Saturday 1 May 2010

ஓர் சந்திர முக்கோணம்

29/04/2010 7:05 pm
தொலைபேசி அழைக்கிறது. மறுமுனையில் ஏஞ்சல் - எங்கள் வீட்டுக் குட்டித் தேவதையைத்தான் சொல்கிறேன்.

அடிக்கடி இவரைப் பற்றிப் பேசுவதால் இப்போதிலிருந்து ஏஞ்சல் - தேவதை என்பதன் மொழிமாற்றம். ;) இனிமேல் யாரும் என்னிடம் "தேவதைக்கு என்ன பெயர்?" என்று கேட்க மாட்டீர்கள் அல்லவா! ;) கேட்டாலும் என் பதில் 'ஏஞ்சல்' ;)

இப்போ தொடராலாம். எங்கே விட்டேன்!! ம்.. தொலைபேசி மணி அடிக்கிறது. (இது மணி இல்லை. வேற என்னவோ மாதிரி ஒரு சத்தம். அது அடிக்கிறதும் இல்லை. அதற்கு ஒரு சொல் இருக்கும், ஆனால் எனக்குத் தெரியாது. எனவே.. மணி அடிக்கிறது.) எடுத்தால் ஏஞ்சல்.
"ஆன்ட்டீ, வெளில.. மூன் பார்த்தீங்களா..?" சொல்கிறபோது குரல் மெத்தென்று காதில் ரகசியம் பேசுகிறது,.
"இல்லையே..!!"
"போய்ப் பாருங்க. round-டா, beautiful-ஆ இருக்கு." சந்திரனுக்குக் கேட்டுவிடக் கூடாது. அதன் தனிமையை (ப்ரைவசியை) கெடுத்துவிடக் கூடாது, என்கிற மாதிரி மென்மையாகப் பேசுகிறார். 'குட்டித் தம்பி பக்கத்தில் தூங்குகிறார். ஷ்! டிஸ்டர்ப் பண்ணாதீங்க!' என்பதான கரிசனம் அந்தப் பேச்சில் தொனிக்கிறது. ;)

எங்கோ தொலைவில் இருக்கும் சந்திரன் இப்போது எங்கள் அருகே, பார்வைக் கோடுகளும் தொலைபேசித் தொடர்பும் எண்ணங்களை இணைக்க அங்கே ஓர் சந்திர முக்கோணம். 
"ஆன்ட்டீ.. போங்க, போய் போட்டோ எடுங்க." கிசுகிசுக்கிறார். ;) 
தொலைபேசியைத் துண்டித்து விட்டு கமராவைத் தேடி ஓடுகிறேன்.


எனக்கு எடுக்கத் தெரியவில்லை. முன்பு ஒரு போதும் முயன்றதில்லை. கதவைத் திறந்து பார்த்தால் பெரிதாய் ஒரு பைன் முன்னால் மறைக்கிறது.

மாடிக்கு ஓடினேன். சந்திரன் நிற்குமா!



மூத்தவர் அறை யன்னலால் பார்க்க ஒன்றுமே தெரியவில்லை. கழிப்பறை யன்னல்தான் சரியாகத் தோன்றியது. அப்போதும் சரியாகத் தெரியவில்லை. டாய்லட் சீட்டை மூடிவிட்டு அதன் மேல் ஏறி நின்று எடுத்த படங்கள் இவை. காமராவில் 'பிறை' தெரிவு செய்து சுட்டிருக்கிறேன்.

அடுத்த சந்திரோதயத்தைச் சிறப்பாகச் சுடுவதற்கு தெரிந்தவர்கள் ஆலோசனையை நாடி நிற்கிறேன்.

25 comments:

  1. நல்லாருக்கு இமா..'காதோடுதான் நான் பேசுவேன்..' பாடலை நினைவுபடுத்திடுச்சு உங்க பதிவு.

    எனக்கு நைட் டைம் போட்டோகிராபில அவ்வளவு அனுபவம் கிடையாது..ஸோ,//அடுத்த சந்திரோதயத்தைச் சிறப்பாகச் சுடுவதற்கு // என்னிடமிருந்து நோ கமெண்ட்ஸ் ! :)

    ReplyDelete
  2. மகி, //காதோடுதான்// எனக்குப் பாடத் தெரிஞ்ச ஒரே ஒரு பாட்டு. ;)

    என்னட்ட இருக்கிற குட்டிக் கமராவை வைத்து இது மட்டும் தான் பண்ணலாம் என்று ஒரு எண்ணம். ;) எதற்கும் பார்க்கலாம், ஜெய்லானி வந்து ஏதாவது சொல்வார், உதவும். ;)

    ReplyDelete
  3. கிட்டப்போய் எடுக்கோணும் இமா:), தூர நின்று எடுத்தால் இப்பூடித்தான் வரும்:(.

    நான் ஒரு கூப்பிடுதூரத்தில நின்றுதான் எடுத்தனான் ஒருக்கால் வடிவா தெரிஞ்சுது(நான் வானத்தைச் சொன்னேன்).

    என்னில ஒரு பழக்கம் எதைக்கண்டாலும் படமெடுப்பன் ஆனால் எதில எடுத்தன் எண்டதை மறந்திடுவன்(கஜனியின் தங்கை:))..... அதாவது என் மொபைலா, கண.மொபைலா.. இல்ல கமெராவா.. என்பதை... பின்பு தேட அலுப்பில் அப்படியே....

    ReplyDelete
  4. நல்ல ஐடியா அதீஸ். அடுத்த முறை. ;)
    ஒரு சந்தேகம்! ம்... கிட்டப் போனால்...('முட்டப் பகை' பழமொழி சொல்லுறன், எங்கட அதிராக்கு. ;) நிலவுக்குப் பயந்து பரதேசம் போகலாமோ! நிலவைப் படம் எடுக்கப் பக்கத்தில போகலாமோ! ) ;)))
    ம்..ஹூம். சரிவராது அதீஸ். இவ்வளவு கிட்ட நிண்டு பூமியை வட்டமா எடுக்க ஒருத்தராலயும் முடியேல்ல. அப்பிடித்தானே அங்க கிட்டப் போனால் சந்திரமண்டலமும் இருக்கும். அங்க நிண்டு பூமியைத்தான் வட்டமா எடுக்கலாம் எண்டு நினைக்கிறன்.
    பாப்பம், மற்ற ஆக்கள் என்ன சொல்லுறாங்கள் எண்டு.

    //எதைக்கண்டாலும் படமெடுப்பன்// மகுடி தேவை இல்லை எண்டுறீங்கள். ;) பூஸுக்கு எதுக்கு எது?

    //என் மொபைலா, கண.மொபைலா..// போஸ்ட் பெய்டா, ப்ரீ பெய்டா? ;)

    ReplyDelete
  5. The last one is nice.

    ReplyDelete
  6. Good try though Immamma. Google it, Goddess Google has everything in her. =))

    ReplyDelete
  7. //Goddess Google has everything in her. =))// ;)))))))))

    Tkz Anamika. ;)

    ReplyDelete
  8. இமா, படங்கள் நல்லா இருக்கு. சந்திரோதயம் படம் பிடிப்பதற்கு கிறிஸ் அண்ணாச்சியின் உதவியை கேளுங்கோ. என்ன சொல்ல வர்றேன் என்றால்... எங்காவது கடற்கரை, அல்லது பாலைவனம், சமவெளி இப்படி வெளியான பிரதேசங்களில் போய் காத்திருந்து( கொசுக்கடி, பூச்சிக்கடி, சில சமயம் கிறிஸ் அண்ணாச்சியின் கடி எல்லாவற்றையும் தாங்கி )எடுக்க வேணும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இதுக்கு டிரிப்பேட்(முக்காலி ) வச்சு எடுத்தா சரியா வரும். அப்புறம் லென்ஸ் செட் இருந்தா சூப்பர்ரா வரும் , அப்படி இல்லாம சாதாரனமா டிஜிடல் SONY-DSC-W35 ல எடுக்கும் போது கேமராவில், AEB modeஐ தேர்ந்தெடுத்து, exposure -2, 0, +2 என்று வைத்துக் கொள்ளவும். (Program modeல், menu வுக்கு போனால், AEB தென்படும்).

    இப்படி பண்ணா என்னாகும்னா, ஒரு காட்சிய முதல் முறை க்ளிக்கும்போது, அந்த காட்சிக்கு கம்மியான exposure கொடுத்து பிடித்துக் கொள்ளும். அடுத்த முறை க்ளிக்கும் போது, சாதாரண' exposureல் பிடித்துக் கொள்ளும். அதற்க்கு அடுத்த முறை, ஜாஸ்தியான exposure வைத்து எடுத்துக் கொள்ளும்.

    வெச்சாச்சா? இனி, உங்க காட்சிய, மூணு தடவ படம் புடிங்க.
    முதல் படம் இருட்டாவும், ரெண்டாவது சுமாராவும், மூணாவது வெளிச்சமாவும் வரும். இந்த மாதிரி வந்ததும் போட்டோ ஷாப்பில மூனையும் மெர்ஜ் பண்ணிணா ஏ ஒன் போட்டோ உங்களுடையது.

    வேற வழி இல்லை , ஏன்னா தூரம் அதிகம் .

    ReplyDelete
  10. வாணி ஐடியா நல்லா இருக்கு.

    ~~~~~~~~~

    ட்ரைபாட் யோசனை நல்லா இருக்கு. வீட்ல இருந்து எடுக்க முடியாது. வெளில எங்காவது வாணி சொன்ன மாதிரி போக வேணும். டிஜிடல் காமராதான் ஜெய்லானி. பொறுமையா திரும்ப நீங்க போட்டிருகிறதையும், காமரா இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஸையும் படிச்சு ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். பதிலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. "சந்திரனுக்குக் கேட்டுவிடக் கூடாது. அதன் தனிமையை (ப்ரைவசியை) கெடுத்துவிடக் கூடாது, என்கிற மாதிரி மென்மையாகப் பேசுகிறார்"

    கவிதை மாதிரி அருமையான வரிகள், இமா!
    தேர்ந்த எழுத்தாளராகத் தெரிகிறீர்கள்!!

    ReplyDelete
  12. ப்யூட்டிபுல் இமா. நாங்க ஊரில் fullmooon நாளில் வீட்டிற்கு வெளியே இருந்துபார்க்கும் அழகு.கண்கொள்ளாக் காட்சி. ம்.ம்.நினைத்துப்பார்த்தேன்.5,6 வது பட‌ங்கள் அழகு.

    ReplyDelete
  13. அக்கா, வரவுக்கு நன்றி. ;) அதெல்லாம் ஒன்றும் இல்லை. ;) என் எழுத்து அறுசுவையிலும் இங்கும் மட்டும்தான்.
    அந்தக் குட்டிப் பெண் பேசும் போது எனக்கு மனதில் பட்டதை அப்படியே எழுதி இருக்கிறேன். அவ்வளவுதான்.
    உங்கள் பாராட்டு.. மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. ;)

    ReplyDelete
  14. //ப்யூட்டிபுல் இமா.// என்னைத்தானே சொல்றீங்கள்? ;) Vielen Dank Ammulu.
    //நாங்க ஊரில் fullmooon நாளில் வீட்டிற்கு வெளியே இருந்துபார்க்கும் அழகு.// இருங்க, இருங்க. அதையும் எழுத வேணும். அழகு நினைவு எல்லாம் மனதில ஒளிஞ்சு இருக்கு. ;) முகிலுக்குப் பின்னால இருக்கிற நிலவு மாதிரி.

    ReplyDelete
  15. அது யாரு, குட்டியா சிரிக்கிறது!! குட்டிப் பையன் சூர்யாவா? வாங்க. :) //சின்னப் பிள்ளையில, தூக்கத்தில, கனவில சிரிக்கிற மாதிரியே அழகா சிரிக்கிறீங்க. நல்ல பையன். ;)

    ReplyDelete
  16. இமா.. கடேசிப் படம் நல்லா வந்திருக்கே? அப்புறமென்ன?

    பைன் மரத்தை எப்படியாவது துரத்தி விட முயற்சி பண்ணுங்கோ.. என்னோடது கடற்கரைல எடுத்ததொன்னு இருக்கிறா மாதிரி நினைவு.. தேடிப் பாக்கறேன்..

    ReplyDelete
  17. எனக்குப் போட்டியா ஒரு ஆள். ;) ம். நடக்கட்டும். ;))

    ~~~~~~~~~~

    அது பக்கத்து வீட்டுப் பைன் சந்தூஸ். நான் எப்படி துரத்துறது? அது போக, அது அழகு பைன். ஒரு மக்பை ஜோடியும் ஒரு சீகல் ஜோடியும் அதில இருக்கு.

    ReplyDelete
  18. இமா said...
    //ப்யூட்டிபுல் இமா.// என்னைத்தானே சொல்றீங்கள்? ;) //// எனக்குத் தண்ணி தெளியுங்கோஓஓஓஓஓ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஏன் எனக் கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  19. ஜெய்லானி,

    //Program modeல், menu வுக்கு போனால், AEB// இன்னும் கண்டு பிடிக்கவில்லை. இதைத் தவிர வேறு என்ன என்னவோ எல்லாம் இருக்கிறது. ;) தென்படும், தினமும் தேடுகிறேன். வேறு எங்கோ தான் //-2, 0, +2// கண்ணில் பட்டது. மீண்டும் பார்க்கிறேன்.

    //மூணு தடவ படம் புடிங்க.// ஒரு சந்தேகம். 'மூன்'றிலும் மூன் 'மூன்'று மாதிரி தோன்றாதா? முகில் வந்து மறைத்தால்!!
    //போட்டோ ஷாப்பில மூனையும் மெர்ஜ் பண்ணி// இது புதுசா இருக்கு. தேடிப் பார்க்கிறேன். ஏதாவது புரிந்தால் திரும்ப வந்து கேள்வி கேட்பேன். உதவிக்கு மிக்க நன்றி. ;)

    ReplyDelete
  20. புகையக் கூடாது அதீஸ். ;)

    ReplyDelete
  21. மெனுவை அழுத்தினால் image size >
    face detection >
    rec mode >
    0ev> இதில் இருக்கும்
    iso >
    wb >
    flash level >
    red eye reduction >
    color mode >

    நெம்பரை மாத்தி மூனு போட்டோவை எடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது .

    போட்டோஷாபில் மூனு படத்தையும் தனித்தனியே திறந்து லேயர் வயா காப்பி செஞ்சி மூனையும் ஒன்னா மெர்ஜ் பண்ணினா படம் நல்ல தெளிவா அருமையா வரும்

    ReplyDelete
  22. என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே..
    நீ இளையவளா...மூத்தவளா வெண்ணிலாவே?

    திஸ் சொங் நல்லாருக்கும் இல்ல ஆன்ட்டி?!!
    ஹே..இட்ஸ் ஓக்கை கய்ஸ்..சிச்சுவேஷனுக்கு கரெக்ட்டா சொங் சொன்னா, கல்லெடுத்து அடிக்கக் குடாது..கூல் ரவுண்.

    BTW,Bujji is so beautiful than the moon.. ஹி,ஹி,ஹீ!!

    ReplyDelete
  23. ஜெய்லானி, இன்னும் ரிசர்ச் நடக்குது. வெய்ட் ப்ளீஸ். ;)

    ~~~~~~~~~~

    //BTW,Bujji is so beautiful than the moon.. ஹி,ஹி,ஹீ!!// இப்பிடி பப்ளிக்கில வந்து வழியப்படாது பப்பீ. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா