Friday, 26 October 2012

மீண்டும் ஏஞ்சல்

ஏதோ செயற்திட்டமாம், இன்று காலை 'கீபோர்ட்' வகுப்பு முடிய ஏஞ்சல் எங்கள் வீடு வந்தார்.

முதலில் அவர் அழகாகத் தயாரித்து வைத்திருந்த Alphabet Book' பையிலிருந்து வெளியே வந்தது. அதை staple செய்ய உதவும்படி கேட்டார். பிறகு மெலிதாக ஒரு சிவப்பு 'போ' கட்டி விட்டார்.

முன்பு ஒரு முறை வந்திருந்த போது 'பேப்பர் பீட்ஸ்' செய்து ஒரு வீட்டு வேலை செய்ய வேண்டி இருந்தது. இன்று, என் மாணவர் ஒருவரது வேலையைக் காணவும்,
 அது போல் ஒன்றும் செய்ய விரும்பினார். எப்படிச் செய்வது என்பதை மட்டும் சேர்ந்து பேசிக் கொண்டோம்.
கத்தரிக்கோலால் கடதாசி நாடாக்கள் வெட்ட அதிக நேரம் எடுப்பார் என்று தோன்றிற்று.
அதை மட்டும் வெட்டி வைத்தேன்.

மீதி எல்லாம் பொறுமையாக அவராகவே செய்து முடித்து விட்டார். இடையில் பேச்சு மூச்சு இல்லை.
"எப்படி! அழகாகச் செய்திருக்கிறேனா?
நன்றி, மீண்டும் வருக. 
http://imaasworld.blogspot.co.nz/2012/10/2.html

22 comments:

  1. Replies
    1. தாங்ஸ் அதீஸ். இந்த ரெண்டுக்கும் நீங்கள்தான் முதல். வாழ்த்துக்கள். ;)

      Delete
  2. Replies
    1. தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுக்கிறீர்கள் தனபாலன். மிக்க நன்றி.

      Delete
  3. //"எப்படி! அழகாகச் செய்திருக்கிறேனா?//

    அய்கோ அய்ய்கா செய்திருக்கீங்க .... இமா.
    வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் அண்ணா. அது நான் செய்த கைவேலை அல்ல. ஒழுங்காக எழுதாதது என் தவறு. sorry.
      கருத்துக்கு நன்றி. :-)

      Delete
    2. புரிந்து கொண்டேன் இமா.

      அது அந்தப்பெண் குழந்தை செய்தது என்பதை நான் ஏற்கனவே புரிந்து கொண்டேன்.

      பின்னூட்டம் இடும் போது தவறுதலாக இமா என எழுதிவிட்டேன்.

      கொஞ்ச நாளாவே என்னையறியாமல் சில தவறுகள் நேர்ந்து விடுகின்றன. ;(

      அந்த குட்டி தேவதைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கோ.

      அன்புடன்
      கோபு அண்ணா

      Delete
    3. நிச்சயம் சொல்கிறேன்.

      Delete
  4. ஏஞ்சல் ..இன் ...கைவேலை சூப்பர் இமா ..
    நான் சிறுபிள்ளையா இருக்கும்போது உங்க மாதிரி ஒருவர் பக்கத்து வீட்டிலிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் ..
    கொடுத்து வச்ச குட்டி ஏஞ்சல் ..
    வாழ்த்துவது பெரிய ஏஞ்சல் :))

    ReplyDelete
    Replies
    1. ஹா!! இமாவுக்கு சுட்டாறின தண்... ;)

      Delete
  5. இமா, சூப்பரா செய்திருக்கிறார் குட்டி. ஏஞ்சலின் சொன்னது போல எனக்கும் ஆசை தான். கொழும்பில் இருந்தபோது பக்கத்துவீட்டில் ஒரு மாமி, மிகவும் நல்லவர். நானும் என் தங்கையும் அவர் வீட்டுக்கு போய் பொட்டு, லிப்ஸ்டிக், நெயில்பாலிஷ் என்று போட்டுக் கொண்டு வருவோம். அவருக்கு பிள்ளைகள் இல்லை. எங்கள் மீது அவ்வளவு அன்பாக இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. //பொட்டு, லிப்ஸ்டிக், நெயில்பாலிஷ்// ;))) சின்னக் காலத்தில என்னட்டயும் குட்டி ரசிகர்கள் வாறவை வான்ஸ். எலியாக்கி, உள்ள அநியாயம் எல்லாம் செய்து அனுப்பி வைப்பன். ;) நினைவு படுத்தி இருக்கிறீங்கள். தாங்க்ஸ். ;)

      Delete
  6. மீதி எல்லாம் பொறுமையாக அவராகவே செய்து முடித்து விட்டார். இடையில் பேச்சு மூச்சு இல்லை.

    எத்தனை கவனம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா. முன்பை விட இப்போது கூடுதல் கவனமாக இருக்கிறார்.

      Delete
  7. குட்டி ஏஞ்செல் இன் கை வண்ணம் அழகோ அழகு . எங்கள் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவிச்சிடுங்கோ. நீங்க இங்கே பக்கத்தில் இருந்தால் என் பையன் ஆர்ட் அண்ட் கிராப்ட் உக்கு உதவி செய்வீங்க இல்லே? ஆர்ட் அண்ட் கிராப்ட் இல் நானும் என் கணவரும் ரொம்ம்ம்மம்ப வீக் சோ அவனும் எங்களை போலவே ....

    ReplyDelete
    Replies
    1. இது பொய்க்கதை கிரீஸ். நம்ப மாட்டன். ;)

      Delete
  8. ஏஞ்சலின் சொல்ற மாதிரி தான் நானும் இப்ப நினைக்கிறேன்,
    எனக்கும் சின்ன வயதில் உங்களை மாதிரி ஒரு டீச்சர் கிடைத்தால் நல்ல இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா! எல்லாரும் சும்மா சும்மா எனக்கு ஐஸ் வைக்கினம். ;D

      Delete
  9. இரண்டு வேலையையும் அழகாக செய்திருக்கிறா குட்டி ஏஞ்சல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இதை இப்பத்தான பார்க்கிறேன்...அவ்வ்வ்வ்! பேப்பர் ப்ரேஸ்லெட் சூப்பரா இருக்கு! :)

    ReplyDelete
  11. குட்டி ஏஞ்சல் ப்ரேஸ்லெட் வொர்க் சூப்பர்.... நல்லா செய்து காட்டி இருக்காங்க.... பகிர்ந்தமைக்கு நன்றி இமா....

    ReplyDelete
  12. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மூவருக்கும் என் அன்பு நன்றி. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா