மு.கு
பின்னால ஒரு பப்பி 'வவ் வவ் வவ்' என்று துரத்திக் கொண்டு ஓடி வரேக்க காலில எத்தின ஆணி குத்தினாலும் 'மொழி'யில பிருத்திவிராஜ் ஓடின மாதிரி ஓட்டமா ஓடி வீட்டு வாசலில போய்த்தானே நிற்பியள்!
அது போல நினைச்சுக் கொண்டு விளங்கினாலும் விளங்காட்டாலும் ஓட்டமா வாசிச்சுக் கடைசியில 'முற்றும், நன்றி' என்று காண மட்டும்... ஓடுங்கோ. நிற்கப்படாது, இப்பவே சொல்லீட்டன். ;)
--!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!--
பதின்ம வயதுகளில் ஒரு உற்சாகத்தில் ஏன் தாயாருக்கு விடைத் தாள்கள் திருத்துவதற்கு உதவவென்று நானாகவே முன்வருவேன். அவர்கள் என்னிடம் கொடுப்பது பெரும்பாலும் 'சரியாயின் சரி என்றும் பிழையாயின் பிழை என்றும் கூறுக.' என்றோ அல்லது 'மிகப் பொருத்தமான விடையின் கீழ் கீரிடுக' என்றோ தான் இருக்கும். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். (அதுதான் தொழில் தர்மம்.) இறுதியில் அனைத்துப் புள்ளிகளையும் கூட்டி சிவப்பு மையால் ஒரு வட்டம் வரைந்து அதனுள் எழுதிக் கொடுப்பேன்.
இதில் எனக்கு என்ன இலாபம் என்கிறீர்களா! இமாவுக்கு சிரிக்கப் பிடிக்கும். விடைத்தாள்களில் காணப்படும் மீதிக் கேள்விகளைத் திருத்தும் உரிமை எனக்கு வழங்கப்படாவிட்டாலும் அவற்றை வாசித்துச் சிரிக்கும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது இல்லை.
ஒரே சமயத்தில் எல்லாப் பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகள் நடக்கும். எனக்கு பரீட்சைகள் முடிந்ததும் இது பொழுது போக்கு, மன அழுத்தத்தை நீக்கும் மருந்து. சிரித்தாலும் நிறையச் சிந்திப்பேன். கந்தையானாலும்... உடுத்திக்கொள்ள வேண்டும், ஆறிலும் சாவு... குளத்திலும் சாவு, அர நனைந்தவனுக்கு... ;) துவாய் கொடுக்க வேண்டும், என்பது போன்ற அதி அற்புதமான கருத்துக்கள் எல்லாம் மேதாவிகளால் சொல்லப்பட்டு இருக்கும்.
அது போல 'எங்கள் ஊரில் அக்கினி பகவான் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு நாள் ஆவேசம் வந்தது. அவன் தன் வீட்டில் இருந்த பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு வாசற் கதவைத் திறந்து வெளியே ஓடினான்.' என்பது போல் ஆரம்பிக்கும் கவிதையான கட்டுரைகளும் (கொடுக்கப் பட்ட தலைப்பு 'அக்கினி பகவான் ஆவேசம் கொண்டான்.') படித்திருக்கிறேன்.
'வளரும் பயிரை முளையிலே தெரியும்' என்றோ 'எல்லாம் செபா படிப்பிச்ச அருமை' என்றோ நினைக்கத் தோன்றவில்லை. கல்வித் திட்டம் அப்படி. காலத்தின் கட்டாயம், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அப்படித்தான் கேள்வித்தாள்கள் அமைப்பு இருந்தது அந்தக் காலத்தில்.
குழந்தைகள் மனதுக்கு அது சரி என்று பட்டிருக்கும், எழுதி இருப்பார்கள். இப்போது கூட சமயங்களில் நான் குழம்பிப் போவேன். எதையாவது நினைத்து நான் கேள்வி கேட்க குட்டி மூளை வேறு ஏதாவது அர்த்தம் செய்து சரியாகத் தப்பாகப் பதில் சொல்கையில் நான்தான் தப்பு என்று புரிந்து விடும். உ+ம் Do you know 'Grace'? - நான், 'Is it the girl in room 16?' - ஒரு குட்டி மாணவன். ;) நான் கேட்டது, உணவுக்கு முன் செபம் சொல்லத் தெரியுமா? என்று. அவர்கள் இடத்தில் இருந்து சிந்திக்கத் தவறி இருப்பேன்.
திசை மாறிப் பயணிக்கிறேன். ;) மீண்டும் விட்ட இடத்திலிருந்து... இது வேறு ஒன்றும் இல்லை, வடை சுடுகையில் ஒன்றிரண்டு வடிவம் மாறி வருவதில்லையா! அது போல. அதற்காக அவற்றைத் தூக்கி எரிவோமா! (என்ன சிரிக்கிறீங்கள்! கர்ர்ர்... ஒழுங்கா வாசிச்சு முடியுங்கோ. இன்னும் நன்றி சொல்லேல்ல நான்.) அமைப்பாக வருவது விருந்தினர்க்கு, கோணல் வடை எனக்கு. ;) அதற்காக... தானே, தனியே சாப்பிட்டு விடுவோம் என்று எண்ணி யாராவது கோணலாகவெ சுடுவார்கள் என்று நினைக்கிறீர்களா!! நான் நினைக்கவில்லை. நாங்கள் இன்னமும் பாடசாலை செல்லும் மாணவர்களா? இல்லையே!!
வடை என்றால் வட்டமாக இருக்க வேண்டும். இடியப்பம் நூல் மாதிரி இருக்கவேண்டும். எதையும் பரிமாருமுன் ஒரு முறையாவது சுவை பார்க்கவும் வேண்டும். இது கட்டாயம். (இல்லாட்டால் கண்ணை மூடிக் கொண்டு குழம்பில மிளகாய்த் தூளுக்குப் பதில் கொப்பித்தூலப் போட்டிருக்கிறான் எண்டு எனக்கு எப்பிடித் தெரிய வரும்!!) சதுரமாகச் செய்து வைத்தால் வடையா? வட்டமாக இருந்தால்தான் வடை. கோப்பித்தூள் போட்டால் கோப்பி. மிளகாய்த்தூள் போட்டால்தான் குழம்பு.
எங்கேயாவது இமா கோணலாக வடை சுட்டுப் பரிமாறி இருக்கிறேன் என்று கண்டால் (இங்க வேணுமெண்டே தான் கொனலாச் சுட்டிருக்கிறான்.) தைரியமாகச் சொல்லுங்கள். திருத்திவிடுகிறேன். 'இமாவின் உலகத்'தில் விதியே என்று யாரும் சாப்பிட்டு விட்டுப் போகக் கூடாது. எனக்குக் கோணல் வடை பிடிக்காது. யாருக்கும் கொடுக்கவும் விரும்பவில்லை. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகமும், என்று நினைக்கிற ஆள் நான் இல்லை.
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். பழமொழி.
நாம் ஒன்று நினைக்க கூகிளார் ஒன்று நினைப்பார். புதுமொழி.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், என்று எப்படி எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை. 'என்'னை 'ஏன்' என்கிறார். மேலே ஒரு இடத்தில் கூட 'கீரி' வைத்து இருக்கிறார். ;)
என் தாய் மொழியை நானே கொல்லலாகுமா!!! பேச்சு வழக்கு வேறு, எழுத்து வழக்கு வேறுதான். இருப்பினும் தவறுகள் திருத்தப் படவேண்டும். இல்லாவிடில் பேச்சு வழக்கும் வழக்கிழந்து விடும். ரசிக்க இயலாது போய்விடும்.
நான் திருந்த நினைக்கிறேன். ;) எனவே... என் உலகில் 'சங்கிலியைக் காணோம்.', 'ஏன் காலை எடுத்துப் போட்டீங்கள்?' 'விசிறி எங்கே? என்பதான கருத்துரைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
வருக, வழங்குக.
முற்றும் *********************************************
பி.கு
மேலே உள்ள கட்டுரையில்!! காணும் எழுத்துப் பிழைகளைத் தாங்களே திருத்திப் படித்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன். ;) நோக்கம் கருதி அவற்றை அப்படியே விட்டிருக்கிறேன். நன்றி
- அன்புடன் இமா
சூப்பர் இமா! ரொம்ப நகைச்சுவையா எழுதி இருக்கீங்க... எனக்கு குட்டி பசங்க பதில்கள் ரொம்ப பிடிச்சிருக்கு... மத்தபடி பிழை திருத்தம்.. நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆகிறேன்...
ReplyDeleteSSSS ;)))
ReplyDeleteவாசற்படி வந்தும் நாய் துரத்தினால் என்ன செய்யனும் இமா? வீடு வேற பூட்டியிருக்கு :)))))))))))))
ReplyDeleteஓக்கை.. சொல்ல வந்த விஷயம் இது தானே - பிழையில்லாமல் எழுதப் பழகோனும்.. பேச்சுத் தமிழில் எழுதலாம் தானே.. எழுத்துப் பிழை இல்லாமல் எழுதிடுவேன்.. ஆனால் இலக்கணப் பிழை தவிர்க்க முடியாதது.. மன்னிச்சுப் போடுங்கோ..
ஓவியம்.. நீங்கள் வரைந்ததோ? ஒரு விரல் மட்டும் ஏன் வீங்கியிருக்கு இமா?? :)))))
கூகிளார் தான் இன்னமும் மொழிபெயர்க்கிறாரா?? nhm உபயோகிக்கலாமே??
ReplyDelete//கோப்பித்தூள் போட்டால் கோப்பி. மிளகாய்த்தூள் போட்டால்தான் குழம்பு. //
ReplyDeleteபாலுக்கு பதில் பினாயில ஊத்திட்டா ?!!க்கி..க்கி...
கதவோரம் மரம் ஒன்றும் இல்லையோ சந்தனா!! ;)
ReplyDelete//சொல்ல வந்த விஷயம்// நான் சமையலறையை ச'ம'யலறை என்று எழுதினால் க.கா.போகப் படாது என்பதும்தான். ;)
நானே கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது. அதற்குச் சமயங்களில் 4 மாதங்கள் கூட ஆகிவிடுகிறது. அதற்குள் எத்தனை பேர் படித்து விடுவார்கள். ;)
பேச்சுத் தமிழ், நகைச்சுவைத் தமிழ், சமயங்களில் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதுவது எல்லாம் இருக்கத்தான் வேண்டும் சந்தனா. இல்லாவிட்டால் சுவாரசியம் ஏது!! நான் சொல்ல வந்தது அதை அல்ல. ;)
ம்.. நான் செய்யும் வேலைக்கு கூகிளே தாராளம் எல்ஸ். அதற்கு மேல் என் குட்டி மூளைக்குள் ஏறுமோ தெரியாது. ஆலோசனைக்கு நன்றி. nhm? Natural History Museum!!! ;)
அது 'paint brush'. கவனித்து இருக்கிறீர்கள், நன்றி. என் விரல்களின் அமைப்பு அப்படி. ;)
//பாலுக்கு பதில் பினாயில ஊத்திட்டா!!//
ReplyDeleteஅதையேதான் நானும் கேட்கிறேன் ஜெய்லானி. ;)
இமா நல்ல இருக்கு பதிவு ஹிஹி
ReplyDeleteகாப்பி தூளுக்கு பதில் ஜெய்லானி பினாயில் ஊத்தி எங்க வயிற்ற கழுவ வா??
//மிளகாய்த்தூள் போட்டால்தான் குழம்பு//
ReplyDeleteபோடாமலும் குழம்பு வைக்கலாம் தெரியுமோ? ;-))
என்ன சொல்ல வர்றீங்கண்டு, சத்தியமா விளங்கேலை எனக்கு!! :-(
அத, தப்புதப்பா எழுதினாலும் பரவால்லை, எழுதிடுங்கோ!! :-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.
ReplyDeleteஹுசேன்,
ReplyDelete//போடாமலும் குழம்பு வைக்கலாம்// ஆனால் கோப்பித்தூள் போட்டு குழம்பு வைக்க முடியாது. ;)
//அத, தப்புதப்பா எழுதினாலும்// ;) தப்புத் தப்பா எழுத வேண்டாம் என்று சொல்கிறேன் ஹுசேன். ;)
என்னால் இங்கிருந்து ஓட முடியலை,ரிலாக்ஸ் ஆகத்தானே உங்க ப்ளாக் வர்றது.மண்டை காய்ந்து இருக்கும் பொழுது இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் மனசே குளிர்ந்துவிடுகிறது.
ReplyDeleteஇமா உங்கள் கை அழகாக இருக்கிறது. வரைந்துள்ள படமும் நன்றாக உள்ளது. உங்கள் பதிவு எனக்குப் பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டது. இன்று தட்டச்சு செய்ய முடியவில்லை. விரைவில் தொடர்வேன். உங்கள் திறமைகள் மேலும் வளர்க.
ReplyDelete//இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் மனசே குளிர்ந்துவிடுகிறது.// ;) சந்தோஷம் எப்போ வேண்டுமானாலும் வாருங்கள் ஆசியா. நானும் கொஞ்சம் சிரிக்கிற மாதிரி ஏதாவது கொடுக்கப் பார்க்கிறேன். ;)
ReplyDelete~~~~~~~~~~
Thanks Mum. எல்லாம் உங்கட ஆசீர்வாதம்தான். ;)
//பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டது.// ;))) 'இதயத்திலிருந்து' பதிவு செய்யுங்க. ;)
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
ReplyDeleteமீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்
நன்றி
மீண்டும் வருகிறேன்
வருத்தபடாத வாசிப்போர் சங்க
நிர்வாக தளபதி
காம்ப்ளான் சூர்யா
நன்றி. மீண்டும் வருக. ;)
ReplyDelete