Saturday, 6 October 2012

விடுமுறை எப்படி!

சின்னதாய் ஒரு விடுமுறை
பெரிதாய் ஒரு அனுபவம்
அனுபவித்ததில்லை
இப்படி அருமையாய்
ஒரு பொழுதும்.

விடும் முறை வந்த போது
புரிந்தது சிரமம் ;(

மீண்டும் ஒரு விடுமுறை
வராது போய் விடுமா!

வரும் நிச்சயம்.

நம்பிக்கையோடு...
விடை பெற்றோம்.
வீடு வந்த என்னிடம்
கேட்டனர் என் மக்கள்
"விடுமுறை எப்படி?"

சுருக்கமாகச் சொன்னேன்...

"அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை"

"விடுமுறை
இன்னொரு மகனோடு."

விரிவாகச் சொல்ல
வியந்தனர். 

ஆமாம்,
அன்பைப் போல் வலியது 
எதுவும் இல்லை.
 
 ~~~~~~~~
இமாவின் உலகில் இடுகைகளின் கீழ் கருத்துச் சொல்லி விட்டுப் பொறுமையாகக் காத்திருந்த நட்பு வட்டத்துக்கு என் அன்பு நன்றி. வந்து விட்டேன், விரைவில் தினம் சில பக்கங்கள் என அனைவர் வலைப்பூக்களுக்கும் வருகை தருவேன்.
- இமா க்றிஸ்

52 comments:

  1. வந்துட்டீங்களே... குட் குட். நல்லா எஞ்சாய் பண்ணீங்கன்னு தெரியுது... எங்களோடும் பகிர்ந்துக்கங்க :) - வனிதா

    ReplyDelete
    Replies
    1. ம். வந்தாச்சு. 'அங்கேயும்' ஒரு பதிவு கொடுத்'தேன்' வனி. பார்த்து இருப்பீங்க. :)

      Delete
  2. ஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  3. மீ தான் பிர்ஸ்தூஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. நல்லால்ல இது. பாவம் மாமா. ;)))

      Delete
  4. Your comment will be visible after approval.

    //////
    \\

    மீ இதை வன்மையா கண்டிக்கிறான் ரீச்சர் ....இருங்கோ குருவையும் அஞ்சு அக்கா ளையும் அழைச்சி வந்து நியாயம் கேப்பிணன் ..

    ReplyDelete
    Replies
    1. ம்... எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனாலும் தினமும் வர இயலாத எனக்கு இது வசதியாக இருக்கிறதே கலை.

      Delete
  5. சுருக்கமாகச் சொன்னேன்...
    "அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை"

    "விடுமுறை
    இன்னொரு மகனோடு."
    //////


    எனக்கு ஒன்டுமே விளங்கலையே அத்தை ....ஹஹ்ஹா

    ReplyDelete
    Replies
    1. ;)) குழப்படி. க்வாக் இனிமை. ;D

      Delete
  6. ரொம்ப அழகா இருக்கீங்க ரீச்சர்

    ReplyDelete
  7. பூ வைச்சி சூப்பர் ஆஅ இருக்கீங்க ...

    ReplyDelete
    Replies
    1. வாங்கிக் கொடுத்தவங்களுக்கு நன்றி. ;)

      Delete
  8. ஹைய்! வந்தாச்சா? சந்தோஷம். சுகமா இருக்கிறீங்களோ? விடுமுறை நல்லா கழிஞ்சுது என்பது

    // அனுபவித்ததில்லை
    இப்படி அருமையாய்
    ஒரு பொழுதும்.

    விடும் முறை வந்த போது
    புரிந்தது சிரமம் ;( //
    இதைப் படிக்கும்போதே தெரிகிறதே:)))

    உங்கள் விடுமுறை சந்தோஷங்களை, அனுபவங்களை சொல்லுங்கோ இமா.
    கேட்க ஆவலாயுள்ளோம்.

    மல்லிகையும் ரோஜாவும் மயக்குகின்றது;)
    அதைச்சூடி இருக்கும் அழகு மேலும் அழகுக்கு அழகு சேர்க்குதோ:))
    எல்லாமே அழகுதான்:)))

    ReplyDelete
    Replies
    1. போக முன் சொல்லிக் கொண்டு போக நேரம் இடம் கொடுக்கவில்லை இளமதி. ;(

      //விடுமுறை சந்தோஷங்களை, அனுபவங்களை சொல்லுங்கோ// என்ன சொல்லுறது! ரசித்தேன்... விடுமுறையை மட்டுமல்ல, என் கூட இருந்த என் குட்டிக் குடும்பத்தையும். எனக்குக் கிடைத்த வரம் அவர்கள்.

      Delete
    2. //இளமதி 6 October 2012 6:03 AM

      விடும் முறை வந்த போது
      புரிந்தது சிரமம் ;( //

      அது என்ன.... விடும் முறை?

      விடுமுறை என்பதல்லவோ சரியான வார்த்தை.
      ஒண்ணும் சரியில்லைன்னு தோணுது. அதிரா வரட்டும் நியாயம் கேட்போம்.

      அன்புடன்
      கோபு

      Delete
    3. விடுமுறை - holidays
      விடும் முறை - time to leave... sendoff :)
      இது இமாவின் உலகம் அண்ணா. ;)

      Delete
  9. அன்பே அனைத்தும்...

    வருக... தொடர்க... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். முன்பு போல் அடிக்கடி வர இயலாது என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும்... வருவேன்.

      Delete
  10. I write and maintain a blog which I have entitled “Accordingtothebook” and I’d like to invite you to follow it.. I’m your newest follower.

    ReplyDelete
    Replies
    1. Thanks for following imma's world & for the invite friend. I will stop by soon.

      Delete
    2. இமா !!! //விடும் முறை //

      புரிகிறது... அன்பை விட ஆயுதம் இல்லை ..

      Delete
    3. //அனுபவித்ததில்லை
      இப்படி அருமையாய்
      ஒரு பொழுதும்.//

      நீங்க சொன்னவசனமே எழுதறேன் ..
      //அன்பு வலியது //


      Delete
    4. தாங்ஸ் ஏஞ்சல்.

      Delete
  11. என்னாது காணாமல் போன இமா.. மல்லிகை மாலையோடு வந்திருக்கிறாவோ?:) ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ இமா... கொஞ்சம் விரிவாச் சொல்லலாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்... நல்ல கதை! ;) மாட்டேன், ஆடு மேய்க்கிற வதந்தி பரப்பின ஆட்கள்ட்டயே கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுங்கோ அதீஸ். ;))))

      Delete
  12. டீச்சர் வாங்கோ வாங்கோ இது என்ன விடுமுறையில் போயிட்டு 20 வயசு பொண்ணு படம் எல்லாம் போட்டு இருக்கீங்க? அவங்க :)) பெர்மிஷன் கேட்டீங்களா உங்க ப்ளாக் லா போடுறதுக்கு :))

    ReplyDelete
    Replies
    1. ஃபோட்டோ எடுக்கிறது நானா! திரும்பி நின்று போஸ் கொடுத்தால்... தெரியும் வலையுலகைப் பார்க்கிறேன் என்று.
      //பெர்மிஷன் கேட்டீங்களா// இல்லை, எதிர்ப்பு வராது என்று தீர்மானமாகத் தெரிந்த படங்களை மட்டும்தான் இங்கே பார்வைக்கு வைக்கிறேன்.

      Delete
  13. பூ & பூவை ரொம்ம்ம்ப அழகா இருக்காங்க.

    அன்பை பார்த்தீங்க கூடவே பொன்னியையும் பார்த்தீங்களா?

    உங்க விடுமுறை அனுபவங்களை படங்களுடன் போடுங்க. ஆவலுடன் காத்து இருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பின்னூட்டத்தை இமா பார்க்கவில்லை. ;)))

      Delete
  14. ஹைய்யா ..மல்லி பூ , கலர் !! கலரா கியூடெக்ஸ்!!! பார்க்கவே அழகா இருக்கு ...இன்னும் பூசார் கண்களில் படவில்லை போலிருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ;) பூஸ் ரகசியமா ஆடு மேய்க்கிறாராம். அதனால் படவில்லையாம்.

      Delete
  15. Welcome back imma. Nice snaps.

    ReplyDelete
  16. வாங்க இமா,அனுபவங்களை பகிருங்கள்..அன்பு தானே அனைத்திற்கும் பிரதானம்..

    ReplyDelete
    Replies
    1. பயண அனுபவங்கள்... எனக்கும் சேர்த்து முன்னோடியாக, அழகாக நீங்களே இடுகைகள் கொடுத்து விட்டீர்கள். உங்கள் இடுகைகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன. மிக்க நன்றி.

      Delete
  17. பயண அனுபவங்களின் விபரமான பதிவை எதிர்பார்த்தேன்.

    படங்கள் அழகாய் இருக்கின்றன. பதிவு மிகச்சுருக்கமாக

    ஆனால் சுவை பட எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //விபரமான பதிவை// கர்ர்... நாளை தொலைபேசி மூலம் காதில் பதிகிறேன். ;))

      Delete
  18. ஹாய் இமா நலமா.ரிலாக்ஸ்ட்டாகி இடைக்கிடை பதிவுகளும் எழுதுங்க. இப்ப ஜெட்லாக் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ;) நலம் அம்முலு. சொல்லி விட்டுப் போக முடியவில்லை. மன்னிக்க வேண்டும். //ஜெட்லாக்// ம். விடுமுறை இன்னும் மீதம் இருப்பதால் பரவாயில்லை.

      Delete
  19. //"அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை"//

    ஆஹா, எங்கள் இமா மீண்டும் அன்புடன் கிடைத்து விட்டார்கள்.

    உலகம் பூராவும் இமாவின் உலகத்தைத் தேடிவந்து கொண்டிருந்தேன் இதுவரை.

    கடைசிபடம் சூப்பரோ சூப்பர்.

    இங்கு நாள் முழுவதும் மின்தடையாக உள்ளது. அதனால் உடனடியாக வர முடியவில்லை, டீச்சர்.

    இமாவின் இமேஜ் கெடாமல், வதனம் தெரியாமல், புகைப்படங்கள் கவனமாக எடுக்கப்பட்டுள்ளன. [அதிரா to please note this]

    ஆனால் இமாவின் இந்த புத்திசாலித்தனத்தை, முதுகுப் புறமும் என்னால் மட்டும் காண் முடிகிறது.

    அன்புடன் கோபு அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் டீச்சரா! கர்ர்..

      இங்கும் கணனி தொல்லை கொடுக்கிறது. சட்டென்று தன்னால் அணைந்து போகிறது. மறு இடுகை கொடுக்க முயற்சிக்கிறேன்; இயலவில்லை. ;(

      சிரமத்துக்கு மத்தியிலும் வருகை தந்து கருத்துச் சொன்னதற்கு என் நன்றி அண்ணா.

      Delete
  20. எப்படி இமா இப்படி நச்சுன்னு நாலு வார்த்தை சொன்னாலும் மிக அழகாக சொல்றீங்க..:)!

    Participate in My First Event - Feast of Sacrifice Event
    http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

    ReplyDelete
    Replies
    1. :) சொல்ல விரும்பினேன். சொல்லக் கூடாது என்றும் தோன்றிற்று. அதனால் சுருக்கமாக..

      I'll try to participate Asiya. Thanks for the invite.

      Delete
  21. Replies
    1. ஹாய்ய்ய்ய்! ;) நலம்தானே!

      Delete
  22. முல்லை மலர் மேலே,
    மொய்க்கும் வண்டு போலே,
    மலரிதயத்தின் மேலே சிவப்பு ரோஜா! :)

    இமா,விடுமுறை சந்தோஷமாக் கழிந்தது பற்றி கேள்விப்பட்டேன்! ;) வருடமொருமுறை இப்படி விடுமுறை செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ப்ளாக் குல மக்களே,உங்களுக்கு இன்னுமொரு நற்செய்தி..இன்னும் :)எட்டுப் பத்து :) நாட்களில் உங்களை எல்லாம் தாக்கும் தொல்லை(!) ஊர் வந்து சேர்ந்துவிடும். அதுவரை நிம்மதியா இருந்துக்குங்கோ..

    P.S.
    இமா ரீச்சர் போட்டோவிலும், கூந்தலிலும் சூடி இருப்பது முல்லை மலர், மல்லிகை மலர் அல்ல,அல்ல,அல்ல!

    ReplyDelete
    Replies
    1. ஹா! //விடுமுறை செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். // ம். ரெகமண்டேஷனா! ;))) வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை. ;(

      ப்ளாக் 'உலக' மக்களே!! மகி நெட் பிரச்சினைல அவசரமா தட்டியது அது. க.கா.போ என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ;)

      தாங்க்யூ. இதான் முல்லை மலரா! ம். இனி சரியாகச் சொல்லிருவேன்.

      Delete
  23. ஆமாம்,
    அன்பைப் போல் வலியது
    எதுவும் இல்லை.

    வாழ்த்துகள் !

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா