நேற்று ஒரு அறுசுவை உறவினர் சொன்னார், மஹியின் வெஜி பேஸ்ட்ரி வீல்ஸ் நன்றாக வந்ததாக. ;) படம் கூட அனுப்பினார். நானும் சமைத்துப் பார்க்கலாம் என்று இன்று முயன்றேன். விளைவு இது.
அது வேறு ஒன்றும் இல்லை, 'வீல்' காற்று இறங்கி விட்டது.
அது வேறு ஒன்றும் இல்லை, 'வீல்' காற்று இறங்கி விட்டது.
எனக்குப் பிடித்து இருந்தது. வீட்டாருக்கும்தான். நீங்களும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க. ;) படம்தான் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கும். வீட்டில இருக்கிற ஆக்கள் ட்ரை பண்ணுறதுக்கு முதல் உங்களுக்காக அவசர அவசரமாகப் படம் எடுத்தது. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கோ.
வாற வெள்ளிக் கிழமை, ஸ்கூல்ல இந்த வருஷம் புதுசா சேர்ந்து இருக்கிற டீச்சருக்கு பிறந்தநாள். இப்பவே அதுக்குக் கொண்டு போறதுக்கும் ரெடியாக்கி ஃபரீசரில வச்சு இருக்கிறன். வெள்ளி காலைல எழும்பி வெட்டி பேக் பண்ணாலாம் எண்டு.
சோஸ், தக்காளி பேஸ்ட் எண்டு ஒண்டும் இல்லாமல் இப்பிடி செய்ய ஏலுமாக இருக்கிறது எனக்கு வசதியா இருக்குது. தாங்க்ஸ் மகி.
சமைச்சுச் சாப்பிட்டுப் பார்த்தாச்சு. அங்க வந்து பின்னூட்டம் எழுத்தில மட்டும் தான் போடலாம். எடுத்த படத்தை என்ன செய்றது! அதுதான் இப்பிடி. ;)
எனக்கும் ஒரு இடுகைக்கு வழி ஆச்சுது எல்லோ!! ;)
படத்தை பார்த்தும் அப்படியே சாப்பிடனும்போல் இருக்கு,அதனால் நானும் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன் இமா..
ReplyDeleteஆஹா அடுக்கி வைத்துள்ள அழகே சொல்லுது, சூப்பருன்னு..
ReplyDeleteஆஹா..சூப்பராக இருக்கின்றது....எனக்கு சாப்பிடனும் போல இருக்கு....
ReplyDeletelooking yummy!!!
ReplyDeleteஅதற்கென்ன, இன்னும் வேணும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கோ மேனகா.
ReplyDelete~~~~~~~~~~
உண்மையில் சுவையும் சூப்பராகத் தான் இருந்தது ஜலீ.
~~~~~~~~~~
எடுத்துக்கங்க கீதா. ;)
~~~~~~~~~~
It was yum and easy too Vany. ;)
~~~~~~~~~~
A :) @ Surya. ;))
ஆஹா..காலையில் எழுந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க இமா!! நன்றி,நன்றி!
ReplyDelete//மகி! என்ன சொல்றீங்க?// சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை! :)
//பரவாயில்லையா?//அசத்தலா இருக்கு!
சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை! :)
ReplyDelete---eppadi varum????
avanga sitha cake appdi...??
இமா,சூப்பராக செய்து அருமையாக ப்ரெசென்ட் பண்ணீருக்கீங்க,தட்டு காலியாகும் முன்பு நானும் எடுதுக்கறேன்.
ReplyDeleteA ;) @ Mahi. ;)
ReplyDelete~~~~~~~~~~
சந்தோஷமா எடுத்துக்கங்க ஆஸியா. ;)
சூப்பரா இருக்கு இமா.
ReplyDeleteஇமா... இந்த குறிப்பு கண்ணில் பட்ட நினைவு இல்லையே... தேடி பிடித்து செய்துடறேன். நீங்க அடுக்கி வெச்சிருக்குறதை பார்க்கவே ஆசையா இருக்கே...... :) - Vanitha
ReplyDeleteவனி, அங்கேயே லிங்க் இருக்கே.
ReplyDelete'மஹியின் வெஜி பேஸ்ட்ரி வீல்ஸ்' க்ளிக் பண்ணுங்க. ;)
~~~~~~~~~~
மிக்க, மிக்க, மிக்க நன்றி அம்முலு. ;)))
கர்ர்ர்ர்ர்.. செஞ்சு வச்சு பார்சல் அனுப்பாம போட்டோ மட்டும் பிடிச்சுப் போட்டுட்டீங்க இமா.. எனக்குப் பசிக்குது இப்போ.. நான் இந்த மாதிரியெல்லாம் சமைக்க இன்னும் சில மாதங்களாகும் :(
ReplyDeleteமாடல் அழகே அழகு !!!
ReplyDeleteஎல்ஸ்,
ReplyDelete//பார்சல்// கட்டாயம் நெக்ஸ்ட் டைம். ;)
//நான் இந்த மாதிரியெல்லாம் சமைக்க இன்னும் சில மாதங்களாகும்// பரவாயில்லை. உண்மையைச் சொன்னால் நாங்க பட்டாளமாப் புறப்பட்டு வந்துர மாட்டோம். ;))
sorry summa parunga..
ReplyDeletehttp://payanapadumthedalsiva.blogspot.com/
ReplyDeleteஜெய்லானி, என்ன சொல்றீங்க!! கமன்ட் இடம் மாறிப் போச்சா? ;)
ReplyDeleteநான் இன்னும் ரிசர்ச் பண்ணிட்டு இருக்கேன். காமரால ஒன்றும் கண்டு பிடிக்க முடியல. ;) வார இறுதியில் தான் பார்க்க வேண்டும். ;) அதற்குப் பின்னால் தான் அங்கு உள்ள கருத்துக்குப் பதில் வரும். தொடர்ந்து உதவுவதற்கு என் நன்றி. ;)
~~~~~~~~~~
சூர்யா, //கேக்// என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே! ;)
அதெல்லாம் எப்போதோ பார்த்தாயிற்று சூர்யா. ;) எதுக்கு sorry சொல்றீங்க? ;)கருத்துச் சொல்லாவிட்டாலும் உங்கள் இடுகைகள் அநேகமானவை பார்வையிட்டு இருக்கிறேன். 'புலம்பல்' கூட முன்பே பார்த்து விட்டேன். ;)
ReplyDelete//என்னத்த பண்ண எப்படி சமாளிக்கனு தெரியாமாட்டுக்கு.. மனசில பட்டத சட்டுன்னு பேசிடறேன் இது தப்பா சரியாய் என்று அறிந்து பேச தெரியல.அதாவது வழி இருந்த சொல்லுங்களேன்...// ;))
மனதில் படுவதைச் சட்டென்று பேசி விடுவது தப்பு இல்லை சூர்யா. ;) சமாளிப்பதற்கு பிரச்சினை எதுவும் இல்லை. இடுகைகளைப் பதிவு செய்யுங்கள். கருத்துச் சொல்ல நினைப்போர் சொல்வார்கள். எல்லா இடுகைகளும் எல்லோரையும் ஈர்க்க முடியாது. அவரவர் தம் இயல்புக்குப் பொருத்தமான இடுகைகளைத் தரும் வலைப் பதிவுகளைத்தான் தொடர்ந்து பார்வையிடுவார்கள். அவற்றுக்குத் தான் கருத்தும் சொல்வார்கள். இதையிட்டுக் கவலைப் படக் கூடாது.
இன்னும் ஒரு வழி இருக்கிறது சூர்யா. ;) சொல்லட்டுமா! முதலில்.... சரியாகத் தமிழில் தட்டச்சு செய்ய முயற்சியுங்கள். அதெப்படி கவிதை என்றால் நல்ல தமிழ், கருத்துச் சொல்ல மட்டும் தங்லிஷ் அல்லது தப்புத் தப்பாக தமிழ் எழுத வரும்!! ;)
முதலில் இதைச் சரி செய்யப் பாருங்கள். நீங்கள் சொல்ல நினைப்பது படிப்பவரை ஒழுங்காகப் போய்ச் சேரும். பிறகு எல்லாம் நலமாகும் என்பது என் அபிப்பிராயம். ;)
(வேறு யாராவது வந்து உங்களுக்கு இதைவிட அருமையான யோசனைகள் சொல்வார்கள்.)
முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
அது வேறு ஒன்றும் இல்லை, 'வீல்' காற்று இறங்கி விட்டது/// என்னாது? வீல்க்கு காத்துப்போட்டுதோ? புல்லாப் போட்டுதோ??? இருப்பினும் அயகாச் செய்துபோட்டீங்கள்.
ReplyDeleteஇருந்தாலும் அதிராவோ கொக்கோ, ஒரு பீஷ் ஐ எடுத்து கொப்பி & பேஸ்ட் போட்டு, கிராபிக்ஸ் வேலை செய்து போட்டிட்டு, ட்ரே முட்டச் செய்துவிட்டமாதிரி, எங்களையெல்லாம் யாரும் பேய்க்காட்ட முடியாது.
நாங்களெல்லாம்... கொம்பியூட்டரில “எல்கேஜீ” எல்லாம் முடிச்சு, இனி அடுத்து என்ன புதுசா வருது என்று படிக்கக் காத்திருக்கிறம், இதைக் கண்டுபிடிக்க மாட்டோமோ?
(அவிச்ச கோழி முட்டை வைக்கவில்லையென்ற புகைதான் எல்லாம்).
ரகசியக்குறிப்பு:
சந்து, கொம்பியூட்டரில ஆக ரொப் லெவல் “எல்கேஜி”தானே???:):)
thank you.imma teacher.
ReplyDeleteஎல்லாரும் எடுத்துகிட்டாங்க இமா:-( எனக்கு இல்லவே இல்லை. இந்த ஷீட் தான் பிரச்னை. இங்கு கிடைத்து விட்டால் தங்கை வீட்டினர் வரும் போது செய்து விடுவேன்.
ReplyDeleteஆன்ரீ,,ஜீனோ லைக்ட் த கிழங்கு பட்டீஸ்..ஆல் ஐடம்ஸ் ஆர் குட். டாங்க்ஸ்.
ReplyDeleteநான் ஒண்டும் பேய்க்காட்டேல்ல அதீஸ். க்ர்ர்ர்,,,, கி.சோ.பு.கண்ணாடி இருக்கு எல்லோ! போட்டிட்டு வடிவாப் பாருங்கோ. ஒவ்வொண்டும் ஒவ்வொரு மாதிரித் தெரியும். ;)
ReplyDelete(எனக்கு வேணும்.)
Thanks Surya. ;)
ReplyDelete//cake// You were talking about the album,right!? ;)
செல்விமா,
ReplyDeleteபட்டீஸ் பேஸ்ட்ரி ரெடி பண்ணி, மெல்லிசா உருட்டி, சதுரமா / நீள் சதுரமா வெட்டி பிறகு மீதி எல்லாம் மகி சொன்ன மாதிரி பண்ணுங்க. சரி வரும்.
ம். ஆல்பம் பார்த்தாச்சா பப்பி. ;) ஷெரீன் மாதிரியே வினோதமான பப்பி நீங்க. ;)
ReplyDeleteஇம்மா நான்
ReplyDeleteஉங்கட கருத்துக்கு நன்றி சொன்னேன் டீச்சர்.
உங்கட கேக் பார்த்தாலே தெரிகிறது
நன்றாக இருக்கும் என்று.
எல்லோரும் ஆ ஓஹோ என்று பாராட்டி விட்டாங்க ..me too say nice
நன்றி
முதலாம் வகுப்பு
காம்ப்ளான் சூர்யா
;)
ReplyDeleteநா கேக் மாடல சொன்னேன். அழகா இருக்கு, இந்த மாடல் . சின்னதா ஒரு நெக்லஸ்-ல் நிறைய இருந்தது நான் வாங்கியதில் , அந்த நினைவு அது.( மாங்கொட்டை டைப் )
ReplyDeleteஅனைத்து
ReplyDeleteசகபதிவர்களுக்கும் தங்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
இப்ப புரியுது ஜெய்லானி. ;)
ReplyDelete~~~~~~~~~~
வாழ்த்துக்கு நன்றி சூர்யா.