Thursday, 25 October 2012

ஆப்பிள் கு(கூ)டை

பொழுது போக மாட்டேன் என்றது; சேகரிப்பைக் குடைந்து கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது சென்ற வருடம் boxing day அன்று மலிவு விலையில் வாங்கி வந்த ஆப்பிட்பழங்கள். ஏதாவது கைவேலைக்கு உதவும் என்று வைத்திருந்தேன். இன்று பார்க்க ஒன்றிரண்டு பிளவுபட்டுத் தெரிந்தன. steirofoam கொண்டு தயாரானவை அவை. காலநிலை மாற்றம் இப்படி மாற்றிவிட்டிருக்கிறது போல. இனியும் விட்டு வைத்தால் பயனில்லாமலே குப்பைக்குப் போகும் என்று தோன்றிற்று.

வீட்டில் எப்பொழுதும் மேலதிகமாக சாப்பாட்டுக் குடைகள் இரண்டாவது வைத்திருப்பேன்.
1. இவை அதிக காலம் தாங்குப் பிடிக்காது.
2. ஊரில் பெரிய 'சாப்பாட்டு மூடி' இருந்தது. கிணற்றடியில் கொண்டுபோய் வைத்துக் கழுவி எடுக்கலாம். இவையோ கழுவிப் பாவிக்க இயலாதவை. அடிக்கடி மாற்றிவிடுவது நல்லது.
3. தப்பித் தவறி எனக்குப் பிடிக்காத உணவுப் பொருள் (பறவை) பட்டுவிட்டால் தூக்கித் தூ...ரப் போட்டு விடலாம். ;)
4. கேக் செய்யும் போது மேலதிகமாக ஒன்றிரண்டு இருந்தால் உதவும்.
இந்தக் காரணங்களுக்காக.... 'டொலர் ஷொப்' பக்கம் போனால் ஒன்றிரண்டு வாங்கி வந்து வைப்பது உண்டு.

ஆப்பிள்கள் ஆறுதான் இருந்தன. நத்தார் மரத்துக்கான சோடினைப் பொருட்கள் இருந்த பெட்டியை ஆராய மேலும் இரண்டு அளவுகளில், மொத்தம் ஐந்து பழங்கள் கிடைத்தன.

6+3+2 = !!
குடையிலிருந்த ஆறு கம்பிகளில் மூன்றில், இரண்டிரண்டு பழங்கள் - 6
 
மீதி மூன்றில் ஒவ்வொரு பழம் - 3
உள்ளே - 2

தங்க நிற நூல்களை வெட்டி விட்டு பச்சை நூல் கொண்டு இலைகளைக் குடையோடு தைத்து... தையல் விட்டுவிடாமல் nail polish - top coat பூசி.... (ஒரு போத்தலில் அடியில் மட்டும் கொஞ்சம் மீந்து இருந்தது. தடிப்பாகிவிட்டது; நகத்திற்கு இனி ஆகாது. அந்த நகத்தோடு சாப்பிடலாம் என்றால் இதுவும் ok என்று மனது சொன்னது.) ;) வெடிப்புகளின் மேல் சிவப்பு நகப்பூச்சு தடவி.... சாப்பாட்டு மேசைக்கு எடுத்து வந்தாயிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~

0---- கு 1
இது போல் முன்பு செய்த செர்ரிக் கு(கூ)டை 'அங்கே' http://www.arusuvai.com/tamil/node/17356

0---- கு 2
தட்டச்சு செய்கையில் சுற்றிய நுளம்புத்திரி - 
            ஆ...தியில், அதாவது பிளாத்திக்குக் கூடை வருமுன்பாக, எங்கள் ஒழுங்கையில் திடீரென்று எப்போவாவது 'ஊத்..தக்..கூ..டை, சாப்..பாட்..டு மூ..டீ.....' என்றொரு குரல் கேட்கும். முதல் முதல் பரவை முனியம்மாவை திரையில் பார்த்த போது மூளையில் மீண்டும் அதே குரல்... அந்த அக்கா தோற்றம், குரல் மட்டுமல்லாமல் கைவீச்சு, நடை எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்.

இயற்கையோடு இயைந்து போகும் மூங்கிற் கூடை காணாமற் போய் ப்ளாத்திக்கும் கடந்து, இப்போ இந்த வலைக்கூடை மேசைக்கு வந்திருக்கிறது.

இது போல் நீள் சதுரமானவைதான் பெரியவர் சின்...னவராக இருந்தபோது நுளம்பு, ஈ வலையாகப் பயன்பட்டது. இரண்டாம் மாதமே தூர உதைத்து விட்டுச் சிரிப்பார். கம்பி காவலிடத்திலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும். அதைச் சரியான இடத்தில் பிடித்து வைத்துத் தைக்க வேண்டும் அடிக்கடி. எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறேன். பாதுகாப்பு இல்லை என்று அப்போது நினைக்கவே இல்லையா நான்!! ஹ்ம்! ;(

அவருக்கு அது அளவில்லாது போனதன் பின் 'கேக்' மூடுவதற்காக என்று கழுவி எடுத்து வைத்தது நினைவு இருக்கிறது. இப்போ இதற்கென்றே வாங்குகிறேன்.


0---- கு 3 
இமா எடுத்த இந்தப் படம் வீணாகி விடாமல்.... பார்த்து ரசியுங்கள். ;)

24 comments:

  1. சரி உங்க கணக்கு சரி.டுப்ளிகேட் 11,ஒரிஜனல்5 இருக்கு. படத்தை நல்லா பார்த்து ரசிச்சாச்சு. ரெட் கலர் ஆப்பிள் அழகா இருக்கு.;))

    நன்றாக பொருள் வீணாகாமல் செய்திருக்கிறீங்க.

    நகப்பூச்சு சட்டை பட்டன்,கோட் பட்டன்களுக்கும் இப்படி பூசலாம்.நான் இதுக்காகவே கறுப்புகலர் முதற்கொண்டு சில கலர்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது... நானே வாங்கினது அம்முலு. ;))))

      Delete
  2. அட அட அட அட அடடடடாஆஆஆ.........
    என்ன சொல்ல......என்ன சொல்ல:))))))

    ReplyDelete
  3. அபாரம், அற்புதம். எப்புடி எல்லாம் யோசிக்கிறீங்க பாருங்க:))

    சரி உடைஞ்சு போச்சா தூக்கி எறி புதுசா இன்னொண்ணு வாங்குங்கிற மனோபாவ வாழ்க்கையில் இப்பிடியும் செய்துகாட்டி துருப்பிடிச்ச எங்க மூளையையும்(முதல்ல எனக்கு அது இருக்கோன்னு டவுட்டு:(...... )
    கொஞ்சம் இயக்கிவிட்டிருக்கிறீங்க:)

    நல்ல முயற்சி! நல்ல நல்ல ரிப்ஸ்;)
    பகிர்வுக்கு மிக்க நன்றி இமாஆ;))

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு நன்றி இளமதி. ;D

      Delete
  4. red and white combination looks very pretty !!
    நான் இதைபோலவே சமீபத்தில் பார்த்தேன் ரெட் பெர்ரி பழங்களுடன் ..
    ரொம்ப அழகா இருக்கு இமா ..

    ReplyDelete
    Replies
    1. //சமீபத்தில் பார்த்தேன்// ம்... விலை !!
      பார்த்தால் தலை சுற்றும் இங்கே.

      Delete
  5. நல்ல முயற்சி!
    அழகாக இருக்கிறது

    ReplyDelete
  6. சூப்பர்ர்,ரொம்ப அழகா இருக்கு இமா...

    ReplyDelete
  7. Thanks Thanabalan, Viji, Menaga, Jeevan & Divya.

    ReplyDelete
  8. சாப்பாட்டு கூடை அழகு அதுவும் நீங்க அலங்கரிச்சதுக்கு அப்புறம் அழகோ அழகு. வெள்ளை நெட் தான் நானும் வெச்சு இருந்தேன் . ஆனா நெறைய நாள் ஏதாச்சும் கொழம்பு அது மேல பட்டு அசிங்கம் ஆகிடும். அப்புறம் நான் கழுவுறேன்னு நெட் கிழிஞ்சிடிச்சு. அதுக்கு அப்புறம் இதை வாங்கலே. இனிமே பார்த்தா வாங்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ம்.. அதனால்தான் மலிவு விலைக்கே திரும்பத் திரும்பப் போகிறேன் கிரி.

      Delete
  9. //இரண்டாம் மாதமே தூர உதைத்து விட்டுச் சிரிப்பார்//

    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி குறும்பு தான் இல்லே. எனக்கு உலகத்தில் மிகவும் பிடித்ததும் அழகானதும் குழந்தைகள் தான். ஒரு வயசுக்குள் இருப்பவர்கள் அவ்ளோ அழகு

    ReplyDelete
    Replies
    1. ;) வளர்ந்துருறாங்க கண் மூடித் திறக்க. ஹ்ம்!

      Delete
  10. ரொம்ப அழகு, ஆனால் வெள்ளை வெளேருன்னு இதேல்லாம் என கை க்கு தாங்காது இமா

    ReplyDelete
  11. நல்ல முயற்சி. பார்க்க மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள், இமா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  12. decoration super imma

    ReplyDelete
    Replies
    1. Not sure who you are. Thanks a lot for your lovely comment.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா