பிடித்த பத்துப் பின்னூட்டங்கள், பத்துப் பெண்கள்...
எனக்குப் பிடிக்காத பத்து என்று யாராவது கேட்டால் என் பதில் என்னவாக இருக்கும்!!
யோசித்துப் பார்ப்போம்...
1. கோழி.. உணவாக & அந்தச் சமையல் வாசனை.
2. மீன் கடை (வேறு வழி இல்லாவிட்டால் ஒழிய உள்நுழைய மாட்டேன்.)
3. உடைந்து / வெடித்து இருக்கும் கிண்ணத்தில் காப்பி, தேநீர் குடிக்க நேரிடும் சந்தர்ப்பங்கள். (கவனிக்காமல்தான் கொடுத்திருப்பார்கள், ஆனாலும் நெருடலாக & ஆரோக்கியக் குறைவாகத் தெரியும். கூடுமானவரை பேச்சு சுவாரசியத்தில்! குடிக்க மறந்து விடுவேன். ;) )
4. வின்டரில் விசிடிங் போகும் இடத்தில் யாராவது மூக்கை மூக்கைத் துடைத்துக் கொண்டிருந்து விட்டு அதே கையால் அதுவும் கிண்ணத்தின் மேல் விளிம்பில் பிடித்துக் கையில் தேநீர் தருவது. (நான் ஒரு போதும் தட்டு இல்லாமல் கையில் கொடுப்பது இல்லை. இச் சந்தர்ப்பங்களிலும் பேச்சு சுவாரசியத்தில் குடிக்க மறந்து போவேன். ;) )
5. முன்னனுமதி இல்லாமல் என் தட்டில் "நல்லாச் சாப்பிடுங்க," என்று பரிமாறும் (அதுவும் கோழியை) அன்பு உபசாரம்.
6. வாசனைகள் அணிந்து, என்னருகே வந்து, என்னை மூச்சுத் திணற அடித்து இரும வைத்துவிட்டுக் கரிசனமாக இன்னும் நெருக்கமாக வந்து, ஆதரவாய் முதுகு வருடி, ஆஸ்மாவுக்கும் மருந்து!! சொல்லி என்னை மேலும் மூச்சுத் திணற அடிக்கும் அன்பு. (அப்பிடியே செத்துரலாம் மாதிரி இருக்கும்.) ;)
7. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகமும் என்று புகை பிடிப்போர்.
மீதி எல்லாம் தவிர்க்க இயலாவிடினும் பொறுத்துக் கொள்வேன். இவை மட்டும் முடிவதில்லை. ;)
எப்படிச் சிந்தித்தாலும் பத்து வரவில்லை. நல்ல விடயம். சந்தோஷமாக இருக்கிறது. பட்டியலை இன்னும் சிறிதாக்க இயலுமா என்று பார்க்க வேண்டும்.
முடியும் என்று நினைக்கிறீர்களா!! ;)
ஆ..... இமா நானும் முழிப்புத்தான். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்... யாரும் உண்மை உள்ளன்போடு என்ன செய்தாலும் நான் முகம் சுழிக்காமல் அதை ஏற்றுக்கொள்வதுண்டு....அருவருப்பானதாக இருப்பினும்கூட... இன்னுமொன்று எம்மைத் திருத்தினால் உலகம் தானாகத் திருந்தும் என்றுதான் நான் நினைப்பதுண்டு.
ReplyDeleteஇமா//7. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகமும் என்று புகை பிடிப்போர்.// எனக்கு இந்த வாசனையும் பெற்றோல் வாசனையும் மிகவும் பிடிக்கும்.... யாராவது புகைப்பிடிக்கும்போது புகைப்பக்கமாக மெதுவாகப் போவேன். ஆனால் இப்போ யாரும் பப்ளிக்கில் புகைப் பிடிப்பதில்லை, அதனால் அதை அனுபவிக்க சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டது.
ReplyDeleteசொல்லுற ஆள் யார் எண்டு பாருங்கோவன். ;)
ReplyDeleteஎனக்கும் சின்னனில பெட்ரோல் வாசம் விருப்பம். பெட்ரோல் இப்ப வேற மாதிரி மாறிப் போச்சு.
என்னதான் விருப்பம் எண்டாலும் ஒரு வாசம் வருது எண்டால் காற்று சுத்தமாக இல்லை, சுவை வந்தால் தண்ணீர் சுத்தமாக இல்லை எண்டுதானே கருத்து அதிரா.
ரெண்டாவது கொமன்டைக் காணவில்லை. என்ன நடக்குது இந்த உலகத்தில எண்டு எனக்கு விளங்கேல்ல!!! காணாட்டில் நான் டிலீட் பண்ணேல்ல, சரியோ! ;)
குட் நைட்.
//நான் நினைப்பதுண்டு.// நானும் நினைப்பதுண்டு. ;)
ReplyDeleteஇமா, எனக்கும் நீங்கள் சொன்ன 6 , 7 நினைத்தாலே குமட்டும். வாசனைத் திரவியங்கள் என்றாலே தலைவலி, வாந்தி, தலைசுற்றல் எல்லாமே வந்து விடும்.
ReplyDeleteகடவுளே! இதை பிரின்ட் எடுத்து எங்கள் வீட்டு சுவரில் ஒட்டி வைக்க வேணும். இமா எங்கள் வீட்டிற்கு வந்து, நான் என்னை மறந்து ஏதாவது செய்து விட்டால்.
அதீஸ், எதற்கும் உங்களோடு கொஞ்சம் கவனமாக இருக்கோணும். நீங்களும் தம் அடிப்பீர்கள் போல இருக்கே. சந்தனா எங்கே???????
:))
ReplyDeleteஓ இமா,எப்படி இப்படி,இதெல்லாம் எனக்கும் பிடிக்காது தான்,ஆனால் இந்த 5 தாவது மட்டும் இனி கவனத்தில் கொள்கிறேன்,இதைப்படித்தவுடன் கொஞ்சம் உருத்தலாக உள்ளது.
ReplyDeleteஇதில் சிகரெட் ஸ்மெல் கண்டாலே மூக்கை முடி விடுவேன். பீடி ஸ்மெல் வந்தால் அவ்வளவுதான் அவர் குடும்பத்துக்கே திட்டு கிடைக்கும் என் வாயால் பேட்ட்ட்ட்ட்ட்ட் ஸ்மெல்
ReplyDeleteகண்ணால் கண்டு விட்டால் சில சுகாதார குறைபாடுகள் வாயில் போகவே போகாது. உண்மைதான்.
அதீஸ், எதற்கும் உங்களோடு கொஞ்சம் கவனமாக இருக்கோணும். நீங்களும் தம் அடிப்பீர்கள் போல இருக்கே. சந்தனா எங்கே??????? /// கால் வச்ச வனி.... தம் என்றால் பெருவிரலைத்தானே இங்கிலீசில சொல்றீங்கள்... நான் தம் “பிடிப்பனே”..., பிடித்துக்கொண்டுதான்.. பேபி அதிரா நடக்கிறவ. அனால் ஆருடைய தம் எனக் கேள்வி எல்லாம் கேட்கப்படாது ஆரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteஇமா எங்கள் வீட்டிற்கு வந்து, நான் என்னை மறந்து ஏதாவது செய்து விட்டால். /// கடவுளே.. என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ ஆனால் இந்த மூக்கை காதை பிளஸ்ஸ் கண்ட நிண்ட இடமெல்லாம் சொறியாமல் இருந்தாலே போதும்... ஆங் இமா இனியும் என்னால முடியாது... மீ... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
வாணி, //பிரின்ட் எடுத்து எங்கள் வீட்டு சுவரில் ஒட்டி வைக்க வேணும்.// ம்.. ;))
ReplyDelete~~~~~~~~~~
A ;) @ Surya. ;)
~~~~~~~~~~
//5 தாவது மட்டும்// ;) பிழையாக நினைக்கப்படாது ஆஸியா. ;) இது பிடிக்காத விஷயம் எண்டதை விட... எனக்கு அவஸ்தையான விஷயமாக இருக்கும். விருந்து.. வருந்தலாமா!! ;)
/மூக்கை முடி//னால் வாய் இருக்கே!
ReplyDeleteகாற்று மீதமிருக்கே! அது எங்கும் போவது இல்லை. வேண்டுமானால் ஐதாகி கவனத்தில் இருந்து காணாமல் போகும். அவ்வளவுதான். நுரையீரலினுள் போகாமல் விடாது. ;)
இதுவும் பிடிக்காதது என்பதல்ல ஜெய்லானி. என்னைச் சிரமப் படுத்துவது. ;)
~~~~~~~~~~
//தம்// ;)
குழப்படி பேபி. ;)