Saturday, 15 May 2010

விழுஞாயிறு தொடர்ந்து....

 'கார்க்' குளியல்
 தலைப்புக்காக் காத்திருக்கும் கண்ணாடி
(தலைப்பு உங்கள் கையில்.)

சாரல் விடு சாயல்  ;)

மலர்க் குளியல்
 
தூறல் விடு தூது...
தொடர்ந்து வேறெங்காவது தூவுமா மழை!!  
~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிணைப்பு 
17 / 05 / 2010
இங்கும் ஒரு

இதுவரை வந்து குவிந்த தலைப்புக்கள்
1. கண்ணாடியில் கண்ணடிக்கிற மழைத்துளி - அஹ்மது இர்ஷாத்
2. போகாத பொழுதுகள்!!!! - வாணி
3. இந்த அம்மிணிக்கு பொழுது போகவில்லை என்றால் நான் தானா கிடைத்தேன். எனக்காக இயற்கையே அழுது. - வாணி
4. "காரின் கண்ணாடியில் கார்மேகத்தின் கண்ணீர் துளிகள்" - எல்எஸ்
5. “நியூ மழை” - அதிரா
6. நானும் நனைகிறேனே இமா - ஆஸியா
வருகை தந்த இர்ஷாத், ஜெய்லானி, வானதி, ஆனந்தி, எல்எஸ், அதிரா, ஜீனோ, ஆஸியா, ஹுசேன் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். ;)

பரிசுக்கான தலைப்பு
கண்ணாடியில் கண்ணடிக்கிற மழைத்துளி
பாராட்டுக்கள் அஹமது இர்ஷாத் பரிசு உங்களுக்குத்தான். ;)
கௌரவப் பரிசு ;)
வான் மேகம்..பூப் பூவாய்த் தூவும்..
தேகம் என்னவாகும்? இன்பமாக நோகும்!
- ஜீனோ
- இமா
~~~~~~~~~~~~~~~~
தொடர்கிறது அதிராவின் மழையோசை

20 comments:

  1. தலைப்பு: கண்ணாடியில் கண்ணடிக்கிற மழைத்துளி.

    ஹையா பரிசு எனக்குத்தான்...

    ReplyDelete
  2. கடைசி மூன்றும் கவிதை !!

    மொட்டுக்களில் நீர் வடியும் அழகே அழகு.

    ReplyDelete
  3. போகாத பொழுதுகள்!!!!

    இந்த அம்மிணிக்கு பொழுது போகவில்லை என்றால் நான் தானா கிடைத்தேன். எனக்காக இயற்கையே அழுது.

    எப்புடி என் தலைப்பூபூ... ( இன்றோடு நான் தொலைந்தேன். இமா என்னை அவரின் ப்ளாக் பக்கமே வர விடாமல் செய்யப்போகிறார். )

    ReplyDelete
  4. வாவ்.. கார் குளியலை கூட இவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க..
    நல்ல இருக்கு :)

    ReplyDelete
  5. "காரின் கண்ணாடியில் கார்மேகத்தின் கண்ணீர் துளிகள்"
    எல்எஸ்

    ReplyDelete
  6. “நியூ மழை” இருபொருள் தலைப்பு.

    இமா அதிரவின் என் பக்கத்திலும் மழைபொழிகிறதே....

    ReplyDelete
  7. ஆன்ரீ..மழை அயகா இருக்கு..
    -----
    சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?
    மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ?
    மழையின் தாரைகள்..வைர விழுதுகள்..
    விழுதைப் பிடித்து விண்ணைச் சேர்வேனோ??!
    சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?
    மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ?
    (இது ஆன்ரீ பாடும் பாடல்)
    ------
    வானம் பொழிந்த பின்னும்,
    பூமி நனைந்த பின்னும்..
    சாரல் சரசம் இருக்கு!
    (இது பூக்கள் பாடும் பாடல்)
    ------
    வான் மேகம்..பூப் பூவாய்த் தூவும்..
    தேகம் என்னவாகும்? இன்பமாக நோகும்!
    (இது கார் பாடும் பாடல்)
    -----
    ஓஹோ..மேகம் வந்ததோ
    ஏதோ ராகம் தந்ததோ?
    எல்லாம் ஜீனோக்காகத்தான்!!
    பாடும் ஜீனோக்காகத்தான்!!
    பூக்கள் மேல் நீர்த்துளிகள்
    வெண்பாக்கள் பாடாதோ?
    தூரம் போடும் நேரம்
    பூஞ்சாரல் வீசாதோ?
    (இது ஜீனோ பாடும் பாடல்)
    -----

    ReplyDelete
  8. மலர் குளியல் செம சூப்பர்
    எல்எஸ் :)

    ReplyDelete
  9. நானும் நனைகிறேனே இமா.

    ReplyDelete
  10. அய்யோ நான் முன்னே சொன்னது தலைப்பு,யோசித்து யோசித்து சொன்னது.படங்கள் சூப்பர்ப்.

    ReplyDelete
  11. முதல் படம் வெகு அழகு!! கைய வச்சுகிட்டுச் சும்மாவே இருக்க மாட்டீங்களோ? :-))

    ReplyDelete
  12. //கடைசி மூன்றும் கவிதை !!// நன்றி ஜெய்லானி.

    ~~~~~~~~~~

    //எனக்காக இயற்கையே அழுது.// //very cute bird // நன்றி வாணி.

    ~~~~~~~~~~

    பாராட்டுக்கு நன்றி ஆனந்தி. ;)

    ~~~~~~~~~~

    அழகு முயற்சி எல்எஸ். ;) நன்றி.

    ~~~~~~~~~~

    அதிரா, //“நியூ மழை” இருபொருள் தலைப்பு.// ;)

    ~~~~~~~~~~

    //ஆன்ரீ..மழை அயகா இருக்கு// நன்றி ஜீனோ. ;)
    ரசித்துப் பாடி இருக்கிறீர்கள்.
    //வான் மேகம்..பூப் பூவாய்த் தூவும்..
    தேகம் என்னவாகும்? இன்பமாக நோகும்!
    (இது கார் பாடும் பாடல்)// கௌரவப் பரிசு ;)

    ~~~~~~~~~~

    //மலர் குளியல் செம சூப்பர்// நன்றி எல்எஸ். அது fountain plant' எனது மாமி 2005 ல் இங்கு வந்திருந்த போது அவர் கையால் நட்டுவைத்த செடி. ;))

    ~~~~~~~~~~

    //நானும் நனைகிறேனே இமா// Nice one Asiya. ;) Thanks.

    ~~~~~~~~~~

    //முதல் படம் வெகு அழகு!!// நன்றி ஹுசேன். ;)

    ReplyDelete
  13. “ தூறல் விடு தூது”!
    தலைப்பும் அருமை!
    தனித்திருக்கும் குருவி மழைத்துளிகள் நடுவே மிக அழகு!!

    ReplyDelete
  14. //(இது கார் பாடும் பாடல்)// கௌரவப் பரிசு ;)//கௌரவப் பரிசுக்கு நன்றி ஹை ஆன்ரீஜி ! ஜீனோ கௌரவமா:) வந்து வாங்கிக்கொள்வார்...சேம் டக்சிடோ வில் டு ஆன்ரீ? இல்லைன்னா அதிராக்கா தந்த காவி பர்முடாஸ்லே:) வந்தாப் போதுமா??
    இந்த பரிசு மேட்டரை மேலே போட்டிருந்தீங்கன்னா(ஆகாயத்திலை இல்லை..கர்ர்ர்..ர்ர்!!பின்னிணைப்பு)ஜீனோக்கு இன்னும் கொஞ்சூண்டு கௌரவமா இருந்திருக்கும்!இட்ஸ் ஓக்கை. :)

    ஒன் சாங் ப்ரம் கௌரவம்---->

    'பாலூட்டி வளர்த்த கிளி,பழம் கொடுத்துப் பார்த்த கிளி...
    நான் வளர்த்த பச்சைக்கிளி..
    நாளை வரும் கச்சேரிக்கு!!'
    ஜீனோக்கு நடிகர் திலகம் ஞாபகம் வந்திருச்சி ஆன்ரீ.

    ReplyDelete
  15. அன்பு மனோ அக்கா,

    முதலில் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. ;)

    என் குழப்படி இடுகைகள் பார்த்துக் கருத்துச் சொல்லுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ;) அவதானிக்கிறீர்கள் என்று தெரியும் போது... நானும் கொஞ்சம் சீரியஸாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ;)
    ஆயினும் என்ன செய்யட்டும்! எவ்வளவு முயன்றாலும் நான்கு நாட்களுக்கு மேல் என்னால் வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்க முடிவது இல்லை. ;)

    இங்கு எங்காவது, ஏதாவது தவறாகக் கண்ணில் பட்டால் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன், செய்வீர்கள் அல்லவா! ;)

    அன்புடன் இமா

    ReplyDelete
  16. 'பாலூட்டி வளர்த்த ஜீனோ, பழம் கொடுத்துப் பார்த்த ஜீனோ...
    நான் வளர்த்த பச்...!!!! ;)))

    கௌரவ ஜீனோபிரான் அவர்களே! /\ பார்க்க பின்னிணைப்பு.

    ReplyDelete
  17. ஹாஹ்ஹா.. ஜீனோ லொள்ளு தாங்க முடியல..

    இமா.. ரசித்து எடுத்திருக்கீங்கள்.. மழைப் படங்கள் கொள்ளை அழகு.. அதுவும், அந்த முதற் படம், மூன்றாம் படம், பூப் படம், கிளிப் படம்.. அழகாயிருக்கின்றன..

    பரிசு கொடுத்த விதமும் ரசிக்க வைக்கிறது இமா..

    ReplyDelete
  18. பரிசு கொடுத்த விதம்!!! ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா