ஹாய்! எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்? நான் மலாட் தாரா. (அப்பிடித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கிறன்.) சீவிக்கிறது இங்க\l/
பின்னால தண்ணி கொட்டுது பாருங்க, அது வாத்துக் குளம். இதுக்கெல்லாம் ஒரு சரித்திரம் இருக்கு.
இங்க வரைபடம் பார்த்துக் கொண்டு கமராவும் கையுமாக நிற்கிறவர்... இமாட பெறாமகன் என்று வைங்களன். ஒருவரும் பேர் கேட்கக் கூடாது, என்று சொல்லி இருக்கிறா. அவவுக்கு மொழி மாற்றக் கஷ்டமா இருக்குதாம்.
மற்றப் பக்கம் இந்த பீனிக்ஸ் மரங்கள் வடிவாக வளர்ந்து இருக்கு.
இது என்ட மூத்த மகள். மிச்சப் பிள்ளைகள் இங்கதான் எங்கயாவது சூரியக் குளியல் குளிச்சுக் கொண்டு இருப்பாங்கள். இவ போன வருஷம் பிறந்த ஆள். இந்த வருஷத்து முட்டைகளை ஒளிச்சு வச்சு இருக்கிறன். (தாரா பார்த்தால் பிரச்சினை, அதுதான்.)
இவங்கள் எங்கட குடும்ப நண்பர்கள். எப்பவும் எங்களோடையேதான் சுற்றிக் கொண்டு இருப்பாங்கள். கூடு மட்டும் மரத்தில கட்டுவாங்கள், நாங்கள் எங்கயாவது பற்றைக்குள்ள. சாப்பிடுறது எல்லாம் ஒன்றாகத்தான். நல்ல பிள்ளைகள்.
என்ட மனுசிக்கு ரெண்டு பேரிலையும் இந்த ஒரு ஆளோட மட்டும் நல்ல ஒட்டு. அப்பிடி என்னதான் கதை பொதுவாக இருக்குமோ தெரியாது.
கதை தொடங்கினால் இவர் மேல போய் நிண்டுருவார். தலைப்புப் பிடிக்கிறது இல்லையோ தெரியாது.
குருவியம்மா பப்பி மாதிரி, குளிக்கக் கள்ளம்.
இவவும் எவ்வளவோ ட்ரை பண்ணுவா, குளிக்க வைக்க. ஒண்டும் நடக்காது. வலுக்கட்டாயமா முழுகவார்த்துவிட வெளிக்கிடுவா. இவவுக்குத் தேவையில்லாத வேலை, அங்க முட்டை எல்லாம் சூடு ஆறிக் கிடக்கும், பாவம். அதைக் கவனிக்காம இங்க 'சாட்' பண்ணிக் கொண்டு இருப்பா.
மிகவும் அழகாக குழந்தைகளை மட்டும் அல்லாது பெரியவர்களையும் கவரும் வகையில் இருக்க்கின்றது...சூப்பர்ப்...
ReplyDeletechoo chweet andha paravai... i jus luv it. cute pics imaa ;) - Vanitha
ReplyDeleteபடமும் , கமெண்ட்டும் வழ்க்கம் போல சும்மா அதிருதுல!!!
ReplyDeleteஜீனோ டாகிங் வித் சிட்டு குருவி :
ReplyDelete----...----...----
சிட்டுக் குருவி,சிட்டுக் குருவி,சேதி தெரியுமா?
ஜீனோவ விட்டுப் பிரிந்தே போன புஜ்ஜி
இன்னூம் வீடு திரும்பலை!! :( :(
----...----...----
ஜீனோ டாகிங் வித் ஆன்ரீ
----...----...----
/இமாட பெறாமகன் என்று வைங்களன்.//அவவுக்கு மொழி மாற்றக் கஷ்டமா இருக்குதாம்./ ஒய் மொழி மாற்றம் ஆன்ரீ? ஜீன்ஸ் கேன் அண்டர் ஸ்டேன்ட் யுவர் லாங்குவேஜ் வெறி வெல்..கஸ்ரம் படாம சொல்லுங்கோ..எனி நேம் என்ட்ஸ் வித் எஸ்?;)
/பீனிக்ஸ் மரங்கள் வடிவாக வளர்ந்து இருக்கு./ஓம்..வடிவாத்தான் இருக்குது..வானமும் கொஞ்சம் நீலம்,கொஞ்சம் வெள்ளை,கொஞ்சம் மேகம் எண்டு வடிவாய் பேக்ரவுண்டு குடுக்குது.
----...----...----
ஜீனோ டாகிங் வித் தாரா:
---...----...----
/ இந்த வருஷத்து முட்டைகளை ஒளிச்சு வச்சு இருக்கிறன். (தாரா பார்த்தால் பிரச்சினை, அதுதான்.)/ ஆ...பீ எக்ஸ்ட்ரா கேர்புல் படீ!! எக்ஸ் நைஸா அபேஸ் பண்ணி, அ.தா.மு. செய்து முயுங்கிடும்.கர்..ர்ர்ர்ர்!
/இவங்கள் எங்கட குடும்ப நண்பர்கள்.//நல்ல பிள்ளைகள்./ லைக் ஜீனோ அண்ட் புஜ்ஜீ!! ஹிஹி!
/என்ட மனுசிக்கு ரெண்டு பேரிலையும் இந்த ஒரு ஆளோட மட்டும் நல்ல ஒட்டு./காலம் கலி காலம் மிஸ்டர்.தாரா! மனுசிய பத்திரமா பின்தொடருன்கோவன்..இல்லை எண்டால், "அவள் பறந்து போனாளே,எனை மறந்து போனாளே" என்று சோக கீதம் இசைக்க நேரிடும்.
/கதை தொடங்கினால் இவர் மேல போய் நிண்டுருவார். / இவரோ,இவ'ளோ'??!!!
/குருவியம்மா பப்பி மாதிரி, குளிக்கக் கள்ளம்./ கர்ர்...ர்ர்ர்ர்...ர்ர்!கிர்ர்..ர்ர்ர்ர்..ர்ர்!குர்ர்..ர்ர்..ர்ர்ர்ர்! நாங்கள்லாம் மழை வந்தா இலவசக் குளியல் போடுவம்..மெகா சைஸ் ஷவர் தான் எங்களக்கு புடிக்கும். நோ பாத் டப்/ஆறு/குளம் குளியல்.
/இவவும் எவ்வளவோ ட்ரை பண்ணுவா, குளிக்க வைக்க/ ஜீனோ கிவ்ஸ் யூ ஈஸி அட்வைஸ் மிசஸ்.தாரா! ட்ரை டு சிங் 'அமிர்த வர்ஷினி' ராகம்..ரெயின் வில் கம்..எவெரிபடி கேன் டேக் பாத்.
/எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு. இந்த 'சைட்ல' எனக்கு ஒரு 'சைட்' இருக்கு./ அது..எப்பூடி?எப்பூடி?எப்பூடி இப்பூடி ஜீனோஸ் பர்பெக்ட் படீஸ்-ஐத் தேடித் புடிக்கரீங்கோ ஆன்ரீ? ஜீனோஸ் ஆபீஸ்லயும் ஒரு லேடி:) இருக்கிறார்..செக்யூரிட்டி! ஜீனோ எப்பம் உள்ளே/வெளியே போனாலும் ஒரு அம்பது நிமிஷம்:) அவவுடன் கதைக்காமல் வெளிக்கிடாது..இதெல்லாம் தான் எங்களுக்கு லிட்டில் ரிலாக்சேஷன்.ஆன்ரீ..காக்கா போகோணும்,okkai?;)
/என்ன வடிவா சூரியக்குளியல் எடுக்கிறா எண்டு பாருங்க. / பார்த்தம்..பார்த்தம்! ஒருக்கா ஒரு ரே-பான் சன் கிளாஸ் வாங்கிக் குடுங்கோ,அவவுக்கு..இம்ப்ரெஸ் ஆயிருவோ!! :D :D :D
நன்றி கீதா, வனி, ஜெய்லானி & பப்பி. ;)
ReplyDelete~~~~~
ஜீனோவுக்கு என்னே அறிவு!! //எனி நேம் என்ட்ஸ் வித் எஸ்?// எஸ். எப்பூடி இப்பூடி!!!
(இருக்கிறது இருபத்தாறு தானே.) :)
இவர் இஸ் மரியாதைப்பன்மை பப்பி.
//சிங் 'அமிர்த வர்ஷினி' ராகம்.//
க்வாக்... க்வாக்... க்வாக்..
எங்க! மழை இன்னும் காணோம்!!
nice photos and comments
ReplyDeleteமுதலாவது தாரா கொள்ளை அழகாக இருக்கிறார் இமா, பஞ்சவர்ணக்கிளிபோல.
ReplyDeleteதண்ணியில தாமரைப்பூத் தாராக்குஞ்சு உற்றுப் பார்த்தபின் தெரிந்தது சூப்பரா இருக்கிறா. அதுசரி எங்களுக்கு அகப்படும் எல்லோரும் பெண்கள்தான் போல:). தாராவாகட்டும் வண்டாகட்டும்....
படங்கள் அழகு இமா. இதைத் தொடர இப்போ முடியாதே... அதுதான் தாராப் படம் போட்டுவிட்டேனே.... அடுத்ததைப் பார்க்கலாம்... சந்து தொடர்வா.... சந்தூஊஊஊஊஊஊஊஉ.
ஜீனோவுக்கு என்னமோ ஆகிப்போச்சு:) நல்ல ஒரு டொக்டரைப் பார்க்கச் சொல்லுங்கோ....
மிக அழகான படங்கள்....
ReplyDeleteஅன்புள்ள இமா!
ReplyDeleteசிறப்பாக உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதி வரும் உங்களுக்கு- இதோ இந்த அன்பு விருதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!!
http://www.muthusidharal.blogspot.com/
இமா.. படங்களுடன் கதை சொன்ன விதம் அழகோ அழகு..
ReplyDeleteஊஊஊஊஊஊஊஉ.. வந்துட்டேன் அதீஸ்.. ஜீன்ஸ் அண்ணனுக்கு ஊசி போட்டிருக்கோம்.. காய்ச்சல்.. அதுல வந்த குயப்பம்.. அதனைத் தொடர்ந்து உளறல்.. அதான்.. சரியாகிடும்.. :))))
அழகு போட்டோஸ் இமா!! தாராவே பேசற மாதிரி நீங்க எழுதிருக்கும் கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கல்!
ReplyDeleteஅழகான படங்கள்..உங்களுக்கு விருது இங்கே
ReplyDeletehttp://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
பெற்றுக்கொள்ளுங்கள்..
/பீனிக்ஸ் மரங்கள்//
ReplyDeleteபனை மரத்துக்குப் புதுப்பேர் வச்சா நாங்க ஏமாந்துடுவோமாக்கும்?? ;-))))))))
நன்றி அதிரா.
ReplyDelete//தொடர இப்போ முடியாதே// முடிந்தால் மட்டும், அதுவும் முடிகிற போது. ;) முடியாவிடினும் பிரச்சினை இல்லை. ;)
//தாராப் படம் போட்டுவிட்டேனே// !! ?? ;))
நன்றி LK, சந்தனா, மகி, ;)
ReplyDeleteநன்றி அண்ணாமலையான். வெகு காலம் கழித்து வந்திருக்கிறீர்கள். ;)
விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி மனோ அக்கா & அஹமது இர்ஷாத். விரைவில் வந்து பெற்றுக் கொள்கிறேன். தாமதத்துக்கு இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். மீண்டும் என் நன்றிகள்.
ReplyDeleteஹுசேன், ;) 'பனை மரத்துக்குத்' தொடர்பு கொடுத்து இருக்கிறேன். ;)
ReplyDeleteஅடேடே நானும் அந்த சைட்டை உற்று உற்று பார்க்கிறேன்,எனக்கு ஒண்ணும் தெரியலை,இமா உங்கட கண்ணிற்கு மட்டும் தான தெரிவா போல.
ReplyDeleteபடங்கள் சூப்பர் இமா. அதை விட வர்ர்ணனை சூப்பர்.
ReplyDeleteபடங்களும் படங்களுக்கான விளக்கமும் அருமை
ReplyDeleteநல்ல படைப்பு
ReplyDeleteஇமா, அழகான படங்கள்.
ReplyDeleteNice Pictures Imaa!
ReplyDeleteபெரிதுபடுத்திப் பாருங்கள் ஆஸியா. ;)
ReplyDeleteநன்றி செல்வி, LS, வாணி & இலா. ;)
நல்வரவு யாதவன். தங்கள் கருத்துக்கு நன்றி. ;)
படங்கள் சூப்பர்.ஓ பனை மரத்தை தான் பிக்னிக் மரஙக்ள் என்று பெயர் வைத்து இருக்கீஙக்லா?
ReplyDeleteஇல்லை ஜலீலா. இது வேறு தாவரம்.
ReplyDeleteஇமா பிஸியோ ! பதிவுகளுக்கு இடைவெளியா?
ReplyDeleteபடங்கள் சூப்பர் amma. kalakkuringa.
ReplyDeleteAsiya, plz see the next posting.
ReplyDeleteTkz Prabha.