Wednesday, 10 October 2012

இலையுதிர் காலத்து நிலவொன்று

உலகுக்கு இருப்பது ஒரே நிலவுதான். விழாக்கள் மட்டும் எத்தனை!

சிறு வயதில் வெசாக் தினத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன்.

நியூசிலாந்தில் 'லாண்டர்ன் ஃபெஸ்டிவல்' வருவது பெப்ரவரி மாதம்தான். அது சீனப்புத்தாண்டு. என் சின்னவர்கள் பெரியவர்களானதன் பின் பார்க்கப் போனதில்லை நான்.

சிங்கப்பூரில் இருந்த சமயம் ஓர்நாள் இரவுணவின் பின் காற்றாட ஒரு மரத்தின் கீழ், வாங்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் மூவரும். அருகிலிருந்த பாரிய மரத்தின் இரண்டு கிளைகள் நடுவே அழகாய் முழுநிலா தென்பட்டது. அதைப் படம் பிடிக்க முயன்றிருக்க...
;))) 
அழகாய் விளக்கேந்தி மலர்ந்த முகக் குழந்தைகள் பெற்றோர் துணைக்கு வர ஊர்வலமாய் வந்தார்கள்.
 சிறிய குழுதான். அழகுக் காட்சி அது. சீனக் குழந்தைகள்....
 நடுவே நட்புக்குழந்தைகளும் இருந்தார்கள்.
நிலவொளி.. மெல்லிய காற்று... அமைதியான சூழல்... அருகே பாசமான இருவர், முன்னால் சந்தோஷமான பிஞ்சுகள் & அவர்களைச் சந்தோஷிக்க வைக்கவென்று நேரம் செலவிடும் பெற்றோர்.... வேலை, வீடு என்கிற கவலையில்லாது இயல்பாக இருக்க முடிந்த அந்தச் சில நிமிடங்கள்...  மனதுக்கு இதமாக... விபரிக்க இயலாத இதமாக... நிறைவாக இருந்தது.

 அன்றுதான் 'மூன் கேக் ஃபெஸ்டிவல்' பற்றித் தெரியவந்தது. பிடித்தவர்கள் படிக்க வசதியாக... http://www.asiarooms.com/en/travel-guide/singapore/singapore-festivals-and-events/mooncake-festival-singapore.html

'மூன்கேக்' என்பது 'முங்' கேக்காக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது முன்பு. நான் சாப்பிட்டதில் எல்லாம் பயறுதான் சேர்த்திருந்திருக்கிறது.
வீட்டுக்குக் கொண்டுவர என்று இரண்டு மூன் கேக் எடுத்து வைத்தேன். 'டிக்ளேர்' செய்திருந்தேன். விமான நிலையத்தில் அருகே வந்த MAF நாய் என்னைக் கடந்து போய் இளைஞரொருவர் பையருகே அமர்ந்தது.
அடுத்த கட்டம்... பையைத் திறந்து எடுத்துக் காட்ட வேண்டி இருந்தது. பார்த்தார்கள்; தனியே ஸ்கானரில் அனுப்பினார்கள்; "முட்டை இருக்கும் போல" என்றார்கள். பையைப் பிரித்து கத்தியால் நறுக்கி... "இதோ பார், முட்டை மஞ்சள்," என்று காட்டினார்கள்.

அங்கே ஒரு குட்டி நிலா. இதலால் கூட இருக்கலாம் Moon Cake!! ;)

"கொண்டு போக அனுமதி இல்லை."

வெகு அவதானமாக இருக்கிறார்கள் எங்கள் நாட்டின் பாதுகாப்புப் பற்றி.

22 comments:

 1. இமாஆஆஆ! இமையமென என் இதயத்தில் உயர்ந்துவிட்டீர்கள்.
  உங்கள் அன்பினால்...;)

  நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
  இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் :)))

  // தனியே ஸ்கானரில் அனுப்பினார்கள்; "முட்டை இருக்கும் போல" என்றார்கள். பையைப் பிரித்து கத்தியால் நறுக்கி... //
  ரசித்தேன். சிரித்தேன்.:-)))))))

  சிங்கயில் நிலவைப் பிடிச்சுக் கொண்டந்து காட்டினதுக்கு மிக்க நன்றி;))

  ReplyDelete
  Replies
  1. பிடித்தது நானல்ல. கொண்டு வந்தது மட்டும்.

   Delete
  2. இளமதி நீங்க போட்ட சத்தம் அந்த‌ நிலவுக்கே கேட்டிருக்கும்.

   Delete
  3. இந்த லான்டர்ன் festival ஜெர்மனில நவம்பரில் நடக்கும் .செய்ன்ட் மார்ட்டின்ஸ் டே என்பார்கள் ..பிள்ளைகள் கையால் செய்த ப்லாண்டர்ந்சை எடுத்து செல்வதே தனி அழகு .

   Delete
  4. இப்ப ஏர்போர்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் இமா ...அழகா ஒரு கருப்பு லாப்ரடார் எல்லாரையும் செக் செய்தது நாங்க பாக்சை இடப்பக்கம் பிடிக்க சொல்லினாங்க ...அது வேற என்னை பார்த்து வாலாட்டிட்டு போச்சு ..எங்க வீட்டு நாய் வாசம் அடிச்சதோ தெரில :)

   Delete
 2. என்ன இமா நீங்க ஒரே நாளில, அரைமணி நேர இடைவெளியில் 2 பதிவு போட்டா எப்படி??

  ReplyDelete
  Replies
  1. எனக்கு லீவு முடியுது. பிறகு போஸ்ட் வராது. நீங்கள் ஒன்றைவிட்டு ஒருநாள் வாசியுங்கோ.

   Delete
 3. சிங்கப்பூர் போய் சில வருடங்கள் ஆயிற்று. போகனும்.

  //நிலவொளி.. மெல்லிய காற்று... அமைதியான சூழல்... ......வேலை, வீடு என்கிற கவலையில்லாது இயல்பாக இருக்க முடிந்த அந்தச் சில நிமிடங்கள்... மனதுக்கு இதமாக... விபரிக்க இயலாத இதமாக... நிறைவாக இருந்தது.// டச்சிங்,டச்சிங்.

  ReplyDelete
  Replies
  1. ;) எப்பவாவது ப்ரியாவையும் நேர்ல பார்க்க வேணும்.

   Delete
  2. அப்படியே என்னையும் பாக்க வரணும் அண்ணாவும் நீங்களும் :))

   Delete
  3. ம்.. நிச்சயம் ஏஞ்சல்.

   Delete
 4. இதை நான் கவனிக்க முன்பே.. புதுத்தலைப்பு போட்டு விட்டீங்கள்... அழகாக இருக்கு நிலவும் குழந்தைகளும், அவர்களின் சட்டையும்.

  ReplyDelete
  Replies
  1. ம்... அந்த நேரம் இன்னும் அழகா இருந்துது. படம் அதை வடிவா எடுத்துக் காட்டேல்ல.

   Delete
 5. ஒரு வாரத்தில் இத்தன பதிவு போட்டா ஜுரம் சளியில் எப்படித்தான் நான் கமெண்ட் போடுறது:))


  மூன் கேக் சுவாரஸ்யமா இருக்கு. படம் எல்லாம் நல்லா இருக்கு. குழந்தைகள் எந்த ஊரில் இருந்தாலும் கொள்ளை அழகு இல்லே டீச்சர்?

  அப்புடியே நம்ம அன்பையும் பொன்னியையும் போட்டு இருக்கலாம் இல்லே? ( நீங்க கமெண்ட் பார்க்குற வரைக்கும் விட மாட்டோம் இல்லே:))

  ReplyDelete
 6. மெதுவா பாருங்க கிரி. ஸ்கூல் தொடங்கினா எழுதக் கிடைக்காது என்றுதான் போட்டு வைக்கிறேன்.

  ;) அனுமதி இல்லையே! என்ன செய்யட்டும்!! ம்!!!! திங்கிங்!!!

  ReplyDelete
 7. சிங்கபூரில் chinese garden இல் lantern festival ரொம்ப நல்லா இருக்கும்... போடோஸ் அருமை இமா

  ReplyDelete
  Replies
  1. Thanks. Did not get a chance Priya. ;(

   Delete
 8. அழகான பதிவு.

  // சிறிய குழுதான். அழகுக் காட்சி அது.
  சீனக் குழந்தைகள்....//

  குழந்தைகளும் நல்ல அழகு. ! ;)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், குழந்தைகள் என்றாலே அழகுதான்.

   Delete