Tuesday 9 October 2012

சிங்கப்பூர் ஜெம் & மெட்டல்ஸ்

விடுமுறையின்போது என்னை மிகவும் கவர்ந்த இடம் இது.

முதல் முறை சென்ற போது எங்களோடு சம்பந்தமில்லாத ஒரு குழுவினரோடு சென்றிருந்ததால் அதிகம் பார்க்க வசதி கிடைக்கவில்லை; குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வண்டியிலிருந்தாக வேண்டி இருந்தது.

கூடவே வந்த 'கைட்' சொன்னவை பலதும் இயந்திர ஒலியில் காதில் விழவில்லை.
கற்களைத் தேவையான வடிவங்களில் தேய்த்து எடுக்கிறார்கள்
அவை பொதுவான விளக்கங்களாகவே இருந்தன; என் சந்தேகங்களைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கவில்லை. 

ஆனால் கண்ணுக்கு மட்டும்....
 விருந்துக்குக் குறைவில்லை.
கடைசி இராப்போசனம்
 ஒவ்வொரு படைப்பும் கொள்ளை அழகு.
படம் பிடிக்கத் தடை என்பதாக அறிவிப்புப் பலகைகள் சொன்னாலும் மறுப்பு வரவில்லை.
பாதி நிலையில்...
மீண்டும் பார்வையிட வர அனுமதி கிடைக்குமா என்று வரெவேற்புப் பெண்மணியை விசாரிக்க, தன் அடையாள அட்டையில் தேதி குறித்துக் கொடுத்தார். எப்போ வந்தாலும் அந்தத் தேதிக்குரிய கழிவு விலை கிடைக்கும் என்றார். அவருக்கு தொலைபேசியில் அழைத்தால் போக்குவரத்தும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். 
 
"இந்தச் சாடிகள் ஒற்றைக்கற் செதுக்கு வேலைகள்
மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினோம். பொருள் வாங்கும் நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க போக்குவரத்துச் சலுகையைத் தவிர்த்தோம்.  வாயிலில் எங்கள் வரவு பற்றி ஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்தது போல. ;) வரவேற்புப் பலமாக இருந்தது. அதே பெண் வந்து அழைத்துப் போனார். சற்றுக் கூட இருந்துவிட்டு தனியே பார்க்க விட்டுவிட்டார். (அங்கிருந்து கிளம்பும்போது அடுத்து நான் செல்லவிருந்த இடத்திற்கு இலவச வாகன வசதி செய்து கொடுத்தார் இவர்.)

எனக்கு இதுபோன்ற கைவினைகள் பிடிக்கும்.
        ஒன்று போல் இன்னொன்று இராது என்பது இவற்றின் சிறப்பு.
அணிகலன்கள் சிற்பங்கள் செய்தவை போக மீதியாகக் கிடைக்கும் கற்கள் கொண்டு இவை தயாராகினாலும், நுணுக்கமான வேலைப்பாடு, செலவிடும் நேரம் என்று பார்த்தால் விலை அதிகம் என்று சொல்லத் தோன்றவில்லை.

கேட்டுத் தெரிந்துகொண்ட விபரங்கள் சில - சில வருடங்கள் முன்பு வரை இது போன்ற இருபரிமாண அமைப்புப் படங்கள் மட்டும்தான் தயாராயிற்றாம்.
தற்போது தயாராகும் முப்பரிமாண அமைப்புகளுக்கு உட்கட்டமைப்பாக கடினமான ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதாகச் சொன்னார்கள்.
மயிற்தோகை - செப்புத் தகட்டில் வெட்டி வளைத்து அதன் மேல் கற்துகள்கள் ஒட்டப்படுகின்றனவாம். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, பாதுகாப்பான முறையில் பொதி செய்து அனுப்பி வைப்பார்களாம். ஒவ்வொரு படத்தின் பின்னாலும் கற்கள் & பெயர் கொண்ட மாதிரி அட்டை இணைக்கப்பட்டிருக்கிறது.
சில கண்ணாடிக் கூடுகளில் காட்சிப் பொருட்களோடு சிறிய குவளைகளில் நீர் வைத்திருப்பது கவனத்தில் பட, விசாரித்தேன். வெப்பநிலை மாற்றம் கற்களை / படைப்புக்களைப் பாதிக்காதிருப்பதற்காக அப்படி என்றார்கள்.

அணிகலன்களுக்குத் தனிப் பகுதி வைத்திருக்கிறார்கள். தோடு தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமில்லை. கண்ணில் பட்ட பிடித்த தோடுகள் பாரமாகத் தோன்றவும் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
என் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு சிறிய பறவை மருமக்களுக்கு சில அணிகலன்கள் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

இத்தனை அழகாகப் படங்களைச் செய்தவர்கள் அவற்றின் பின்னணியிலும் சட்டம் (ஃப்ரேம்) தெரிவு செய்வதிலும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாமோ! வெள்ளை நாரையும் வெண்கழுகும்...
வெள்ளை 'கான்வஸ்' பின்னணியில்... அவற்றின் அழகு சரிவர வெளிப்படவில்லையோவென்று தோன்றிற்று. தங்க நிறச் சட்டங்கள் சில படங்களுக்குப் எடுப்பாக இல்லை. அதுபோல்... சுத்தம் செய்யச் சிரமமான, விலையான படைப்புகள் இவை - கண்ணாடிப் பேழை போல் 'ஃப்ரேம்' அமைப்பு இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காலப் போக்கில் ஒன்றிரண்டு கற்கள் விலகினாலும் தொலைந்து போகாமல் உள்ளேயே இருக்கும்; மீண்டும் ஒட்டிக் கொள்ளலாமல்லவா!

மூத்தவரும் இதே அபிப்பிராயம் கொண்டிருந்தார். பொருத்தமான கண்ணாடிப் பேழைச் சட்டங்கள் கிடைக்கும் வரை... தன்னுடையதை 'க்ளிங் ராப்' சுற்றி சுவரில் மாட்டிவிடப் போகிறாராம். ;)
~~~~~~~~~~

38 comments:

  1. ரொம்ப நல்ல கலக்‌ஷன் இமா :) - வனிதா

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருகை தந்து கருத்தும் கொடுக்கிறீங்க. சந்தோஷம். நன்றி வனி.

      Delete
  2. ஹையோ:-o என்னன்னு சொல்லுறது இமா!!!
    படங்கள் அருமையான கைவேலைப்பாடுகளுடன் மிக நுணுக்கமா அழகாயிருக்கு. பெயிண்டிங் கலர் எல்லாமே நல்லா இருக்கு.

    நீங்க சொல்றதும் சரிதான். இவ்வளோ வேலைப்பாடுமிக்க பொருளை அதுக்க தகுந்தாப்போல் நல்ல முறையில் ஃப்ரேம் போட்டு விற்றால் இன்னும் வரவேற்பை பெறும். இவ்வளவு செய்பவர்கள் அதில்போய் மிச்சம்பிடிக்கிறார்களோ:(

    ஒற்றைக்கல் வேலைச் சாடிகள் நம்பவே முடியலை;)
    ப்ரமிப்பாக இருக்கு இமா!
    இன்னும் இருக்கோ? தொடரும்னு போடலேலை அதுதான் கேட்கிறேன்:)))))

    பகிர்வுகளுக்கு மிக்க நன்றி இமா!

    ReplyDelete
  3. //பெயிண்டிங் கலர்// துளியும் இல்லை இளமதி. அவை எல்லாமே Semi Precious Stones.... ஒட்டுவேலை.

    ReplyDelete
  4. ஓ! அப்படியா. நான் பெயிண்டிங்கும் சேர்த்து அங்கங்கே இருக்குன்னு நினைச்சுட்டேன்.

    வேணுமெண்டா பாருங்கோ அஞ்சு வந்து அந்த மீன் படம் எனக்குன்னு எடுத்துப்பா:))

    ஆனா பாருங்கோ எனக்கென்னு 'மூன்' போட்ட படம் ஒண்ணுமே இருக்கேலை:’(

    உடன் பதிலுக்கும் மிக்கநன்றி இமா:))

    ReplyDelete
    Replies
    1. ம்... மூன் வேணூமோ!! ;) ஸ்பெஷலாக அனுப்பி வைக்கட்டோ!! ;)

      Delete
    2. http://imaasworld.blogspot.co.nz/2012/10/blog-post_10.html

      Delete
  5. வெள்ளை நாரையும், வெண் கழுகும் அபாரம் இமா. இவற்றின் படம் வரைந்து அதன் மேல் மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரை செதில்கள் போல் கட் பண்ணி வெட்டி ஒட்டி விடலாமா..என ஒரு ஐடியா தோணுது. நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ம்.. முயற்சித்துப் பாருங்க. நிச்சயம் அழகா வரும்.

      Delete
  6. கண்ணாடிப் பேழை போல் 'ஃப்ரேம்' அமைப்பு இருந்திருந்தால் //

    Try to put them in Deep box or shadow box frame .
    that's what we normally use for quilled art .
    art works are gorgeous and stunning ...
    shall come again and view them .somethings wrong with my computer ..everything's Kaputt ..

    ReplyDelete
    Replies
    1. That's what I was talking about 2 Angel. The ones I hav nw in stock r of a different size. da frame 2 needs 2 match da pic. No time 4 shopping nw. will hav 2 wait. grr. Allen & Chris r good carpenters. Trying 2 push them into making one 4 me.

      Delete
  7. படங்கள் கொள்ளை அழகு...

    ReplyDelete
  8. ஆஆ.. இமா சிங்கப்பூர் போனீங்களோ? எங்கட பில்லா 3 அங்கயோ இருக்கிறார்ர்?:) கண்டு பிடிச்சிட்டனே:).

    ReplyDelete
    Replies
    1. சரியான ட்யூப் லைட் பூஸ். ;)) போக முதலும் சொன்னன் உங்கட பக்கம்.
      பில்லாக்குத் தெரிஞ்சிருந்தது... எப்பிடி லிங்க் கொடுத்தாலும் அதிராபேபி பிடிக்க மாட்டா என்று. ;)

      Delete
    2. //சரியான ட்யூப் லைட் பூஸ். ;)) //

      என்னை விட மோசமா இருக்காங்களே :)) ஹும்ம்

      Delete
  9. Flower vase ரெண்டும் சூப்பர்.. உப்படி சிலது நானும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. //எப்போ வந்தாலும் அந்தத் தேதிக்குரிய கழிவு விலை கிடைக்கும் என்றார். அவருக்கு தொலைபேசியில் அழைத்தால் போக்குவரத்தும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். //

    இது நல்லாயிருக்கே... இப்படியெனில் திரும்பவும் போகத் தூண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தூண்டில்தான். ஆனால்... அவங்கட விலைகள் தூண்ட இல்ல. ;) வடிவா இருக்குதெண்டுதான் திரும்பப் பார்க்கப் போனன் அதீஸ்.

      Delete
  11. ஹையோ இமா!!! கிரிஸ் அங்கிள் கிட்டக் கிட்டப் போறார்ர்:))... ஹையோ பழனிமலைக் கந்தா என்னைக் காப்பாத்துங்கோ.. என் வாய் அடங்காதாமே:))

    ReplyDelete
    Replies
    1. //என் வாய் அடங்காதாமே:))//

      டீச்சர் தடி எடுத்து கிட்டு வராங்களாம் வாயிலேயே போட:)) என்னதான் இருந்தாலும் க்றிஸ் அங்கள் போன பதிவில போட்ட இருபது வயது:)) பூவையை விட்டு எங்கேயும் போக மாட்டாங்களாம்!

      Delete
    2. க்றிஸ் பற்றி நன்கு தெரிந்திருக்கிறது கிரீஸுக்கு. தாங்க்ஸ். ;)

      Delete
  12. அந்த மீன், மயில், கழுகு சூப்பரா இருக்கு... பார்க்க பார்க்க ஆசையா இருக்கு.

    ReplyDelete
  13. உண்மைதான் கண்ணாடிக்குள் எனில் தூசும் படியாது கலரும் மங்காது...

    சரி அடுத்து முஸ்தஃபா ஹோட்டலை போடுங்க இமா:).. அங்குதான் முட்டை ரொட்டி பேமஸ்.

    ReplyDelete
    Replies
    1. நான் அங்க போகேல்லயே அதீஸ். ;( சனம் குறைவா அமைதியா இருக்கிற இடமாகத் தேடினோம்.

      Delete
    2. எல்லாம் கற்கள் எண்டபடியால் ஒருநாளும் கலர் மங்காது அதீஸ்.

      Delete
  14. அழகிய படம் போட்டு மீண்டும் சிங்கப்பூர் நினைவை தீண்டிவிட்டீர்கள் இமா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நேசன். சிங்கப்பூர்ல இருந்தீங்களோ!!!

      Delete
  15. கற்கள் வைத்து இத்தன அழகா செஞ்சு இருக்காங்கன்னா ஆச்சரியமா இருக்கு டீச்சர். எனக்கு ஆர்ட் & கிராப்ட் பத்தி தெரியாது சோ நீங்க என்ன சொன்னாலும் ஆச்சரிய படுவேன் சிரிப்பு வந்தா மனசுக்குள்ளே பூச பார்க்காத படி சிரிச்சுக்கோங்க :))

    ReplyDelete
    Replies
    1. கண்ணை மூடுங்கோ பூஸ். ;))

      Delete
  16. படங்களும் பதிவும் அருமை. ஜெம்மென்ற பதிவல்லவா! ;)

    ReplyDelete
  17. இமா நானும் சிங்கப்பூர் போனபோது பார்த்தேன்.அப்போது எனக்கு மும்பை எலிஃபேண்டா குகையில் இது போல நிறைய கலர் கற்கள் விற்பனைக்கு வைத்திருந்தது நினைவில் வந்தது.அவை விலையோ கொள்ளை மலிவு.அவற்றில் இது போல செய்தால் எப்படி இருக்கும்னு நினைச்சிகிட்டேன்.-நிகிலா

    ReplyDelete
  18. mee the first.....

    all photos super.....

    :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா