'China Town' சென்றிருந்தோம் இரண்டாம் முறையாக.
களைக்கும் வரை சுற்றி விட்டு, அறைக்குத் திரும்பவென்று அகப்பட்ட வாகனத்துக்குக் கைகாட்ட முயல்கையில் ஒரு இளைஞர் கூட்டம் எம்மை அண்மித்தது.
"விடுமுறையிலில் வந்திருக்கிறீர்களா?" என்றார் இந்தியர் போலிருந்தவர் - ஜீன்ஸ் டீ ஷ்ர்ட்டின் மேல் வேட்டி துண்டு - திருட்டுத் தனமாகச் சாப்பிடும் போது காலடி கேட்க அவசரமாகக் குழந்தை சுருட்டி வைத்த ஸ்வீட் பார்சல் மாதிரி. ஒழுங்காகக் கட்டத் தெரியாதோ! ஒரு வேளை... கட்டவே தெரியாதோ!! என்னைக் கேட்டிருந்தால் கூட அழகாகக் கட்டிவிட்டிருப்பேன்.
இவர் வழிகாட்டி போலிருக்கவில்லை; நட்பாக இருக்கலாம்.
"ஆமாம்," இது க்றிஸ்.
"Would you like your name in drawing?"
அரை குறையாகக் காதில் வாங்கிய நான் ஏதோ பெயரைச் சீட்டுக் குலுக்கி எடுக்கப் போகிறார்கள் என்பது போல் நினைத்துக் கொண்டேன். பரபரப்பாக இருந்தார்கள் இளைஞர்கள். பேச விடாமல் இழுத்துப் போனார்கள் ஒரு துள்ளலோடு. வழியில் பெயர் கேட்டு க்ளிப் பாடில் பெரிதாக எழுதிக் கொண்டார்கள்.
"எத்தனை நாட்கள் விடுமுறை?"
"எப்போ மீண்டும் பயணம்?" பொதுவான கேள்விகள் பலதும் படபடவென்று வந்து விழுந்தன.
"Are you from India?" 'ஓஹோ! இதுவா சங்கதி?' மனதில் ஓடிற்று.... அவர்களுக்கு ஒரு வித்தியாசமான பெயர்... வேற்று மொழிப் பெயர் தேவையாக இருந்தது போல.
"பரவாயில்லை, வாருங்கள்," என்று அழைத்துப் போனார்கள்.
அந்த ஒருவர் தவிர மீதி அனைவரும் சீனர்கள்.
ஒன்றும் புரியாமல் கூடச் சென்றோம். இப்போது அவர்கள் உற்சாகம் எம்மையும் தொற்றி இருந்தது.
அங்கே சுவரோரம் ஓரத்தில் ஒரு நீள மேசை - க்ளிப் போர்டுகள், மைக்குப்பி, எழுதும் தூரிகைகள், பின்னால் சில பெண்கள்.
பரபரவென்று இயங்கினார்கள். க்ளிப் போர்ட் கைமாறிற்று. ஒருவர் தூரிகையை மையில் தொட்டு வரைய ஆரம்பித்தார்.
"ஹேய்! ஒழுங்காக எழுதுவாயா?"
"இவ்வளவுதான் உன்னால் முடியுமா?" ஆளாளுக்கு அந்தப் பெண்ணைச் சீண்டினார்கள்.
அவர் சிரித்துக் கொண்டே எழுத்தில் மும்முரமானார். ஒருவர் சட்டென்று கைபேசியை நீட்டினார். "இதோ! இதோ!" அட! அப்போதான் கவனித்தேன். பெயருக்கான எழுத்துக்கள் அங்கே சீன மொழியில்.
தொட்டு...
வரைந்து...
மீண்டும் தொட்டு வரைந்த அந்தப் பெண்ணுக்கு நல்ல ரசனையுணர்ச்சி. கைநகங்களும் தோடும் ஒரே வர்ணத்தில் முத்துக்கள் போலத் தோன்றின.
எழுதி முடித்ததும் சந்தோஷ ஆரவாரம். பெயர் எழுதிய கடதாசியை எங்கள் கையில் தந்த இந்தியர் புன்முறுவலோடு சொன்னார் "சரியென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை."
மீண்டும் கூட்டம் கூடி என்னவோ திட்டமிடல் நடந்தது.
சரியாக ஒரு வாடகை மோட்டார் அருகே வந்து நிற்க அறையை நோக்கிக் கிளம்பினோம்.
அறையில் இணைய வசதி இருந்தாலும் ஒரு நேரத்தில் இருவரில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இறுதியாக இணைபவரை வைத்துக் கொண்டு, கணக்கு தன்னால் முன்னவரைத் துண்டித்து விடும்.
என் முறைக்குக் காத்திருந்து கூகுளாரைக் கேட்டேன். இறுதி எழுத்தைத் தவிர மீதி எல்லாம் சரிதானாம். சீன மொழியில் முறையாக எழுதினாலும் சரி, எளிமையான முறையிலானும் சரி
克里斯托弗
என்று காட்டிற்று. ஆனால்... உச்சரிப்பைக் கேட்டாலோ.. ஹாஹா! தான்.
'கிளீசு டோஃபு' என்கிறது தெளிவாக.
கிளியிலிருந்து தயாராகும் டோஃபுவோ இது! ;)
சீன மொழியா?? இருங்க எங்க பூஸாருக்கு தான் இந்த மொழி அத்துப்படி. வந்து எதையாவது (உளறி ) சொல்வார் ஆவலாக கேட்க காத்திருக்கிறேன்.
ReplyDeleteஹாய் வான்ஸ்! வாங்கோ. ;) ம்.. பூசாரை நினைச்சுக் கொண்டேதான் போட்டனான். 'அங்க' எனக்கு சைனீஸ் சொல்லித் தந்தது மறக்கவே... மாட்டுது. ;D
Deleteச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ சிம்பிள்:) திரும்பிப் போகும்போது, ச்ச்ச்சும்மா போகாமல் பூஸுக்கும் ஏதும் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுங்கோ என எழுதியிருக்கு:)))... வாழ்க சிங்கப்பூஊஊஊஊஉர்.. வளர்க சைனீஷ்.. :)
Deleteஅது கிளீசு டோஃபு இல்ல.. கிளியோபத்ரா...சரி சரி இனியும் இங்கின நிண்டல் எனக்கு ஏதும் ஆகிடும்:) அதுக்கு முன்னம் மீ எஸ்ஸ்கேப்ப்ப்:)
Delete;))
Deleteஒண்ணும் புரியலே... கூகுளாரை கேட்க வேண்டும்...
ReplyDeleteநன்றி...
:-))
Deleteதங்கள் வருகைக்கு நன்றி.
//சைனா டௌன்' சென்றிருந்தோம் இரண்டாம் முறையாக.//
ReplyDeleteநோஓஓஓஓஓ றீச்சர் தவறு செய்கிறா.. அது ரவுண் எண்டுதான் வரோணும்:)... டமில் எழுத்தில் ஆரும் பிழை விட்டால் நான் மனிஷனாகவே இருக்கமாட்டன்:)).. ஹையோ நல்லவேளை அஞ்சு இந்தப்பக்கம் இல்லையே சாமீ:)).
//நான் மனிஷனாகவே இருக்கமாட்டன்// ஹையா! ஒரு பூஸ் பூஸாகிறது.
Delete//றீச்சர் தவறு செய்கிறா// !!! ??? !!! ??? ;)))))))))))
இமா !!! இங்கே யாரோ என்னை கூப்பிட்ட மாதிரி இருந்திசே ??? :)))
Deleteடமில்//தமிழ் garrr:))
Deleteஹையா! ஒரு பூஸ் பூஸாகிறது.//
Deleteசாதா பூஸ் !! Kokeshi பூஸ் ஆகின்றது ஹா ஹா :))
{Kokeshi பூஸ் ....CHINESE வாஸ்து பூனை ஒரு கையை ஆடிகிட்டு இருக்குமே அது }
முத்து தோடும் கியூடேக்சும் எனக்கும் தெரியுதே :)
Delete.
克里斯托弗பொம்மை பொம்மைகளா எழுத்துக்கள்
பெயர் நல்லா இருக்கு இமா சீன மொழியில் :))
இது பப்பி பூஸ், வாலைத்தான் ஆட்டும் அஞ்சூஸ்.
Deleteநெரே மேலே சொல்லி இருக்கிறதுக்கு... கர்ர்ர்ர் ;)))
//ஒழுங்காகக் கட்டத் தெரியாதோ! ஒரு வேளை... கட்டவே தெரியாதோ!! என்னைக் கேட்டிருந்தால் கூட அழகாகக் கட்டிவிட்டிருப்பேன்.//
ReplyDeleteஇது தேவையோ? இது தேவையோ? றீச்சருக்கு இது தேவையோ?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
சிரிச்சுச் சிரிச்சு கர்ர் ;)
Deleteஹாய் சிங்கப்பூர்...இப்ப சிங்கையில் இருந்தால் தீபாவளி ஒளியூட்டும் விழாவில் கலந்துகொள்ளலாம்..லிட்டில் இந்தியா கிண்டா சாலையில் இன்று நடக்கிறது.
ReplyDelete;( கிளம்பி வந்து ஒரு வாரமாகிறது கமலக்கண்ணண். தகவலுக்கு நன்றி. சுவாரசியமான ஒரு நிகழ்வை மிஸ் பண்ணுகிறேன்.
Deleteமுன்பு ஒரு பொங்கலின்போது அங்கு இருந்திருக்கிறேன்.
இமா.....என்னதிது:(
ReplyDeleteஒண்ணுமே புரியலை உங்க பதிவில
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது......
ஏதோ சீன மொழில சொல்லுறீங்க. என்ன அர்த்தம்?
எதுக்கு சொல்லியிருக்கு...... விளக் கம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்;))))
;))
Delete//'கிளீசு டோஃபு' என்கிறது தெளிவாக//
ReplyDeleteஏன்னா, சீனமொழியில் “ர” உச்சரிப்பு கிடையாது. ‘ர’ வரும் இடத்திலெல்லாம், ‘ல’ என்று சொல்லுவார்கள்!! :-)))
ஆமாம் ஹுஸைனம்மா, கொரியர்களும் அப்படித்தான்.
Deleteகனகாலத்துக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள், சந்தோஷமாக இருக்கு.
வித்தியாசமான பகிர்வு..:)!
ReplyDeleteஎன்ன செய்யட்டும் ஆசியா! வித்தியாசமில்லாதது எல்லாம் மிச்சம் விடாமல் நீங்கள் போட்டாச்சுது. ;D
Deleteஅருமை, படங்களும். ஆனால் உங்கள் படத்தை தான் காணவில்லை...
ReplyDelete_()_ நல்வரவு.
Deleteமுதல்ல உங்கட படத்தைப் போடுங்கோ. பிறகு நான் முகத்தைக் காட்டுறதா வேண்டாமா என்று முடிவு செய்யுறன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இமா... சிங்கபூர் சைனா டவுன் போடோஸ் பார்க்கும் போதே, சிங்கப்பூர் ரொம்ப மிஸ் பண்ணறேன்.... நிறைய சிங்கப்பூர் போடோஸ் ஷேர் பண்ணுங்க... சைனா டவுன் அன்னலட்சுமி ஹோட்டல் சாப்பாடு சூப்பர் ரா இருக்கும்... போனீங்களா ? தீபாவளி, பொங்கல் டைம்ல... லிட்டில் இந்தியா பக்கம் சூப்பர் ரா இருக்கும்....
ReplyDeleteநிச்சயம் பகிர்ந்துகொள்கிறேன் ப்ரியா. அன்னலட்சுமி போகவில்லை. கண்டபடி ஒரு நோக்கமில்லாமல் சுற்றினேன். //பொங்கல் டைம்ல... லிட்டில் இந்தியா// ஆமாம். 7 வருடங்கள் முன்பு பார்த்தேன். மீண்டும் போனால் வேறு சீசன் பார்த்துப் போகவேண்டும் என்றிருக்கிறேன்.
Delete//உச்சரிப்பைக் கேட்டாலோ.. ஹாஹா! தான்.
Delete'கிளீசு டோஃபு' என்கிறது தெளிவாக.
கிளியிலிருந்து தயாராகும் டோஃபுவோ இது! ;)//
சிரிப்பாகத்தான் உள்ளது. ;))