Monday 1 March 2010

பின்னூட்டம் கொடுக்கும் அனைவருக்காகவும்

தப்புத்தான். எப்படி யோசிக்காமல் போனேன்! ;) எல்லோரையும் மனதில் வைத்துத்தான் டேலியா அனுப்பினேன். இருந்தாலும்... 'பின்னூட்டம் கொடுக்கும் அனைவருக்காகவும்' என்று எழுதி இருக்கலாமோ! :)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி அறுசுவை அனானி. :)

அறுசுவை அனானிக்காகவும் பின்னூட்டமிடும் மற்றும் அனைவருக்காகவும் விசேடமாக இமா கையால் தயாரித்த பரிசு. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். ;)

என் தோழி ஒருவர் (குட்டித் தோழியின் தாயார் இவர்) ஒருமுறை இந்த உபகரணத்தை (ஆரஞ்சு 'பீலர்') எனக்காக அனுப்பி இருந்தார்.

ஒரு புறம் பார்த்தால்...

இப்படிக் கொழுக்கி கழன்று போன 'ஸிப்' (zip ) மாதிரி இருக்கிறது.
மறுபுறம்...
இப்படி மெலிதாக இருக்கிறது.
 இப்போ இருந்த தோடம்பழத்தை எடுத்து...

நட்ட நடுவில் 'ஸிப்' கொழுக்கியை அழுத்தி அப்படியே நேர் கோடாக ஒரு இழுப்பு. காம்புக்கு ஒரு இன்ச் இருக்கும் போது இழுப்பை நிறுத்தி விட்டேன். அதே போல் அடுத்தடுத்து ஐந்தாறு கோடுகள் இழுத்தேன். (போட்டோ கொஞ்சம் ஆஃப் ஃபோகஸ் ஆகிப் போய் விட்டது. ;( வெட்டுறதும் நானே, 'கிளிக்'கிறதும் நானே. என்ன செய்வது!! என் 'ட்ரைபாட்', "நான் என்ன இலங்கைக் கொடியில நிக்கிற சிங்கமா!! நாலு கால் இருந்தால்தான் ஒழுங்காக நிற்பேன்," என்று ஒரு மாதிரி நாட்டியம் ஆடுகிறது. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்க.)

ம்... எங்கே விட்டேன்!? பிறகு 'பீலர்' மறு பக்கத்தைக் கொண்டு ஒவ்வொரு இதழையும் பிரித்து விட்டேன். இரண்டு இலை வைக்காவிட்டால் என்ன பூ!! லீக்ஸ் இலையை  வெட்டி வைத்தாயிற்று.
 
இந்தாங்கோ முதலாவது பூ. ;)
பிறகு பழத்தைக் குறுக்காக நறுக்கி...
;D ... மறதியாக அந்தப் பாதியை என் வாயில் போட்டுவிட்டேன். ;D
மீதி நிச்சயம் உங்களுக்குத்தான். ;)

குரங்கு கைப் பூமாலை மாதிரி ஆகிப் போய் விட்டது தோடம்பழத்தின் கதி. பாவம் பூ... இல்லை பழம். போரடித்துப் போய் கத்தரிக்கோலால் நறுக்கு நறுக்கு என்று நான் நறுக்கியதில்

இப்படி ஆகி விட்டது.
அட! இன்னொரு பூ!! ;)
மூன்றும்!! உங்களுக்கேதான், எடுத்துக் கொள்ளுங்க. சட்டென்று வராவிட்டால் மீதியையும் நானே சாப்பிட்டுவிடுவேன். ;)
அன்புடன் இமா

12 comments:

  1. அதுக்குள்ளே வந்தாச்சா? ;) நல்ல மோப்பசக்திதான், பப்பி கூட இன்னும் வரல. ;)

    ReplyDelete
  2. வாவ்!!! அருமையாக இருக்கிறது இமா அக்கா. பழப் பூ காலியாகிவிட்டது. இன்னொன்று அவ்வாறே செய்து அனுப்புங்கள். காத்திருந்து எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. பீலர் + பூ ரெண்டுமே ரொம்ப அழகா இருக்கு மிக்க நன்றி நம்ம வீட்டு 1and1/2 வயது வாண்டும் அத பார்த்துட்டு அழகா பூ அப்படின்னு சொல்லுது மேலே வைங்க :)
    அறுசுவை அனானி :)

    ReplyDelete
  4. /நம்ம வீட்டு 1and1/2 வயது வாண்டும்....அறுசுவை அனானி :)/
    அனானி ஆருன்னு கண்டுபுடிக்க குடுக்க க்ளூ ஆரம்பிச்சிருக்காங்கள் ஆன்ரி..சீக்கிரம் ஆருன்னு கண்டுபுடிச்சி..ஜீனோக்கும் மறக்காமல் சொல்லுங்கோ.:D ;)

    பயப் பூ:) அயகா:) இருக்கு!

    ReplyDelete
  5. அதற்கென்ன, சுபாவுக்கும் ஒன்று அனுப்பி விட்டால் போயிற்று. ;)

    ~~~~~~~~~~

    //மேலே வைங்க// அதான் எல்லாமே சாப்பிட்டு முடிஞ்சே அறுசுவை அனானி. :) (பத்திரம், பப்பி பார்த்துக் கொண்டே இருக்கு.)

    ~~~~~~~~~~

    தாங்க்ஸ் ஜீனோ. பூ, க்ளூ எல்லாத்துக்கும்தான். ;)

    ReplyDelete
  6. இதுவும் அழகாயிருக்கு இமா.. பேசாம நானும் அனானியாவே வந்துட்டுப் போலாம்.. :)) பழப்பூ கிடைக்கும்..

    அட அட.. என்னா க்ளூ.. என்னா கண்டுபிடிப்பு.. யாராச்சும் ஜீனோ விட்டுச் செல்லும் க்ளூக்களையெல்லாம் சேகரித்து அனுப்பினால் நன்றியுள்ளவளாவேன்..

    ReplyDelete
  7. //நன்றியுள்ளவளாவேன்..// !!!???

    ஓ! நீங்கள் ஜீனோவுக்கு உறவோ!! ஜீனோ குடும்பத்தார்தான் நன்றி உள்ள ஆட்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ;)

    ReplyDelete
  8. எனக்கு கிடைக்கவேயில்லை எல்லோரும் என்னை விட்டு சாப்பிட்டு விட்டாங்க

    ReplyDelete
  9. supera iruku imma.

    ReplyDelete
  10. Tkz Ammu & Deivasuganthi. ;) வருகைக்கு நன்றி.

    ~~~~~~~~~~

    அழாதீங்க சாரு. உங்களுக்கு வேற அனுப்புறேன். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா