Thursday 18 October 2012

வலது காலை எடுத்து வைத்து!!!

இது முன்பே பலர் பார்த்ததுதான். இங்கும் பகிரத் தோன்றிற்று.
என் இளையவர் வெகு காலம் முன்பாகச் செய்தது இது. பதின்மூன்று வயது அப்போது, பாடசாலையில் சமூகக்கல்விப் பாடச் செயற்திட்டத்திற்காகக் களிமண் ஒரு பை வாங்கினார். அதிலிருந்து மீந்ததில் அவர் செய்தது இது.

ஒரு பழைய குவளையை உள்ளே இருத்தி பூச்சாடி வடிவம் அமைத்தார். மனதில் உருவத்தை வைத்திருந்தார் போல. கை தன்பாட்டில் இயங்கியது. களியைப் பூசி வழித்து, மெழுகி... வடிவமைக்கும் போது அருகே அமர்ந்து அவர் விரல்கள்  வேலை செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரமிப்பாக இருந்தது, ஒரு கைதேர்ந்த சிற்பியினது போன்று அவை இயங்கிய லாவகம்.

ஒருநாள் தந்தையிடம் தனக்கொரு சூளை அமைத்துத் தர இயலுமாவென்று கேட்டார். எனக்கும் யோசனை பிடித்துத்தான் இருந்தது. அப்போ இருந்தது வாடகை வீடு. சொந்த வீடானாலும் சூளை அறை தயாராக அதிகம் செலவாகும். கல் வீடு வேண்டும் அதற்கு. அனுமதி பெறவேண்டும். சின்னவர் சிந்தனையும் படிப்பிலிருந்து திசை திரும்பி விடும் என்று தோன்றிற்று. அத்தோடு வனைதலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று.

எப்போதாவது மீண்டும் தொடரக் கூடும்.

22 comments:

 1. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?? அருமையான வேலை இமா :) - வனிதா

  ReplyDelete
 2. இமா!!!

  பேச்சிற்கே இடமில்லை. உண்மையாகவே இவ்வ்வ்வளவு நுட்பமான சிந்தனை செயல்திறன் உங்கள் மகனிடம்!!! :)வியக்கத்தக்க முறையில் அதுவும் அவரது 13 வயதில் செய்தது மெச்சப்படவேண்டிய விஷயம்!

  முதற் படத்தில் நிஜமாகவே ஒருவரின் காலை ஏதோ அச்சுப்பதிவு செய்து பின்னர் களி மண்ணினால் பூசி ஒப்பனை பண்ணியிருக்கிறது என்றே நினைத்தேன்.
  உங்கள் பதிவில் அது அவரின் சிந்தனைத்திறனின் வெளிப்பாடு என்பதை படித்தபின் எனது ஊகம் தப்பு என்பதை உணர்ந்தேன். மிக மிக திறமை வாய்ந்தவர்.

  இமாவின் பையனல்லவா அதுவும் கொஞ்சம் இருக்கும்;)))
  ஆனால் என்ன அவரிடம் நல்ல சிந்தானா சக்தி மேலதிகமாக இருக்கிறது;)அதுதான் இப்படி அற்புத படைப்பாக மிளிர்கிறது.

  அதில் (கடையில் வாங்கிய) காகிதப்பூக்களை:) நீங்கள் சொருகிவைத்திருக்கிறீங்கள்:))))) அதுவும்ம்ம்ம் நல்லாஆஆ இருக்கு.;)

  உங்கள் அன்புமகனுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்!!! உங்களுக்கும் தான்;)
  பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்ப்... பாராட்டுக்கள்...

   நன்றி...

   Delete
 3. ரொம்ப அழகா இருக்கு இமா!!பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. சூப்பர்ப்... பாராட்டுக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 5. //மிக மிக திறமை வாய்ந்தவர்.

  இமாவின் பையனல்லவா அதுவும் கொஞ்சம் இருக்கும்;)))

  ஆனால் என்ன அவரிடம் நல்ல சிந்தானா சக்தி மேலதிகமாக இருக்கிறது;)

  அதுதான் இப்படி அற்புத படைப்பாக மிளிர்கிறது.//-இளமதி

  அதே .... அதே

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
 6. Well done, junior imma. I like the toes, nails all are well done.

  ReplyDelete
 7. மிக மிக அருமை இமா ...ரொம்ப அழகா செய்திருக்கார் ..
  அவர் கேட்ட அந்த மினி சூளை அமைத்து கொடுங்க இமா ..
  நானும் பிளாஸ்டர் ஓப் பாரிஸ்மோல்ட் போட்டு செய்ததேன்றே நினைச்சேன் ..அற்புதமான கலைநயம் .

  சின்னவருக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவியுங்க

  ReplyDelete
  Replies
  1. சொல்றேன். தாங்ஸ் அஞ்சூஸ். அவர் கேட்டது மினி இல்லை. மா...க்ஸி. ஒரு ரூம் அளவு பெருசு. ;) கர்ர்.

   Delete
 8. ஏற்கனவே பார்த்து ரசித்ததுதான், ஆனாலும் அலுக்கவில்லை. எங்கட சின்னவர் பார்த்துவிட்டுக் கேட்டார்..
  இஸ் இட் றியல் ஃபூட்?.... இதிலிருந்து தெரிகிறதல்லவா சிற்பியின் கை வண்ணம்.

  ReplyDelete
 9. அருமையான வேலைப்பாடு
  பாராட்டுக்கள்!!!
  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 10. Romba nalla panni irukaan..

  ReplyDelete
 11. Thanks for your lovely comments and compliments dear Vanitha, Ilamathi, Jeevan, Thanabalan, Faiza, Menaga & VGK Anna.

  ReplyDelete
 12. புலிக்கு பிறந்தது பூஸ் :)) ஆகுமா? உங்கள் மகன் இன் கை வண்ணம் அழகா இருக்கு டீச்சர். உங்க வீடு கலை பொருட்கள் நிறைந்து ரொம்ப அழகா இருக்கும் இல்லே ?

  ReplyDelete
  Replies
  1. ;)) ஆகுமா ஆகாதா என்று யாருக்குத் தெரியும்!!

   //கலை பொருட்கள் நிறைந்து// இல்லை. அனேகம் யாருக்காவது கொடுத்து விடுவேன். ஒன்றிரண்டுதான் என்னோடு தங்கும்.


   Delete
 13. Nice piece of work. Looks so real!

  ReplyDelete
 14. அருமையான கைவேலைப்பாடு..பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. உங்கள் சின்னவரின் கை வண்ணம் அருமை

  ReplyDelete
 16. மிக்க நன்றி ஆசியா & ஜலீ.

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா