அத்திக்காய்.. காய்.. காய்.
ஆலங்காய் வெண்ணிலவே!
வெண்ணிலவைப் பற்றி முன்பே இடுகை போட்டாயிற்று.
இது அத்திக்காய்.
நியூசிலாந்து வந்த முதல் வருடம், நான் தங்கி இருந்த வீட்டின் சமையலறை வெளி மூலையில் இப்படி ஒரு தாவரம் வளர்ந்து நின்றது.
என்னவென்றே தெரியாத அதன் கனிகளை சிட்டுக்கள் வந்து கொத்தித் தின்னும். மரம் பூத்துக் கண்டதில்லை. (அத்தி பூத்தாற் போல என்பார்கள் இல்லையா!)
மரம் நிறைந்த காய்களும் சிட்டுக்களுக்குத் தான். எங்களுக்குத் தான் அது என்னவென்றே தெரியவில்லையே.
ஒரு முறை ஒரு பழத்தை வெட்டிப் பார்த்தேன். உள்ளே சதைப் பகுதி அழகான நாவற்சிவப்பு வண்ணத்தில் இருந்தது.
வெகுகாலத்தின் பின்புதான் அவை அத்திப் பழங்கள் என்பது தெரிய வந்தது. என் முதிர்தோழி ஒருவர் ஃபிக் & ஃபிஜோவா ஜாம் செய்து கொடுப்பார். சுவையாக இருக்கும்.
இது Hamilton Gardens ல் எடுத்த படம்.
இந்த அத்திப்பழத்தை u.a.e.வந்த பின்பு வாங்கி சுவைத்ததுண்டு. படங்கள் அழகு இமா.
ReplyDeleteEven my knowledge of athikkai is upto this song :):)Thanks for the info and the lovely click.
ReplyDeleteஹாய்
ReplyDeleteஇம்மா எப்படி இருக்கீங்க.
நலமா
நலம் அறிய ஆவல்.
ஒரு போஸ்ட் ஒன்று
முடிந்தால் தவறுகளை சுட்டிகாட்டவும்
மேம்பட உதவும்
அய்யோ..இமா.விட்டுடாதீங்கோ!!! எத்தனை கிடைத்தாலும் உள்ளே தள்ளுங்க. ஃபிரஷ் சுவை சாப்பிட்டவர்க்கு தெரியும். செடியிலிருந்தும் நல்ல மணம் வரும்.
ReplyDeleteதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போக தேவையே இல்லை.
இந்தப்பழத்தை இங்கு காசு கொடுத்து வாங்கவேண்டும். இதில் நிறைய சத்துக்கள் இருக்கிறது.நடமுடிந்தால் மரம் வாங்கி நடவும்.இங்கு இதை feige என அழைப்பார்கள்.
ReplyDeleteஆ.... இமா... இதுதான் அத்திப்பழமோ? கேள்விப்பட்டதுண்டு ஊரில் சாப்பிட்டதில்லை. ஆனால் இங்கு சூப்ப மார்கட்டிலே இப்பழத்தைப்பார்த்து வித்தியாசமாக இருக்கே என வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன் சூபராக இருந்தது... அப்போ நான் அத்திப்பழம் சாப்பிட்டிருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன் அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.....
ReplyDeleteஆனால் தொடர்ந்து சாப்பிட எனக்குப் பயமாக இருக்கே இமா???? ஜெய்..லானி சொல்லியிருக்கிறார்....இது எப்பூடி???
///தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போக தேவையே இல்லை////
//இமா???? ஜெய்..லானி சொல்லியிருக்கிறார்....இது எப்பூடி???
ReplyDelete///தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போக தேவையே இல்லை////
பெண் டாக்டரிடம் (ஆயுர்வேதிக்) கேளுங்க!!ஃபுல் டீடையில் கிடைக்கும்.
இமா.. ஜெய்..லானிக்குச் சொல்லுங்கோ.... அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஎற, இது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற எண்டு.... ஹக்...ஹக்.....ஹக்..... கடவுளே... பொட்டெனப் போயிடும்போல இருக்கே எனக்கு....
ReplyDeleteஇன்று எல்லோருக்கும் சுருக்க விடைதான், மன்னிக்க வேண்டும். ;)
ReplyDeleteநன்றி ஆசியா, Chitchat & அம்முலு, ;)
ஜெய்..லானி, அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஎற, இது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற ;)))
இப்ப சரியா அதீஸ் ;) x 25 ;)))
super photo imma!!
ReplyDeleteஇமா, இது தான் அத்திக்காயா? ( ஹை... நானும் இமாவை கேள்வி கேட்டாச்சு.... ). படங்கள் நல்லா இருக்கு.
ReplyDeleteஅத்திக்காய் காய் காய்..... பாட்டிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் அதீஸ் ?
எத்திக்காய்
ReplyDeleteகாய்கிறது
அத்திக்காய்?
ஓக்கே சென்சார் பண்ணி போட்டது இது.
ReplyDeleteஅத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
//அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஎற, இது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற எண்டு.... // உம்...ம்ம்...காட்ச்சா! காட்ச்சா!! ஜீனோக்கு புரிந்துடுச்சி! (ஸ்ஸ்!..மூச்!என்ன புரிந்தது எண்டு ஆரும் கேக்கப் படாத்.)
ReplyDeleteஆன்ரீ...உந்த அத்திக்காய் மரத்துக்கு பின்னாலை ஒரு அயகான பெண்மணி போறாங்கள்..அவங்க முகத்தோடு போட்டோ புடித்திருந்தால் ஜீனோ இன்னும் கொஞ்சம் ரஸித்திருக்கும்!! அப்கோர்ஸ்,அத்திக்காயைத்தான்..ஹி,ஹி!! (உடனே புஜ்ஜி கிட்டோ சொல்லி பத்த வைக்க ஓடக் கூடாதூ...கர்..ரர்ர்ர்ர்!)
அத்திக்காய் காய் காய்..... பாட்டிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் அதீஸ் ? // வாணீஈஈஈஈ அது வேஏஏஏஏஏஏஏற, இது வேஏஏஏஏஏஏஏஏஏற...ஓக்கை...
ReplyDeleteஜெய்..லானி... நீங்கள் சொன்னதெல்லாம் முற்றிலும் உண்மை... நானும் அத்திப்பழத்தின் பெருமைகள் கேள்விப்பட்டிருக்கிறேன்....பதிவுக்கு மிக்க நன்றி.. இருப்பினும் உது வேஏஏஏஏஏஏஏஏற, நான் சொன்னது வேஏஏஏஏஏஏஏஏஏஏற..:).
ஸ்ஸ்!..மூச்!என்ன புரிந்தது எண்டு ஆரும் கேக்கப் படாத்/// ஓக்கை ஜீனோ ஓக்கை... கேட்டால் பிழைச்சுப்போகும்...:).
பின்னாலை ஒரு அயகான பெண்மணி போறாங்கள்..அவங்க முகத்தோடு போட்டோ புடித்திருந்தால் ஜீனோ இன்னும் கொஞ்சம் ரஸித்திருக்கும்!! // இமா.. போட்டோ வாணாம்... ஆளையே ஜீனோவிடம் அனுப்பிவிடுங்கோஓ... எதுக்கோ??? ஜீனோ காசி யாத்திரைக்கு உதவியாகக் கூட்டிப்போகத்தான்...கிக்..கிக்..கிக்..
Thanks Menaga. ;)
ReplyDelete~~~~~~~~~~
//ஹை... நானும் இமாவை கேள்வி கேட்டாச்சு....// க்ர்ர். இதுக்குத் தண்டனையா நான் டொமாரைக் கண்டுபிடிச்சுக் கொண்டுவந்து பக்கத்தில நிப்பாட்டி விட்டுருவன், பத்திரம். ;)
~~~~~~~~~~
கேள்வி 3.//எத்திக்காய் காய்கிறது அத்திக்காய்?// ;) இது நியூசிலாந்தின் வடக்குத் திக்கு.
~~~~~~~~~~
ஒரு தனி இடுகையாகவே போட்டு இருக்கலாம் ஜெய்லானி. ;) தகவலுக்கு நன்றி. இவங்கள் உங்களை 'ஓட்டுறாங்கள்' எண்டு கூட உங்களுக்கு விளங்கேல்ல. பாவம் நீங்கள். ;)
~~~~~~~~~~
பப்பி, பார்வை சரியில்லை எண்டு விளங்கித் தான் அவ முகத்தை மறைவா வைத்து இருக்கிறா. ;)
~~~~~~~~~~
//காசி யாத்திரை// போகப் போறது டோரா அத்தீஸ் (அதீஸ் எண்டு தட்டினால் அத்தீஸ் எண்டு வருது. கூகிள் சந்தர்ப்பம் பார்த்து எழுதுறார் போல.) ;)
//இதுக்குத் தண்டனையா நான் டொமாரைக் கண்டுபிடிச்சுக் கொண்டுவந்து பக்கத்தில நிப்பாட்டி விட்டுருவன், பத்திரம். ;)//
ReplyDeleteஅர்த்த ராத்திரில சத்தம் போட்டுச் சிரிக்க வைக்கறீங்க இமா.. :)கவனம் வானதி.. :)
இதுவும் அதுவும் வேறு - அதானே ”அத்தி”ரா.. இதுவும் அதுவும் எப்படி ஒன்றாகும்? :) (இதென்ன எனக்கும் தப்புத் தப்பா தட்டச்சு நடக்குது?? :))
ஜீனோ.. லொள்ளு தாங்க முடியல :)
ஓக்கை.. மிச்சப் பாட்டை நானே பாடறேன்.. இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ.. என்னைப் போல் பெண்ணல்லவோ..
//தகவலுக்கு நன்றி. இவங்கள் உங்களை 'ஓட்டுறாங்கள்' எண்டு கூட உங்களுக்கு விளங்கேல்ல. பாவம் நீங்கள். ;) //
ReplyDeleteபயமா இருக்கு காசி யாத்திரையில தனியா விட்டுட்டு வந்துடுவாங்களேன்னு ஒரே பயம்.
அத்திபழம் ரொம்ப நல்ல து ஆகா மரமே இருக்கா?
ReplyDeleteஅந்த பாடல் எல்லாமே சமைக்க பயன் படுத்து பொருலை வைத்தே வரும் ரொமப் நல்ல இருக்கும்
ஆஹா ஜெய்லானி டீவிய்ல் இப்ப டிப்ஸும் ஆரம்ப்ச்சாசா
என் உலகில் வந்து கலாய்க்கப்படுவதால் மட்டும் ஒரு உண்மையைச் சொல்கிறேன் ஜெய்லானி. ;)
ReplyDeleteஅதீஸ் மறைமுகமாக, தான் தினமும் அத்தீஸ் சாப்பிட்டாலும் ஆப்பிள்ஸ் சாப்பிட்டாலும், (சாப்பிடாவிட்டாலும்) டாக்டரிடம் போகத் தேவை / தேவை இல்லை என்கிறார். இவ்வளவுதான் நான் உதவ இயலும். ;)
திரு. சந்தனா பயப்படப் போறார். மெதுவாச் சிரியுங்கோ சந்தூஸ்.
ReplyDeleteஆமாம் ஜலீலா, அழகு தமிழ்ப் பாடல் அது.
ReplyDelete//இதுக்குத் தண்டனையா நான் டொமாரைக் கண்டுபிடிச்சுக் கொண்டுவந்து பக்கத்தில நிப்பாட்டி விட்டுருவன், பத்திரம். ;) //
ReplyDeleteஅல்வாவும் அவனிடம் இருக்குமில்லை??? இல்லாவிட்டால் டொமார் வேண்டாம். நான் எப்பவோ அவனை தலை முழுகியாச்சு.
//அர்த்த ராத்திரில சத்தம் போட்டுச் சிரிக்க வைக்கறீங்க இமா.. :)கவனம் வானதி.. :) //
சந்தனா, நான் பங்கருக்குள்ளே பத்திரமாக இருக்கிறேன். நீங்கள் நடு இரவில் சிரித்து இப்படி டெரர் பண்ண வேண்டாம். திரு, சந்து பாவம்.
//நான் எப்பவோ அவனை தலை முழுகியாச்சு.// ;)))
ReplyDelete