Tuesday, 4 May 2010

ஒரு பிப் ஸ்க்விக் தினம்

ஹாய்! நான் பிப் ஸ்க்விக்.

வெயில்க் குளியல்

போதும் இனி.

மெதுவே..

இறங்குவோம்.

பூனை தீண்டு குற்றி

தாடை அரிக்கிறது.

நெற்றி அரிப்பெடுத்தால் இப்படி.

வால் நுனி என்றால் இது. 

இடப்பக்கம் கடிச்சால் இந்த மாதிரி..

இல்லாட்டி இப்பிடி.

 அம்மா வரக் காத்திருந்து காத்திருந்து...

காலங்கள் போனதடி.

பூத்திருந்து பூத்திருந்து..

பூவிழி மூடுதடி.

20 comments:

  1. ஹா ஹா பூனைய வச்சி பாட்டு சூப்பர் இமா.

    நிங்கள் எல்லாம் பூஸார பற்றி பதிவு போடும் போது எனக்கும் ஆசை வருது. இரண்டு வருடம் பூசாருடன் நடந்த வேடிக்கைகளை.போடலாமுன்னு தோனுது, ஏன் இந்த பூஸார்கள் காரை விரும்புகிறார்கள்./

    ReplyDelete
  2. இமா, இவவையும் எங்கட படி:) ஆக்கிடலாம், ஆனால் ஒரு கண்டிஷன் இந்தப் பெயர் வாணாம், பல்லுக்குள் நுழையுதில்ல:), நாங்க சூப்பர் ஸ்ரைல் பேர் ஒன்று வச்சுக்கூப்பிடுவம்...அதிரா மாதிரி:):)

    ReplyDelete
  3. ஹை..பூஸ் நல்லா இருக்கு இமா.

    ReplyDelete
  4. படங்கள் சூப்பர்ப்...

    ReplyDelete
  5. இமா,எங்க பக்கத்து வீட்டுலயும் இதே கலர் காம்பினேஷன்ல ஒருவர் இருக்கார்..கொஞ்சம் குட்டி.இன்று காலைதான் பாத்தேன்,இவரும் ஜன்னல்ல வெயில் காய்ந்துகொண்டுதான் இருந்தார்.'பக்கத்துல வந்தே,ஓடிடுவேன்'ங்கற ரேஞ்சுல ஒரு லுக்..ஆனா உட்கார்ந்திருந்ததென்னமோ கண்ணாடி ஜன்னலுக்கு அந்தப்பக்கம்!

    உங்க பிப்ஸ்விக் நல்லா போஸ் குடுக்கிறார்! :)

    ReplyDelete
  6. ..யாருக்காக ....இது யாருக்காக.... இந்த பூசார் வெய்டிங் யாருக்காக....ஹும்...ஹும்...

    படங்கள் மற்றும் கமெண்ட் ஏ ஒன்..

    ReplyDelete
  7. உங்க பிப்ஸ்விக் நல்லா போஸ் குடுக்கிறார்! :)
    ungalai polavey....

    ReplyDelete
  8. // நாங்க சூப்பர் ஸ்ரைல் பேர் ஒன்று வச்சுக்கூப்பிடுவம்...அதிரா மாதிரி:):)//
    பாவம் பூனை விட்டு விடுங்கள்.

    ReplyDelete
  9. கிர்..ர்ர்..ர்ர்..கர்...ர்ர்..ர்ர்! வவ்..வ்வ்வ்..தெரியாமத்தான் ஜீனோ கேக்குதூ..உங்க ஊட்டாண்ட ஒரு சின்ன ஜீனோ கூடோ இல்லையா? எப்பம் பாரு இந்த குயிக் அக்காவையே சுத்தி சுத்தி படம் புடிக்கரீங்கள்?கூடவே பாட்டு வேறே! GRRRRRRRRRR x101

    ஜீனோக்கு கோவம் கோவமா...ம்ம்...வரலை,வரலை! அதிரா அக்கா வேறே இந்தக்காவை 'படி' ஆக்கிட்டாங்கள்..இனி ஜீனோவும் அஜீஸ்:) பண்ணிக்கும்.

    பூவிழி மூடுதடி// ஹி..ஹி..பூனை கண்ணை மூடினா...உலகமே இருண்டு போயிட்டதா மனப்பால் குடிக்குமாம்..பாட்டும் மறந்துடுமாம்..அது "பூவிழி நோகுதடி"!

    ReplyDelete
  10. போட்டோக்கு போஸ் கொடுப்பதென்றால் நல்ல விருப்பம் போல.இப்பவும் தகடு காலில வைத்திருக்கிறாரோ?இவர் உங்க வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கிறார்???? kuc...க்கு வெயிட்டிங்.
    ஆ.ஆ.பின்னால செம்பரத்தம் பூ அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  11. போடுங்கோ ஜலீ, வாசிப்பம். ;)

    ம். யோசிக்க வேண்டிய கேள்விதான். ;) ஒன்றில் காரை விரும்புகினம். இல்லாட்டால் ட்ரெய்ன் ஓட்ட விரும்புகினம். அதுவும் இல்லாட்டால் தண்டவாளத்துக்குக் குறுக்கால போய் இருக்கினம். ;)

    ~~~~~~~~~~

    குட்டிப் பையா ;)

    ReplyDelete
  12. மொப்ஸ்,

    //இவவையும் எங்கட படி:) ஆக்கிடலாம்,// ம், ஆக்கிடலாம்.
    //இந்தப் பெயர் வாணாம்,// சரி.
    //பல்லுக்குள் நுழையுதில்ல:)// இதென்ன றச்சித் துண்டா பல்லுக்குள்ள நுழைய!!
    //நாங்க சூப்பர் ஸ்ரைல் பேர் ஒன்று வச்சுக்கூப்பிடுவம்...அதிரா மாதிரி:):)// ம். கூப்பிடுவம். இமயவரம்பன்! ம்ஹூம். இது பெடிப்பிள்ளை இல்ல. அப்ப... ஸ்பான்ஜ் / ஸ்க்ரப் / ஸ்ரேப்பர் / வைப்பர் - மொட்டா இருக்கும். இல்லாட்டி தாரா / மயில் / கிளி / அன்னம். ;)))))))

    ~~~~~~~~~~

    ஸாதிகா, எல்லாருக்கும் பூஸில ஒரு லவ்தான். ;))

    ~~~~~~~~~~

    நல்லா இருக்கா கீதா? தாங்க்ஸ். ;)

    ReplyDelete
  13. மகி,

    பூஸை நல்லா ரசிக்கிறீங்கள். ;)) //உட்கார்ந்திருந்ததென்னமோ கண்ணாடி ஜன்னலுக்கு அந்தப்பக்கம்!// ;)

    //உங்க பிப்ஸ்விக்// ஹி ஹி நல்லா போஸ் குடுக்கிறார்! :)

    ~~~~~~~~~~

    //படங்கள் மற்றும் கமெண்ட்// நன்றி ஜெய்லானி. ;) //பூசார் வெய்டிங்// அவங்க வீட்டுக்காரம்மாவுக்காக. ;)

    ~~~~~~~~~~

    தாங்க்ஸ் சூர்யா.

    ReplyDelete
  14. வாணி, //பாவம் பூனை விட்டு விடுங்கள்.// ;)

    ~~~~~~~~~~

    பப்பி,

    //ஒரு சின்ன ஜீனோ கூடோ// இருக்கே. என் செல்ல மருமகன் இருக்கார். ஹி ஹி. ;) புகை. ம். ;)

    இந்தம்மா வந்ததில் இருந்து இந்தப் பக்கம் ஜீனோஸ் யாரையுமே காணோம். இவங்க எல்லாரையும் துரத்திருவாங்க.

    //////பூவிழி மூடுதடி// ஹி..ஹி..பூனை கண்ணை மூடினா...உலகமே இருண்டு போயிட்டதா மனப்பால் குடிக்குமாம்..பாட்டும் மறந்துடுமாம்./////////
    ஹூம். எல்லாம் என் காலம்!! ;)))) x 565487686764565465.

    //அது "பூவிழி நோகுதடி"!// கர்ர்ர்ரர்.... எனக்கும் தெரியும். ;)) அழகா ஒரு வரி கவிதை நானா இயற்றினால் பொறுக்கலையா பப்பிக்கு!! ;)

    ~~~~~~~~~~

    அம்முலு,

    //போட்டோக்கு போஸ் கொடுப்பதென்றால் நல்ல விருப்பம்// ம். ;) வேற வழி!!
    //இப்பவும் தகடு காலில// ம்.
    //இவர் உங்க வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கிறார்?// அவங்கட கார் வந்தால் போயிருவார்.
    //செம்பரத்தம் பூ// ;) நன்றி.

    ReplyDelete
  15. இமா... கடைசி 4 படங்கள்....சூப்பர்!!!! பூனை அத்தனை அழகு. :) - Vanitha

    ReplyDelete
  16. Vani,

    //பூனை அத்தனை அழகு. :)// m. ;))))

    ReplyDelete
  17. யாருக்கோ புகையறாப்ல இருக்கே இமா.. தொடர்ந்து போடுங்கோ பூஸ் படங்களை :))) இவங்க ஜீனோஸை வேறு துரத்தராங்களா? எங்கட வீட்டுலயும் அப்ப ஒன்னு வளர்த்துப் பார்க்கனும் :))

    எச்சூச்மீ அதிரா.. உங்கட பெயர் athira or athida?? எப்படி அழைக்கனும்?

    ReplyDelete
  18. சந்து நான் பேபியாக இருக்கேக்கை அடிரா என்றுதான் பெயர் வச்சு, செல்லமாக அடிடாஸ்:) எனக் கூப்பிடுவினம், இப்ப நான் வளர்ந்திட்டனெல்லோ... அதுதான் எப்படியும் கூப்பிடலாம் எண்டு விட்டுட்டன்:).

    ஜீனோ குறுக்க நிண்டு குலைக்காமல் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ... பூஸாருக்குப் பயம்மாக் கிடக்காம்...கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ.

    இமா உந்தப் பெயரொண்டும் எனக்குப் புடிக்கேல்லை, வேற நல்ல பெயராச் சொல்லுங்கோ, அதிரா மாதிரி:).

    கால் வச்ச வனியை எங்காவது கண்டனீங்களோ? அதிரா தேடுறேன் எனச் சொல்லிவிடுங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  19. கண்டனான் அடிரா. ;) (எனக்கும் பாட வந்துரும் போல இருக்கு.) ;)

    அவ அண்ணாவோட, 'சந்தியாவை' ஃபொலோ பண்ணுறா. வருவா, பொறுங்கோ.

    நீங்களே ஒரு பேர் வைங்கோ, நல்ல..தா.

    ReplyDelete
  20. இங்குட்டு தான் இருக்கேன் அதிரா.... ;) அதிராவை பல நாள் தேடி கிடைக்கல்ல என்டு சொல்லச் சொன்னேன்னே.... ஆரும் சொல்லலயோ???!!! - Vanitha

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா