, அழகுபடுத்தி..பத்திரமா வைச்சிருக்கீங்களே..அதுக்காகவே உங்களுக்கு "சூப்பர் மாம்" பட்டம் குடுக்கலாம்! :)))

    //மேலும் சில முக்கியமற்ற படங்கள் ;)// என்று லிங்கைக் குடுத்து ஏமாத்திப் போட்டனீங்கள்...இங்கருக்கும் படங்கள் மட்டுமே அங்கும் இருக்கு. கர்ர்ர்ர்ர்ர்ர்!

    //நான் ஷாரனின் வாக்சிநேஷன் போட்ட ஸ்ட்ரிப் ,முதலில் காதில் அணிந்த கம்மல்/பால் பாட்டில் எல்லாம் வச்சிருக்கேன் அவள் 18 ஆகும்போது கொடுக்க:))// ஏஞ்சல் அக்கா, நீங்க பதுக்கி;) வைச்சிருப்பது ரகசியம்தானே? ஷரனுக்கு இந்த விஷயம்லாம் தெரியாது தானே? சர்ப்ரைஸா குடுக்கப் போறீங்கதானே? :) [எல்லாமே க்ளோஸ்ட் கொஸ்டின்ஸ்..ஆமாம் என்ற பதில் மட்டுமே எதிர்பார்க்கப் படுகிறது!! ;)]

    ReplyDelete
    Replies
    1. ;)) Sorry. Thought there were more - 26 there! ;)))))

      Delete
    2. //இவ்ளோ பொறுமையா வெட்டி,// ஓய்வு தேவை என்று தோன்றும்போது செய்தவை எல்லாம்.

      //"சூப்பர் மாம்"// ;) இதுவரை அப்படித்தான் இருக்கிறேன். பட்டம் கொடுத்தற்கு நன்றி. அப்படியே உங்க கையால சூப்பர் மாமியார், சூப்பர் பாட்டி பட்டமும் வாங்கணும் என்று வாழ்த்துங்க. ;)

      Delete
    3. //உங்க கையால சூப்பர் மாமியார், சூப்பர் பாட்டி பட்டமும் வாங்கணும் என்று வாழ்த்துங்க. ;)// அடடே..பசங்களுக்குப் பொண்ணு பார்க்க ரெடியாகிட்ட மாதிரி தெரியுதே?! ;) அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இமா மாமி அண்ட் இமா பாட்டி!
      :) :)
      :)
      கண்டிப்பா நீங்க சூப்பர் மாமியார், சூப்பர் பாட்டிதான்! :)

      Delete
    4. ஆமாம்:)))))))))

      Delete
    5. கண்டிப்பா நீங்க சூப்பர் மாமியார், சூப்பர் பாட்டிதான்! :)// noooo இதுக்கில்லை awwwaaaaww

      ஆமாம் :))நான் ஆமாம் சொன்னது //சர்ப்ரைஸா குடுக்கப் போறீங்கதானே? :) [எல்லாமே க்ளோஸ்ட் கொஸ்டின்ஸ்..ஆமாம் என்ற பதில் மட்டுமே எதிர்பார்க்கப் படுகிறது!! ;)//

      Delete
  6. அடடா திரும்பிப் பார்க்க முன் பல பதிவுகள்.. இமா வளர்த்தால் பின்னல்:) அடிச்சால் போல்ட் :) ஆக்கும்:)...

    அழகிய பொக்கிஷம்... வெளிநாட்டில் இருப்பதனால் பத்திரமாகப் பேணலாம்ம்.. வச்சிருந்து ஒரு காலத்தில் பேரப் பிள்ளைகளுக்கு காட்டுங்கோ:)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்... போல்ட்டை அடிக்கிறேல்ல. ஆணிதான் அடிக்கிறது. போல்ட்... நட் வைச்சு ஸ்பனரால இறுக்கவேணும் அதீஸ். ;)))
      அது போல... //இமா வளர்த்தால்// நகம், முயல், வண்ணத்துப் பூச்சி மட்டுமே. //பின்னல்// ஹ்ம்! அது ஒரு காலம்.

      Delete
  7. பாதுகாக்கவேண்டியவைகள். அழகாக ,பொறுமையாக செய்திருக்கிறீங்க.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா