Monday 10 May 2010

இன்றைய அறுவடை - ஃபிஜோவா (feijoa )

கொய்யா போல் இருக்கும்.

ஆனால் நீள்வட்டம்.
ஆசையில் ஒரு செடி வாங்கி நட்டோம். 

இப்போ இரண்டு வருடங்கள் தான் ஆகிறது பூக்க ஆரம்பித்து.


மேலே உள்ளது ஃபிஜோவா பூ.


கொஞ்சம் பொஹுடுகாவா பூ (இந்த மரம்) போல் இருக்கும்.
இலை கூட கொஞ்சம் கொய்யாவுக்கும் பொஹுடுகாவாவுக்கும் நடுவே இருக்கும்.


மரம் இன்னும் சரியாகக் காய்க்க ஆரம்பிக்கவில்லை.
எங்கள் வீட்டில் அதிக நேரம் தங்காத பழம் இது. ;) எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும். கொய்யாக்காய் போல் இருந்தாலும் ஏனோ தெரியவில்லை, இங்குள்ளோர் இதை இப்படி...
குறுக்காக நறுக்கி, கரண்டியினால் சதைப் பகுதியை எடுத்துச் சாப்பிடுகிறார்கள். வைட்டமின் ஸீ நிறைந்த பழம் இது. நீங்களும் சாப்பிடுங்க.

12 comments:

  1. //இங்குள்ளோர் இதை இப்படி...
    குறுக்காக நறுக்கி, கரண்டியினால் சதைப் பகுதியை எடுத்துச் சாப்பிடுகிறார்கள்//

    எப்படி சாப்பிட்டா என்ன உள்ளே போனா போதும்

    ReplyDelete
  2. iiiiiii

    nanthan first comments poduven..

    konjam parcella anupidungo...

    ReplyDelete
  3. என‌க்கு நல்ல விருப்பம் கொய்யாக்காய்.எங்கள் வீட்டுல‌ (ஊரில)பெரியமரம்(இப்பவும்) நிற்கிறது.காயாக இருக்கும்போது முடிந்துவிடும்.இந்த காயைப்பார்த்தால் அசல் கொய்யாக்காய்போலவே இருக்கு.நல்லா ருசித்து சாப்பிடுங்கள்.மறந்திருந்த கொய்யாவை ஞாபகப்படுத்திவிட்டீங்கள்.
    பூவைப்பார்த்தால் முகப்பில் போட்ட பூ மாதிரி தெரிகிற‌து.இரண்டும் ஒன்றா?

    ReplyDelete
  4. இமா... இதன் பூக்கள் அத்தனை அழகாய் இருக்கு... :) - Vanitha

    ReplyDelete
  5. ஃபிஜோவா படங்கள் அருமை,புதிய பழம் பற்றிய தகவலும் கூட.நன்றி இமா.

    ReplyDelete
  6. கொய்யா மாதிரியே தான் இருக்கு இமா! பழம் பச்சையாகவே தான் இருக்குமா?
    (இப்பலாம் எல்லா ப்ளாக்லயும் கருத்து சொல்வதோட ஒரு கேள்வியும் கேட்காம போறதில்லைன்னு ஒரு முடிவு! :) )

    ReplyDelete
  7. அதற்கில்லை ஜெய்லானி, தோற்பகுதியில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும் இல்லையா!

    ~~~~~~~~~~

    அனுப்பி விடுறேன் சூர்யா. ;)

    ~~~~~~~~~~

    அம்முலு, முகப்பில் உள்ளது பொஹுடுகாவா - நியூசிலாந்து கிறிஸ்மஸ் மரம். இது வேறு. ;)

    ReplyDelete
  8. அலரிப் பூ, ரோஜா போல் இதற்கும் செய்முறை கொடுக்கலாம். ;) அழகு இல்லையா வனி?

    ~~~~~~~~~~

    நன்றி ஆசியா. ;)

    ~~~~~~~~~~

    அதற்கென்ன, தாராளமா கேளுங்க மகி. ;) பழம் கனிந்தாலும் பச்சையாகத் தான் இருக்கும்.

    ReplyDelete
  9. இமா, நீங்கள் ( வாயில் நுழையாத ) என்ன பெயர் சொன்னாலும் இது எனக்கு கொய்ய பழம் தான். அழகா இருக்கு.

    ///இப்பலாம் ..... ஒரு கேள்வியும் கேட்காம போறதில்லைன்னு ஒரு முடிவு! :) )//

    வாவ்!! எங்கட இமாவுக்கு போட்டியாக ஒரு ஆள் வந்தாச்சு.

    ReplyDelete
  10. படத்துக்கும் தகவலுக்கும் நன்றி இமா..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா