பின்தொடர்வோர், பார்வையிடுவோர் அனைவருக்கும்...
- இலிருந்து நன்றிகள். ;) எதற்கு என்கிறீர்களா!!
நான் கடந்து வந்த 99 இடுகைகளிலும் என்னைப் பொறுத்துக் கொண்டமைக்கு.
இது இமாவின் உலகத்தில் நூறாவது இடுகை என்பதாகப் பதிவுகள் சொல்கின்றன. ;) சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன், ஆதரவுக்கு மிக்க நன்றி தோழமைகளே. ;)
இதெல்லாம் இங்கு Winter Gardens சென்றிருந்த போது சுட்டது.
இமா,மலர்கள் கண்ணிற்கு பார்க்க மிக்க குளிர்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
ReplyDeletecongrats for 100th post & cute photos!!
ReplyDeleteதங்களுடைய 100வது பதிவிற்கு வாழ்த்துகள்...படங்கள் அழகு...
ReplyDeleteஇனிய வாழ்த்துகள் x1^10000000000000000 பதிவுகள் போட.
ReplyDeleteபல நூறு
ReplyDeleteஇடுகைக்கு
வாழ்த்துக்கள்.
Imma, Wow 100 posts. Congrats. Cute looking flowers.
ReplyDelete100வது இடுகைக்கு வாழ்த்துக்கள். படங்கள் அருமை.
ReplyDeleteஇரண்டாவது ரியல் சூப்பர். ( கடல் அலை நீர் ரிடர்ன் போவது )
பாராட்டுக்கு நன்றி ஆசியா, மேனகா, கீதா, மதுமிதா & வாணி.
ReplyDelete~~~~~~~~~~
ஹைஷ்...!!!! ;))
பா..வம் வலை உலகப் பெருமக்கள். என்னை வாழ்த்துறது எண்டு அவங்களுக்கு சாபம் போடாதீங்கோ. ;))
~~~~~~~~~~
நன்றி ஜெய்லானி. அது ஓர் நினைவுக்காக எடுத்தேன். மாசி மாத ஆரம்பத்தில் ஓர் அந்திப் பொழுதில் (5:00 pm இருக்கும்) வந்த அலை வெதுவெதுப்பாகவும் மீண்ட நீர் குளிராகவும் இருந்தது. பாதங்களுக்கு இதமாக இருந்தது. அனுபவித்து எடுத்த படம். ;)
இன்னும் பல நூறு சதங்கள் இடுகைகள் இட வாழ்த்துக்கள் இந்த பூவுக்கெல்லாம் பேர் சூட்டியிருந்தால் :௦ ) என்னென்ன பூ அப்படின்னு தெரிந்திருக்கும்
ReplyDeleteஎல்எஸ் :)
Well Done Immamma =))
ReplyDeleteநீர் மேல மனிதர் நடப்பதை இன்னிக்குத் தான் பார்க்கறன் :))
ReplyDeleteஎத்தனை வண்ணங்கள்.. வகைகள்.. பூக்களை நன்றாக சுட்டிருக்கீங்கள்..
வாழ்த்துக்கள் இமா.. உங்களோட தொடரும் பதிவுகளுக்கும் நன்றி..
இமா, Winter Gardens படங்கள் மிக அழகாயிருக்கின்றன. நானும் இப்படிப் பதிவுகள் போட வேண்டுமென ஆசை வருகிறது. முடியவில்லையே. பார்ப்போம். இன்னுமொரு பிறவி எடுத்தால் இமாவின் மகளாய்ப் பிறக்க வேண்டும்.
ReplyDeleteவாழ்த்துவதற்கு
ReplyDeleteவயது இல்லை
அதனால்
மரியாதைக்குரிய
வணக்கங்கள்..
பதிவு மட்டும் இல்லாது
நூறாண்டுகள்
நலமுடன் வாழ
பிராதிக்கின்றேன்.
சூர்யா
எல்எஸ், அது என்ன! :௦ ) 'வின்னி த பூ' கரடியோ! வடிவா இருக்கிறார்.
ReplyDeleteடேலியாக்கள்தான் அதிகம். மற்றது நினைவு இல்லை. சிலது மட்டும் பெயரைப் படம்பிடித்து வைப்பேன். இவற்றுக்கான பெயர்களைக் காணோம். ;( ஆலோசனைக்கு நன்றி. ;)
~~~~~~~~~~
நன்றி அனாமிகா. ;)
~~~~~~~~~~
குழப்படி சந்தூஸ். ;)) மெத்தப் பெரிய உபகாரம். ;)
இமாஆஆஆஆஅ? கன்ரட்டோஓஓஓஓஓஓஓ? ஆ... மிளகாய் துடைச்சுப்போடுங்கோஓஓஓஓ. வாழ்த்துக்கள் இமா... கொஞ்சம் அதிராவையும் கையில பிடிச்சுக்கொண்டு ஓடினால் நானும் நூறைத் தொட்டிடுவேனெல்லோ... சரி முறைக்கவாணாம்.
ReplyDeleteகடவுளே... பூச்சி கீச்சி கடிச்சிட முன் சூஸைப் போடுங்கோ இமா..... நீங்க இப்படியெல்லாம் சூஸில்லாமல் படமெடுத்துப்போட்டால் இனி மாணவர்களாகிய:):) நாங்களும் தொடரப் பார்த்தாலும் பார்த்திடப்போறம் புளொக்கில்:), ஆரது ஓடுறது.. ஆ... சந்து வாணாம் சொன்னால் கேளுங்கோ.... வாணாம் வாணாம்... இதெல்லாம் தொடரப்படாது சந்து...
சூப்பராக இருக்கு இமா... நான் பூக்களைச் சொன்னேன்..
///என்னை வாழ்த்துறது எண்டு அவங்களுக்கு சாபம் போடாதீங்கோ. ;))// ஆர் இமா இது??? சாபமோ??? ஆளைப்பிடிச்சுத்தாறீங்களே?? எனக்கு ஆர் சொன்னதென விளங்கேல்லை??? இனியும் என்னால சும்மா இருக்கேலாது....
மீண்டும் என் இனிய வாழ்த்துக்கள். நேரம் இல்லாமல் இருக்கு மீண்டும் வந்து கீழே படிக்கிறேன்.
எல்லாப் பூக்களுமே அழகுதான்!! அந்த 8-வது படத்தில், மொட்டுகளைச் சேர்த்துச் சொருகிச் செய்தது போல உள்ள பூ, பேரழகு!! (பெயர், இனி தெரிந்தால் சொல்லவும்!)
ReplyDeleteஅதுபோலத்தான், உங்கள் பதிவுகளும்!! அதுக்குள்ள நூறா!! ம்ம்.. நடத்துங்க!! வாழ்த்துகள்!!
மம்மி, நீங்கள் சந்தனாவை விடக் குழப்படியாக இருக்கிறீங்கள். ;) ஒரு கிழவி இன்னொரு கிழவியிட்டக் கதைக்கிற கதையைப் பாருங்கோவன். ;) குழப்படி மம்மி. ;)
ReplyDelete//இன்னுமொரு பிறவி எடுத்தால் இமாவின் மகளாய்ப் பிறக்க வேண்டும்.//
ஹூம்... இப்பவே லேட்டாப் போச்சுது போல கிடக்கு. செல்வி எல்லாம் ஜோக்குட்டீட படத்தோட உலவுறா. பாவம் நீங்கள், இப்ப இப்பிடி விரும்பிப் போட்டு பிறகு வெக்கத்தில எல்லார்ட்டையும் என்னை 'கிரான்மா' எண்டு அறிமுகப்படுத்த வேண்டி வரப் போகுது.
ஒண்டு செய்வமே! வேணும் எண்டால்.... பேத்தியாகப் பிறக்கிறீங்களே! ;)) ஒரு கண்டிஷன்... இன்னும் ஒரு ரெண்டு அங்குலம் உயரமாப் பிறக்கிறீங்களே! வேற ஒண்டும் இல்லை... உடுப்பு, செருப்பு வாங்கக் கஷ்டமில்லாமல் இருக்கும்.
ம்... அப்பவும் செபா எண்டுதான் பேர் வைக்க வேணுமோ, இல்லாட்டி ஏதும் 'மொட்' பேர் தெரிவு செய்து வச்சு இருக்கிறீங்களோ! சொன்னீங்கள் எண்டால் எங்கயாவது நோட் பண்ணி வைப்பன். பிள்ளைகளுக்குச் சொல்லி வைக்க வேணும் எல்லோ!
நன்றி சூர்யா. ;)
ReplyDelete//நானும் நூறைத் தொட்டிடுவேனெல்லோ.// ? வயசைச் சொல்லுறீங்களோ மொப்ஸ்! சரி வாங்கோ, கையைப் பிடியுங்கோ.
ReplyDelete//எனக்கு ஆர் சொன்னதென விளங்கேல்லை?// விளங்கேல்லை!! விளங்கேல்லை!!!!! ;)))
ம்.. இந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் நடுசென்டர்ல ;) நாங்கள் மாட்டிக் கொண்டு அடிபடுறம்.
//கீழே படிக்கிறேன்.// நல்ல மாணவி எண்டால் மேல மேல படிச்சுக் கொண்டு போகோணும் அதீஸ்.
//பேரழகு// ? பேர்... அழகா!! நான்தான் சொல்லவே இல்லையே! ;)
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஹுசேன். ;)
வாழ்த்துக்கள் இமா! ஆயிரமாவது பதிவு போடும் போது என்னைபற்றியதாக போடுங்கோ.. கிக்...கிக்...கிக்.... எப்படியாவது சரித்திரத்தில இடம் பிடிக்கணும் என்று ஒரு வெறி !!!
ReplyDeleteசெபாவும் இமாவும் பேசுவதை ஒட்டுக் கேட்டுவிட்டன் :))
ReplyDelete//நீங்கள் சந்தனாவை விடக் குழப்படியாக இருக்கிறீங்கள். ;) // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
ஒரு டவுட் - ஒண்டு என்பதை பேசும் போது எப்படி ப்ரொனவுன்ஸ் பண்ணுவீங்கள்? onru or ondu? அதே மாதிரி எண்டு வை எப்படி சொல்வீர்கள்??
வாழ்த்துக்கள் இமா.இன்னும் நிறைய பதிவுகள் தரவேணும்.
ReplyDeletegute besserung.
பேச்சு வழக்கு இது சந்தூஸ். எப்பிடிச் சொல்லுறது!! பண்டிதர் மாரிட்டக் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என்னட்டக் கேட்கிறீங்கள்.
ReplyDeleteம்.!! இப்ப.... "சந்தனாட கேள்வியைக் 'கண்டு' எனக்கு ஷொக் ஆகிப் போச்சுது," எண்டு சொல்லுறன் எண்டு வையுங்கோ. 'கண்டு' மாதிரி 'எண்டு' 'ரெண்டு' ('டி' க்கும் 'டு' வுக்கும் நடுவில) எல்லாம் வரும்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில 'சிரித்த முகமும் கண்டு' எண்டு ஒரு பாட்டு வரும், பாடிப் பாருங்கோ.
இப்ப இமா இப்பிடிச் சொல்லிப் போட்டன் எண்டு சாமத்தில இருந்து ராதாக்கா மாதிரி நீட்டி முழக்குறது இல்ல. பாவம் திரு. ;)
என்ன, க்ளியர் ஆச்சுதோ! இன்னும் குழம்பிப் போனீங்களோ!! ;)
//ஆயிரமாவது பதிவு போடும் போது என்னை பற்றியதாக போடுங்கோ.// அதுக்கு முதலே போட்டுருவன் இலா. இல்லாட்டி பிறகு மறந்து போயிருவன். ;)
ReplyDelete~~~~~~~~~~
Dank Ammulu. Wann wollen Sie anfangen zu bloggen? ;)
வாழ்த்துக்கள் இமா!
ReplyDeleteஅதுக்குள்ள நூறா!! ம்ம்.. நடத்துங்க!!
பதிவு மட்டுமல்ல, வயதும் நூறைத் தாண்ட வேண்டுகிறேன்.
நன்றி செல்வி. ;) நீங்களும் என்னோட கையைப் பிடிச்சுக் கொண்டு வருவீங்கள் தானே ?
ReplyDeleteஉங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இமா! பூக்கள் அனைத்துமே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு!
ReplyDeleteThanks Mahi. ;)
ReplyDeleteஒண்டுமே புரியல இமா.. ஹைஷ் பதில் சொன்னா மாதிரி இருக்கு :))))))) (மொறைக்காதீங்கோ ஹைஷ் :) )
ReplyDeleteஏன் கேட்டேன்னா - இங்க ஒன்று என்பதை onru என்று (enru) உச்சரிக்கிறோம்.. அப்ப, இலங்கைல ஒண்டு என்பதை ondu எண்டு (endu) தானே சொல்லுறீங்கள்??
ம.பொ.ர வா? ;))
ReplyDelete