Wednesday, 17 October 2012

சூரியகாந்தி

இந்தச் சூரிகாந்திச் செடிக்கோர் கதை இருக்கிறது. சில வருடங்கள் முன்பு, அழகாய் ஆறடி வளர்ந்து பூக்கத் தயாராக நின்றது எங்கள் தோட்டத்துத் தரையில்.

சின்னவர்கள் இருவருக்குமாக அவர்களது மாமனார் ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டர் பொம்மை ஒன்று வாங்கிக் கொடுத்தார். இவர்கள் அதை விர்ரென்று வீட்டினுள்ளே விட, பொருட்களெல்லாம் தட்டிக் கொட்டிற்று.

வெளியே போனார்கள். செடி துண்டாகிவிட்டது. முக்கியமான பகுதி முறி(டி)ந்து விட்டது. தரையில் நீளமாக ஒரு குச்சு மட்டும் நின்றது. எனக்கு சோகம் பொறுக்க முடியவில்லை. கோபிக்க இயலவில்லை. இயலாமை... பயங்கர கர்ர்ர்ர்... கண்ணில் பட்ட வெற்றுத் தொட்டியில் துண்டாகி வீழ்ந்த தலைப்பகுதியைச் சொருகிவிட்டுச் சென்று விட்டேன்.

இலைகள் மெதுவே கருகிக் கொட்டின.

நான் தொடவும் இல்லை.

திடீரென ஒருநாள் துளிர்கள்... அப்போதுகூட பொய்த் தளிர் என்று நினைத்தேன். சூரியகாந்தியைத் தண்டிலிருந்து வளர்க்கலாம் என்று அறிந்திருக்கவில்லை அதுவரை. இலைகள் பெருத்தன. ஆதாரம் குற்றி விட்டேன். இருபத்தைந்துக்கு மேல் பூக்கள் கிடைத்தன அந்தப் புதிய செடியிலிருந்து. தட்டுக்கள் போல் பெரிதாகப் பூக்கும் இனம் இது. தொட்டியில் என்பதாலும் விபத்தின் காரணமாகவும் எண்ணிக்கை அதிகரித்ததாலும் என்று நினைக்கிறேன், சிறிய பூக்கள்தான் கிடைத்தன. ஆயினும் அழகு அவை.

எங்கள் அயல் வீட்டுப் பெண்மணி பறவைகளைக் கவர்வதற்காகவே சூரியகாந்தி வளர்ப்பார். அவை வேலிக்கு மேலாகத் தலை காட்டி 'ஹாய்' சொல்லும் எனக்கு. கோடை விடுமுறையில் தனித்திருக்கும் போது அடிக்கடி ஜன்னலால் எட்டிப் பார்ப்பேன்; சூரியனை ஒழுங்காகப் பின் தொடர்கின்றனவா என்பதைக் கவனிப்பதற்காக.

சூரியனைத் தொடரும் சூரியகாந்தி; இமாவின் உலகம் இங்கு தொடர்ந்ததோ 'சுகந்தி பூ'வை.

சூரியகாந்தி விதைகள் சாப்பிடலாம் அறிந்திருப்பீர்கள்; முழுப்பூவையே சாப்பிடலாம் தெரியுமா? இனிமையாக இருக்கும். நம்பாவிட்டால்... பொறுத்திருங்கள் நிரூபணத்தோடு மீண்டும் வருவேன். 

31 comments:

  1. புது டெம்ளேட் நல்லா இருக்கு ஸ்கை ப்ளூ. ஆகா ரீச்சர் வீட்டிலும் சுகந்திப்பூ கதை இருக்கா. எனக்கும் நிறைய பூக்கள் பூத்தன. இந்தபூ வந்தபின் நிறைய குருவிகள் எங்கள் வீட்டில்.

    ReplyDelete
    Replies
    1. //புது டெம்ளேட்// இன்னும் வேலை முடியேல்ல. இது 'ட்ரையல்' மட்டுமே. ;) நேரம் இல்லாததால் தவணை முறையில் நடத்துகிறேன். ;)

      Delete
  2. எனக்கும் பக்கத்துவீட்டுக்காரப்பெண்மணி இப்பூவைச்சாப்பிடலாம் எனச்சொன்னா.சரியா எனத்தெரியாததால் எழுதவில்லை.இப்பூ வேறு நிறத்திலும் உண்டு.இலை பிடுங்கிய வீட்டில் பூ மஞ்சள் இல்லை.ஒரு மரூன் கலர் போன்றது.

    //சூரியனை ஒழுங்காகப் பின் தொடர்கின்றனவா என்பதைக் கவனிப்பதற்காக// நானும் இதை ஒரு நாள் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. //இப்பூவைச்சாப்பிடலாம் // அவசரப்படாதைங்கோ. ;D

      Delete
  3. //ஆதாரம் குற்றி விட்டேன்//

    அப்படின்னா என்ன? புரியலையே...

    ReplyDelete
    Replies
    1. ;) sorry. திட்டாதீங்கோ என் தமிழைப் பார்த்து. அது.. support - குச்சி.

      Delete
  4. அழகாக இருக்குங்க...

    இது போல் எங்க வீட்டிலும் நாங்கள் வைத்த செடிகள் பூ பூக்கும் போது... எங்கள் மனதும் பூ பூக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அது பெரிய சந்தோஷம்தான் இல்லையா!

      Delete
  5. இமாஆஆஆ இதென்ன அதற்குள் இங்கும் பூஊஊஊ:)
    எனக்கு இந்தச் சூரியகாந்தியைப்பற்றி சுத்தமா எதுவும் தெரியாது. காரணம் அம்முலுவின் பக்கத்தில் சொல்லீட்டன். தேவையானால் போய்ப்படியுங்கள்:))))

    ஆனால் எனக்கும் இந்தப்பூவின் அழகில் மயக்கம் இருக்கு.

    முடிஞ்ச, முறிஞ்ச கண்டிலிருந்து திருப்பியும் முளைவிட்டது ஆச்சரியமே:)
    நல்ல கண்டுபிடிப்பு. ஒருவேளை கின்னஸ்புக்கில நீங்களும் இடம்பெறலாம்;))))))))

    ஹாஆ.... புதூ டெம்லேட்டூஊஊஊ. புதூ கலரூஊஊ;)
    எல்லாமே கலக்கல்......

    ReplyDelete
    Replies
    1. //கின்னஸ்புக்கில// ;))))))))

      Delete
  6. முறிஞ்ச தண்டிலிருந்து திருப்பியும் முளைவிட்டது ஆச்சரியமே.....superb....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எதிர்பாராத சந்தோஷம் எனக்கு. வருகைக்கு நன்றி விஜி.

      Delete
  7. கனாக்காலம்... சின்ன பிள்ளையா இருந்த போது வீட்டில் உள்ள செடிகளில் எத்தனை மொட்டு, எத்தனை பூ என பார்ப்பது தான் எனக்கும் தங்கைக்கும் வேலை. இருவரும் ஆளுக்கு ஒரு செடி வைத்தால் யார் வைத்த செடியில் பூ முதலில் பூத்தது, அதிகம் பூத்ததுன்னு பார்த்து செடி கூட உட்கார்ந்து பேசி சண்டை எல்லாம் போடுவோம் ;) நல்ல பகிர்வு இமா. - வனிதா

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா! ம். என் கையால் வைத்த ஒட்டுமா... காய்க்காமலிருக்க பலவருதங்கள் கழித்து அப்பா அதை வெட்டி விட்டு வேறு வைத்தார். அதுவும் ஹாயாக வளர்ந்து எங்களை ஏமாற்றி ஏமாற்றி இருந்து... ஒருபடியாக பெயருக்கு காய்த்தது. நன்றாகவே இருக்கவில்லை. அந்த மரத்தில் நன்றாகக் காய்த்ததெல்லாம் அணிற்கூடும் காக்காய் குருவிக் கூடுகளும்தான். கூடவே ஆரோக்கியமில்லாமல் ஒரு ஆர்கிட். ;)))

      Delete
  8. //சூரியகாந்தி விதைகள் சாப்பிடலாம் அறிந்திருப்பீர்கள்; முழுப்பூவையே சாப்பிடலாம் தெரியுமா//

    எதுவுமே கழிவில்லைப்போல:)

    ReplyDelete
    Replies
    1. அவசரம் பூஸாருக்கு. எலியை மட்டும் சாப்பிடுங்கோ நீங்கள். ;D

      Delete
  9. தண்டில சூரியகாந்தி முளைத்தது.. உலகம் அழியப்போகுதென்பதுக்கு அடையாளமே:))

    ReplyDelete
    Replies
    1. ஓமோம், இன்னும் 12ம் ஆண்டு பிறக்கேல்ல. ;)))

      Delete
  10. சூரியகாந்தி பூ அழகா இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. என்ன நிறமென்றாலும் சூரியகாந்தி அழகுதான் இல்லையா!

      Delete
  11. அழகாக பூத்திருக்கு சூரிய காந்தி பூ பார்க்கவே நல்ல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடமும் வளர்க்க நினைக்கிறேன், பார்க்கலாம்.

      Delete
  12. பெரிய அளவில் வரும் சூரியகாந்தி மலர்களை விட இவை ரொம்ப அழகா இருக்கு இமா ...

    ReplyDelete
  13. சூரியனைத் தொடரும் சூரியகாந்தி அழகு , ஆச்சரியம்//

    http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தும் நன்றி அம்மா.

      Delete
  14. உங்க சுகந்தி பூ பதிவு அருமை. பையன்கள் மேல் கோபிக்க முடியவில்லைன்னு நீங்க எழுதி இருப்பது உங்க பொறுமைக்கு உதாரணம். எனக்கு முழு பூவையும் சாப்புடலாம் ன்னு இப்போதான் தெரியும். விதைகள் தினமும் ஓட்ஸ் உடன் காலை உணவில் சேர்த்து கொள்வோம். கொலேஸ்ரோல் வருவதை தடுக்கும் அப்படின்னு சொன்னாங்க

    ReplyDelete
    Replies
    1. //முழு பூவையும் சாப்புடலாம் ன்னு// kik kikkkk ;))))))) இமா சொன்னா அப்புடியே... நம்பிடுறதா!! எ.கொ.இ.இ!! ;)))))

      Delete
  15. மினி சூரியகாந்தி அழகா இருக்கு இமா! தண்டிலிருந்தும் செடி வளர்த்து சாதனை புரிந்த இமாவுக்கு பாராட்டுக்கள்! :)

    ReplyDelete
  16. சூர்ய காந்திப்பூவும் அதைப்பற்றிய பல தகவல்களும் அழகோ அழகு. முதலில் காட்டுயுள்ள படமும் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  17. இம்முறையும் நடலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா